கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்து ஷூவை துடைக்க வைத்ததாக புகார் - கோவையில் அதிர்ச்சி சம்பவம் (7th class student slapped on the cheek and made to wipe her shoes - Shocking incident in Coimbatore)...



  7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்து ஷூவை துடைக்க வைத்ததாக புகார் - கோவையில் அதிர்ச்சி சம்பவம் (7th class student slapped on the cheek and made to wipe her shoes - Shocking incident in Coimbatore)...


கோவையில் 7ஆம் வகுப்பு மாணவியை கன்னத்தில் அறைந்தும், ஷூவை துடைக்க வைத்தும் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மாட்டுக்கறி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என ஆசிரியர்களே கூறியதாக பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.


கோவை அசோகபுரம் அரசினர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவி, 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை அபிநயா, இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அந்த மாணவியை கடந்த 2 மாதங்களாகவே துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார்.


மாணவியின் பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர் என கேட்டுள்ள ஆசிரியை அபிநயா, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக தெரிவித்ததும், மாட்டிறைச்சி சாப்பிட்ட திமிறில் பேசுகிறாயா என கூறியதாக தெரிகிறது. தமது பெற்றோரையும் அவர்களின் தொழிலையும் இழிவுபடுத்த வேண்டாம் என மாணவி கூறியதால், எதிர்த்து பேசுவதாக கூறி, அவரை கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த நிலையில், பெற்றோருடன் சென்று தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியிடம் மாணவி முறையிட்டுள்ளார். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதுடன், பிரச்சனையை திசை திருப்பிவிடுவேன் என தலைமை ஆசிரியை கூறியதாக தெரிகிறது. மேலும், சக மாணவிகள் முன்னிலையில் ஷூவை துடைக்க வைத்து துன்புறுத்தி, மாணவியை அவமானப்படுத்தியதுடன், மாற்றுச்சான்றிதழ் வழங்கிவிடுவோம் என மிரட்டியதாக கூறப்படும் நிலையில், அச்சம் அடைந்த மாணவி பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகாரளித்துள்ளார்.


ராஜ்குமார் என்ற ஆசிரியர் மாணவியை ஒருமையில் அழைத்து அநாகரீகமாக நடந்துகொண்டதுடன், மாணவிக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதாகவும், அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு மாணவி பேசிய வீடியோ புகார் ஒன்றையும் அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்ட பொழுது, மாணவி தரப்பில் இருந்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், நேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார். 


மாணவி, பெற்றோர் தரப்பில் பொய்யான குற்றச்சாட்டு வைப்பதாக தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தகவல் தெரிவித்தார்.




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Live Webinar Link for Head Masters and English Teachers

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான Live Webinar Link  (THOOTHUKKUDI, VILLUPURAM, SALEM, DHARMAPURI, ERODE, TANJAVUR Dt only) ...