கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஒற்றை பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று வாட்ஸ் அப்பில் பரப்பப்படும் தகவல்கள் தவறானது. காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுற்றறிக்கை (Information spread on WhatsApp that children who have lost a single parent will be given scholarships is false. Kanchipuram District Child Protection Officer Circular)...

>>> காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சுற்றறிக்கை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.10.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :276

நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்.

விளக்கம்:

மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.

பழமொழி :

Do i Rome as Romans do

ஊரோடு ஒத்து வாழ்

இரண்டொழுக்க பண்புகள் :

1. போதும் என்னும் மனமே பொன் செய்யும் மருந்து என்பதால் எனக்கு இருப்பது போதும் என்று இருப்பேன்.

2. என் ஆசிரியரையும் பெற்றோரையும் கஷ்டப் படுத்தும் எந்த காரியத்தையும் செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு மகள் இந்த உலகம் கொடுக்க வேண்டிய மிக அழகான பரிசுகளில் ஒன்றாகும்." - லாரல் அதர்டன்

பொது அறிவு :

1. "பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர் யார்?

விடை: லாலா லஜபதிராய்

2. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?

விடை: ஆரியபட்டா

English words & meanings :

 centuries(n)(செஞ்சுரீஸ் )- a period of several hundred years நூற்றாண்டுகள். crinkly (adj)(க்ரிங்க்லி)- with many folds or lines சுருக்கங்கள் நிறைந்த.

ஆரோக்ய வாழ்வு : 

வாழைப்பூ: ரத்த அழுத்தம், ரத்த சோகை உள்ளவர்கள் சாப்பிடலாம்வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.  

நீதிக்கதை

 வாரணாசியை ஆட்சி செய்த பிரம்ம தத்தரின் அமைச்சர் போதிசத்துவர்; கூர்மதி கொண்டவர்.

பிரம்ம தத்தரின் பட்டத்து யானை மகிலா முகன். இயல்பிலேயே மென்மையான குணம் கொண்டது. மகிலா முகன், எல்லோரிடமும் அன்பாக பழகி வந்தது.ஒரு நாள்… நள்ளிரவில், திருடர்கள் சிலர் யானைக் கொட்டடி அருகே வந்து நின்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

”நாம் இரக்கமற்றவர்களாக இருக்க வேண்டும். நமக்கு இடையூறு தருபவர்களை தயவுதாட்சண்யம் இன்றி கொல்ல வேண்டும்” என்ற அவர்களது பேச்சு, மகிலா முகனின் காதுகளிலும் விழுந்தது. இப்படி, திருடர்கள் யானைக் கொட்டடியில் பதுங்கி, தங்களுக்குள் பேசிக் கொள்வது அடுத்தடுத்த நாட்களும் தொடர்ந்தது.

தினமும், திருடர்களின் பேச்சைக் கேட்டு வந்த மகிலா முகன் யானை, ‘இவர்கள் நமக்காகவே போதிக்கின்றனர் போலும்!’ என்று எண்ணிக் கொண்டது.

ஒரு நாள், பாகன் ஒருவன் தன்னருகே வர… அவனை துதிக்கையால் தூக்கி தரையில் அடித்துக் கொன்றது மகிலாமுகன். பாகனின் உறவினர்கள், பிரம்ம தத்தரிடம் வந்து முறையிட்டனர்.

மன்னருக்கு அதிர்ச்சி! ‘சாதுவாக இருந்த மகிலாமுகன், திடீரென்று முரட்டுத்தனமாக நடந்து கொள்வது ஏன்?’ என்று குழம்பினார். முடிவில், அமைச்சர் போதிசத்துவரை வரவழைத்த மன்னர், அவரிடம் நடந்ததை விவரித்து, தகுந்த தீர்வு காணும்படி பணிந்தார்.

யானைக் கொட்டடிக்கு வந்த போதிசத்துவர் மகிலா முகன் யானையைக் கூர்ந்து கவனித்தார். வியாதிக்குரிய அடையாளம் எதுவும் தென்படவில்லை.

உடனே அங்கிருந்த பாகர்களிடம், ”இங்கே புதிய ஆசாமிகள் எவரும் வந்தார்களா?” என்று கேட்டார்.

