கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட சில வகை செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து அரசாணை (G.O.No.: 218, Dated:13-07-2023) வெளியீடு (Government Order (G.O.No.: 218, Dated: 13-07-2023) issuing to remove restrictions on certain types of expenditure imposed during the Corona period due to improvement in the financial condition of the Government of Tamil Nadu)...

 

>>> தமிழ்நாடு அரசின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட சில வகை செலவினங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து அரசாணை (G.O.No.: 218, Dated:13-07-2023) வெளியீடு (Government Order (G.O.No.: 218, Dated: 13-07-2023) issuing to remove restrictions on certain types of expenditure imposed during the Corona period due to improvement in the financial condition of the Government of Tamil Nadu)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.07.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :217


மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்

பெருந்தகை யான்கண் படின்.


விளக்கம்:


பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.


பழமொழி :

All work and no play makes Jack a dull boy


ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு



இரண்டொழுக்க பண்புகள் :


1. எல்லாம் தெரியும் என்று சொல்பவன் தேடலும் அறிவும் வாழக்கை பாதையின் முடிவுக்கு வரும்


2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்


பொன்மொழி :


ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்


பொது அறிவு :


1. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?


விடை: நீலகிரி உயிர்க்கோள காப்பகம், தமிழ்நாடு


2. இந்தியாவின் மிகப்பெரிய அணை எது?


விடை: பக்ரா நங்கல் அணை, இமாச்சல பிரதேசம்


English words & meanings :


 fantasy – imagining impossible things, நடை முறைக்கு சாத்தியம் இலலாத கற்பனை.gusto – enjoyment in doing something.ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் ஆர்வ உணர்வு


ஆரோக்ய வாழ்வு :


கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.


நீதிக்கதை


அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் நின்றன.  பாலத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும்.


  இது தெரிந்தும் இரண்டு ஆடும் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது.


உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" .என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் சண்டையிட தொடங்கியது.


சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.


நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


17.07. 2023

*சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல்.

சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞான குழுவினருக்கும் பூட்டான் பிரதமர் வாழ்த்து.


*10 மற்றும் 12 வகுப்பில் இடைநின்ற மாணவர்களுக்கும்,தேர்ச்சி பெற்றும் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களுக்காகவும் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்க மேலாண்மை குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு. 


*மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.  2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக 

40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர்.


*நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்புகளில் சேர நேற்று முதல் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.


*ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு- ருதுராஜ் கெய்க்வாட் சொல்கிறார்.


*முதல் ஒரு நாள் போட்டி இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி அபார வெற்றி.


Today's Headlines


* ISRO informs that Chandrayaan-3 spacecraft has been successfully boosted into orbit for the first time.

 Prime Minister of Bhutan congratulates PM Modi and ISRO science team on Chandrayaan-3 success.


 *Government has organized a management committee meeting to advise students who have dropped out of class 10 and 12 and who are not continuing their studies after they had got pass.


 *Publication of rank list for medical courses.  For medical and dental courses in the academic year 2023-2024

 40,200 applications received - Minister


 *You can apply online from yesterday to 26th 5 pm for admission in nursing diploma courses in the current academic year.


 *The goal is to win gold in the Asian Games - says Ruduraj Gaekwad.


 *Bangladesh women's team beat India in the first one-day match with a huge victory.

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.07.2023 - School Morning Prayer Activities...

 

 திருக்குறள் :



பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: ஒப்புரவறிதல்


குறள் :216


பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்

நயனுடை யான்கண் படின்.


விளக்கம்:


பிறரால் விரும்பப்படுபவனிடம் சேரும் செல்வம், உண்ணத் தகும், கனிதரும் மரம் ஊருக்கு உள்ளே பழுத்திருப்பதைப் போல எல்லார்க்கும் பொதுவாகும்.


பழமொழி :

A tree is known by its fruit


நல்லார் பொல்லாரை நடக்கையால் அறியலாம்.


இரண்டொழுக்க பண்புகள் :


1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல. 


2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.


