கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...

 


சிபிஎஸ்இ பொதுத்தேர்வு 2024 - 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு கால அட்டவணை வெளியீடு (CBSE Public Examination 2024 - Class 10th and 12th Exam Time Table Released)...


10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு...


12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15 முதல் மார்ச் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது.


10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.



>>> Click Here to Download CBSE Secondary School (10th) Examination Date Sheet 2024...



>>> Click Here to Download CBSE Senior Secondary School Certificate (12th) Examination Date Sheet 2024...



உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் (Assessment Test for Career Guidance Counsellor Teachers - SPD Proceedings)...


 உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களுக்கு மதிப்பீடு தேர்வு - SPD செயல்முறைகள் (Assessment Test for Career Guidance Counsellor Teachers - SPD Proceedings)...



>>> மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




>>> பதிவு செய்யும் முறை - காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கனவு ஆசிரியர் திட்டம் - தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - மாவட்ட வாரியாக (Kanavu Aasiriyar Scheme – Appreciation Ceremony for 380 Selected Teachers – Director of School Education Proceedings and Name List of 380 Selected Teachers - District wise)…


கனவு ஆசிரியர் திட்டம் - தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டுள்ள 380 ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் - மாவட்ட வாரியாக (Kanavu Aasiriyar Scheme – Appreciation Ceremony for 380 Selected Teachers – Director of School Education Proceedings and Name List of 380 Selected Teachers - District wise)…











கனவு ஆசிரியர் விருது பாராட்டு விழா 19.12.23 அன்று நாமக்கலில் நடைபெறுகிறது

 2023-2024ம் ஆண்டிற்கான மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பான அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடம் சிறப்பாக கொண்டு சேர்க்கும் கனவு ஆசிரியர்களை - சிறப்பிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்துதல் சார்பு பார்வை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், செய்தி வெளியீடு στσστ 408 πåt 01.03.2023 மாண்புமிகு தமிழக முதல்வரின் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் சிறப்பான முன்னெடுப்புப் பணிகளின் மூலம் தெரிவுபெற்ற கனவு ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மூன்று படி நிலைகளில் ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியில் 75% மற்றும் அதற்கு அதிகமாக மதிப்பெண்கள் பெற்று தெரிவு செய்யப்பட்ட 380 ஆசிரியர்களை சிறப்பிக்கும் விதமாக 19.12.2023 அன்று நாமக்கலில் விழா நடைபெறுவதால் இணைப்பில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் குடும்ப உறுப்பினர்கள் (கணவர் / மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும்) கலந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இணைப்பில் கண்டுள்ள. ஆசிரியர்களை 18.12.2023 அன்றே அலுவலகப் பணியாக கருதி விடுவிக்க சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறும் சார்ந்த அலுலவர்களைக் கேட்டுக்கொள்கிறேன். விழா நடைபெறும் இடம் மற்றும் நேரம் பின்னர் தெரிவிக்கப்படும்.
Kanavu Aasiriyar 2023 Selection

ஆசிரியர்களுக்கு ஏற்படும்‌ தொண்டை வலி, தொண்டைக்‌ கட்டுதல்‌, குரலில்‌ மாற்றம்‌ ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? - மருத்துவரின் ஆலோசனை (What is the remedy for sore throat, throat tightness and change in voice for teachers? - Doctor's advice)...



 ஆசிரியர்களுக்கு ஏற்படும்‌ தொண்டை வலி, தொண்டைக்‌ கட்டுதல்‌, குரலில்‌ மாற்றம்‌ ஆகியவற்றுக்கான தீர்வு என்ன? - மருத்துவரின் ஆலோசனை (What is the remedy for sore throat, throat tightness and change in voice for teachers? - Doctor's advice)...


ஆசிரியர்கள்‌ தொடர்ந்து பாடம்‌ நடத்தும்போதும்‌, அதிக சத்தத்தில்‌ பாடம்‌ நடத்தும்போதும்‌, இசை ஆசிரியர்கள்‌ அடித்தொண்டையில்‌ பாடும்போதும்‌ மூக்கு, வாய்‌, தொண்டை ஆகிய பகுதிகளில்‌ ஈரப்பதம்‌ நீங்கிவிடுகிறது. இதனால்‌, தொண்டை உலர்ந்து கண்ணுக்குத்‌ தெரியாத அளவில்‌ அழற்சி அல்லது வெடிப்புகள்‌ உண்டாகின்றன. இதனால்தான்‌ ஆசிரியர்களுக்கு அடிக்கடி தொண்டைக்‌ கட்டுதல்‌, தொண்டை வலி போன்றவை ஏற்படுகின்றன. இந்த அழற்சி குரல்நாண்களைப்‌ பாதித்தால்‌ குரலில்‌ மாற்றம்‌ ஏற்படுகிறது. தைராய்டு பிரச்சினை, நீரிழிவு, சாக்பீஸ்‌ ஒவ்வாமை, புகைப்பழக்கம்‌, மதுப்பழக்கம்‌ போன்றவை இருந்தால்‌ தொண்டைக்‌  கட்டுவது, கரகரப்பான குரல்‌ ஆகியவை இயல்பாகிவிடலாம்‌. இரைப்பை - உணவுக்குழாய்‌ - அமிலப்‌ பின்னொழுக்கு நோய்‌ (GERD) இருப்பவர்களுக்கு இம்மாதிரியான தொண்டைப்‌ பிரச்சினைகள்‌ அடிக்கடி ஏற்படலாம்‌. காரணம்‌ தெரிந்து சிகிச்சை பெற்றால்‌, இவற்றுக்குத்‌ தீர்வு கிடைக்கும்‌. தினமும்‌ தேவைக்குத்‌ தண்ணீர்‌ அருந்துவது, ஒவ்வொரு பாடவேளை முடிந்ததும்‌ தண்ணீர்‌ அருந்துவது, 200 மி.லி. இளம்‌ வெந்நீரில்‌ ஒரு தேக்கரண்டி உப்பு கலந்து தினமும்‌ 3 முறை தொண்டையைக்‌ கொப்பளிப்பது, நீராவி பிடிப்பது, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை 5 நிமிடங்கள்‌ மெளனம்‌ காப்பது (Voice Rest), அழற்சி அமர்த்திகளை (Lozenges) வாய்க்குள்‌ ஒதுக்குவது போன்ற முதலுதவி முறைகளும் உதவும்.


