>>> 2024 ஆம் ஆண்டு - கணித மாத நாட்காட்டி (Mathematics Calendar)...
பெரியார் பல்கலை. துணைவேந்தர் கைது
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது
ஊழல் புகார் தொடர்பாக ஜெகநாதனை கைது செய்த கருப்பூர் போலீசார்
துணைவேந்தராக பணியாற்றும் போதே வர்த்தக நிறுவனம் தொடங்கியதாக புகார்
போலி ஆவணங்கள் தயாரித்து, பல்கலை. கட்டடங்கள் கட்ட ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் புகார்.
சேலம் பெரியார் பல்கலை., துணை வேந்தர் கைது...
போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், மாநகர போலீசாரால் கைது.
பள்ளிக் கல்வித் துறை அரசாணை (நிலை) எண்.245, நாள்: 22-12-2023 - அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவிலான கண்காணிப்புக் குழு (SLMC) - பள்ளி மேலாண்மைக் குழுக்களால் (SMC) எழுப்பப்படும் தேவைகளைக் கண்காணித்து, ஆய்வு செய்து, முறையாக நிவர்த்தி செய்து தீர்க்க அமைக்கப்பட்டது - அரசாணை வெளியீடு (School Education Department G.O.Ms.No.245, Dated: 22-12-2023 - State Level Monitoring committee (SLMC) under the Chairmanship of Chief Secretary to Government - To monitor and review and systematically address and resolve the requirements raised by the School Management Committees - constituted - orders - lssued)...
>>> Click Here to Download G.O.Ms.No.245, Dated: 22-12-2023...
அரசு பள்ளிகளின் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் முன்வைக்கப்படும் பள்ளித் தேவைகளை கண்காணிக்கவும் மதிப்பாய்வு செய்து முறையாக நிவர்த்தி செய்யவும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் பல்வேறு அரசுத் துறை செயலாளர்களைக் கொண்ட மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது - அரசாணை வெளியீடு...
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உட்கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தலைமைச் செயலாளர் தலைமையில் 14 துறை செயலாளர்கள் கொண்ட குழு அமைப்பு.
பள்ளி மேலாண்மை குழுக்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 33,500 பள்ளிகளில் சுமார் 3 லட்சம் தேவைகள் இருப்பது தெரியவந்துள்ளன.
4 விதமாக (உட்கட்டமைப்பு, கற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி மேலாண்மை) தேவைகள் பிரிக்கப்பட்டு அவை பூர்த்தி செய்யப்பட உள்ளன.
அரசு நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் (Hi-Tech Lab) ஏற்படுத்துதல் - நடுநிலைப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...
>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29481/ கே2/ 2023, நாள்: 22-12-2023...
Instruction to the User
Hi-tech Lab - MIDDLE SCHOOL...
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...
அனைத்து நடுநிலைப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMIS - ல் Hi-Tech Lab Site Preparation பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
1. ஹைடெக் ஆய்வகத்திற்கான வகுப்பறையை கண்டறியும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
2. HM / ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் ஹைடெக் லேப் வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.
3. மேசைகள்/நாற்காலிகள் போன்ற தளவாட பொருட்கள் இல்லாமலும் , குப்பைகள் அகற்றப்பட்டு தெளிவாக இருக்க வேண்டும்.
4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.
அரசு தொடக்கப் பள்ளிகளில் திறன் வகுப்பறைகள் (Smart Class Room) ஏற்படுத்துதல் - தொடக்கப் பள்ளிகளில் உள்ள வசதிகள் குறித்த விவரங்கள் - EMIS School Login வழியாக விவரங்களை உள்ளீடு செய்தல் அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...
>>> தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 29482/ கே2/ 2023, நாள்: 22-12-2023...
Smart Classroom - PRIMARY SCHOOL...
அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர் கவனத்திற்கு...
அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றி EMISல் Smart Class Room Site Preparation பதிவு செய்ய தெரிவிக்கப்படுகிறது.
1. Smart Classroom - க்கான வகுப்பறையை அடையாளம் காணும் போது, தேர்வுக்கு கீழே உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
2. HM/ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களுக்கும் எளிதாக அணுகும் வகையில் Smart Classroom வகுப்பறையை கண்டறிவதில் கவனமாக திட்டமிட வேண்டும்.
3. அறையானது குப்பைகள் அல்லது வேறு ஏதேனும் பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டும்.
4. அறையில் நீர் கசிவு மற்றும் சுவர்களில் ஈரப்பதம் இல்லாமல் சரியான சுவர்கள் இருக்க வேண்டும்.
- முதன்மை கல்வி அலுவலர்...
COMBINED DEFENCE SERVICES EXAMINATION (I), 2024 - INCLUDING SSC WOMEN (NON-TECHNICAL) COURSE - Last Date for Submission of Applications: 09.01.2024...
>>> CLICK HERE TO DOWNLOAD EXAMINATION NOTICE NO.4/2024.CDS-I, DATED 20.12.2023...
தேசிய பாதுகாப்பு அகாடமியில் 400 காலியிடங்கள்...
