கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வேலையை உதறிய அரசுப் பள்ளி ஆசிரியர் - இப்போதாவது விழித்துக்கொள்ளுமா பள்ளிக்கல்வித்துறை?! - விகடன் இதழ் (The government school teacher who quit his job - will the school education department wake up now?! - Vikatan Magazine)...



வேலையை உதறிய அரசுப் பள்ளி ஆசிரியர் - இப்போதாவது விழித்துக்கொள்ளுமா பள்ளிக்கல்வித்துறை?! - விகடன் இதழ் (The government school teacher who quit his job - will the school education department wake up now?! - Vikatan Magazine)...


பலரும் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் ஓர் அரசு வேலையை ஒருவர் உதறித்தள்ளிவிட்டுச் செல்கிறார் என்றால், அது ஆளும் அரசுக்கு ஓர் இழுக்கு. இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும்!




நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஆலந்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியரான குப்பண்ணன், கடந்த ஜூன் மாதம் 7-ம் தேதி, தன் வேலையிருந்து விலகுவதாக துறைக்குக் கடிதம் எழுதினார். அவர் எழுதிய கடிதத்தில், ஆன்லைன் மூலம் மதிப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தனித்தனி வகுப்புகளாகக் கற்பிக்காமல், வகுப்புகளை ஒன்றிணைத்துப் பயிற்சிப் புத்தகங்கள் மூலம் கற்பிக்கக் கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியவர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் பணியிலிருந்து விலகுவதாக நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலருக்குக் கடிதம் சமர்ப்பித்தார்.



இந்தத் தகவல் வாட்ஸ்அப் வாயிலாக வெளியில் கசியவே, இது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், கடந்த 8-ம் தேதி மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஆஜராக குப்பண்ணனுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், பிரச்னையைச் சரிசெய்வதற்கு பதிலாக, பணியில் அவரை மீண்டும் சேரச் சொல்லி துறையால் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. இதனால், வேறு வழியின்றி அவர் பணியில் சேரவிருக்கிறார்.

குப்பண்ணன்


இது குறித்து விளக்கம் கேட்க குப்பண்ணனைத் தொடர்புகொண்டோம். “நான் 20 ஆண்டுகளாக ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். 1-5 வகுப்புகள் இருக்கும் பள்ளியில் மொத்தமாக 70 மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இவர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைத்து, ஒற்றை ஆளாக எப்படிப் பாடம் நடத்த முடியும்... ஆனால், அரசு அப்படி நடத்தவே நிர்பந்திக்கிறது. மேலும், ’எண்ணும் எழுத்தும்’ திட்டத்தில் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறுகின்றனர். பள்ளி இருக்கும் கொல்லிமலைப் பகுதியில் டவர் கிடைக்காது. இதனால், மாணவர்களை அழைத்து மூன்று கிலோமீட்டர் தள்ளி வந்து, பிறகு தேர்வை நடத்த வேண்டும். ஒரு வகுப்பினரைப் பள்ளியிலிருந்து கூட்டி வந்துவிட்டால், மற்ற மாணவர்களை யார் கட்டுப்படுத்துவது?



இதனால் மாணவர்களுக்கிடையில் பிரச்னை அதிகரித்து, ஆசிரியர்களுக்குத் தேவையில்லாத மன அழுத்தம் உண்டாகிறது. ஆனால், இந்தச் சிக்கல் எதையுமே கருத்தில்கொள்ளாமல் அரசு திட்டத்தைச் செயல்படுத்த அழுத்தம் கொடுக்கின்றனர். அதற்குச் சரியான வசதிகளைச் செய்து தருவதில்லை. இப்போதும் எதற்காகப் பணியிலிருந்து விலகினேனோ, அது இன்றும் சரிசெய்யப்படவில்லை. ஆனால், மீண்டும் பணியில் சேர வேண்டும் என துறை கேட்டுகொண்டதால் பணியில் சேர்கிறேன்” என்றார்.

