தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - அரசிதழ் வெளியீடு - Gazette No. 413, Dated: 21-12-2023...
>>> Click Here to Download Gazette No. 413, Dated: 21-12-2023...
தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - அரசிதழ் வெளியீடு - Gazette No. 413, Dated: 21-12-2023...
>>> Click Here to Download Gazette No. 413, Dated: 21-12-2023...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.01.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கல்வி.
குறள் 398:
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம் :
ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்.
பழமொழி :
Count not your chickens before they are hatched.
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே; பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே...
பொன்மொழி:
Impossible is a word to be found only in the dictionary of fools. - Napoleon Bonaparte
முடியாது என்ற வார்தையை முட்டாள்களின் அகராதியில் மட்டுமே காணமுடியும். - நெப்போலியன் போனபர்ட்
அறிவியல் பொது அறிவு வினா விடைகள் :
எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்
பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :
Bitterness - கசப்பு
Black pepper - மிளகு
Black mustard seed - கடுகு
Blame - பழிசொல்
Blanket - போர்வை
ஆரோக்கியம்
முட்டை
முட்டை, கலோரிகள் குறைவாக உள்ள உணவு. ஆனால், புரதச்சத்து, ஊட்டச்சத்து, நல்ல கொழுப்புகள் நிறைந்தது. காலையில் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளுக்குப் பதிலாக, முட்டையைச் சாப்பிடுபவர்களுக்கு 65% எடை குறைகிறது என்பது சமீபத்தில் ஓர் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. முட்டையில் இருக்கும் அதீதமான புரதம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்கும்; தசைகளுக்கு வலு சேர்க்கும்.
இன்றைய சிறப்புகள்
ஜனவரி 18
1896 – எக்ஸ்ரே இயந்திரம் முதற் தடவையாக எச். எல். சிமித் என்பவரால் காட்சிப்படுத்தப்பட்டது.
1911 – யூஜின் எலி என்பவர் தனது விமானத்தை சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பென்சில்வானியா என்ற கப்பலின் மீது இறக்கினார். கப்பலொன்றில் தரையிறக்கப்பட்ட முதலாவது விமானம் இதுவாகும்.
பிறந்த நாள்
1972 – வினோத் காம்ப்ளி, இந்திய கிரிக்கெட் வீரர்
நினைவு நாள்
1963 – ப. ஜீவானந்தம், தமிழகப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் (பி. 1906)
1996 – என். டி. ராமராவ், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆந்திராவின் 10வது முதலமைச்சர் (பி. 1923)
சிறப்பு நாட்கள்
-
நீதிக்கதை
பேராசை பெரும் நஷ்டம்
கந்தசாமி என்ற ஒரு ஏழை தன் மனைவியுடன் சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். வயதாகி விட்டதால் வேலைக்கும் செல்ல முடியாது போகவே, தங்களிடம் இருந்த பொருட்களை விற்று சாப்பிட வேண்டி ஏற்பட்டது. நாட்கள் செல்லச்செல்ல…அவர்கள் உண்ண உணவின்றி தவித்தனர்.
இந்நிலையில் அவன் ஆண்டவனை நோக்கி …’இறைவா எங்களை ஏன் இப்படி படைத்தாய்…இது இப்படியே நீடித்தால்….வறுமை தாங்காது…நாங்கள் இறப்பதை தவிர வேறு வழியில்லை’ என வேண்டினான்.
அவன் மீது இரக்கம் கொண்ட இறைவன் அவன் முன் தோன்றி அவனின் குறைகளைத்தீர்க்க….அவனுக்கு வாத்து ஒன்றை பரிசளித்தார். அந்த வாத்து தினம் ஒரு பொன் முட்டை இடும் என்றும்…அதை விற்று அன்றடம் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கி வாழ்நாளைக் சந்தோஷமாக கழிக்கலாம் என்றும் கூறி மறைந்தார்.
வாத்து தினம் ஒவ்வொரு பொன் முட்டையிட …அவர்கள் அதனை விற்று வாழ்கையை இனிதாகக் கழிந்தனர்.
ஒரு நாள் கந்தசாமியின் மனைவி தன் கணவனிடம் சென்று ‘தினம் தினம் இந்த வாத்து ஒவ்வொரு பொன் முட்டையே இடுகின்றது, இப்படியே இருந்தால் நாம் எப்படிப் பெரிய பணக்காரர் ஆவது என்று சொல்லி, இந்த வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் நாம் எடுத்தால் அதை விற்று பெரிய பணக்காரர் ஆகிவிடலாம் என்று ஒரு உபாயம் சொன்னாள். இதைக் கேட்ட கந்தசாமிக்கும் அது சரியெனப் தோன்றியது.
உடனே, கந்தசாமி அந்த வாத்தைப் பிடித்து வாத்தின் வயிற்றில் இருக்கும் எல்லா முட்டைகளையும் எடுக்க வாத்தை கொன்று அதன் வயிற்றைக் கிழித்தான். “ஆ” என்ன ஆச்சரியம் அந்த வாத்தின் வயிற்றில் ஒருமுட்டையுமே இருக்கவில்லை. அதன் வயிறில் மற்றைய வாத்துகள்போல் வெறும் குடலே இருந்தது கண்டு ஏங்கினர்.
தினம் ஒரு பொன் முட்டையிட்ட வாத்து இறந்து விட்டதால், வறுமை அவர்களை மீண்டும் சூழ்ந்துகொண்டது.
தங்கள் பேராசையே பெரும் தரித்திரத்தை தந்தது என மனம் வருந்தி ஏழ்மையாகவே வாழ்ந்து உண்ண உணவின்றி இறந்தனர்.
ஆசை அளவுக்கு மிஞ்சினா; அது பேராசை. பேராசை பெரு நஷ்டத்தையும் கஷ்டத்தையும் தரும்.
