கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் (Bills sent back by Governor R.N.Ravi)...

 ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் (Bills sent back by Governor R.N.Ravi)...


✦ சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா


✦ தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா



10-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.


மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் திருப்பி அனுப்பினார்.


மசோதாக்களை மீண்டும் தமிழ்நாடு அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்.


10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை வழங்குவது தொடர்பான ஷரத்து ஓராண்டுக்கு ஒத்திவைப்பு - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு (15/11/2023- Deferment of the clause regarding provisions of ratio of 100 MBBS seats for 10 lakh population for one year - National Medical Commission)...




 தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் எதிர்ப்பால் மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவு ஓராண்டுக்கு நிறுத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு...


>>> 10 லட்சம் மக்களுக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற விகிதத்தை வழங்குவது தொடர்பான ஷரத்து ஓராண்டுக்கு ஒத்திவைப்பு - தேசிய மருத்துவ ஆணையம் அறிவிப்பு (15/11/2023- Deferment of the clause regarding provisions of ratio of 100 MBBS seats for 10 lakh population for one year)...


அனைத்து மாநிலங்களுடன் ஒருமித்த கருத்து ஏற்படும் வரையில், 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு அறிவிப்பு.


மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.


மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை தேசிய மருத்துவ ஆணையம் நிறுத்திவைத்துள்ளது. இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், புதிதாக மருத்துவக் கல்லூரியைத் துவங்க வேண்டும் என்றாலோ, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் படிப்பு (எம்.பி.பி.எஸ்) இடங்களை அதிகரிக்க வேண்டும் என்றாலோ குறைந்தபட்சமாக என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருந்தன. மேலும், இந்த விதிகள் யாருக்கெல்லாம் பொருந்தும் என்றும் அந்த அறிக்கை விவரித்தது. அதில் இறுதியாகக் குறிப்பிட்டிருந்த ஒரு வரிதான் தமிழகத்தை அதிரவைத்தது. அதாவது “ஒரு மாநிலத்திலோ, யூனியன் பிரதேசத்திலோ பத்து லட்சம் பேருக்கு 100 எம்.பி.பி.எஸ். இடங்கள் என்ற விதிக்கு அந்த மருத்துவக் கல்லூரி” பொருந்தியிருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது.


ஒன்றிய அரசின் இந்த கட்டுப்பாடு காரணமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் புதிதாக மருத்துவக் கல்லூரி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பீகார், ஜார்க்கண்ட் போன்ற வடமாநிலங்களில், மருத்துவ இடங்களை அதிகரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.மருத்துவ இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் முடிவை கைவிடக்கோரி ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார்.இதன் எதிரொலியாக வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருந்த மருத்துவ படிப்பு இடங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் உத்தரவை ஓராண்டுக்கு தேசிய மருத்துவ ஆணையம் நிறுத்தி வைத்தது.அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஒருமித்த முடிவை எட்டும் வரை கட்டுப்பாடுகள் விதிக்கும் முடிவு ஒத்திவைக்கப்படுவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.





நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பிடுக - அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல் (Fill up 2534 posts of municipal administration department through Tamilnadu Public Service Commission (TNPSC) - Ramadoss urges Govt)...


நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பிடுக -  அரசுக்கு ராமதாசு வலியுறுத்தல் (Fill up 2534 posts of municipal administration department through Tamilnadu Public Service Commission (TNPSC) - Ramadoss urges Govt)...


 தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2,534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக  தேந்தெடுக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்திருக்கிறது. 


எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை TNPSC மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு  எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.


அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும்- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.



நகராட்சி நிர்வாகத்துறையின் 2534 பணிகளை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பிடுக -  அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்


"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது", என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறையில் உள்ள 2534 தொடக்க நிலை பணிகளை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல், நகராட்சி நிர்வாகத்துறை மூலமாக நேரடியாக தேந்தெடுக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. எந்த நோக்கத்துக்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.


நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் 20 மாநகராட்சிகள் மற்றும் 138 நகராட்சிகளில் 2534 தொடக்க நிலை பணியிடங்கள் காலியாக உள்ளன. இவை அனைத்தும் டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமல், நகராட்சி நிர்வாகமே, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை கடந்த 14-ம் நாள் வெளியிடப்பட்டுள்ளது.


