கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
மாற்றுத்திறன் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி அரசாணை (நிலை) எண்: 16, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந-2) துறை நாள்: 04-07-2023 & அரசாணை (நிலை) எண்: 64, மாற்றுத்திறனாளிகள் நலத் (மாதிந2-1) துறை நாள்: 10-07-2013 வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 049832/ எம்/ இ4/ 2023, நாள்: 12-08-2023 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனரின் கடிதம் ந.க.எண்: 3222/ சிப-2/ 2023, நாள்: 31-07-2023 (Doubling the education scholarship provided to differently abled students G.O. (Ms) No: 16, Department of Disabled Persons Welfare (DAWD-2), Dated: 04-07-2023 & G.O. (Ms) No: 64, Disabled Persons Welfare (DAWD 2-1) Department, Dated: 10-07-2013 Issue - Proceedings of Director of School Education Rc.No: 049832/ M/ E4/ 2023, Dated: 12-08-2023 & Letter of Director of Differently Abled Persons Welfare Rc.No: 3222/ Sep-2/ 2023, Dated: 31-07-2023)...
நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்சங்கிலியைத் தொலைத்த தமிழாசிரியர் - பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள் - குழந்தைகளின் நேர்மையை வெகுவாகப் பாராட்டிய காவல் துறையினர் (The Tamil teacher who lost her chain at Narikudi bus stand - The school girls who recovered it safely and handed it over to the police station - The police department appreciated the children's honesty)...
நரிக்குடி பேருந்து நிலையத்தில் தங்கச்சங்கிலியைத் தொலைத்த தமிழாசிரியர் - பத்திரமாக மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த பள்ளி சிறுமிகள் - குழந்தைகளின் நேர்மையை வெகுவாகப் பாராட்டிய காவல் துறையினர் (The Tamil teacher who lost her chain at Narikudi bus stand - The school girls who recovered it safely and handed it over to the police station - The police department appreciated the children's honesty)...
நரிக்குடி பேருந்து நிலையத்தில் இன்று காலை உலக்குடி செல்ல வேண்டி பேருந்திற்காக காத்திருந்த உலக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் சசிகலா அவசரமாக பஸ் ஏறி பள்ளிக்கு சென்றதன் காரணமாக தனது இரண்டரை பவுன் தங்கசெயினை நரிக்குடி பேருந்து நிலையத்தில் பறிகொடுத்தார். இதனையடுத்து செயின் காணாமல் போனது குறித்து பள்ளி ஆசிரியர் சசிகலா நரிக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதற்கிடையில் இன்று காலை பேருந்து மூலம் பள்ளிக்கு வந்த நரிக்குடி தொடக்கப்பள்ளி 5 ஆம் வகுப்பு மாணவிகளான நரிக்குடியை சேர்ந்த சரவண சாஸ்தா மகள் மோகனாஸ்ரீ, பள்ளப்பட்டியை சேர்ந்த விஜயன் மகள் சபர்ணா, மானூர் இந்திரா காலனியை சேர்ந்த சரவணக்குமார் மகள் தேவிகா ஆகியோர் அதனை பத்திரமாக மீட்டு தலைமையாசிரியர் மூலமாக நரிக்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து போலீசார் கொடுத்த தகவலின் பேரில் காவல் நிலையம் வந்த பள்ளி தமிழாசிரியர் சசிகலா காணாமல் போன செயின் குறித்த அடையாளங்களை தெரிவித்த நிலையில் நரிக்குடி காவல்துறையினர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோரின் முன்னிலையில் செயின் கிடைக்க காரணமாக இருந்த மூன்று மாணவிகளின் கைகளினாலயே தமிழாசிரியர் ஆசிரியர் சசிகலா தனது செயினை பெற்றுக்கொண்டார்.
மேலும் மாணவிகளின் நேர்மையான செயலை கண்ட நரிக்குடி காவல்துறையினர், தமிழாசிரியர் சசிகலா மற்றும் தலைமையாசிரியர் சோணைமுத்து ஆகியோர் மாணவிகளை வெகுவாக பாராட்டினர். மேலும் செயினை மீட்டு கொடுத்த நரிக்குடி போலீசாருக்கு தமிழாசிரியர் சசிகலா தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2023 - School Morning Prayer Activities...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 18.08.2023 - School Morning Prayer Activities...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம்:அருளுடைமை
குறள் :241
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.
விளக்கம்:
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
பழமொழி :
Be slow to promise but quick to perform
ஆலோசித்து வாக்கு கொடு விரைந்து நிறைவேற்று.
இரண்டொழுக்க பண்புகள் :
1. என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2. பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொன்மொழி :
கண்ணுக்கு கண் தண்டனை என்ற இருந்தால் இந்த உலகம் மொத்தமும் குருடாகி விடும் - மகாத்மா காந்தி
பொது அறிவு :
1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் யார்?
விடை: சர்.சி.வி ராமன்
2. தமிழ்நாட்டின் முட்டை நகரம் எது?
