கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2022-23 நிதியாண்டுக்கான படிவம் 10பி/10பிபியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT 31.10.2023 வரை நீட்டித்துள்ளது (CBDT extends due date for filing of Form 10B/10BB for FY 2022-23 to 31.10.2023)...

2022-23 நிதியாண்டுக்கான படிவம் 10பி/10பிபியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை CBDT 31.10.2023 வரை நீட்டித்துள்ளது (CBDT extends due date for filing of Form 10B/10BB for FY 2022-23 to 31.10.2023)...

Due date for furnishing of ITR in Form ITR-7 for the AY 2023-24 also extended to 30.11.2023.

CBDT Circular No. 16/2023 dated 18.09.2023 issued and is available at: 

CBDT extends due date for filing of Form 10B/10BB for FY 2022-23 to 31.10.2023.

Due date for furnishing of ITR in Form ITR-7 for the AY 2023-24 also extended to 30.11.2023.

CBDT Circular No. 16/2023 dated 18.09.2023 issued and is available at: 

incometaxindia.gov.in/communications

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம் தொடக்கம் - kmut.tn.gov.in வலைதளத்தில் ஆதார் எண் உள்ளீடு செய்து OTP மூலம் விவரங்கள் பெறலாம் (New website launched for Kalaignar Magalir Urimai Thittam (Women's Entitlement Scheme) - To get details through OTP by entering Aadhaar number in kmut.tn.gov.in website)...

 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு புதிய இணையதளம்

kmut.tn.gov.in என்ற புதிய இணையதளம் துவக்கம்

ஆதார் எண்ணை உள்ளீடு செய்து OTP வைத்து விவரங்களை பெறலாம்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

4 & 5 - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் தொடர்பான TN EE Misson Admin பதில்...

4 & 5 - தொகுத்தறி மதிப்பீடு வினாத்தாள்கள் தொடர்பான TN EE Misson Admin பதில்...

 The process of uploading question papers is going on. Information will be shared in this group once the question papers are uploaded.

வினாத்தாள்களை பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் 4 & 5 - TN EE Mission குழுவில் தகவல் பகிரப்படும் (The process of uploading question papers is going on. Information will be shared in this group once the question papers are uploaded)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...

 1-5ஆம் வகுப்பு - எண்ணும் எழுத்தும் - பருவம் 1 - தொகுத்தறி மதிப்பீடு - திருத்தப்பட்ட கால அட்டவணை (1-5th Std - 1st Term - Summative Assessment - Revised Time Table - Ennum Ezhuthum)...

>>> Click Here to Download...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :262

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை

அஃதிலார் மேற்கொள் வது.

விளக்கம்:

தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.

பழமொழி :

Cut your coat according to your cloth

வரவுக்குத் தக்க செலவு செய்

இரண்டொழுக்க பண்புகள் :

1. எனது நோட்டில் உள்ள காகிதம் அல்லது பேப்பர் கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழித்தால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்ல மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி :

மற்றவர்களிடம் பழகும் வித்தையையும், ஒழுக்கத்தையும் சிறு வயதிலேயே ஒருவன் கற்றுக்கொண்டானானால் அவனே வாழ்க்கையில் பெரிய மனிதன். தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. உலகிலேயே  ஆழமான ஆழி எது?

விடை: மரியானா ஆழி

2.உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?

விடை: ரப்லேசியா அர்னால்டி

English words & meanings :

 revitalize -restore strength புத்துயிர் ஊட்டு. 

aggression -violent behaviour வலுச்சண்டைக்குப் போதல்

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை:சாதாரணமாக இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு உணவாக கொண்டைக் கடலை உள்ளது. அதனால் அதிகப்பட்சமான மக்கள் கொண்டை கடலையை சுவைத்திருப்போம். கார்பன்சோ பீன்ஸ் என அழைக்கப்படும் கொண்டைக் கடலை புரதம், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து ஆகியவற்றை மிகுதியாக கொண்டுள்ளது.

செப்டம்பர் 19

சுனிதா வில்லியம்ஸ் அவர்களின் பிறந்தநாள்

சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார்[1]. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

நீதிக்கதை

பழனியாண்டிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனியாண்டி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான். இதனைக் கவனித்த பழனியாண்டியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனியாண்டி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான் . மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனியாண்டி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.அதனைக் கண்டு பழனியாண்டியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியாண்டியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.சோம்பேறியான பழனியாண்டி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியாண்டியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.

அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.அதனைப் பார்த்து பழனியாண்டியால் பொறாமைப் படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.

இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்து செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.

நீதி:

பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல் எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.09.2023

*விடை பெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் இன்று கோலாகல விழா.

*காலாண்டு தேர்வு இன்று தொடக்கம்: பொதுவான ஒரே வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

*நிபா வைரஸ்: கடந்த இரண்டு நாட்கள் பாசிட்டிவ் இல்லை. கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி.

