கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு 3% இட ஒதுக்கீட்டில் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்புகோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023 (BEO to HS HM Promotion Panel Preparation Proceedings by DEE - Details of Block Education Officers eligible for appointment through transfer to the post of Headmaster of Government High School as on 01.01.2023 in 3% reservation are referred to the Director of Elementary Education Proceedings Rc.No: 027718/ I1/ 2023, Dated: 17-11-2023)...

 01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவிக்கு  3% இட ஒதுக்கீட்டில் பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்புகோருதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023 (Details of Block Education Officers eligible for appointment through transfer to the post of Headmaster of Government High School as on 01.01.2023 in 3% reservation are referred to the Director of Elementary Education Proceedings Rc.No: 027718/ I1/ 2023, Dated: 17-11-2023)...

>>> அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களில் 3%  காலி பணியிடங்களை வட்டார கல்வி அலுவலர்களைக் கொண்டு நிரப்புதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 027718/ ஐ1/ 2023, நாள்: 17-11-2023...

எண்ணும் எழுத்தும் : பருவம் 3 - மாநில அளவில் முதன்மை கருத்தாளர்களுக்கான பயிற்சி அளித்தல் சார்ந்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 2411/ எஃப்1/ 2021, நாள்: 16-11-2023 & கருத்தாளர்கள் பட்டியல் (Ennum Ezhuthum - 1 To 5th - Term 3 - State & District level Training & RPs List District wise - Training of Primary Resource Persons at State Level - Proceedings of Director of State Council of Educational Research and Training Rc.No: 2411/ F1/ 2021, Dated: 16-11-2023 & List of Resource Persons)...

>>> எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவ மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சி தேதி அறிவிப்பு  - SCERT இயக்குநர் செயல்முறைகள் (Ennum Ezhuthum Term - 3 State & District level Training Proceedings - Click Here to Download)...

இணைப்பு:- கருத்தாளர் பெயர் பட்டியல் பாடவாரியாக மாவட்ட வாரியாக

>>> Click Here to Download 1 - 3rd Std RPs List...

>>> Click Here to Download 4 & 5th Std RPs List...

எண்ணும் எழுத்தும் வகுப்பு 1 முதல் 5 வரை - FA (B) அனைத்து வளரறி மதிப்பீடுகளும் மேற்கொள்வதற்கான கால அவகாசம் 08.12.2023 வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - TN EE MISSION (Ennum Ezhuthum - Class 1 to 5 - FA (B) Time for conducting all Formative Assessments has been extended upto Friday 08.12.2023 - TN EE MISSION)...

அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் செயல்படும் Hi-Tech lab இணையதள வசதிக்கு மாதக் கட்டணம் SMC மூலம் அனுப்புதல் சார்ந்து SPD செயல்முறைகள் (Monthly fee for Hi-Tech lab internet facility operating in Govt High / Higher Secondary Schools is dispatch by SMC - SPD Proceedings)...

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)...

போட்டோமேத் - கணிதத்தை இனிக்க வைக்கும் செயலி (PhotoMath - An app that makes math sweet)...

தனித்தனியாகப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் எல்லாமே இன்று ஒற்றை திறன்பேசியில் கிடைத்துவிடுகின்றன. ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவுசெய்யவே திறன்பேசி கேமரா பயன்படுத்தப்பட்டு வந்தது. காலப்போக்கில் திறன்பேசியின் லென்ஸ் வசதியால் எழுத்துக்களைப் பிரதி எடுப்பது, மொழிபெயர்ப்பு செய்வது, கோப்புகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளும் எளிதாகின. இப்போது கேமராவைப் பயன்படுத்தி கணிதச் சமன்பாடுகளைக்கூடத் தீர்க்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? ‘போட்டோமேத்’ (PhotoMath) செயலி மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது!

கூகுள் தயாரிப்பு: கணிதம் மாணவர்களுக்கு பாகற்காய் போல கசக்கும் என்பது பொதுவான மனநிலை. அடுக்கடுக்கான கணக்குகளைப் பார்த்து மலைத்துப் போவோர் உண்டு. ஆனால், கணிதக் கற்றலை எளிமையாக்கி இருக்கிறது ‘போட்டோமேத்’ செயலி. குரோஷியாவில் உருவாக்கப்பட்ட இந்தச் செயலியின் சிறப்பம்சத்தைப் பார்த்த கூகுள் நிறுவனம், கடந்த 2022இல் விலைக்கு வாங்கியது. ‘போட்டோமேத்’ செயலியை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்தக் கட்டணம் தேவையில்லை.

அடிப்படைக் கணிதக் கணக்குகள் முதல் வடிவியல், இயற்கணிதம், கால்குலஸ் வரை பல கணக்கு முறைகளையும் ‘போட்டோமேத்’ செயலி மூலம் தெரிந்துகொள்ளலாம். செயலியின் கேமராவில் கணிதக் கேள்வியைப் படம் பிடித்து பதில் கேட்டால், நொடிப்பொழுதில் விடைகளைத் தருகிறது ‘போட்டோ மேத்.’ ஒரு கணக்கின் முதல் பகுதியில் தொடங்கி படிப்படியாக விளக்கி, இறுதியில் விடை தருவதால், மாணவர்கள் எளிதாகக் கணக்கைப் புரிந்துகொள்ள முடியும். கணிதப் பாடத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்கள், ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் ‘போட்டோமேத்’, கணக்குப் பாடம் படிப்பதற்கென அதிக பயனர்களால் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கிறது. உலக அளவில் சுமார் 10 கோடிக்கும் அதிகமானோர் இச்செயலி வழியே கணிதம் பழகுகின்றனர்.