பொன்மாரி, ஆசிரியர்

இது குறித்து ஆசிரியர் பொன்மாரி என்பவர் பேசுகையில், ``பள்ளிக் கல்வியில் ’எழுத்து, வசிப்பு, பயிற்சி’ என அனைத்தும் கூட்டாக இருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு பயிற்சிக்கு (Activity) மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. அதுமட்டுமில்லாமல், அந்தத் தேர்வையும்கூட ஆன்லைனில் வைக்கச் சொல்கின்றனர். அரசு சார்பாகப் பல கோடி ரூபாயில் புத்தகங்கள் அச்சிடக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கின்றன. எல்லாம் ஆன்லைனில் என்றால், இந்தப் புத்தகங்களுக்கான அவசியம் என்ன... ’மாணவர்கள் மத்தியில், வகுப்பறைக்குள் கைப்பேசியைப் பயன்படுத்தக் கூடாது’ என யுனெஸ்கோ சொல்கிறது. ஆனால், தமிழக அரசு 1-ம் வகுப்பு குழந்தையையும் போனில் தேர்வு எழுதச் சொல்கிறது.


`எண்ணும் எழுத்தும்’ திட்டம் மாணவர்களுக்கு எந்த வேலையையும் தருவதில்லை. அதனால் ஆசிரியர்களுக்குத்தான் வேலை. இந்தத் திட்டத்தை மதிப்பீடு செய்ய ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களை நியமித்திருக்கின்றனர். ஓர் ஆசிரியரை மதிப்பீடு செய்ய பயிற்சி பெறுபவரை அனுப்புவது எந்த வகையில் நியாயம்?


தற்போது, பணியிலிருந்து வெளியேறிய ஆசிரியர் சொன்ன பிரச்னைக்குத் தீர்வைத் தருவதற்கு பதிலாக, விமர்சனத்தைத் தவிர்க்க அவரைக் கட்டாயப்படுத்தி பணியில் தொடர வைத்திருக்கிறது துறை. தங்கள்மீது எந்தக் குற்றச்சாட்டும் வராமலிருக்க, தீவிரமாகப் பள்ளிக்கல்வித்துறை பணியாற்றுகிறது. ஆனால், பிரச்னையைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், பள்ளிக்கல்வித்துறையின் இந்த மோசமான செயலபாட்டால் அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல்திறன் குறையும். பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களை அழைத்துச் செல்வார்கள்.


குப்பண்ணன்போல் வெளியில் தெரியாமல் வேலையை உதறித்தள்ளிவிட்டுச் சென்றவர்கள் எத்தனையோ பேர். கடந்த ஆண்டில் வி.ஆர்.எஸ் வாங்குவது ஆசிரியர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது. இது அரசின் தோல்வி என்பதையும் ஒப்புக்கொண்டு. இதைச் சீரமைப்பதற்கான வழிகளை அரசு கையிலெடுக்க வேண்டும்” என்றார்.

உமா மகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர்

இது குறித்து கல்விச் செயற்பாட்டாளர் உமா மகேஸ்வரியிடம் பேசினோம். ”பொதுச் சமூகத்தில் மாணவர்களுக்குப் பல இடர்ப்பாடுகள் இருக்கின்றன. அவர்களைச் சீர்திருத்தும் நோக்கில்தான் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆனால், மாணவனைச் சீர்திருத்தாமல் ஆசிரியர்கள், அரசு கொண்டுவந்த திட்டத்துக்கான ஆன்லைன் பதிவேற்றத்தை மட்டும் பார்த்தால் மாணவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது?


திமுக அரசு, பொறுப்புக்கு வந்தவுடன், பள்ளிக்கல்வித்துறையில் பல புதிய திட்டங்களைக் கொண்டுவந்தது. ஆனால், அவற்றை முழுவதுமாகச் செயல்படுத்த ஆட்கள் தேவை. ஆனால், ஆசிரியர்களை இறுதிவரை நியமிக்கவில்லை. ஓர் ஆசிரியர் எத்தனை பணிகளைச் செய்ய முடியும்... `இல்லம் தேடிக் கல்வி’ ஒரு தோல்வி திட்டம். அதன் வரிசையில், `எண்ணும் எழுத்தும்’ திட்டமும் சேர்ந்திருக்கிறது.


இந்த நிலையில், ’எண்ணும் எழுத்தும் திட்டத்தை 9-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்’ என அறிவிப்பு வருகிறது. அந்தத் திட்டத்தின் நோக்கம் கணக்கு போடுவது மற்றும் எழுத்துத்திறன் மட்டும்தான். அந்த இரண்டை மட்டும் மாணவர்களுக்குச் சொல்லித்தர வேண்டுமென்றால், நம் மாணவர்களின் நிலை குறித்து யோசிக்கவேண்டியிருக்கிறது.


