கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை காரணமாக 18-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

 

கனமழை காரணமாக 18-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 18-12-2023 due to heavy rain) விவரம்...

🌧️ கனமழை காரணமாக (18.12.2023) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :




8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தேனி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு...



ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை எப்படித்தான் தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? - ஆசிரியர் கூட்டணி...



ஒருநாள் ஊதியம் வழங்க எதிர்ப்பு - எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை? -  தமிழக ஆசிரியர் கூட்டணி...


 *எறிஈட்டியாக கூர்மையுடன் நம்மை தாக்க வரும் புலனப் பதிவுகளை  எப்படித்தான்  தாங்கிக் கொள்ள போகிறோமோ என்று தெரியவில்லை?..*


*AIFETO..16.12.2023*


*தமிழக ஆசிரியர் கூட்டணி, அரசு அறிந்தேற்பு எண்:36/2001.*


📕📗📘📙📕📗📘📙📕📗📘📙



*12.12.2023 அன்று சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்களில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு நாள் ஊதியத்தினை ஜாக்டோ ஜியோ சார்பாக  சுமார் 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வழங்குவதாக   கூட்டத்தில் அறிவித்துள்ளார்கள்.*


 *பிற மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கம் தமிழகத்தில் இதுவரை பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய சுனாமி, கஜா புயல், மழை வெள்ளம், கொரனா பெருந்தொற்று போன்ற பாதிப்புகளுக்கு ஒரு நாள் ஊதியத்தினை மனமுவந்து அளித்துவந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஜாக்டோ ஜியோ இந்த ஒரு நாள் ஊதியம் வழங்கும் முடிவிற்கு எதிர்ப்புணர்வினை பல்வேறு முனைத் தாக்குதலுடன் புலனங்களில் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவது கண்டு கவலையுறுகிறோம்.*


 *எனது 51 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இல்லாத அதிர்ச்சியினை கண்டு நிலை குலைந்து நிற்கிறேன்.*


 *ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மனிதநேயம் இல்லாதவர்களா?.. இல்லவே இல்லை... புலனப் பதிவு சாட்டையை கையில் எடுத்துக் கொண்டு கேள்விக்கணைகளை அடுக்கிக் கொண்டு போகும்  இவர்கள்...,  'ஜாக்டோ ஜியோ தலைவர்களே!.. இதுவரையில்  இழந்துள்ள பணப்பயன்கள் எதையும்  பெற்றுத் தர முடியாத உங்களால் எங்களின் ஒரு நாள் ஊதியத்தினை அரசுக்கு வழங்க சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக பாடுபட்ட சங்கத் தலைவர்கள் காலம் போய், உங்களுடைய சுய விளம்பரத்திற்கும், சுய லாபத்திற்காகவும் அரசிடம் உங்களை நிபந்தனையில்லாமல் ஒப்படைத்துக் கொண்டு, உங்களிடம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்ற ஒரு காரணத்திற்காக  எங்கள் உரிமைகளை அடகு வைப்பதா?..'*


 *'கோரிக்கை மாநாடு  என்று  பெயரிட்டால் முதல்வர் வரமாட்டார் என்று வாழ்வாதார உரிமை மீட்பு மாநாடு என்று பெயர் மாற்றினீர்கள்!.. சென்னைக்கு ஒரு லட்சம் பேர் திரண்டு வந்து  கலந்து கொண்டார்கள். பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வரும் என்று நம்பிக்கையுடன் வந்தார்கள். ஆனால் பணப்பலன் சார்ந்து ஒரு சிறு அறிவிப்பாவது அந்த மாநாட்டில் அறிவிக்கப்பட்டது உண்டா?..  இல்லை நடந்த சட்டமன்ற கூட்டத் தொடர் நிகழ்வுகளிலாவது  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும்... கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஈட்டியவிடுப்பு சரண் செய்ய அனுமதி வழங்கப்படும்... ஊதிய முரண்பாடுகள் களையப்படும்... என்று  ஒரு அறிவிப்பையாவது வெளியிட்டிருப்பார்களா?...'* 



*முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள், நம்பக்கம் மக்கள் இருக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் செல்வாக்கு நமக்கு தேவையில்லை என்று முடிவெடுத்தார்கள். அவர் எடுத்தது தவறான முடிவு என்று அப்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் முழுதும் பிரதிபலித்தது என்பதை வரலாறு இன்னமும் சொல்லிக் கொண்டுள்ளது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது என்னதான் நாம் இதயப் பற்றுதலுடன் நெருங்கி நெருங்கி சென்றாலும், அவர் நம்மீது அன்பு மழை பொழிந்தாலும், நம் கோரிக்கைகள் எதையும் செய்ய முன்வரமாட்டார்கள் என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களும் நலத்திட்டங்களால் மக்கள் செல்வாக்கு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி வருகிறது என்று செயல்பட்டு வருகிறார். நாம் இவர்களை நம்பி கெட்டது போதும்!. நம்மீது நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்காக களத்தில் நின்று போராடுவதை தவிர வேறுவழியில்லை என்பதை உணர்ந்து நம்பிக்கையுடன் கைகோர்த்து களத்தில் தொடர்ந்து நின்று இழந்த உரிமைகளை மீட்டெடுப்பொம்!..*



*மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்ட 12 கோரிக்கைகளில் ஒரு கோரிக்கைக்காவது அரசாணை வெளியிட்டு இருப்பார்களா?...*



 *நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் பெரும்பான்மையான 14 ஆசிரியர் சங்கங்களின் தலைவர்கள், 'இன்னமும் தலைநகரம் சென்னை வெள்ளப் பாதிப்பில் இருந்து முழுவதுமாக  மீளவில்லை!.. அதனால் 28ஆம் தேதி கோட்டை நோக்கி  மறியல்  முற்றுகைப் போராட்டத்தினை தவிர்த்து விட்டு, 28ஆம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுச்சிமிக்க மறியல் போராட்டத்தினை நடத்தலாம்' என்ற கருத்தினை பதிவு செய்த போதும்...  அதை  செவிமடுக்காதவர்கள் யார்?..யார்?.. கண்டு கொள்ளாமல் இருந்த சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?.. அந்த வீட்டோ பவர் உள்ள சங்கத் தலைவர்கள் யார்?.. யார்?..*


 *ஜனவரி மாதத்தில் கோட்டையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தினை வைத்துக் கொள்ளலாம் என்று ஆசிரிய சங்க தலைவர்கள் சொன்னதை, கூட்டம் தொடங்குவதற்கு முன்னரே ஒரு முடிவினை எடுத்துக் கொண்டு வருகை தந்து  திட்டமிட்டபடி கோட்டை முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது ஏன்?..*


 *இவர்கள் எடுத்துள்ள  முடிவுகள் பற்றி பலரின் புலனப் பதிவில் வெளிவந்துள்ள விகடகவி வார்த்தைகள். நெருப்புகள்... "நடக்கும் என்பார் நடக்காது... அப்படி எதுவும் நடக்காது இவர்கள் மீது சத்தியம்" என்ற பாடல் வரிகளோடு புலனப் பதிவுகள்  உலா வந்து கொண்டுள்ளது.*


 *நடந்தது என்னவென்றால் இரண்டு சங்கத் தலைவர்கள் ஒரு நாள் ஊதியத்தை நாங்கள் வழங்கி விடுகிறோம் என்று முன்னதாக செய்தி வெளியிட்டு இருந்தார்கள்.  அதற்கு ஒப்புதல் பெறுவதற்காக  உடனே ஜாக்டோ ஜியோ கூட்டத்தினை கூட்டி 10 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒரு நாள் ஊதியத்தினை  தருவதற்கான நெருக்கடியினை கூட்டத்தில் மூலமாக ஏற்படுத்தியுள்ளார்கள். கூட்டம் கூடுவதற்கு முன்னர் இரண்டு தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை தனித்தனியே சந்தித்து எடுக்கப் போகும் முடிவினை தெரிவித்து வந்த ஆதாரங்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.*