NATIONAL DEFENCE ACADEMY & NAVAL ACADEMY EXAMINATION: 2024ம் ஆண்டுக்கான தேசிய ராணுவ அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (I) தேர்வுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் ஜனவரி 9ம் தேதிக்குள் (09.01.2024) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதில் தேர்வானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ சேவைகள் தேர்வு வாரியம் நடத்தும் (எஸ்.எஸ்.பி) நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறலாம். நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், 2025 ஜனவரி 2ம் தேதி முதல் தொடங்கவுள்ள 115-வது கடற்படை பயிற்சி வகுப்பு மற்றும் 153-வது தேசிய ராணுவ அகாடமியின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைக்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம்
காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 400
தேசிய பாதுகாப்பு அகாடமி
ராணுவம் - 208 (மகளிர் 10)
கடற்படை - 42 (மகளிர் 12)
விமான படை -120 (மகளிர் - 06)
கடற்படை அகாடமி
இந்திய கடற்படை அகாடமி - 30 (மகளிர் - 09)
யார் விண்ணப்பிக்கலாம்: திருமணமாகாத ஆண்/பெண் இந்திய குடிமக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 2005 ஜுலை 2ம் தேதிக்கு பின்பாக பிறந்தவர்கள் மற்றும் 2008, ஜுலை 1ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
கல்வித் தகுதி: 10+2 கல்வி முறையில் அல்லது இதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் கடற்படை, விமான படை பதவிக்கும், கடற்படை அகாடமி பதவிக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் 12ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
அறிவிக்கை வெளியான நாள்: 20.12.2023 ;
விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள் : 09.01.2024;
விண்ணப்பம் செய்வது எப்படி:
விண்ணப்பதாரர்கள், upsconline.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.
இணையதளத்தில் ஆதார் எண், ஓட்டுநர் உரிமம், பான் எண், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை , மாணவர் அடையாள அட்டை என மத்திய மாநில அரசுகள் வழங்கிய அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு மற்றும் நேர்காணலின் போது, பதிவேற்றம் செய்த அடையாள ஆவணத்தின் அசலை எடுத்துச் செல்ல வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த மகளிர்/ முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது . ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
தெரிவு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், முடிவுகள் வெளியான 2 வாரத்துக்குள், இந்திய ராணுவத்தின் இணையதளத்தில் joinindianarmy.nic.in பதிவு செய்ய வேண்டும். அதன்பின்பு வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கான தேர்வு மையம் மற்றும் தேதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கப்படும். நேர்காணலின் போது அசல் சான்றிதழ்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
தெளிவுரை வேண்டுவோர்: மேலும் தகவல்களுக்கு, யுபிஎஸ்சி 'சி' நுழைவு வாயில் அருகேயுள்ள உதவி மையத்தை நேரடியாகவும், 011-23385271/011-23381125 / 011-23098543 என்ற போன் எண்களிலும், வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
12ஆம் வகுப்பு / பொறியியல் / பி.காம்., தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்திய விமான நிலையங்களில் வேலை...
தெற்கு மண்டல விமான நிலையங்களில் காலியாக உள்ள ‘சி’ பிரிவு காலிப்பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜனவரி 26ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலிப்பணியிட விவரங்கள்:
இளநிலை உதவியாளர் (தீயணைப்பு சேவை)
காலியிடங்கள் எண்ணிக்கை - 73
அடிப்படைத் தகுதிகள் - 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை நிபந்தனைகள் : முன்னாள் படைவீரர்களுக்கான பின்னடைவு பணியிடங்களாகும் (BACKLOG VACANCIES). அப்பிரிவினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இளநிலை உதவியாளர் (நிர்வாகம்)
காலியிடங்கள் எண்ணிக்கை - 02
அடிப்படைத் தகுதிகள் - ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அடிப்படை நிபந்தனைகள் : மாற்றுத் திறனாளிகளுக்கா பின்னடைவு பணியிடங்களாகும். (BACKLOG VACANCIES) அப்பிரிவினர் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
முதுநிலை உதவியாளர் (எலக்ட்ரானிக்ஸ்)
காலியிடங்கள் எண்ணிக்கை - 25
அடிப்படைத் தகுதிகள் - எலக்ட்ரானிக்ஸ்/ தொலை தொடர்பு/ ரேடியோ இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்; தொடர்புடைய துறைகளில் இரண்டு வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்
அடிப்படை நிபந்தனைகள் : அனைத்து தரப்பினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இருப்பினும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர் பொதுப் பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
இளநிலை உதவியாளர் (கணக்கு)
காலியிடங்கள் எண்ணிக்கை - 19
அடிப்படைத் தகுதிகள் - பி.காம் முடித்திருக்க வேண்டும்; தொடர்புடைய துறைகளில் இரண்டு வருட முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
அடிப்படை நிபந்தனைகள் : அனைத்து தரப்பினரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்
அனைத்து பதவிகளுக்கும், இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம், கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பக் கட்டணம்:
இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர், பெண்கள், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் வயது வரம்பு 20/12/2023 அன்று 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் பிரிவினர் / பட்டியல் பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள் ஆவர்.
நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டு வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.
www.aai.aero என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.
ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலீட்டு திட்டங்கள் குறித்து அறிவுரைகள் வழங்குவது போல பரவும் DEEP FAKE வீடியோக்களை நம்பிவிட வேண்டாம்...