அவர்கள், ”ஆமாம் ஐயா! சில தினங்களாக நள்ளிரவில் சிலர், கொட்டடிக்கு அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர்!” என்றார்கள்.

‘நள்ளிரவில் கூடுபவர்கள் தீயவர்களாகவே இருக்க வேண்டும்!’ என்று எண்ணிய போதிசத்துவர், மன்னரிடம் விவரங்களைக் கூறினார்.  அத்துடன், ”ஒழுக்கத்தில் சிறந்த சான்றோர்களை வரவழைத்து, கொட்டடிக்கு அருகில் அமர்ந்து நல்ல விஷயங்களைப் பற்றி பேசச் சொல்லலாம்!” என்றார். மன்னரும் சம்மதித்தார்.

அதன்படி நல்லோர்களும் அந்தணர்களும் யானைக் கொட்டடியில் கூடிப் பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டன. நாள்தோறும் அவர்கள் நன்னடத்தைகள்- நீதிநெறிகள் பற்றி உரையாடினர்.

‘எவரையும் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது. எல்லோரிடமும் அன்புடன் பழக வேண்டும்’ என்பன போன்ற அவர்களது பேச்சுகளும் மகிலாமுகன் யானையின் காதில் விழுந்தன. ‘நமக்காகவே போதிக்கின்றனர்’ என்று கருதிய யானை, படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்பியது. மன்னருக்கு ஆச்சரியம்! ”யானை மாறியது ஏன்? அது, பழைய நிலைக்குத் திரும்பியது எப்படி?” என்று போதிசத்துவரிடமே கேட்டார்.

”அரசே! எப்போதும் எல்லோரும் நல்ல கருத்துகளையே பேச வேண்டும் என்று பெரியோர் கூறுவது இதற்காகவே! திருடர்களது தீய பேச்சுகளைக் கேட்ட யானை, அவற்றை ஏற்று அவ்விதமே செயல்பட்டது. பிறகு அந்தணர்களது நல்லுரைகளைக் கேட்டு, சாதுவாகவும் அன்பாகவும் மாறிவிட்டது” என்று விளக்கினார் போதிசத்துவர்.

அவரது சாதுர்யத்தைப் பாராட்டிய மன்னர், அவருக்குப் பரிசுகள் வழங்கி கௌரவித்தார்.

இன்றைய செய்திகள்

12.10.2023

*சட்டசபை கூட்டம் இன்றுடன் முடிந்தது 13 சட்ட மசோதாக்கள் நிறைவேறியது.

*தஞ்சை வேளாண் கல்லூரிக்கு எம்எஸ் சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும். மேலும் இவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்-  முதல்வர் 

மு. க. ஸ்டாலின் அறிவிப்பு.

*இந்தியாவில் 22 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் : சி எம் சி டாக்டர்கள் எச்சரிக்கை.

*இந்திய கோடீஸ்வரர்களில் அம்பானி மீண்டும் முதலிடம். சொத்து மதிப்பு ரூபாய் 8 லட்சம் கோடி.

*உலகக் கோப்பை கிரிக்கெட்: ரோஹித் சர்மா சாதனை படைத்தார். கெயில் ரெக்கார்ட் முறியடிப்பு.

*ஐசிசி தரவரிசை பட்டியல்: விராட் கோலி தற்போது தரவரிசை பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளார்.

Today's Headlines

*Assembly meeting ended today and 13 Bills were passed.

 * Tanjore College of Agriculture will be named after MS Swaminathan.  And an annual award will be given in his name - Chief Minister

 M. K.  Stalin.

 *One in 22 women in India has breast cancer: CMC doctors' warning.

 *Ambani again tops Indian billionaires list.  The property value is Rs 8 lakh crore.

 *World Cup Cricket: Rohit Sharma sets record.  Gayle record breaking.

 *ICC Rankings: Virat Kohli is currently ranked seventh in the rankings.

மாணவர்கள் பள்ளி சீருடையில் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமிற்கு மனு அளிக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Departmental action against Headmasters if students come in school uniform with their parents to the district collector's grievance redressal camp - Pudukottai District Chief Education Officer)...