தமிழக அரசின் இந்த முடிவு முற்றிலும் தவறானது. தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள சில குறிப்பிட்ட வகை பணியாளர்களை அந்தந்த நிறுவனங்களே தேர்ந்தெடுக்கும் நடைமுறை தான் இருந்து வந்தது. ஆனால், இத்தகைய நடைமுறையில் ஊழல்கள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகக் கூறி, இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், மின்சார வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் பணியாளர்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதற்கான சட்டமும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்டது.


உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்களை, அந்த அமைப்புகளே தேர்ந்தெடுத்தால் நியாயமாக இருக்காது; ஊழல்களும், முறைகேடுகளும் நடைபெறலாம் என்பதால் தான், அவர்களை போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யும் பொறுப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு மாற்றப்பட்டது. ஆனால், இப்போது அந்தப் பொறுப்பு மீண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கே வழங்கப்பட்டிருக்கிறது என்றால், அதன் நோக்கம், தமிழக அரசு ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல, ஊழல் செய்வதைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பணியாளர்களை நகராட்சி நிர்வாகத்துறையே தேர்வு செய்யும் போது, அதில் முறைகேடுகள் நடக்கக்கூடும் என்று நம்புவதற்கு பல காரணங்கள் உள்ளன.


நகராட்சி நிர்வாகத்துறைக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் 2534 பேரும் தொடக்க நிலை பணியாளர்கள் ஆவர். டிஎன்பிஎஸ்சி மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்கும் போது முதல் தொகுதி பணிகளுக்கும், இரண்டாம் தொகுதி பணிகளுக்கும் மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்தப்படும். தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்படாது. அந்த வழக்கத்துக்கு மாறாக நகராட்சி நிர்வாகத்துறை தொடக்க நிலை பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதன் நோக்கமே, அதில் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கு அதிக மதிப்பெண்களை வழங்கி, அவர்களின் தேர்ச்சியை உறுதி செய்வது தான். இதை எவரும் மறுக்க முடியாது.


மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கான பணியாளர்களை தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில், நகராட்சி நிர்வாகத்துறை காட்டும் ஆர்வமும், துடிப்பும் இதை உறுதி செய்கிறது. நகராட்சி நிர்வாகத்துறை பணியாளர்களை நேரடியாக தேர்ந்தெடுப்பதற்கான அரசாணை கடந்த நவம்பர் 14-ம் நாள் தான் வெளியிடப்பட்டது. அதனடிப்படையிலான அடுத்தக்கட்ட பணிகள், அதற்குப் பிறகு தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே, அக்டோபர் 3-ம் நாள் நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் சிவராசு முன்னிலையில் நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை கூட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை தீர்மானிக்க குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அரசாணைக்கு முன்பே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டியத் தேவை என்ன?


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த வேண்டிய போட்டித் தேர்வை நகராட்சி நிர்வாகத் துறையே நடத்துவதற்கு எந்த நியாயமான காரணங்களும் இல்லை. அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுக்கு 10 ஆயிரம் பணியாளர்களைக் கூட தேர்ந்தெடுப்பதில்லை; அதனால், அதற்கு பணிச்சுமை கிடையாது. அதற்கெல்லாம் மேலாக, அண்ணா பல்கலைக்கழகம் என்பது ஒரு கல்வி நிறுவனம். அரசு ஊழியர்களை போட்டித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கும் கட்டமைப்போ, அனுபவமோ அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கிடையாது. அவ்வாறு இருக்கும் போது, டிஎன்பிஎஸ்சியை ஒதுக்கி வைத்து விட்டு, அனுபவமே இல்லாத அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பணியாளர்களை தேர்ந்தெடுக்க நகராட்சி நிர்வாகம் துடிக்கிறது என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாகத் தான் தோன்றுகிறது.


அரசுத்துறை, பொதுத்துறை மற்றும் உள்ளாட்சிகளில் வேலைவாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்ட நிலையில், அப்பணிகளுக்கான ஆள்தேர்வு நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட்டு, தகுதியான தேர்வர்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அதன்படி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு 2534 பேரை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே நடத்த வேண்டும். இந்த பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நடத்தக்கூடாது" என்று வலியுறுத்தியுள்ளார்.


 நன்றி : இந்து தமிழ் 

2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


2023-2024ஆம் ஆண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் - கால அட்டவணை வெளியீடு (Class 10th, 11th, 12th Public Examination Dates 2023-2024 - Time Table Released)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் (தெளிவானது)...