குறிப்பு எடுக்கலாம்: கற்றுக்கொள்ள மட்டுமல்ல, கற்பிக்கவும் ‘போட்டோமேத்’ பயன்படுகிறது. ஆசிரியர்கள், பெற்றோர்களும் திறன்பேசி வாயிலாக பிள்ளைகளுக்குக் கணிதப் பாடத்தைக் கற்றுத் தர முடியும். கணிதக் கணக்குகளை கேமராவில் படம் பிடித்து பதில் கேட்கலாம் அல்லது ‘போட்டோ மேத்’ செயலியில் கொடுக்கப்பட்டுள்ள கால்குலேட்டர் வசதியைப் பயன்படுத்தலாம். கணக்குகளை அதில் பதிவிடுவதன் மூலம் ‘போட்டோமேத்’ அதற்கான பதில்களைத் தரும். செயலியில் பதிவுசெய்யப்படும் கணக்குகளை ‘புக்மார்க்’ வசதி மூலம் சேமித்துக்கொள்ளலாம்.

தேவையிருப்பின் சேமித்து வைத்த கணக்குகளை மீண்டும் பார்த்து கற்றுக்கொள்ள முடியும். கணக்கு முறைகளைப் புரிந்துகொண்டு படித்தால் கணிதம் எளிது. ‘போட்டோமேத்’ செயலியைப் பயன்படுத்தி சந்தேகங்களை விளக்கிப் புரிந்துகொள்ளலாமே தவிர, வீட்டுப் பாடம் முடிக்க அல்லது ‘காப்பி’ அடிப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும். இது தவிர, கூடுதலாக காணொளி வழி விளக்கங்களுக்கும், கணிதம் தொடர்பான புத்தகங்களைப் படிக்கவும் ‘போட்டோமேத் பிளஸ்’ வசதியைப் பயன்படுத்தலாம். இதற்கு பயனர்கள் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். எனினும் பெரும்பாலான பாடங்கள் அடிப்படை ‘போட்டோமேத்’ செயலி யிலேயே கிடைப்பதால் கணிதப் பிரியர்களின் முதல் தேர்வாக இருக்கிறது இச்செயலி.

>>> PhotoMath செயலியை Install செய்ய இங்கே சொடுக்கவும்...

சத்துணவு குறித்து தினசரி அறிக்கை - SMS அனுப்புதல் சார்ந்து DSE செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 (Daily report on Noon Meal Scheme – DSE Proceedings regarding on sending SMS Rc.No: 57479/ E/ E1/ 2023, Date: 09-11-2023)...

>>> பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண்: 57479/ இ/ இ1/ 2023, நாள்: 09-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

 சத்துணவு தினசரி அறிக்கை - SMS செய்தியினை காலை 11 மணிக்குள் அனுப்ப ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...

அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது . மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் அளவினை உறுதி செய்திட தானியங்கி கண்காணிப்பு அமைப்பு ( Automated Monitoring System ) என்ற AMS அமைப்பு உருவாக்கப்பட்டு . இதற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அல்லது நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் SMS மூலம் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு செய்தி தினந்தோறும் அனுப்பப்பட்டு வருகிறது.

 சமூக நலத்துறை ஆணையரின் நேர்முகக் கடிதத்தில் , மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஆய்வு செய்யும் போது , பல பள்ளிகளில் AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை தலைமையாசிரியர்களால் குறுஞ்செய்தி ( SMS ) மூலம் மாவட்ட சமூக நலத்துறைக்கு பெறப்படவில்லை என தெரிவித்துள்ளார். எனவே அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களும் இதில் கூடுதல் கவனம் செலுத்தி AMS அமைப்பு மூலம் சத்துணவு தினசரி அறிக்கை SMS செய்தியினை காலை 11 மணிக்குள் சார்ந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலருக்கு அனுப்பி வைக்க அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

அலுவலக மின் ஆளுமை (e-office) நடைமுறைப்படுத்துதல் - தலைமை ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் அனுப்பிட பள்ளிக்கல்வி இயக்குனரின் (DSE) செயல்முறைகள் (Implementation of e-office – Director of School Education (DSE) proceedings to send details of Headmasters and staff)...

>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

>>> பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e- office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்துவது - சில தெளிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Implementation of e-office in schools and offices under the Commissioner of School Education - Some clarifications and Proceedings of the Commissioner of School Education)...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரயில் சேவை பாதிப்பு

 கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதி கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி - ரெயில் சேவை பாதிப்பு கடலூரில் செம்மங்குப்பம் அருகே பள்ளி வ...