மாணவர்கள் பள்ளி சீருடையில் பெற்றோருடன் மாவட்ட ஆட்சியரின் குறைதீர் முகாமிற்கு மனு அளிக்க வந்தால் தலைமை ஆசிரியர்கள் மீது துறை நடவடிக்கை - புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Departmental action against Headmasters if students come in school uniform with their parents to the district collector's grievance redressal camp - Pudukottai District Chief Education Officer)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 இனி மாணவர்கள் பள்ளி சீருடையில் குறைதீர்வுநாள் முகாம் சென்றால் பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை - CEO...

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோரும் திங்கள்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பள்ளி வேலை நாட்களில் மாணவர்கள் பெற்றோர்களுடன் சீருடையில் மனு அளிக்க வருவது ஆய்வு அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்நிலை முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

 தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி இந்நிலையை தவிர்க்கவேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படின் , சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மீது துறை நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் என இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 16 இ.கா.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) வெளியீடு (Transfer of 16 IPS Officers including District Superintendents of Police - Order (Police Note No.SC/22/2023 Dated:11.10.2023) Issuance)...

>>> Click Here to Download Police Note No.SC/22/2023 Dated:11.10.2023...

*கரூர் எஸ்பி திரு.சுந்தரவதனம்  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றம்

*கரூர் எஸ் பி யாக  திரு.பிரபாகர்  நியமனம்

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்ட ஆட்சியர்கள் உட்பட இ.ஆ.ப. அலுவலர்கள் பணியிட மாற்றம் - அரசாணை (G.O.Rt.No.4212, Dated: 11-10-2023) வெளியீடு (Transfer of I.A.S.Officers including District Collectors - Ordinance (G.O.Rt.No.4212, Dated: 11-10-2023) issued)...

>>> Click Here to Download G.O.Rt.No.4212, Dated: 11-10-2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம்... 

கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியர் திரு.M.தங்கவேல்...

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  தொழில்நுட்ப கல்வி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி வீரராகவ ராவ் நியமனம். கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமிபதியை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் சிப்காட் மேலாண் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் ஆல்வி ஜான் வர்கீஸ் சென்னை பெருநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கரூர் ஆட்சியர் பிரபுசங்கர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக மாற்றம். நகர்ப்புற வளர்ச்சி மேலாண்மை வாரிய இணை நிர்வாக இயக்குநர் தங்கவேல், கரூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சுந்தரவள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.

>>> Click Here to Download G.O.Rt.No.4212, Dated: 11-10-2023...

திட்டமிட்டபடி சென்னையில் 13-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் - டிட்டோஜாக் மாநில அமைப்பு அறிவிப்பு (Demonstration will be held in Chennai on 13th as planned - TETOJAC State Organization Announcement)...

*இன்று சென்னையில் நடைபெற்ற இயக்குநர்கள் உடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி அக்டோபர் 13 ஆம் தேதி சென்னை டிபிஐ வளாகத்தில் மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெறும் என டிட்டோ ஜாக் மாநில அமைப்பு அறிவிப்பு...

மதிப்புமிகு இயக்குனர்கள் டிட்டோஜாக் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் சில கோரிக்கைகளை ஏற்பதாக தெரிவித்துள்ளனர். 

கோரிக்கைகள் ஏற்கப்படும் என்பதை அமைச்சர் முன்பாக மீண்டும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்தால் பரிசீலிக்கிறோம் என நமது பொறுப்பாளர்கள் தெரிவித்து வந்துள்ளனர். 

 இன்றைய தினம் அமைச்சரிடம் இருந்து பேச்சு வார்த்தைக்கு அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தற்போதைய நிலையில் 13ஆம் தேதி திட்டமிட்டபடி போராட்டம் என்ற நிலையில் மாற்றம் இல்லை என டிட்டோஜாக் அறிவிப்பு...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு (TTSE) - முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்களுக்கான அறிவுரைகள் (Literary Proficiency Test in Tamil Language - Instructions for Head Invigilator and Room Invigilators)...

>>> Click Here to Download Instructions...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...