கட்டுரையாளர் - பொதுநல மருத்துவர்


இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்யும் முறை - காணொளி (Second Term / Half Yearly Exam - Question paper download method) School Education department... Madurai District...

 இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்யும் முறை - காணொளி (Second Term / Half Yearly Exam  - Question paper download method - Video) School Education department... Madurai District...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


1 முதல் 8 ம் வகுப்பு வரை வினாத்தாள் டவுன்லோடு செய்யும் வழிமுறை. (எளிய முறையில்)

Google-click

⬇️

Tn school exam- click

⬇️

School

user name,pass word பதிவு செய்யுங்கள்.

⬇️

ஒரு page open ஆகும்.

அதில் 

Descriptive என்ற word இருக்கும்.அதை கிளிக் செய்ய வேண்டும்.

⬇️

அடுத்து class என்ற இடத்தில் எந்த வகுப்புக்கு வினாத்தாள் வேண்டுமோ அந்த வகுப்பை பதிவு செய்து submit கொடுக்க வேண்டும்.

⬇️

Submit கொடுத்தபின்பு அதே page ல் மேலே இருக்கும் Download question paper என்ற கலத்தை click செய்யுங்கள்.

⬇️

இப்போது question paper download என்று கீழே வரும்.

⬇️

அந்த கலத்தை click செய்தால் வினாத்தாள் டவுன்லோடு ஆகும்.

⬇️

ஒவ்வொரு தேர்வுக்கும்

முதல் நாள் மதியம் 2 மணிக்கு feedback கொடுத்த பின்பு வினாத்தாள் download செய்ய வேண்டும்.


நன்றி.


இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் (SECOND TERM / HALF YEARLY EXAM 2023 - QUESTION PAPERS DOWNLOAD DATES)...



இரண்டாம் பருவத் தேர்வு / அரையாண்டுத் தேர்வு 2023 - வினாத்தாள்கள் தரவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் (SECOND TERM / HALF YEARLY EXAM 2023 - QUESTION PAPERS DOWNLOAD DATES)...



*DEC 12 - 4,5  TAMIL & 6,7,8 TAMIL


*DEC 13 - 1,2,3 TAMIL


*DEC 14 - 4,5 ENGLISH & 6,7,8 ENGLISH 


*DEC 17 - 4,5 MATHS & 6,7,8 MATHEMATICS 


*DEC 18 - 1,2,3 ENGLISH


*DEC 19 - 4,5 SCIENCE & 6,7,8 SCIENCE 


*DCE 20 - 1,2,3 MATHS & 6,7,8 PHYSICAL EDUCATION 


*DCE 21 - 4,5 SOCIAL SCIENCE & 6,7,8 SOCIAL SCIENCE

 



NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் - காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...

 



NHIS - அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் -  காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு - இணைப்பு : தீர்ப்பு நகல்(NHIS - Reimbursement of Medical Expenses for Treatment in Unauthorized Hospitals - High Court Madurai Branch Order to Insurance Companies - Attachment : Judgment Copy)...


அரசு ஊழியர், ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும், மருத்துவ செலவுத் தொகையை திரும்ப வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.மணி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து, 2010ஆம் ஆண்டில் ஓய்வுபெற்றேன். அரசு ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளேன்.



இந்நிலையில், எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்டேன். இதற்கு ரூ.1.25 லட்சம் செலவானது.



இந்தத் தொகையைத் திரும்பக் கேட்டு காப்பீடு நிறுவனத்துக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் சிகிச்சை பெற்ற மருத்துவமனை அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் பட்டியலில் இல்லை என்பதால், மருத்துவ செலவுத் தொகையை வழங்க முடியாது என்று கிராமப்புற மருத்துவ சேவைகள் இயக்குநர் உத்தரவிட்டார். எனவே, எனக்கு மருத்துவ செலவுத் தொகையை வழங்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.




இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பி.கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார்.




பின்னர் நீதிபதிகள் பிறப்பித்தஉத்தரவில் கூறியிருப்பதாவது: 


அரசு ஓய்வூதியர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் மட்டுமே, மருத்துவ செலவுத் தொகை திரும்ப வழங்கப்படும் என்பதை ஏற்க முடியாது. அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம்பெறாத மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு காப்பீட்டுத் தொகையை வழங்காமல் இருக்கக் கூடாது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.




இந்த வழக்கில் கிராமப்புற மருத்துவச் சேவைகள் இயக்குநர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரருக்கு 6 வாரங்களில் மருத்துவ செலவுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.



Friends,

I send herewith a copy of Judgement delivered on 05.12.2023 by the Hon'ble High Court of Madras for your kind information. The Hon'ble Court has directed the United India Insurance Corporation to reimburse the medical charges in FULL incurred in connection with a Surgery taken  in a Non-Network Hospital within SIX WEEKS.



>>> Click Here to Download Judgment W.P.(MD)No.25304 of 2018 & W.M.P(MD)No.22916 of 2018, Dated : 05.12.2023, BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...