 *தனிப்பட்ட என்னுடைய 51 ஆண்டு கால பொது வாழ்க்கையில் 1985ல் நடைபெற்ற ஜாக்டீ போராட்டம், 1988ல் நடைபெற்ற ஜாக்டீ- ஜியோ போராட்டம், 2003 இல் நடைபெற்ற டெஸ்மா, எஸ்மா  ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை முன்னின்று நடத்தி மூன்று போராட்டங்களிலும் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு  வெளியில் வந்திருக்கிறோம். நிரந்தரப் பணி நீக்கத்தில் இருந்த 999 பேரில் 998 பேரையும் ஏழு மாதத்திற்கு பிறகு பணியில் அமர்த்திய பிறகு நாம் பணியில் கடைசியாக சேர்ந்தோம் என்பதை வெளிப்படைத் தன்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*


 


 *ஆசிரியர்,  அரசு ஊழியர், பணியாளர்கள், கல்லூரி ஆசிரியர் சங்கங்கத் தலைவர்களுடன் களத்தில் நின்று பணியாற்றிய அனுபவக் கொள்முதலை இன்னமும் நாம் பாதுக்காத்து வைத்துள்ளோம்!. தோழர்கள் போராளிகள்  எம்.ஆர்.அப்பன், கே.ஜி என்று அழைக்கப்பட்ட கங்காதரன்,  தோழர் ஸ்ரீதரன்,  என்றும் நம் நினைவில் வாழ்ந்து கொண்டுள்ள போராளி தோழர் முத்துசுந்தரம், பெரியவர் நாராயணராவ், கு.பா, செளந்தரபாண்டியன், அரசு அலுவலர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த சகோதரர் சூரியமூர்த்தி,  தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்கத்தினுடைய தலைவராக இருந்த சகோதரர் பாண்டுரங்கன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆத்ரேயா அவர்களுடனும், தீவிரவாதிகள் பட்டியலில் சேர்த்து பலமுறை கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு ஆளான பேராசிரியர் முனைவர் நெடுஞ்செழியன் அவர்களுடனும் களப்பணி ஆற்றிய நினைவுகள் எல்லாம் இன்னமும் கூட்டமைப்புகளுக்கு பெருமையினை சேர்த்து வருகின்றது என்றால் மிகையாகாது.*


 *தனிநபர் கருத்தினை கூட கேட்டு மதித்து போராட்ட திட்டத்தை வகுத்த இயக்கம் தான் அன்றைய  ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பாகும். என்ற வரலாற்றுப் பதிவு இன்றும் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளது.... என்பதை மறக்கத்தான் முடியுமா?..*



*தொடர்ந்து வெளிவரும் புலனப் பதிவுகளை தவறாமல் படித்து  சங்கத் தலைவர்கள் சுய பரிசோதனை செய்து கொண்டு கூட்டமைப்புகளை நடத்துங்கள்!.. ஒருவேளை அரசே ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை வைத்து ஒருநாள் ஊதியத்திற்கு அரசாணை வெளியிடுவார்களேயானால் பல்வேறு முனைகளில் இருந்து எதிர்ப்பினை தெரிவிப்பார்கள் என்பதை உணர முடிகிறது.  அரசின் மீது உள்ள கோபத்தை விட... சங்கத் தலைவர்கள் மீது வெறுப்புணர்வு தீப்பிழம்பாய் வெளிவந்து கொண்டிருக்கிறது.*




 *இன்னும் சென்னையில் வெள்ளம் வடியாத சில  பகுதிகள் இருக்கத்தான் செய்கிறது.  என்பதை மக்கள் ஊடகங்கள் வழியாக பார்த்து வருகிறார்கள்.  மத்திய அரசு கண்காணிப்பு குழுவினை அனுப்பி பாதிப்பினை ஆய்வு செய்து வருகிறார்கள். அதே டிசம்பர் மாதத்தில் மீண்டும் பாதிப்புகளில் இருந்து வெளிவராத அதே தலைநகர் சென்னையில் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தினால்  பொதுமக்களும், பொது நோக்கர்களும் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்?..*


