கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் திறன் பலகைகள் - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் மேலாண்மை முறையை வெற்றிகரமாக செயல்படுத்துதல் - தொடர்பான அறிவிப்பு - மாநில திட்ட இயக்குநர் கடிதம்...

 


உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மற்றும் திறன் பலகைகள் - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றல் மேலாண்மை முறையை வெற்றிகரமாக செயல்படுத்துதல் - தொடர்பான அறிவிப்பு - மாநில திட்ட இயக்குநர் கடிதம்...


Samgra Shiksha - Hi-Tech lab and Smart boards - Successful implementation of Learning Management System in Government Primary and Middle Schools - intimation regarding Samagra Shiksha - State Project Director Letter...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2023...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.12.2023 - School Morning Prayer Activities...

   


திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்


இயல்:துறவறவியல்


அதிகாரம் : கொல்லாமை


குறள்:325


நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை.


விளக்கம்:


 தனது நிலைக்கு பயந்து துறவுக் கொள்பவர்களை காட்டிலும் கொலைக்கு பயந்து கொல்லாமை மேற்கொள்பவரே தலைச் சிறந்தவர்.



பழமொழி :

Justice delayed is justice denied


தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் ஆகும்



இரண்டொழுக்க பண்புகள் :1


.1) பேப்பர், உணவு அடைக்கப் பட்டு வந்த கவர்கள் மற்றும் குப்பைகளை குப்பை தொட்டியில் தான் போடுவேன் பள்ளி வளாகத்தில் மற்றும் தெருவில் போட மாட்டேன்.



2) ஒரு நாளைக்கு சில நிமிடங்கள் ஆவது பத்திரிகை மற்றும் புத்தகங்கள் வாசிப்பேன்



பொன்மொழி :


ஆயிரம் அறிவுரைகளை

விட ஒரு அனுபவம்

சிறந்த பாடத்தை

கற்றுத்தரும்.


பொது அறிவு :


1. தமிழ்நாட்டின் மாநில பறவை எது?




மரகதப்புறா


2. தமிழ்நாட்டின் சாக்ரடீஸ் யார்?

தந்தை பெரியார் (ஈ. வெ. இராமசாமி)


English words & meanings :


 osprey (n)- the sea eagle கடல் பருந்து. outbreak (n)- a beginning தொடக்கம், திடீர் எழுச்சி


ஆரோக்ய வாழ்வு : 


இலுப்பை பூ : சங்க காலம் முதல் இன்றுவரை மருத்துவத்திறகாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாம்புக்கடி, வாத நோய், சர்க்கரை வியாதி, சளி இருமல், வயிற்றுப்புண், மூலநோய்கள் சுவாசக்கோளாறு, காயங்கள் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. இலுப்பை பூ ஊறு காய், காசநோய்க்கு அரிய மருந்தாகும். 


டிசம்பர் 21


ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் பிறந்தநாள்


எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு:  பிறப்பு: :திசம்பர் 21, 1972),[1] அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேச மாநிலத்தின், தற்போதைய முதல்வரும் ஆவார்.[2] இவர் ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.

2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளில், ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதனால் ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக மே 30, 2019 அன்று ஜெகன் மோகன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.


நீதிக்கதை


 மனம் இருந்தால் இடம் உண்டு




பெரியவர் ஒருவர், ஒரு ஊரிலிருந்து, அடுத்த ஊரில் இருந்த கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து விட்டுத் திரும்பினார். களைப்பு மேலிட்டது. நடக்க முடியவில்லை . அருகில் ஒரு குடிசை காலியாக இருந்தது. அங்கே சென்று படுத்தார்.




சிறிது நேரத்தில், மற்றொரு பெரியவர் வந்தார். “இந்த ஊரில் ஒருவர் பணம் தர வேண்டும். அவர் வீட்டில் இல்லை, வீடு பூட்டிக் கிடக்கிறது. காலையில் அவரைப் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். இரவு இங்கே தங்குவதற்கு இடம் கிடைக்குமா?” என்றார்.




“நிச்சயம் இடம் உண்டு. இங்கே ஒருவர் படுக்கலாம்; இருவர் உட்கார்ந்து கொள்ளலாம்; வருக” என்று அவரை வரவேற்றார்.




இருவரும் தரையில் இருந்து பேசிக் கொண்டிருந்தனர்.


அப்பொழுது, மற்றொரு பெரியவர் வந்தார். “ஐயா, மழை பெய்கிறது.” இரவு இங்கே தங்கிக் கொள்ள இடம் கிடைக்குமா?” என்றார்.


“தாராளமாக இடம் உண்டு. “ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் நிற்கலாம். அவ்வளவுதான் இங்கே இடம் உள்ளது.” என்று அவரை வரவேற்றனர் இருவரும்.


மூவரும் இரவு முழுவதும் பேசிக் கொண்டே நின்றனர்.


விடிந்தது, மழையும் நின்றது


மூவரும் விடைபெற்று, அவரவர் ஊருக்குத் திரும்பிச் சென்றனர்.


இன்றைய செய்திகள்


21.12.2023


*மத்திய பிரதேச சட்டசபை சபாநாயகராக முன்னாள் மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


*தூத்துக்குடி மற்றும் நெல்லையில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.


