கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) துணைத் தேர்வு - விடைத்தாள் நகலினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் - செய்தி குறிப்பு (HSC SECOND YEAR SUPPLEMENTARY EXAMINATION - DOWNLOADING COPY OF ANSWER PAPER AND APPLYING FOR RE-TOTALING OR RE-VALUATION - PRESS RELEASE)...
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு - தகுதிவாய்ந்த முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் & உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 39620/ டபிள்யு1/ இ1/ 2023, நாள்: -08-2023 (Promotion of Higher Secondary School Headmasters - Qualified Post Graduate Teachers & High School Headmasters - Release of Final List - Director of School Education Proceedings Rc.No: 39620/ W1/ E1/ 2023, Dated: -08-2023)...
ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா - உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெறுதல் - வழிகாட்டி நெறிமுறைகள் - SPD & SCERT இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 6519/ G3/ 2023, நாள்: -08-2023(Quiz for the month of August 2023 - Conducted in Hi-Tech Lab - Guidelines Protocols - SPD & SCERT Director's Co-Proceedings No: 6519/ G3/ 2023, Date: -08-2023)...
TNSED SCHOOLS செயலியில் வெளியிடப்பட்டுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகள் - ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் - ஒரே கோப்பாக (4 & 5th STANDARD - AUGUST MONTHLY WRITTEN TEST QUESTION PAPERS RELEASED ON TNSED SCHOOLS APP - IN SINGLE FILE)...
4 மற்றும் 5ஆம் வகுப்புகள் - ஆகஸ்ட் மாதத்திற்கான மாதாந்திர எழுத்துத் தேர்வு வினாத்தாள்கள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது...
TNSED Schools App New Version: 0.0.78 - Updated on 08-08-2023 - OOSC and Library module changes, Bug Fixing and Performance Improvements...
🛑🛑🛑🛑🛑🛑
* TNSED schools App
* What's is new..?
*🎯 OOSC and Library module changes...
*🎯 Bug Fixing and Performance Improvements...
*_UPDATED ON 08 AUGUST - 2023
*_Version: Now 0.0.78
Link:
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 09.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஈகை
குறள் :234
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
விளக்கம்:
தன்னில் வாழும்அறிஞரைப் போற்றாமல், இந்த நில உலகில்நெடும்புகழ் பெற்று வாழந்தவரையே தேவர் உலகம் பேணும்.
பழமொழி :
As you Sow, so You Reap.
வினை விதைத்தவன் விதை அறுப்பான்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. அறிவும் ஒழுக்கமுமே என் வாழ்வை மேம்படுத்தும்.
2. எனவே இரண்டையும் தேடி நாடி பெற்றுக் கொள்வேன்
பொன்மொழி :
உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெற்றிகரமான வாழ்க்கை வாழத் தொடங்குவதற்கான முதல் அறிகுறி. விவேகானந்தர்.
பொது அறிவு :
1. அகாடமி விருதை (ஆஸ்கார்) வென்ற முதல் இந்தியர் யார்?
விடை: பானு அத்தையா.
2. இந்தியாவில் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய விருது எது?
விடை: சங்கீத நாடக அகாடமி விருது
English words & meanings :
evacuation -ejection வெளியேற்றுதல்: ordinance - rule அவசர சட்டம்
ஆரோக்ய வாழ்வு :
வெந்தயம்: தினம் இரவு சிறிது வெந்தய விதையை ஊற வைத்து, மறுநாள் காலையில் மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகி வர, ஆரம்ப நிலை நீரழிவு நோய் குணமாகும். மத்திய, முற்றிய நிலை நீரழிவு நோய் கட்டுக்குள் இருக்கும்.
ஆகஸ்ட்09
பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஷ்டு 9ஆம் தேதி அனுசரிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் திசம்பர் 1994 முன்மொழியப்பட்டு , 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது.[1] தொல்பழங்குடிகளான குறிஞ்சி நிலத்தின் குன்றகுறவர்களின் உரிமைகளை ஊக்குவிக்கவும், அவ்வுரிமைகளைப் பாதுகாக்கவும் இத் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்வானது அப்பழங்குடி குறவர் மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலக பிரச்சினைகளின் எடுக்கும் நல்லெண்ண முடிவுகளுக்கு அங்கீகாரமாகப் பார்க்கப்படுகிறது.
நீதிக்கதை
ஒரு ஊரில் நல்ல மனிதன் ஒருவன் இருந்தான். எப்பொழுதும் தன்னால் இயன்ற வரை மற்றவர்களுக்கு உதவுவது அவனின் தன்மை.
ஒரு நாள் சுற்றுலா சென்ற போது அவன் ஒருவன் மட்டும் சென்ற சிறு படகு கவிழ்ந்து விட்டது. கடல் நீரினால் அடித்து செல்ல பட்ட அவன் யாருமே இல்லாத தீவு ஒன்றில் கரை ஒதுங்கினான்.