 *பல்வேறு புலனப் பதிவுகளில்  போராட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு அழைப்பார்கள்... பேச்சுவார்த்தைக்கு முறைப்படி அழைக்காவிட்டாலும் இவர்களே சென்று பார்ப்பார்கள்.. முதலமைச்சர் நின்று கொண்டு இவர்களையும் நிற்க வைத்து   வெள்ள பாதிப்பு இன்னமும் நீங்க வில்லை... எங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று தெரிவிப்பார்கள். சில சங்கத் தலைவர்கள் முதலமைச்சர் அவர்களை சந்திக்கவே முடியாது.  நமது ஆட்சிக் காலத்தில் முதலமைச்சர் அவர்கள் நம்மை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறார்கள். இந்த ஒரு பெருமை போதாதா?.. என்று நமக்கு ஆறுதல்  அளிக்க முன் வருவார்கள்..  உடனே தலைவர்களும் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என்று முதல் நாள்தான் அறிவிப்பார்கள்.*


*ஏற்கனவே டிட்டோஜாக் இது போன்ற அறிவிப்புகளுக்கு வழிகாட்டி நிற்கின்றது.*



 *போராட்டக் களத்தினை தீவிர படுத்த 19ஆம் தேதி திருச்சியில் ஜேக்டோ ஜியோ  கூடுகிறார்களாம்!. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும் அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். நடைபெறப் போகும் கூட்டத்திலாவது ஜாக்டோ ஜியோ என்ற வீரம் செறிந்த அமைப்பினை ஒரு தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து விடுவித்து கொண்டு வெளியில் வாருங்கள்!*


*ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப் பிடியுங்கள்!..*


*சுதந்திரமான கூட்டமைப்பிற்கு ஆசிரியர்கள்,  அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஒற்றுமை உணர்வு ஒன்றுபட்ட உணர்வாக ஓங்கி ஒலிக்கத்தான் செய்யும். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறியானால்... சங்கத் தலைவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மத்தியில் கேள்விக்குறிக்கு ஆளாகுவோம்!..*


 *மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சி மக்களாட்சி என்பார்கள்!.. ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நலனுக்காக போராட்டங்களை நடத்துவது தான் ஜாக்டோ ஜியோ இயக்கம்!.. என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு செயல்பட முன்வருவோம்!..*



*மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், வருவாய்த் துறையினர் மின்துறை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தீயணைப்பு வீரர்கள்,  எல்லாவற்றுக்கும் மேலாக தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள துப்புரவு பணியாளர்கள் இவர்களது இரவுபகல் பாராத  அர்ப்பணிப்பு  மிகுந்த பணியினை மறக்கத்தான் முடியுமா?..  இவர்களையெல்லாம் பாராட்டுகிற தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்..  இவர்களின் கோரிக்கைகளைப் பற்றி  ஏற்க மறுப்பது ஏன்?.. என்ற  உணர்வுகள் மேலிட்டு வருகின்றன.*




*நடந்ததை மறந்து இனி நடக்க இருப்பதை உணர்ந்து ஜாக்டோ ஜியோ பதாகையினை உயர்த்திப்பிடித்து களத்தில் தொடர்ந்து நிற்போம்!..*


*பெற்ற அனுபவங்களை காய்தல், உவத்தல் அகற்றி உரிமை உறவுடன் பகிர்ந்து கொள்கிற உங்களின் சகோதரன்...*


*வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52,நல்லதம்பி தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-600005. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.*


MBBS, Engineering, B.Sc Nursing, MBA, B.Sc Agriculture, B.Sc (Hons) Co-operation & Banking படிப்போர் ஃபெடரல் பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் உதவித்தொகை ரூ.1 லட்சம் வரை பெற விண்ணப்பிக்கலாம்...



 ஃபெடரல் பேங்க் ஹார்மிஸ் மெமோரியல் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன...