’ஏனோ தானோ’ என நிர்வகிக்கும் ஒரு துறை அல்ல பள்ளிக்கல்வித்துறை. நாள்தோறும் மாணவர்களுக்குப் பல பிரச்னைகள் வரும். அவற்றைச் சரிசெய்ய தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். அதற்கு வாய்ப்பு தராமல், அரசின் திட்டங்களை மட்டும் பார்ப்பதால் என்ன பயன்... உண்மையில் கள நிலவரம் என்ன என்பதை அரசு அறிந்துகொள்ள வேண்டும்.

அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆனால், இதையெல்லாம் அரசிடம் கொண்டு செல்லவேண்டிய ஆசிரியர்கள் அச்சத்தில் இருப்பதால் மேலிடத்துக்கும் இந்தச் சிக்கல்கள் தெரிவதில்லை. எனவே, ஆசிரியர்கள் இதை அவர்களுக்கான பிரச்னையாகப் பார்க்காமல், மாணவர்களின் நலனும் பாதிக்கிறது என்பதை உணர்ந்து தாங்கள் சந்திக்கும் சிக்கலை வெளியில் சொல்ல வேண்டும். அப்போதுதான் அரசின் பார்வைக்குச் சென்று தீர்வு கண்டடையப்படும். இதை வெளியில் சொல்லாமல் இருக்கும்பட்சத்தில், ’திட்டம் ஹிட்’ என அரசு பகல் கனவிலும், மாணவர்களின் எதிர்காலம் புதைகுழியிலும்தான் இருக்கும். பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் ஓர் அரசு வேலையை ஒருவர் உதறித்தள்ளிவிட்டுச் செல்கிறார் என்றால், அது ஆளும் அரசுக்கு ஓர் இழுக்கு. இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு பிரச்னையைத் தீர்க்க வேண்டும்” என்றார்.


இது குறித்து நம்மிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, ``அந்த ஆசிரியர் ராஜினாமா செய்ததாகச் சொல்வது ஒரு ‘டிராமா.’ ராஜினாமா செய்வதற்கான எந்த வழிமுறையையும் அவர் பின்பற்றவில்லை. அவர் சமூக வலைதளத்தில் தன் ராஜினாமா கடிதத்தை வெளியிட்டதே தவறு. இதற்காக அவர்மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதை விசாரித்தால் அவர் வேலை போகும், பிறகு சாப்பாட்டுக்கு என்ன செய்வார்... இது குறித்து விசாரிக்க உத்தரவிடப்போகிறேன். அப்போது அவர் ஆடியது நாடகம் என்பது தெரியவரும். யாரும் தன் முதுகைத் தட்டிக்கொடுத்து, தான் நன்றாக வேலை பார்ப்பதாகச் சொல்ல முடியாது. இதனால், மாணவர்களைச் சோதனை செய்ய வெளியிலிருந்து ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களை அனுப்புகிறோம்.

அறிவொளி, பள்ளிக்கல்வி இயக்குநர்

ஆன்லைனில் அனைத்து மதிப்பீடுகளையும் ஆப்பில் போடச் சொல்வதிலும் சிக்கல் இருக்கிறது. அதற்குத் தீர்வாக, கடந்த செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினத்தில் வெறும் 3 ஆப்கள் மட்டும் ஆசிரியர்  பயன்படுத்தினால் போதும், மற்ற ஆப்களை துறை பார்த்துக்கொள்ளும் என்னும் அறிவிப்பை அமைச்சர் வெளியிட்டார்” என்றார்.


`எண்ணும் எழுத்தும்’ திட்டத்தின் எதிர்ப்பு குறித்துக் கேட்டபோது, ”ஆசிரியர் வேலையே பார்க்க வேண்டாம் என நினைப்பார்கள். அதற்குத் துறை என்ன செய்ய முடியும்?” என்றார். `அப்படியானால், எண்ணும் எழுத்தும் திட்டத்தை எதிர்த்து ரோட்டில் இறங்கி ஆசிரியர்கள் போராடுவது பொய்யா?’ என்ற கேள்வியைக் கேட்டபோது, ”இதற்குத் தமிழ்நாடு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்தான் பதில் சொல்ல வேண்டும்” என இணைப்பைத் துண்டித்தார்!


