கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 23-11-2023 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 23-11-2023 due to heavy rain) விவரம்...

 

கனமழை காரணமாக 23-11-2023 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 23-11-2023 due to heavy rain) விவரம்...


பள்ளிகள் மட்டும்


* நீலகிரி ( பள்ளிகளுக்கு...)


* விருதுநகர் ( பள்ளிகளுக்கு...)


* புதுக்கோட்டை ( பள்ளிகளுக்கு....)


* தூத்துக்குடி ( பள்ளிகளுக்கு...)


* தென்காசி ( பள்ளிகளுக்கு...)


* கன்னியாகுமரி ( பள்ளிகளுக்கு...)


* நெல்லை ( பள்ளிகளுக்கு...)


பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு


* தேனி (பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு)


*சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்


*- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு







இன்று (23.11.2023) திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் காரணத்தினாலும் கன மழை எச்சரிக்கை உள்ளதாலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று 23.11.2023 ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடைபெறவிருந்த பருவத்தேர்வுகள் மற்றொரு நாளில் நடைபெறும். அதற்கான தேதி முதன்மை கல்வி அலுவலரால் பின்னர் அறிவிக்கப்படும்.



- மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி


25.11.2023 அன்று நடைபெறவிருந்த 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 02.12.2023 தேதிக்கு மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 (Teachers Professional Development In-service training for class 1-5 teachers scheduled to be held on 25.11.2023 has been changed to 02.12.2023 - Proceedings of SCERT Director)...

 

வாக்காளர் சேர்க்கை முகாம் காரணமாக  1- 5  வகுப்பு ஆசிரியர்களுக்கு  CRC தேதி  02-12-2023 ஆக மாற்றம் - SCERT இயக்குநர் அறிவிப்பு...


25.11.2023 அன்று நடைபெறவிருந்த 1-5ஆம் வகுப்பு ஆசிரியர்களுக்கான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி 02.12.2023 தேதிக்கு மாற்றம் - SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 (Teachers Professional Development In-service training for class 1-5 teachers scheduled to be held on 25.11.2023 has been changed to 02.12.2023 - Proceedings of SCERT Director)...



>>> SCERT இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 000523/ எஃப்4/ 2023, நாள்: 22-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்..



7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்து ஷூவை துடைக்க வைத்ததாக புகார் - கோவையில் அதிர்ச்சி சம்பவம் (7th class student slapped on the cheek and made to wipe her shoes - Shocking incident in Coimbatore)...



  7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்து ஷூவை துடைக்க வைத்ததாக புகார் - கோவையில் அதிர்ச்சி சம்பவம் (7th class student slapped on the cheek and made to wipe her shoes - Shocking incident in Coimbatore)...


கோவையில் 7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்தும், ஷூவை துடைக்க வைத்தும் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என ஆசிரியர்களே கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை அசோகபுரம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி, 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அபிநயா, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அந்த மாணவியை கடந்த 2 மாதங்களாகவே துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.


மாணவியின் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என கேட்டுள்ள ஆசிரியை அபிநயா, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக தெரிவித்ததும், மாட்டிறைச்சி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என கூறியதாக தெரிகிறது. தமது பெற்றோரையும் அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்த வேண்டாம் என மாணவி கூறியதால், எதிர்த்து பேசுவதாக கூறி, அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், பெற்றோருடன் சென்று தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி முறையிட்டுள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், பிரச்சனையை திசை திருப்பிவிடுவேன் என தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது. மேலும், சக மாணவிகள் முன்னிலையில் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தி, மாணவியை அவமானப்படுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படும் நிலையில், அச்சம் அடைந்த மாணவி பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.


ராஜ்குமார் என்ற ஆசிரியர் மாணவியை ஒருமையில் அழைத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மாணவி பேசிய வீடியோ புகார் ஒன்றையும் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்ட பொழுது, மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். 


மாணவி, பெற்றோர் தரப்பில் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...



நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டல் Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...


22.11.2023 முதல் 24.11.2023 ஆம் தேதி வரை அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நான் முதல்வன் உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி மதிப்பீடு தேர்வு நடைபெற உள்ளது.எனவே,கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்: 


1. இந்த மதிப்பீட்டை கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் ஃபோன் போன்றவற்றின் மூலம் இணையவழியில் மேற்கொள்ளலாம்.

2. https://exams.tnschools.gov.in/login - என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் User ID என்ற இடத்தில் தங்கள் EMIS ID - யையும், Password என்ற இடத்தில் தங்களின்  EMIS ID யின் கடைசி நான்கு எண்களையும் @ என்றும் அதனைத் தொடர்ந்து அவர்களின் பிறந்த வருடத்தையும் உள்ளிட்டு உள் நுழைய வேண்டும்.

உதாரணத்திற்கு,  User name – 9876543210 -  Password - 3210@2007


3. இந்த மதிப்பீட்டை version 524 இல் மட்டுமே உபயோகிக்க முடியும். மேலும் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மட்டுமே இந்த மதிப்பீட்டை மேற்கொள்ள முடியும்.