பொன்மொழி :


உன் பிள்ளை ஊனமாய் பிறந்தால் சொத்து சேர்த்து வை. சொத்து சேர்த்து பிள்ளையை ஊனமாக்காதே

காமராஜர்


பொது அறிவு :


1.காமராஜர் எந்த வகுப்பு வரை படித்திருக்கிறார்? 


ஆறாம் வகுப்பு 


2. தமிழக முதல்வராக காமராஜர் பதவி ஏற்ற ஆண்டு? 


1954


English words & meanings :


 egoism - selfishness சுயநலம்; farrier - a veterinary doctor கால்நடை மருத்துவர்


ஆரோக்ய வாழ்வு :


வேகவைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வாழைப்பழத்தில் இருப்பதை விட பொட்டாசியம் சத்து அதிகமாக இருக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக்க உதவும். உடலில் இருந்து கூடுதல் சோடியத்தை அகற்றவும் வழிவகை செய்யும். இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.


ஜூலை 15


காமராசர்  அவர்களின் பிறந்த நாள்




காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


நீதிக்கதை


நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார்.


அரசன் கோபமாக " நான் என்ன சின்னக் குழந்தையா?  இதை வைத்து விளையாடுவதற்கு" என்றுக் கேட்கிறார்.


சிற்பி "இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு" என்கிறார்.


"இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள்" என்கிறார்.


அரசன் "இதில் என்ன விஷயம் இருக்கிறது" என்கிறார்.


முதல் பொம்மையை அரசனிடம் கொடுக்கிறார் சிற்பி.கூடவே ஒரு மெல்லிய சங்கிலியையும் கொடுத்து அதன் காதில் இருக்கும் ஓட்டையில் விடச் சொல்கிறார்.


சங்கிலி மறுப்பக்க காதின் வழியே வருகிறது.


சிற்பி "மனிதர்களில் சிலர் நாம் எதைச் சொன்னாலும் இப்படித் தான் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதின் வழியே அனுப்பி விடுவார்கள்" என்கிறார்.


இரண்டாவது பொம்மையை கொடுத்து அதையே திருப்பிச் செய்யச் சொல்கிறார்.


இந்த பொம்மையில் சங்கிலி வாய் வழியே வருகிறது.


இந்த மாறி மனிதர்கள் எதை சொன்னாலும் அதை அடுத்த நொடி வெளியே விட்டு பரப்பிவிடுவார்கள் என்கிறார்.


பிறகு, மூன்றாவது பொம்மையை கொடுத்து மீண்டும் அதையே செய்யச் சொல்கிறார்.


இதில், சங்கிலி வெளியே வரவே இல்லை.


சிற்பி, இவர்களிடம் எதைச் சொன்னாலும் உள்ளேயே தான் இருக்கும்.வெளியே வராது என்கிறார்.


அப்போது இதில் "யார் தான் சிறந்த மனிதர் என்று" அரசன் கேட்கிறார்.


என் கையில் இருக்கும் இந்த நான்காவது பொம்மை தான் சிறந்த மனிதன் என்று சிற்பி சொல்கிறார்.


அரசன் பொம்மையின் காதின் வழியே சங்கிலியை விடுகிறார். மறுபக்க காதின் வழியே வெளிவருகிறது. சிற்பி மீண்டும் செய்ய சொல்கிறார்.இரண்டாம் முறை வாயின் வழியே சங்கிலி வருகிறது.மூன்றாம் முறை வரவே இல்லை.



சிற்பி "நான்காவது பொம்மை போன்ற மனிதர்கள் தான் வாழ்வில் உயர முடியும். கேட்பவற்றில் நல்லவைகளை மாத்திரம் மனதில் வைத்துக் கொண்டு தேவையற்றவைகளை விட்டுவிட வேண்டும். நல்லவைகளை மாத்திரம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இதனை இளவரசர் கற்றுக்கொள்ள வேண்டும் என்றே இந்த பொம்மைகளை தருகிறேன்" என்றார். அரசனும் சிற்பிக்கு நன்றி கூறினார்.


இன்றைய செய்திகள்


15.07. 2023


*ஆகஸ்ட் 23ஆம் தேதி சந்திராயன்-3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்ப்பு. 7 ஆய்வுக்கருவிகளை உள்ளடக்கிய இந்த விண்கலம் நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது.