ஃபெடரல் பேங்க்-இன் சிஎஸ்ஆர் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிறுவனர் கே.பீ.ஹார்மிஸ்-இன் நினைவாக நிறுவப்பட்ட ஹார்மிஸ் மெமோரியல் ஃபவுண்டேஷன் உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


*உதவித்தொகை கட்டணம்* 


கல்விக் கட்டணம் மற்றும் பிற கல்விச் செலவுகள் உட்பட ஆண்டுக்கு அதிகபட்சம் *ரூ.ஒரு லட்சம்*. 


*பொருந்தும் படிப்புகள்:* 


👉எம்பிபிஎஸ் 


👉என்ஜீனியரிங் 


👉பி எஸ்சி (நர்ஸிங்) 


👉எம்பிஏ 


👉பிஎஸ்சி அக்ரிகல்ச்சர், பிஎஸ்சி (ஹானர்ஸ்), அக்ரிகல்ச்சுரல் யுனிவர்சிட்டியால் நடத்தப்படும் கோ-ஆபரேஷன் மற்றும் பேங்கிங் 



உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் படிப்பு ஆண்டு *2023-24* இல் அரசு, அரசு உதவி பெற்ற, அரசு அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி/தன்னாட்சி கல்லூரிகளில் தகுதியின் கீழ் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும். 



குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மேல் இருக்கக் கூடாது.  



*கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பஞ்சாப்* ஆகிய மாநிலங்களில் வசிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 


 

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17 டிசம்பர் 2023...



>>> அறிவிப்பு (Announcement)...



>>> செய்தி வெளியீடு (Press Release)...



விண்ணப்பிக்க வலைதள முகவரி:

https://scholarships.federalbank.co.in:6443/fedschlrshipportal/


Students are required to upload the following documents while applying:

 

a. Photo of the student

b. Admission Letter/Admission Memo

c. Course fee structure.

d. Mark sheets of Qualifying Examination*

e. Instructions from the University for converting the CGPA/Grade into percentage (Mandatory 

for MBA Applicants)

f. Family income certificate issued by government authorities.

g. Nativity certificate.

h. ID proof & Address proof of Student and Parent.

i. Medical Certificate (applicable for physically challenged students & speech/hearing/vision 

impaired students).

j. In the case of dependant wards of Martyred Armed Forces Personnel who lost their life while 

serving the Nation, evidence showing the same needs to be submitted.



விண்ணப்பப் படிவம் மற்றும் மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து இங்கு பார்க்கவும்:

https://www.federalbank.co.in/corporate-social-responsibility



Federal Bank Hormis Memorial Foundation Scholarship 2023-24...


Eligibility

To be eligible, an applicant must:

be enrolled in one of the following disciplines/courses: 

  • MBBS
  • Engineering
  • B.Sc in Nursing
  • MBA
  • B.Sc in Agriculture, B.Sc (Hons) Co-operation & Banking conducted by Agriculture Universities

be a domicile of Gujarat/ Karnataka/ Kerala/ Maharashtra/ Punjab/ Tamil Nadu

have secured admission under merit in government/government-aided/government-recognised self-financing/autonomous colleges during the academic year of 2023-24

have a family annual income of less than ₹3,00,000


Benefits

Selected students will receive full reimbursement for their tuition fees and other educational expenses, up to a maximum of ₹1,00,000 per annum. This reimbursement is based on the official fee structure of the college.


In addition, students are eligible for a one-time reimbursement of up to ₹40,000 for the purchase of a personal computer (PC) or laptop during their course of study (within the overall eligibility of ₹1,00,000 per annum).


Note:- Students can claim reimbursement upon submission of the receipts.


Documents

  • Photograph of the student
  • Admission letter/memo
  • Course fee structure
  • Income certificate 
  • Nativity/domicile certificate
  • Marksheets of qualifying examination
  • ID proof & address proof of student and parent
  • Medical certificate (if applicable)

In the case of dependant wards of Martyred Armed Forces Personnel who lost their life while serving the Nation, evidence showing the same needs to be submitted

Instructions from the university for converting the CGPA/Grade into percentage (mandatory for MBA applicants)

Note:-

All the documents in the original will be verified at the zonal offices/designated offices.

