கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

31-10-2023 மாலை 6.30 மணிக்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது - தலைமைச் செயலாளர் அறிவிப்பு (31-10-2023 at 6.30 PM Tamil Nadu Cabinet meeting will be held under the chairmanship of Hon'ble Chief Minister Mr.M.K.Stalin - Announcement by Chief Secretary)...

>>>  தலைமைச் செயலாளர் அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் (BT) மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை - முக்கிய தகவல்கள் (UGTRB Exam Notification for Graduate Teachers and BRTE Vacancies in Tamil Nadu Government Schools and Block Resource Centers - Important Information)...

 தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில்  காலியாக உள்ள  பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு  அறிவிப்பாணை  வெளியிடப்பட்டுள்ளது.

👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 

👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு 

(NOC compulsory) 

👉மாற்றுத்திறனாளிகள் 

👉மூன்றாம் பாலினத்தவர்

👉69% Reservation 

என அனைத்து  ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 

👉 காலிப்பணியிடங்கள் -2222

👉கல்வித்தகுதி - 

     BED + TNTET PAPER -2 Pass k

 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 

👉தேர்வு  - Offline - OMR BASED 

👉weightage Mark -  உண்டு  TET  தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில்  மதிப்பெண்.

 ( விவரம் Notifiacation)  

👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 

👉பாடவாரியாக தேர்வு  உண்டு 

👉150 கேள்வி  - 150 மதிப்பெண் 

👉 OC - 60 Mark தேர்ச்சி 

👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 

👉சான்றிதழ் சரிபார்ப்பு  - உண்டு

 2,222 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு!

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான அதிகாரபூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / கல்வியாளர்கள் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி தேர்வு நடைபெறும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய கூடுதல் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிப்பைப் டவுன்லோட் செய்து பார்க்கலாம். இந்தப் பணியில் சேர்பவர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.36,400 முதல் ரூ.1,15,700 வரை வழங்கப்படும்.

மொத்தம் 2222 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவை துறைவாரியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் 23 பணியிடங்களும், ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் 16 பணியிடலங்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பள்ளிக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் 2171 பணியிடங்களும் காலியாக உள்ளன.

பாட வாரியாகவும் காலிப் பணியிங்கள் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, இயற்பியல் 293, வேதியியல் 290, தாவரவியல் 131, விலங்கியல் 132, வரலாறு 391, புவியியல் 106 என மொத்தம் 2222 காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெற உள்ளது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள்: 01-11-2023

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30-11-2023

தேர்வு நடைபெறும் நாள்: 07-01-2024

மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்யவும்...

>>> Click Here to Download Notification...

>>> Click Here to Download Press Release...

>>> இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் - அரசிதழ் வெளியீடு...

>>> பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

எண்ணும் எழுத்தும் - இரண்டாம் பருவம் - வளரறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடு (FA & SA) செய்ய வேண்டிய தேதிகள் - அலகு வாரியாக (Ennum Ezhuthum - Term 2 – Dates for Formative and Summative Assessment – Unit wise)...

>>> Click Here to Download...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய... 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கள்ளாமை

குறள் :285

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்

பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.

விளக்கம்:

அடுத்தவர் பொருளைத் திருட எண்ணி, அவர் தளரும் நேரத்தை எதிர்பார்த்து இருப்போர், அருள் மீது பற்று உள்ளவராய் வாழ முடியாது.

பழமொழி :

Every heart hearth its own ache

தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலி

இரண்டொழுக்க பண்புகள் :

1. அமைதி நம் அறிவை வளர்ப்பது மட்டும் அல்ல நாம் ஆழ்ந்து சிந்திக்க நம்மை தூண்டும்.

2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு. பாரதியார்

பொது அறிவு :

1. கிம்பர்லி வைரச்சுரங்கம் எங்குள்ளது ?

 தென்னாப்பிரிக்கா

2. வாஸ்கோடகாமா இந்தியாவில் முதலில் வந்திறங்கிய இடம் எது ? 

தமிழ்: கள்ளிக்கோட்டை, Malayalam  கோழிகோடு & ஆங்கிலம்: Calicut

English words & meanings :

 Le-pro-lo-gy- study of the disease Leprosy. Leprosy is an infectious disease caused by Mycobacterium leprae. Noun. குஷ்டரோகம் குறித்த படிப்பு

ஆரோக்ய வாழ்வு : 

மாதுளை ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் மாயங்களை ஏற்படுத்தும். வேண்டுமானால் இந்த மாதுளை ஜூஸுடன் சிறிது பீட்ரூட் ஜூஸையும் சேர்த்து கலந்து குடித்தால், அது உடலில் உள்ள நச்சுக்களை திறம்பட நீக்க உதவும்.