Government HSS 11th and 12th Students Career Guidance Assessment on 22.11.2023 to 24.11.2023...


⬇️


https://exams.tnschools.gov.in/login


⬇️

User Name 

⬇️

Password 

⬇️

login

⬇️

Start Quiz

⬇️

Quetions

⬇️

Save & Next

⬇️

Complete Quiz


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.11.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.11.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள் : 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : வெகுளாமை


குறள்:304


நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்

பகையும் உளவோ பிற.


விளக்கம்:


முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.


பழமொழி :

Good beginning makes a good ending


நல்ல தொடக்கம் நல்ல முடிவைத் தரும்.


இரண்டொழுக்க பண்புகள் :


1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.

2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.



பொன்மொழி :


வாழ்வில் நீ

வெற்றி பெறும் போதெல்லாம்

உன் முதல் தோல்வி

நினைவுக்கு வந்தால்

உன்னை யாராலும்

வெல்ல முடியாது.



பொது அறிவு :


1. இந்தியாவின் பழமையான பொது அஞ்சல் அலுவலகம் எங்கு அமைந்துள்ளது?


விடை: சென்னை


2. இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ஹோட்டல் எங்கு தொடங்கப்பட்டது?

விடை:  மும்பை



English words & meanings :


 Aback - surprised ஆச்சரியப்படுதல் 

abashment - feeling ahy வெட்கப்படுதல்



ஆரோக்ய வாழ்வு : 


செம்பருத்தி பூ : செம்பருத்தி பூ குளிர்ச்சி பொருந்தியது. சருமத்திற்கு இதமும், சுகமும் அளித்து ரத்தத்தை சுத்தம் செய்து உடலை பளபளப்பாக்கும்.



நவம்பர் 23


கவிஞர் சுரதா அவர்களின் பிறந்தநாள்



சுரதா (Suratha; 23 நவம்பர் 1921 – 29 சூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால்‌ பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர்.



சர் ஜகதீஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவுநாள்


சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Jagadish Chandra Bose) (1858-1937) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.[1] போசு வானொலி அறிவியலின் முன்னோடிகளில் ஒருவர் என ஐஇஇஇ அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது.



நீதிக்கதை


 ஒரு நாள் சுமன் என்ற மாணவன், செக்கிங்கிடம் வேணும்னா டிக்கெட்டுக்கான பணத்தை கொடுத்துடறேன் சார்” என்று கெஞ்சினான் .


“அது ஒத்து வராது தம்பி, 500 ரூபாய் பைன் கட்டு. இல்ல போலீசுக்கிட்ட ஒப்படச்சுடுவோம். என்ன சொல்ற...?


அவன் தலையைக் குனிந்து கொண்டான்.


“எந்த பள்ளிக்கூடத்துல படிக்கிற?”


பள்ளியின் பெயரைச் சொன்னான் சுமன்.


“ஏம்பா, இதைத்தான் பள்ளியில சொல்லி கொடுத்திருக்காங்களா?” செக்கிங் கோபமாகக் கேட்டார்.


அப்போது பஸ்சிலிருந்து இறங்கிய சுமனின் ஆசிரியர் வேகமாக செக்கிங்கை நோக்கி வந்தார்.


“அய்யா வணக்கமுங்க. நான் தமிழ் ஆசிரியர், வகுப்பு ஆசிரியரும் கூட. நாங்க நல்லொழுக்கத்தைத்தான் போதிக்கிறோம். பயணிக்கும் பேருந்தில் பயணச்சீட்டு வாங்க வேண்டாமென்றோ. சாப்பிடும் சிற்றுண்டிக்கு பணம் கொடுக்காதீர்கள் என்றோ போதிப்பதில்லை. உங்களிடம் மாட்டிக்கொண்ட இந்தப் பையன் ஒழுங்கீனமானவன். பள்ளிக்கு பல நாட்கள் கட்அடித்து, தகாத நண்பர்களுடன் ஊர் சுற்றித் திரிபவன். இவனுக்கு நாங்கள் கூறிய புத்திமதிகள் அனைத்தும் கடலில் பெய்த மழை போல வீணாயிற்று. இது ஆசிரியரின் குற்றமோ, பள்ளியின் குற்றமோ இல்லை. இருந்தாலும் இவன் என் மாணவன் என்பதால் இவன் செயலுக்கு வெட்கப்பட்டு, தாங்கள் கேட்கும் அபராதத்தை நானே கட்டி விடுகிறேன்” என்று கூறி தன் பர்சிலிருந்த பணத்தை எடுத்து பரிசோதகரிடம் கொடுத்தார்.