*ஏழை மக்களின் மருத்துவ செலவை பாதியாக குறைக்க 'மக்களை தேடி மருத்துவம்' திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.


*மதுரையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு.


*பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைய இருப்பது இந்தியாவிற்கே பெருமை.  

பிரான்ஸ் வாழ் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி பெருமிதம்.


*ஆசிய தடகளப் போட்டியில் ஒரே நாளில் இந்தியாவிற்கு மூன்று தங்க பதக்கம்.


*அமெரிக்க ஓபன் பேட்மிட்டன் பி.வி.சிந்து - லக்ஷயா சிங் கால் இறுதிக்கு தகுதி. தமிழக வீரர் சங்கர் முத்துசாமி இஸ்ரேலின் ஜில்பர் மேனை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.


Today's Headlines


* Chandrayaan-3 is expected to land on August 23.  The spacecraft, which includes 7 probes, has been sent to explore the southern part of the Moon.


 * To halve the medical expenses of the poor people, 'Medicine in search of people' - Chief Minister Perumidham.


 * The artist's centenary library, which has been built on a grand scale in Madurai, will be inaugurated today.


 * It is India's pride to have a statue of Thiruvalluvar in France.

 Prime Minister Modi spoke with pride among Indians living in France.


 *Three gold medals for India in a single day at the Asian Athletics Championships.


 *US Open Badminton PV Sindhu - Lakshya Singh qualify for quarter-finals.  Tamil Nadu's Shankar Muthuswamy defeated Israel's Gilber Man to qualify for the quarter-finals.

 

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 5 - தமிழ் & ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 5 - Tamil & English Medium Lesson Plan)...

 

>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 5 - தமிழ் வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 5 - Tamil Medium Lesson Plan )...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 5 - ஆங்கில வழி பாடக்குறிப்பு (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 5 - English Medium Lesson Plan)...



>>> எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - பருவம் 1 - அலகு 5 - தமிழ் வழி பாடக்குறிப்பு - மாதிரி 2 (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Term 1 - Unit 5 - Tamil Medium Lesson Plan - Model 2)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 5 - தமிழ் & ஆங்கில வழி (Term 1 - Unit 5 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium)...

 

>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 5 - தமிழ் வழி (Term 1 - Unit 5 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 5 - ஆங்கில வழி (Term 1 - Unit 5 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - English Medium)... 



>>> 1, 2 & 3ஆம் வகுப்பு - பருவம் 1 - எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு – அலகு 5 - தமிழ் & ஆங்கில வழி  - மாதிரி 2 (Term 1 - Unit 5 - Lesson Plan - Ennum Ezhuthum - 1, 2 & 3rd Standard - Tamil & English Medium - Model 2)... 





>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...



 கரூர் வீரணம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்கள் கைது (4 children arrested in the case of mixing chemicals in the drinking tank of Karur Veeranampatti Panchayat Union Middle School)...


கரூர் வீரணம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலக்கப்பட்ட விவகாரத்தில் 4 சிறுவர்களை கைது செய்துள்ளனர். கடந்த 11ஆம் தேதி வீரணம்பட்டி அரசு ஊராட்சி பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததாக புகார் எழுந்துள்ளது. 


8ஆம் வகுப்பு முடித்து மேல் படிப்பை தொடராமல் இருந்த 4 பேரை தலைமை ஆசிரியர் திட்டியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியர் மேல் உள்ள கோபத்தில் பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கலை கலந்ததாக சிறார்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

- தினகரன் நாளிதழ்


53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்: 3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


>>> 53 வயதை கடந்த இளநிலை உதவியாளர்கள்/ உதவியாளர்கள் பவானிசாகர் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்கு - மனித வள மேலாண்மைத் (பயிற்சி-1) துறை அரசு செயலாளரின் கடிதம் ந.க.எண்:  3696890/ பயிற்சி 1/ 2022-2, நாள்: 13-07-2023 (Exemption of Junior Assistants/Assistants above 53 years of age from Bhavanisagar Basic Training - Department of Human Resource Management (Training-1) Secretary's letter Rc.No: 3696890/ Training 1/ 2022-2, Dated: 13-07-2023)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...