நீதிக்கதை

 "நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி" 

அது ஓர் அழகிய நகரம். அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார். ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான். 

அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம் "ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?"என்று கேட்டான்.

அதற்குக் காவலாளி "ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

"ஆமாம் பெரியவரே. நான் முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம். எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும் திட்டிக்கிட்டும் , எப்படா அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?" என்று கேட்டான்.

''நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம். போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும். நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி " என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார். 

சிறிது நேரம் கழித்து,

அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியைக் கேட்டான்.

"ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன். இந்த ஊர் மக்கள் எப்படி?"

பெரியவர் சிரித்துக்கொண்டே , "ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?"என்று கேட்டார்.

"ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா" என்றான்."அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல? " என்றார் காவலர்.

"எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமையில இருக்கு. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன். நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்" என்று கண் கலங்கியபடியே கூறினான்.

"அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்" என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.

காவலாளியின் அருகில் இருந்த ஒருவர் இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.

உடனே அவரிடம் "முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?" என்று சந்தேகத்துடன் கேட்டார்.

அதற்குப் பெரியவர்  "இந்த உலகம் கண்ணாடி மாதிரி. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'' என்றார்.

"நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்"

இன்றைய செய்திகள்

27.10.2023

*தமிழகம் வந்தடைந்தார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ.

*தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 31ஆம் தேதி கூடுகிறது.

*பெண்களை சாதிக்க வைப்பது கல்விதான்- முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு.

* தகுதியான பெண்கள் அனைவருக்கும் ரூபாய் 1000 கிடைக்க உறுதியான நடவடிக்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

* உலகக்கோப்பை கிரிக்கெட்: நடப்பு சாம்பியனை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி.

Today's Headlines

*President Draupadi Murmu arrived  in Tamil Nadu.

 *Tamil Nadu Cabinet meeting will be held on 31st October 

 *Education is what makes women achieve great things- Ex-DGP Shailendrababu.

 * Minister Udhayanidhi Stalin took concrete steps to get Rs 1000 to all eligible women.

 * Cricket World Cup: Sri Lanka beat the present champions with a huge victory.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

SSR 2024 - வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வழிக்காட்டு நெறிமுறைகள் (Instructions to BLOs)...

SSR 2024 - வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் வழிக்காட்டு நெறிமுறைகள் (Instructions to BLOs)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) நேரடி நியமன அறிவிப்பு - 2023 (NOTIFICATION OF DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023)...

பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) நேரடி நியமன அறிவிப்பு - 2023 (NOTIFICATION OF DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023)...

>>> Click Here to Download Notification...

>>> Click Here to Download Press Release...

>>> இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணித் தெரிவிற்கு நடைபெற உள்ள போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டம் - அரசிதழ் வெளியீடு...

>>> பட்டதாரி ஆசிரியர்கள் / வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் பணி நியமன தேர்வில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) - தாள் 2ல் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 Notification No. 03/2023 

 Date. 25.10.2023

GOVERNMENT OF TAMILNADU 

TEACHERS RECRUITMENT BOARD

Puratchi Thalaivar Dr.M.G.R Centenary Building, 3rd & 4th Floor, 

Perasiriyar Anbazhagan Kalvi Valagam, College Road, 

Nungambakkam, Chennai – 600 006.

Website: http://www.trb.tn.gov.in

NOTIFICATION 

DIRECT RECRUITMENT OF GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) – 2023 

 Applications are invited for the Direct Recruitment for the post of GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE)in School Education and other departments included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service for the year 2023-2024 from the eligible Candidates of Tamil Nadu only through Online mode up to 5.00 pm. On 30.11.2023.

 The Candidates applying for the post of GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) should possess a valid Tamil Nadu Teacher Eligibility Test Certificate. (TNTET Paper – II) 

[G.O.(Ms.)No.149 School Education (TRB) Department, dated 20.07.2018] 

 WARNING 

 The Teachers Recruitment Board hereby cautions the candidates against tout and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means. The Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) in School Education and other departments included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service by the Teachers Recruitment Board is purely merit based. 

 The Teachers Recruitment Board shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements. 

 Candidates are solely responsible for their claims in the Online application

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த வளரறி மதிப்பீடு (ஆ) [FA(B)] மதிப்பீடுக்கான தேதி மாற்றம் (Change of date for Formative Assessment (B) [FA(B)] assessment for Class 1 to 3)...

 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு நடக்கவிருந்த வளரறி மதிப்பீடு (ஆ) [FA(B)]  மதிப்பீடுக்கான தேதி மாற்றம் (Change of date for Formative Assessment (B) [FA(B)] assessment for Class 1 to 3)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...