பத்திரிகையில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பதிவு (Director of School Education's explanation for the news published in the newspaper)...


பத்திரிகையில் வெளியான செய்திக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் பதிவு (Director of School Education's explanation for the news published in the newspaper)...


Dear friends

It's unfortunate that some wrong information has been given in some news. What I said is different from what is published. I am son of a teacher. I will never go against teachers. I always have highest regards for all teaching community. So trust me. Always yours

Arivoli


அன்பிற்குரிய நண்பர்களே,

 சில செய்திகளில் தவறான தகவல்கள் வெளியாகி இருப்பது வருத்தமளிக்கிறது. நான் சொன்னது வேறு பிரசுரமானது வேறு. நான் ஒரு ஆசிரியரின் மகன். ஆசிரியர்களுக்கு எதிராக நான் ஒருபோதும் செல்லமாட்டேன். அனைத்து ஆசிரியர் சமூகத்தின் மீதும் எனக்கு எப்போதும் அதிக மரியாதை உண்டு. எனவே என்னை நம்புங்கள். என்றும் தங்களுடைய... 

அறிவொளி



>>> விகடன் இதழில் வெளியான செய்தி...


1-5 வகுப்புகளுக்கு TNSED செயலியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளுதல் சார்ந்து TN EE Misson STATE Co-ordinator பதிவு (TN EE Misson STATE Co-ordinator's Message Regarding Class 1-5 Summative Assessment on TNSED App)...

 1-5 வகுப்புகளுக்கு TNSED செயலியில் தொகுத்தறி மதிப்பீடு மேற்கொள்ளுதல் சார்ந்து TN EE Misson STATE Co-ordinator பதிவு (TN EE Misson STATE Co-ordinator's Message Regarding Class 1-5 Summative Assessment on TNSED App)...


ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்,

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்தும் பொழுது, ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை களையவும், சரியான முறையில் கால விரயம் ஏற்படாமல் ஒவ்வொரு மாணவர்களுக்கும் மதிப்பீட்டினை நடத்திட ஏதுவாக செயலியானது 19.09.2023  முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. நாளை 15.09.23 செயலியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறோம். தங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்.

                              நன்றி

                   State coordinator

                     TN EE mission


மதியம் 2.40 மணியளவில் பெறப்பட்ட தகவல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வுகள் - கல்வி இணை செயல்பாடுகள் - ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் - மாவட்ட வாரியாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 (Tamil Nadu Chief Minister's Zonal Review Meeting - School Forum Activities - Conduct of Review Meeting - District wise Director and Joint Directors appointed as Officers in Charge - Proceedings of Director of School Education, Dated : 13.09.2023)...

 

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மண்டல ஆய்வுகள் - கல்வி இணை செயல்பாடுகள் - ஆய்வுக் கூட்டம் நடைபெறுதல் - மாவட்ட வாரியாக இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பொறுப்பு அலுவலர்களாக நியமித்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 (Tamil Nadu Chief Minister's Zonal Review Meeting - School Forum Activities - Conduct of Review Meeting - District wise Director and Joint Directors appointed as Officers in Charge - Proceedings of Director of School Education, Dated : 13.09.2023)...


>>> பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், கடிதம் ந.க.எண்: 52444/ அ1/ இ4/ 2023, நாள் : 13.09.2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools App New Version: 0.0.84 - Updated on 12-09-2023 - Ennum Ezhuthum Module Changes & Bug Fixes & Performance Improvements...

 

 

TNSED schools App


What's is new..?


*🎯  Ennum Ezhuthum Module Changes....

*🎯 Bug Fixing and Performance Improvements...


*_UPDATED ON  12 SEPTEMBER - 2023


*_Version: Now 0.0.84


Link:

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.09.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : புலால் மறுத்தல்


குறள் :260


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி

எல்லா உயிருந் தொழும்.


விளக்கம்:


ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.


பழமொழி :

Covert all, lose all


பேராசை பெரு நட்டம்



இரண்டொழுக்க பண்புகள் :


1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.


 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.