• 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 26 ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது!


• 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது!


• 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது



10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖➖

தமிழ்-26.03.2024


ஆங்கிலம்-28.03.24


கணிதம்-01.04.2024


அறிவியல்-04.04.24


சமூக அறிவியல்_08.04.24



12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை

➖➖➖➖➖➖➖

01.03.2024- மொழிப்பாடம்


05.03.2024-ஆங்கிலம்


08.03.2024-கணினி அறிவியல், உயிரி - அறிவியல், புள்ளியியல்


11.03.2024-வேதியியல், கணக்குப்பதிவியியல், புவியியல்


15.03.2024-இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்பம்


19.03.2024-கணிதம், விலங்கியல், நுண் உயிரியல்


10,11,12 பொதுத்தேர்வுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்...

10ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 23ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 29ம் தேதி முடிவடைகிறது.

11ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 19ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 24ம் தேதி முடிவடைகிறது

12ம் வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி  பிப்ரவரி 17ம் தேதி முடிவடைகிறது.

10ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி  ஏப்ரல் 8ம் தேதி முடிவடைகிறது

11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி முடிவடைகிறது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி  மார்ச் 22ம் தேதி முடிவடைகிறது.

மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முடிவுகள் எப்போது ?

10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 10

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 14

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : மே 6





HOD குறியீடு - தேர்தல் பணி படிவத்தில் நிரப்ப பயன்படும் அனைத்து துறைகளின் குறியீட்டு எண்கள் (HOD Code – Code numbers of all departments used to fill in Election Duty Form)...


 HOD குறியீடு - தேர்தல் பணி படிவத்தில் நிரப்ப பயன்படும் அனைத்து துறைகளின் குறியீட்டு எண்கள் (HOD Code – Code numbers of all departments used to fill in Election Duty Form)...


>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வித் துறை குறியீடு: 4303  


வரிசை எண் : 177  


தொடக்கக் கல்வித் துறை குறியீடு: 4302  


தேர்தல் படிவத்தில் நிரப்ப பயன்படும்.. பயன்படுத்திக்கொள்ளவும்..


பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான 25.10.2023 தேதியிட்ட அறிவிப்பு எண். 3/2023க்கு கூடுதல் காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எண் 3A/ 2023, நாள்: 15-11-2023 (The details of distribution of additional vacancies to the Notification No. 3 / 2023, dated 25.10.2023 for direct recruitment to the post of Graduate Teacher / Block Resource Teacher Educators (BRTE) in School Education and other Department included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service for the year 2023 – 2024)...

 

பள்ளிக் கல்வி இயக்கத்திற்கு 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் 2222 பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவள மைய பயிற்றுநர் தெரிவிற்கான அறிவிக்கை 03/2023 நாள் : 25.10.2023 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

 இதனை தொடர்ந்து பள்ளிக் கல்வி இயக்ககம் , தொடக்ககல்வி இயக்ககம் மற்றும்  சென்னை மாநகராட்சி ஆகியவற்றில் நிரப்பப்படவேண்டிய 360 பணியிடங்களுக்கான  கூடுதல் காலிப்பணியிட விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 (அறிவிக்கை எண் 3A/ 2023 )👇


பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர் / வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கான 25.10.2023 தேதியிட்ட அறிவிப்பு எண். 3/2023க்கு கூடுதல் காலியிடங்கள் குறித்த அறிவிப்பு (The details of distribution of additional vacancies to the Notification No. 3 / 2023, dated 25.10.2023 for direct recruitment to the post of Graduate Teacher / Block Resource Teacher Educators (BRTE) in School Education and other Department included in the Special Rules for the Tamil Nadu School Educational Subordinate Service for the year 2023 – 2024 is as follows: -



>>> அறிவிப்பு எண் 3A/ 2023, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> 25.10.2023 அன்று வெளியிடப்பட்ட ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்: 03 / 2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...


TNPSC Group IV போட்டித் தேர்வுக்கான இணையதள பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு அரசு 13.11.2023 முதல் தொடங்கியுள்ளது - செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 (TNPSC Group IV Competitive Examination Online Training Courses Tamil Nadu Government has started from 13.11.2023 - Press Release No: 2282, Dated: 15-11-2023)...



>>> செய்தி வெளியீடு எண்: 2282, நாள்: 15-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...