*கேரள மாநிலத்தின் நதிகளில் ஒன்றான பம்பை நதியில் தொடர்ந்து கலக்கும் கழிவு நீரால் தூய்மையை இழக்கிறது.


*அதிகரிக்கும் புதிய வகை கொரோனா.... மத்திய மந்திரி எச்சரிக்கை தகவல்.


*எம்பிக்கள் கண்ணியத்தை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்; ஜனாதிபதி வலியுறுத்தல்.


*முகமது ஷமி,  வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது.


Today's Headlines


*Former Union Minister Narendra Singh Tomar has been elected as the Speaker of the Madhya Pradesh Assembly.


 *Schools and colleges in Tuticorin and Nellai have a holiday today.


 *One of the rivers of Kerala State, Pumbai River loses its purity due to continuous mixing of waste water.


 *Increasing new type of Corona.... Union Minister's warning information.


 *MPs should conduct themselves in a dignified manner;  President's  Assertion.


 *Arjuna Award to 26 people including Mohammad Shami and Vaishali.


ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது...

ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு ஆண் குழந்தை பிறந்தது...



ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, நேற்று மதியம் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணியான அனுசுயா (27) என்பவருக்கு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை பிறந்தது.


வெள்ளத்தால் ரயிலில் தவித்த அனுசுயாவை, முன்னுரிமை அடிப்படையில் பத்திரமாக மீட்ட விமானப் படையினர் மதுரைக்கு அழைத்துச் சென்றனர்.


>>> ஹெலிகாப்டரில் மீட்கப்படும் காட்சி...



TNPSC - Results Declaration Schedule (As on 19th December 2023)...


 TNPSC - Results Declaration Schedule (As on 19th December 2023)...



>>> Click Here to Download...


TNPSC Annual Planner 2024-2025...

 


TNPSC Annual Planner 2024-2025...



>>> Click Here to Download...



TNPSC - Annual Planner - 2024-25ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்...



*💥TNPSC வருடாந்திர தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.*


குரூப்1-65 பணியிடங்கள்


குரூப்2/2A-1294 பணியிடங்கள்


வனத்துறை(Forest Guard&Forest Watcher)-1264 பணியிடங்கள்


குரூப்-4 பணியிடங்கள் notification வெளியாகும் போது பணியிடங்கள் தெரிவிக்கப்படும்.


Annual planner 2024 


Major exam 


1 . Group 4

 

    Jan 2024 notification

    June 2024 exam


2. Group 1 


    March notification 2024 

   ( 65 vacancy) 

   July 2024 exam 


3 .Group 2  & 2 a 

   ( 1294 vacancy) 

    notification may 2024

    August 2024 exam


4.Forest guard and forest watcher 


    (1264 vacancy)


  March 2024 notification 

  June 2024 exam


5. Forester In forest dept 

    ( 118 vacancy)   

   may 2024 notification

   August 2024  exam 


நம்பிக்கையோடு பயணத்தை தொடங்குங்கள் 2024 நமக்கு வெற்றி தரும் ஆண்டாக இருக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்


கடந்த குரூப் 4 தேர்வில் சில வினாக்களில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்


குரூப்-4 தேர்வுக்காக அறிவிக்கை அடுத்தாண்டு ஜனவரியில் வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் எனவும், குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிக்கை மே மாதம் வெளியிடப்பட்டு ஆகஸ்ட்-ல் தேர்வு நடத்தப்படும் எனவும் TNPSC அறிவிப்பு.


கனமழை பாதிப்பு காரணமாக 21-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்...

 

கனமழை பாதிப்பு காரணமாக 21-12-2023 அன்று பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools and Colleges on 21-12-2023 due to heavy rain) விவரம்...


திருநெல்வேலி : பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை; வெள்ள முகாம்கள் நடைபெறாத கல்லூரிகள் மட்டும் செயல்படும்-மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்


தூத்துக்குடி மாவட்டத்தில் நாளையும் (டிச.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.


தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸப் எண்கள் அறிமுகம்


மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸப் எண்கள் அறிமுகம்


Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற  X  தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் நியாயவிலைக் கடைகள் விவரம் - மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்...



 நெல்லை மாவட்டத்தில் உள்ள 1195 பள்ளிகளில் 1108 பள்ளிகள் முழு பாதுகாப்புடன் உள்ளன. 


மீதமுள்ள பள்ளிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


கடந்த 3 நாட்களாக துண்டிக்கப்பட்ட நெல்லை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.


மழை வெள்ளத்தால் நெல்லையில் உள்ள 840 நியாய விலைக் கடைகளில் 63 நியாய விலைக் கடைகள் பாதிக்கப்பட்டு பொருட்கள் சேதமடைந்துள்ளன - கார்த்திகேயன், நெல்லை ஆட்சியர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Pay Authorization for the month of December 2024 salary for 94 vocational teacher posts

  94 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு டிசம்பர் 2024 மாத ஊதியம் வழங்கும் அதிகார ஆணை வெளியீடு டிசம்பர்‌ 2024 மாதத்திற்கான பள்ளிக்‌ கல்வித்...