பொன்மொழி :


புகழ் தான் நம்மை தேடி

வர வேண்டும்… புகழை தேடி

நாம் அலையக் கூடாது. அறிஞர் அண்ணா 


பொது அறிவு :


1.தொழிற்புரட்சி முதன்முதல் ஆரம்பித்த நாடு எது?


விடை: இங்கிலாந்து



2. காவிரி நதி வங்காள விரிகுடாவில் எங்கு கலக்கிறது?

விடை: பூம்புகார்


English words & meanings :


 lin·guis·tics - the scientific study about language. Noun. Linguisticians are experts in language. மொழியியலாளர். பெயர்ச் சொல் 


ஆரோக்ய வாழ்வு : 


எள்: எள் எண்ணெய்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை மூட்டு வீக்கம், பல்வலி மற்றும் கீறல்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகின்றன.


நீதிக்கதை


ஒரு பெரிய நகரத்தில் உமா என்கிற பெண் குழந்தை வாழ்ந்து வந்தாள். உமாவின் அம்மா அப்பா இருவரும் அந்த நகரத்திலேயே வேலை செய்து வந்தார்கள். உமாவின் பெற்றோர் அவளின் மீது ரொம்ப பாசம் வைத்திருந்தார்கள். அதனால் உமா என்ன ஆசைபடுகிறாளோ அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தார்கள். அவர்கள் எப்போதெல்லாம் சந்தைக்கு போகிறார்களோ அப்போதெல்லாம் அவளுக்கு பரிசுகள் வாங்கிவிட்டு வருவார்கள். அவள் தன் பெற்றோர்களிடம் ரொம்ப செல்லமாக வாழ்ந்து வந்தாள். உமா ரொம்ப புத்திசாலி. அவள் படிப்பிலும் சிறந்து விளங்கினாள். அதுமட்டுமில்லாமல் எப்பவும் மற்றவர்களுக்கும் உதவி செய்யும் குணம் உடையவள். 


ஒரு நாள் உமா பள்ளிக்கு செல்லும் போது தன் வகுப்பிற்கு வெளியில் கூட்டமாக பசங்க இருப்பதை பார்த்தாள். அங்கே என்ன நடக்கிறதென்று தெரிந்துகொள்ள உமா ஆசைபட்டாள். அவளும் அந்தக் கூட்டத்தின் அருகில் வந்து பார்த்த போது எல்லோரும் உமாவின் தோழியான ஜோதியின் புதுப் பேனாவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். உமாவும் அந்தப் பேனாவைப் பார்க்கிறாள்.அவளுக்கு அந்த பேனா ரொம்ப பிடித்தது. அவள் ஜோதியிடம் ஒரு முறை அந்தப் பேனாவை கேட்டு வாங்கி தன்னுடைய புத்தகத்தில் எழுதி பார்த்தாள். அந்த நேரம் ஸ்கூல் பெல் அடித்தது. உடனே எல்லா பசங்களும் காலை பிராத்தனைக்காக பள்ளி மைதானத்திற்கு சென்றார்கள். 


அந்த நேரத்தில் டீச்சர் உமாவை கொஞ்சம் சாக்பீஸ் கொண்டு வர சொன்னார்கள். அப்போது உமா வகுப்பிற்கு சென்றாள். அவளால் ஜோதியின் பேனாவை பாக்காம இருக்க முடியவில்லை. இன்னொரு முறை அந்த பேனாவை ஜோதியோட பையிலிருந்து எடுத்து பார்த்தாள். அவள் அந்த பேனாவை எப்படியாவது தனதாக்கிக்கொள்ள் நினைத்தாள். அப்போது அந்த வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது, அந்த அவசரத்தில் பேனாவை அவள் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு யாரென்று பார்த்தாள் அது அவளது மற்றோரு தோழியான தீபா, அவளுக்கு உடம்பு சரியில்லாத காரணத்தினால் அவளால் பிராத்தனைக்குப் போக முடியாமல் வகுப்பிற்கு திரும்ப வந்தாள். 