நல்லொழுக்கம் போதிக்கும் ஆசிரியருக்கும், நற்பண்புகள் வளர்க்கும் கல்விக்கூடத்துக்கும் தன்னுடைய செயலால் கெட்ட பெயர் உண்டானதற்காக மனம் வருந்தி அழுது ஆசிரியரின் கால்களில் விழுந்தான் சுமன். அன்று மாலையே தன் பெற்றவர்களிடம் நடந்ததை மறைக்காமல் கூறி அவர்களிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டான். அத்துடன் நிற்காமல் தன் தந்தையை விட்டே தமிழ் ஆசிரியர்  அபராதமாகச் செலுத்திய 500 ரூபாய் பணத்தையும் திருப்பிக் கொடுக்கச் செய்தான். இப்போது பஸ்சில் ஏறிய உடனே முதல் ஆளாக டிக்கெட் எடுப்பதுடன், படியில் நின்று பயணிப்பதையும் விட்டு விட்டான் சுமன்.



இன்றைய செய்திகள்


23.11.2023


*ஐ.என். எஸ் இம்பால் போர் கப்பலின் பரிசோதனை வெற்றி; இந்திய கடற்படை.



*ஆவின் பச்சை நிற பாலுக்கு பதிலாக ஊதா நிற டிலைட் பாலை முன்னிலைப்படுத்தி வருகிறோம்.–

அமைச்சர் மனோ தங்கராஜ்.


*குரூப் 2 தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பிப்ரவரி 25ம் தேதி நடைபெற்ற குரூப் 2 பணிகளுக்கான முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்படும்.


*சென்னை: அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.929.37 கோடியில் 230 அடிப்படை வசதி திட்டங்களை செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


*கேரள கிரிக்கெட் அணியின் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்.


*ஐசிசி ஒருநாள் தரவரிசை; பேட்ஸ்மேன் வரிசையில் 

சுப்மன் கில் தொடர்ந்து முதலிடம்.....விராத் கோலி முன்னேற்றம்!


Today's Headlines


* I.N. S Imphal warship Trial success ;  Indian Navy.


 *Instead of green milk we are highlighting Blue Delight milk.-

 Minister Mano Thangaraj.


 *TNPSC has announced that Group 2 exam results will be published in December.  The results of the main examination for Group 2 posts held on February 25 will be published in December.


 *Chennai: Chief Minister M. K. Stalin has ordered the implementation of 230 basic facilities projects at Rs 929.37 crore under the Amruth 2.0 project.


 *Actress Keerthy Suresh appointed as ambassador of Kerala cricket team.


 *ICC ODI Rankings;  In the batsman's line-up

 Subman Gill continues to top.....Virat Kohli's progress!

 

அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Release of Dates for Half Yearly Exams - Department of School Education Announcement)...



>>> அரையாண்டுத் தேர்வுக்கான தேதிகள் வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (Release of Dates for Half Yearly Exams - Department of School Education Announcement)...



>>> 6-12ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அரையாண்டு பொதுத் தேர்வு நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு - இணைப்பு: 6-12ஆம் வகுப்புகள் தேர்வு கால அட்டவணை & வினாத்தாள் பதிவிறக்கம் - வழிகாட்டு நெறிமுறைகள்...


அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனித மலம் கலக்கப்பட்டதா? - மாவட்ட ஆட்சியர் விளக்கம் (Human excrement mixed in government school water tank? - District Collector Explanation)...



 அரசுப் பள்ளி குடிநீர்த் தொட்டிக்குள் மனித மலம் கலக்கப்பட்டதா? - மாவட்ட ஆட்சியர் விளக்கம் (Human excrement mixed in government school water tank? - District Collector Explanation)...


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்துள்ளதா என கலெக்டர் கலைச்செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.


உத்திரமேரூர் ஒன்றியம் திருவந்தவார் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 96 மாணவர்கள் படிக்கின்றனர்.


நேற்று காலை 10:00 மணிக்கு பள்ளி சமையலர் கண்ணகி என்பவர், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் பிடித்து வந்து உணவு சமைத்துள்ளார். அப்போது தண்ணீரில் துர்நாற்றம் வீசியது. குடிநீர் தொட்டி தண்ணீரில் காய்கறிகளை சுத்தம் செய்த போதும், அதிக வாடை வீசியதால் சந்தேகம் அடைந்தார். தண்ணீர் தொட்டியை சோதித்த போது, முட்டை வடிவில் மஞ்சள் நிறத்தில் ஏதோ மிதந்ததை பார்த்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்கள் வந்து பார்த்த போது குடிநீரில் மனித மலம் மிதப்பது போன்று தெரியவந்துள்ளது. தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றிவிட்டு சமைத்த உணவையும் புதைத்தனர். பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது.


கலெக்டர் கலைச்செல்வி, எஸ்.பி., சுதாகரன், ஆர்.டி.ஓ., ரம்யா மற்றும் பள்ளி கல்வித் துறை அலுவலர்களும் வந்து ஆய்வு செய்தனர்.


பின்னர் கலெக்டர் கலைச்செல்வி கூறியதாவது:


குடிநீர் தொட்டியில் அழுகிய, ஓட்டை விழுந்த ஒரு முட்டையை காகம் தூக்கி வந்து போட்டிருக்கலாம் என தெரிகிறது.


அந்த அழுகிய முட்டையின் நாற்றம், சமையல் மற்றும் சத்துணவு பணியாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது.


இப் பள்ளிக்கு புதியதாக குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வினியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...