*திருப்பதி ரூ. 650 கோடியில் ஆறு கிலோமீட்டர் நீள மேம்பாலம் திறப்பு:

பஸ் நிலையத்தில் இருந்து மலையடிவாரம் வரை எளிதில் செல்லலாம்.

*கரீபியன் பிரீமியர் லீக்: ஒரே ஓவரில் 32 ரன்கள் குவித்த 

சாய்ஹோப்.

*21 ரன்னுக்கு ஆறு விக்கெட் ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த சிராஜ்.

Today's Headlines

*Valediction was given to Parliament Old Building. Grand ceremony  will  be there in the new building,Today.

 *Quarterly Exam Starts Today: Common Single Question Paper System is being implemented again.

 * Nipah virus: No positive for last two days.  Kerala State Health Minister.

 * Reopen of Rs.  650 crore  six kilometer long flyover in Tirupathi:

Will have easy access from the bus station to the foothills.

 *Caribbean Premier League: Scored 32 runs in one over Saihope.

 * Six wickets in 21 runs , player Siraj who set many records in one match today.

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவத்திற்குரிய பயிற்சி நடைபெறும் தேதிகள் மாற்றம் - முதல் பருவத்திற்கு தொகுத்தறி தேர்வு நடத்துதல் - தொடர்பான திருத்தி அமைக்கப்பட்ட - SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் (Ennum Ezhuthum - Change of training dates for term 2 - Conduct of Summative examination for term 1 - Changes made regarding - SCERT & DEE Directors joint Proceedings) ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023...

>>> SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 எண்ணும் எழுத்தும் 

EE EXAM AND SCERT EE TRAINING UPDATE 

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள், சென்னை - 06

ந.க.எண்.2411/ எஃப்2/ 2021, நாள். 18 .09. 2023

பொருள்: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எண்ணும் எழுத்தும் திட்டம் - 1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு - தொகுத்தறி மற்றும் வளரறி மதிப்பீடு (ஆ) நடத்துதல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெறுதல் சார்ந்த திருத்தி அமைக்கப்பட்ட சுற்றறிக்கை - சார்ந்து

எண்ணும் எழுத்தும் திட்டமானது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 அன்று முதல் 27.09.23 வரை செயலி மூலம் நடத்திட வேண்டும். ஒவ்வொரு பாடத்திற்கும் அவரவர் நிலைக்கேற்றவாறு 5 கேள்விகள் மட்டுமே செயலியில் இடம்பெறும்.

நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முதலாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு நிர்வாக காரணங்களுக்காக எழுத்துத் தேர்வாக (pen and paper test) மட்டுமே 20.09.23 முதல் 27.09.23 வரை மேற்கொள்ள வேண்டும். எழுத்து தேர்விற்கான வினாத்தாள்கள் Pdf வடிவில் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தாள்களை செயலியில்

பதிவிறக்கம் செய்து தொகுத்தறி மதிப்பீட்டினைமேற்கொள்ளலாம். மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை பதிவேட்டில் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வாரம் தோறும் நடைபெற்ற வளரறி மதிப்பீடு (ஆ)FA(b) இரண்டாம் பருவம் முதல் பதினைந்து (15) நாட்களுக்கு ஒரு முறை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

1 முதல் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீடு 20.09.23 முதல் 27.09.23 வரை நடைபெறுவதால் வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சியின் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 04.10.23 முதல் 06.10.23 வரை ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் 09.10.23 முதல் 11.10.23 வரை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுகிறது. இவ் அறிவிப்பினை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இயக்குநர்  தொடக்கக்கல்வி இயக்ககம்

இயக்குநர்

மாநிலக்கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்

>>> SCERT & DEE இயக்குநர்களின் இணைச் செயல்முறைகள் ந. க. எண்: 2411/ எஃப்2/ 2021, நாள்: 18-09-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி? (How to get 3 years Onsite Warranty for Epson M3170 Series Printer issued to Government Middle Schools?)...

 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட Epson M3170 Series Printerக்கு 3 ஆண்டுகள் Onsite Warranty பெறுவது எப்படி?

அரசு நடுநிலைப்பள்ளிகளில் அளிக்கப்பட்ட Epson M3170 Series Printer க்கு 3 ஆண்டுகள் onsite warranty (இடத்திற்கே வந்து Service செய்து தரும் warranty ) உள்ளது.

எனவே, கீழ்கண்ட weblink ல் உங்கள் Printer ன்  Serial Number ஐ உள்ளிட்டு , அதன் பின் உங்கள் விவரம், Email ID, Mobile Number மற்றும் முகவரியாக உங்கள் பள்ளி முகவரியை உள்ளிட்டு பதிவு செய்தால் அடுத்த நாளே Service man வந்து Service செய்து தருவார்.

https://www.epson.co.in/w/warranty

எனவே, இந்த இலவச சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...