விடை: நாமக்கல்
English words & meanings :
Un-li-ke-ly - not likely to happen. Adjective, நிகழ வாய்ப்பில்லாத, நடக்க வாய்ப்பில்லாத, பெயரளபடை
ஆரோக்ய வாழ்வு :
கொத்தமல்லி விதை : நினைவாற்றலை அதிகரிக்கிறது. மேலும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
ஆகஸ்ட்18
நேதாஜி அவர்களின் நினைவுநாள்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (Subhash Chandra Bose, சனவரி 23, 1897[4] – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகத்து 18, 1945)[1] இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது, வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி, அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.[5]
1941 இல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பைத் தொடங்கி, ஆசாத்ஹிந்த் என்ற வானொலிச் சேவையையும் உருவாக்கி, விடுதலைத் தாகத்தை, அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி ஜன கண மன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார்.
செருமனி, இத்தாலியின் உதவி கிடைக்காது எனத் தெரிந்தபின், சப்பான் செல்ல முடிவு செய்து, போர்க்காலத்தில், நீர்மூழ்கிக் கப்பல் மூலம் சப்பான் சென்று, இராணுவ ஜெனரல் டோஜோவை சந்தித்து உதவி கேட்டார். உதவிகள் தயாரானது. பிரித்தானிய அரசுக்கு எதிராக ராஷ் பிஹாரி போஸால் உருவாக்கப்பட்டு, செயல்படாமல் இருந்த இந்திய தேசிய ராணுவத்தை, மீள் உருவாக்கம் செய்து, அதன் தலைவரானார் சுபாஷ். விடுதலைக்காகப் போராடி, நாட்டிற்காக உயிர் தர இளைஞர்கள் வேண்டுமென ஆட்கள் திரட்டி, பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தியாவில் அனைவரும், காந்தியின் அகிம்சை வழி போராட்டத்தில் விரும்பி சென்றமையால், இராணுவத்திற்கு சிலரே செல்ல நேர்ந்தது. தமிழகத்தில், முத்துராமலிங்க தேவரால் சுமார் 600 இற்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தில் இணைந்தனர்.
நீதிக்கதை
மகிழ்ச்சி தான் வாழ்க்கை.
ஒரு பறவை இறைவனைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டு பிரார்த்தனை செய்தது.
இறைவனும் மனமுருகி பறவைக்கு
காட்சியளித்தார்
இறைவனைக் கண்டதும் பறவை வணங்கிப் பணிந்து நின்றது.
என்னை எதற்காக அழைத்தாய் என்று
இறைவன் கேட்டார்.
மகிழ்ச்சியான ஒரு நாளில் என்னை படைத்தவனைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் அதுதான் அழைத்தேன் என்றது பறவை.
நீ மகிழ்ச்சியாக இருக்கிறாயா?
ஆம் என்று சொன்னது பறவை.
உனக்கு ஏதும் வரம் வேண்டுமா? என்று பறவையைப் பார்த்து இறைவன் கேட்டார்.
என்னைப் படைக்கும் போதே வரம் தந்து விட்டீர்களே.
என் சிறகுகளைத் தவிர சிறந்த வரம் எது இறைவா? என்று கேட்டது பறவை.
நீதி:
உன்னிடம் இருக்கும் உன் திறமைகளைக் கண்டறிவதே உன் வாழ்வின் மகிழ்ச்சி.
இன்றைய செய்திகள்
18.08. 2023
*நூற்றாண்டு இறுதிக்குள் தார்பாலைவனம் பசுமையாக மாறலாம் ஆராய்ச்சியில் தகவல்.
* மகளிர் உரிமைத்தொகை: விடுபட்ட பெண்கள் பதிவு செய்ய நாளை முதல் மூன்று நாட்கள் முகாம்.
* சந்திரயான்- 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர்.
* அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள காலியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ் இரண்டாவது கட்ட கலந்தாய்வு. 22ஆம் தேதி தொடங்குகிறது.
* உலகக்கோப்பை வில்வித்தை இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி.
* சர்வதேச அலைசறுக்கு போட்டி: ஜப்பான் வீரர்கள் முன்னணி.
Today's Headlines
*Thar desert could turn green by the end of the century, research informs.
* Women Entitlement Fund: Three days camp from tomorrow to register the women's names of those who are left out.
* Vikram lander successfully separated from Chandrayaan-3 spacecraft.
* MBBS Second Phase Councelling for Vacancies in Government Medical Colleges Starts on 22nd.
* India qualifies for the Archery World Cup finals.
* International Surfing competition: Japanese players are in the lead.
01.01.2023 நிலவரப்படி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான ஒருங்கிணைந்த திருத்திய பணிமூப்பு இறுதிப்பட்டியல் (Revised Rotation Panel 17.08.2023) வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Revised Rotation 17.08.2023 for the promotion of Higher Secondary School Headmaster as on 01.01.2023 - Proceedings of the Director of School Education)...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies
234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...