திகைத்து போனாலும், தன்னை காப்பாற்ற யாரேனும் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தான். அந்த பக்கமாக செல்லும் பெரிய கப்பல்களுக்கு சமிக்ஞை செய்ய தன்னிடம் இருந்த கைக்குட்டையை கொடியாக கட்டி வைத்தான்.
ஆனால் இரண்டு மாதங்கள் சென்ற பின்பும் அவனை காப்பாற்ற ஒருவரும் வரவில்லை.
அவனின் நம்பிக்கை குறைந்தாலும் அந்த தீவில் வாழ தன்னால் இயன்ற அளவில் முயன்றான்.அங்கே இருக்கும் வன விலங்குகளிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள சிறு குடிசை ஒன்றை கட்டிக் கொண்டான்.... அங்கே கிடைத்த சிறு சிறு உணவு பொருட்களை தேடி கண்டு பிடித்து எடுத்து உண்டு பசியாறினான்.
ஒருநாள் அதே போல் அவன் உணவு தேடி விட்டு திரும்பிய போது அவன் மிகவும் கஷ்டப் பட்டு கட்டி இருந்த அந்த குடிசை மொத்தமாக எரிந்து சாம்பலாகி இருப்பதை பார்த்து திகைத்து போனான். குடிசை இருந்த இடத்தில புகை மட்டுமே வந்துக் கொண்டிருந்தது...
அவ்வளவு தான் அவனுக்கு கோபம் பொங்கியது! விரக்தி மேலோங்கியது...
கோபத்துடன் கத்தினான்...! நல்லது செய்த அவனுக்கு எல்லாமே தீங்காகவே நடப்பதாக அழுது புலம்பினான்...!
அப்போது ஒரு பெரிய கப்பல் ஒன்று அவன் இருந்த தீவின் திசையில் வருவதை கண்டான். கைகளை வேகமாக அசைத்து அவன் கத்த, அப்பொழுது கப்பல் மெல்ல அந்த தீவின் அருகே இருந்த கரையோரம் வந்து நின்றது.
அவனால் நம்பவே முடியவில்லை! கப்பலில் இருந்து இறங்கி வந்த மாலுமியிடம் எப்படி அந்த தீவிற்கு வந்தீர்கள் என ஆவலுடன் கேட்டான்.
"எங்கள் கப்பல் தலைவன் எங்கிருந்தோ புகை வருவதை கவனித்து என்ன என்று தன்னுடைய தொலைநோக்கியில் பார்த்த போது நீங்கள் நட்டிருந்த உதவி கேட்கும் கொடி அவர் கண்ணில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என்பதை புரிந்துக் கொண்டு இந்த பக்கம் கப்பலை திருப்பி வந்தோம்.” என்றான் அந்த மாலுமி!
வாழ்வில் நாம் சவால்கள், பிரச்சனைகள் என எத்தனை எத்தனையோ எதிர் கொள்ள வேண்டி இருக்கலாம். சில சமயம் நாம் நம் வாழ்வின் மோசமான நேரம் என்று நினைப்பது கூட நன்மையாக இருக்கலாம்.
இன்றைய செய்திகள்
09.08. 2023
*தமிழகம் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்.
* மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வரவிருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோபைடன்.
* குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளால் நிரப்பப்படும் சென்னை ஏரிகள்.
* சுதந்திர தினத்திற்கு ஒரு லட்சம் போலீஸ் பாதுகாப்பு: சென்னையில் வணிக வளாகங்கள், கோவில்களில் கண்காணிப்பு.
* சர்வதேச அளவிலான வில்வித்தை போட்டியில் உலக சாதனை படைத்த செய்துங்கநல்லூரைச் சேர்ந்த +2 மாணவி சுப்புலட்சுமி.
*உலக காவல்துறை மற்றும் ஹெப்டத்லான் போட்டிகள் : தங்கப்பதக்கம் வென்று சென்னை பெண் போலீஸ்
லீலாஸ்ரீ சாதனை.
Today's Headlines
*Chance of moderate rain in Puducherry, Tamil Nadu for the next 7 days - Meteorological Department Information.
* US President Joe Biden is coming to India for a three-day tour.
* Chennai lakes are being filled with garbage and construction waste.
* One Lakh Police Security for Independence Day: Monitoring at Malls, Temples in Chennai.
* Subbulakshmi, a +2 student from Seythunganallur set a world record in an international archery competition.
*World Police and Heptathlon Competitions: Chennai Women Police Leelasree made headlines by winning the gold medal.
கனவு ஆசிரியர் - ஆகஸ்ட் 2023 - ஆசிரியர்களுக்கான மாத இதழ் - பள்ளிக்கல்வித்துறைக்காக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு (Kanavu Aasiriyar - August 2023 Monthly Magazine for Teachers - Published by Tamil Nadu Textbook and Educational Works Corporation for School Education Department)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...