உமா உடனே அங்கிருந்து ஓடி பிராத்தனைக்கு சென்றாள். ஆனால் அந்த பேனா அவள் பாக்கெட்டில் தான் இருந்தது. பிராத்தனை முடிந்ததும் உமா உள்பட எல்லாரும் வகுப்பிற்கு போனார்கள். ஜோதி தன்னுடைய பேனா காணவில்லை என்பதை உணர்ந்து ஆசிரியரிடம் புகார் செய்தாள்.உடனே ஆசிரியர் வகுப்பில் இருந்த எல்லோரையும் கூப்பிட்டு பிராத்தனை நடைபெற்ற நேரத்தில் யார் வகுப்பில் இருந்தது என்று கேட்டார்கள். எல்லோரும் தீபாவை கை காட்டினார்கள். தீபா அப்பாவி அவளுக்கு அந்த பேனாவை பற்றி எதுவும் தெரியாது. 


ஆசிரியர் தீபாவை ரொம்ப திட்டினார்கள். பேனாவை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று தீபா சொன்னதை அந்த ஆசிரியர் கண்டுக்கவே இல்லை. கடைசியாக அந்த ஆசிரியர் “நான் உனக்கு ஒரு நாள் டைம் தாரேன் அதுக்குள்ள உண்மையை சொல்லனும் இல்லை என்றால் உன்னை தலைமை ஆசிரியரிடம் கூட்டிகிட்டு போக வேண்டியிருக்கும் என்றார்கள்.ஆசிரியர் சொன்னத கேட்ட உமா ரொம்ப பயந்து போய் ஒன்றுமே பேசாமல் இருந்தாள். அன்றைய வகுப்பு முடிந்து சாயங்காலம் உமா வீடு திரும்பினாள். அன்று முழுவதும் அவள் செய்த தப்பை நெனைச்சுக்கிட்டு இருந்தாள். அவளால் தான் தீபா ஆசிரியரிடம் திட்டு வாங்கினார். அந்த குற்ற உணர்ச்சியால் அவளால் அன்றைக்கு தூங்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் உமா பள்ளிக்கு போனாள். அவள் வகுப்பிற்கு உள்ளே போகும்போது தீபா அழுவதை பார்த்து உமா உண்மையை சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். ஆசிரியர் வந்து தீபாவை உண்மையை சொல்ல சொன்னார்கள். உடனே உமா அவள் கையை பிடித்து " அந்த பேனா என்கிட்ட தான் இருக்கு நேற்று உண்மையை சொல்ல நான் பயந்தேன். என்னை மன்னிச்சிடுங்க நான் இனிமேல் இந்த மாதிரி எதுவும் பண்ண மாட்டேன்” என்று சொன்னாள் உமா. அனைவரும் ஆச்சரியமாக உமாவை பார்த்தனர்.ஆசிரியர் உமாவை பாராட்டினார்.


 நீதி: நாம் தெரியாமல் தவறு செய்தாலும் உமாவை போல நம் தவறை திருத்திக் கொண்டு நேர்மையாக இருக்க வேண்டும்.


இன்றைய செய்திகள்


14.09.2023


*தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை அமைச்சர் மா சுப்பிரமணியன்.


* அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுப் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க திட்டம்.


*வளர்ச்சி திட்ட பணிகள்:  நான்கு மாவட்டங்களில் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர்.


* தமிழக சட்டசபை அடுத்த மாதம் கூடுகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் என தகவல்.


* ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: நசீம் ஷா - ஹரிஷ் ரவூப் விலகல்.


* ஐசிசி ஒரு நாள் தரவரிசை: டாப் 10 இல் மூன்று இந்திய வீரர்கள்.


Today's Headlines


* There is no need to fear Nipah virus in Tamil Nadu said Minister Ma Subramanian.


 * Scheme to reduce electricity charges for public utility in flats.


 *Development Project Work: The Chief Minister will hold consultations in four districts for two days.


 *  Tamil Nadu Assembly will meet next month.  It  will be held for five days.


 * Asia Cup Cricket Series: Naseem Shah - Harish Ravoob opt out.


 * ICC ODI rankings: Three Indian players in top 10.

 

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - மாவட்ட வாரியாக மாணவர் எண்ணிக்கை - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் (Provision of higher education, employment guidebooks to 11th class students - District wise student population - SPD Proceedings)...


 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடுகள் வழங்குதல் - மாவட்ட வாரியாக மாணவர் எண்ணிக்கை - மாநிலத் திட்ட இயக்குநரின் (SPD) செயல்முறைகள் (Provision of higher education, employment guidebooks to 11th class students - District wise student population - SPD Proceedings)...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...