A medical certificate is applicable for physically challenged students & speech/hearing/vision impaired students.

In the case of speech/hearing/vision impaired students, a certificate issued by a Medical Officer, not below the rank of DMO or an approved Medical Officer of the Bank is mandatory.


How can you apply?

Eligible students can apply for the scholarship through the following steps:

Step 1: Click on the 'Apply Now' button below. 

Step 2: Click on the 'Register' button and fill in the required registration details. (Note: If already registered, log in using Gmail/Mobile number/Email ID).

Step 3: Read all the details carefully, navigate to the 'How to Apply' section, and click on the given link.



Step 4: Enter mobile number, captcha and click on the login button.

Step 5: After successful verification, read the terms & conditions carefully, tick the checkbox at the bottom of the page, and click on the 'Submit' button.

Step 6: Fill in all the required details, upload the necessary documents, and submit.


காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் - தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.25000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.50000 சிறப்பு பரிசளிப்புத் திட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...

 


2023-2024ஆம் ஆண்டிற்கான காமராஜர் விருது - காமராசர் பிறந்தநாள் - கல்வி வளர்ச்சி நாள் - தொடக்கப்பள்ளிகளுக்கு ரூ.25000, நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.50000 சிறப்பு பரிசளிப்புத் திட்டம் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 021374/ ஜே4/ 2023, நாள்: 07-12-2023...



>>> தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 021374/ ஜே4/ 2023, நாள்: 07-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அனுமதி கோரியது - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கடிதம், நாள்: 13-12-2023...



பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பிட அனுமதி கோரியது - Deployment கலந்தாய்வு நடந்த பின்னர் தான் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் - பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளரின் அறிவுரைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் (நிலை) எண்: 238/ பக5(1)/ 2023-1, நாள்: 13-12-2023...



>>> பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலாளர் கடிதம் (நிலை) எண்: 238/ பக5(1)/ 2023-1, நாள்: 13-12-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



"5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது": -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு...


"புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். 


5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது" என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: 


புதிய ஆசிரியர்கள் திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் அதிகளவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். 


வட மாவட்டங்களில் அதிகளவில் காலி பணியிடங்கள் உருவாவதால் ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.


வேறு மாவட்டங்களில் அதிகமாகவுள்ள ஆசிரியர்களை வட மாவட்டங்களில் காலியிடங்களில் நிரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது. 


புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். 


5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது. 


இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.



TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

 TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் 12 ஜனவரி 2024 அன்று வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு (TNPSC Group 2 Exam Results will be released on 12 January 2024 - TNPSC Notification)...





ஜனவரி 12-இல் குரூப் 2 தேர்வு முடிவுகள்...


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்துப் பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன.கடந்த டிச.15, 2022ஆம் ஆண்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023ஆம் ஆண்டில் கடந்த மார்ச்.15, 2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள்) நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர்.தேர்வாணைய ஆண்டு திட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளைத் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும் ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023இல் வெளியிடப்படுவதாக ஏற்கனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.


தேர்வு முடிவுகளை விரைந்து வழங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடுச் செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல், வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.இத்தகைய சவால்கள் இருந்த போதிலும், தொகுதி-II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12ஆம் தேதி வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி-II தேர்வு தொடர்பாகப் பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும்" -அமைச்சர் தங்கம் தென்னரசு...

 2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும்" -அமைச்சர் தங்கம் தென்னரசு (After January 2024 fresh application for women's entitlement amount will be given" -Minister Thenarasu)...


2024 ஜனவரிக்கு பிறகு மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய விண்ணப்பம் வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர், 'இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் அப்போது விண்ணப்பிக்கலாம். தகுதி வாய்ந்த மகளிர் அனைவரும் இந்த திட்டத்தில் பயன்பெற வேண்டும். இதனை உதவித்தொகையாக கொடுக்கவில்லை. உரிமைத்தொகையாக கொடுக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...