பேராசை பெரும் நஷ்டம்
இன்றைய முக்கிய செய்திகள்
18-01-2024
அரசுப் பள்ளிக்கு தனது ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய ஆயி என்கிற பூரணம் அம்மாளை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...
மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் கோடி இழப்பு...
கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை” வரும் 24-ஆம் நாள் திறந்து வைக்க மதுரைக்கு வருகை தருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்...
இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா: விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி அசத்தல்...
அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...
ஊழலுக்கு எதிராக போராடுவதும் ஊழல் செய்வோர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் அரசு முன்னுரிமை: பிரதமர் மோடி...
அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி விலகல்...
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதிக் கோட்பாட்டை வழிகாட்டியவர் வள்ளுவர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
Today's Headlines:
18-01-2024
Minister Udayanidhi Stalin visited Aayi alias Poornam Ammal, who donated her land worth Rs 7 crore to a government school, at her residence...
Mumbai stock market falls sharply: Investors lose Rs 4.5 lakh crore in a single day...
Chief Minister M.K.Stalin will visit Madurai to inaugurate the "Kalaignar Jallikattu Stadium" on the 24th...
Pragnananda becomes India's No. 1 chess player: beats Viswanathan Anand...
Consolation and financial assistance to families of those who drowned in Amaravati river: Chief Minister M.K.Stalin's announcement...
Government's priority in fighting corruption and taking action against corrupt people: PM Modi...
Indian-origin Vivek Ramasamy withdraws from US presidential election race...
Valluvar was the one who guided the social justice theory of procreation: Chief Minister M.K.Stalin...
பள்ளிக் கல்வி துறை - மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த பயிற்சி வழங்குதல் பற்றிய செய்தி வெளியீடு...
>>> செய்தி வெளியீடு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
மும்மொழிக் கொள்கை ஒருபோதும் உருவாக வாய்ப்பில்லை: தமிழ்நாடு அரசு...
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே தொடரும், மும்மொழிக் கொள்கை ஒருபோதும் வாய்ப்பில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பள்ளி மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவை ஊட்டுவதற்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது தமிழ்நாடு அரசு. அதன்படி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவில் பயிற்சியளிப்பதற்காக மைக்ரோசாஃப்ட் TEALS திட்டம் என்னும் ஒரு திட்டத்தை நாட்டிலேயே முதன்முறையாகக் கொண்டு வந்திருக்கிறது.
இது குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறுகையில் இது தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட திட்டம் என்று தெரிவித்திருந்தார். மேலும் வெகு விரைவில் முன்மொழிக் கொள்கையையும் தமிழ்நாடு அரசு கொண்டுவரும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அண்ணாமலை வரலாற்றை மாற்றவோ திரிக்கவோ முயலக்கூடாது. தமிழ்நாடு அரசு அவரது கூற்றை முற்றிலும் நிராகரிக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழ்நாட்டுக்கென்று வரலாறும் பாரம்பரியமும் உண்டு. 1920 ஜூலை 16ஆம் தேதி அன்றைய கிண்டி பொறியியல் கல்லூரியில் (இன்றைய அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த தமிழ் மன்ற விழாவில் தந்தை பெரியார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு சென்ற தந்தை பெரியாரிடம் கல்லூரிக்கு என புதிய கம்ப்யூட்டரை வாங்கி இருப்பதாக அங்கு இருக்கும் பேராசிரியர்கள் தெரிவிக்க அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பிக் கேட்டார் பெரியார் படியேறிச்செல்ல முடியாத முதுமையில் இருந்தாலும், முதல் மாடிக்கு தன்னை தூக்கிச் செல்லுமாறு வேண்டி, அங்கு சென்று அந்த கம்ப்யூட்டரைப் பார்த்தார். அப்போது அதற்கு கணினி என்கிற பெயர் வைக்கப்படவில்லை.
ஐ.பி.எம் கம்ப்யூட்டர் 1620 மாடல் கணினி அது. எந்த தேதியைச் சொன்னாலும் அதன் கிழமையை மிகச் சரியாக அக்கணினி சொல்லி விடும் என்கிற செய்தியை அங்குள்ள பேராசிரியர்கள் சொல்ல பெரியார் சில தேதிகளை சொல்லி, கிழமை சரியாக வருகிறதா என்று பார்த்தார். தன்னுடைய பிறந்த நாளையும் அவர் சொல்ல சரியாக சனிக்கிழமை என்று கூறியது அந்தக் கணினி. அவரிடம் இந்த கணினி பற்றி கூறியது அன்றைய பேராசிரியரும் பின்னாளில் துணைவேந்தரும் ஆன வா.செ.குழந்தைசாமி.
வருங்காலத்தில் ஒவ்வொருவரின் சட்டைப் பையிலும் ஒரு தகவல் தொடர்பு கருவி இருக்கும் என்று இன்றைய செல்போன் குறித்து அன்றே கணித்து சொன்னவர் பெரியார்.
இதன் தொடர்ச்சியாக 1997 லேயே அன்றைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி தொலைநோக்குப் பார்வையோடு சிந்தித்து தமிழ்நாட்டுக்கென தனியே தகவல் தொழில்நுட்பத்துறைக்கான கொள்கை ஒன்றை உருவாக்கி, தனியாக ஒரு துறையை உருவாக்கி அதற்கென ஒரு அமைச்சரை நியமித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை பற்றி நாட்டின் பிற மாநிலங்கள் இது குறித்து பெரிதும் விழிப்புணர்வு அடையாத காலகட்டத்திலேயே தொலைநோக்குப் பார்வையோடு கருணாநிதி சிந்தித்து இதற்கான திட்டங்களைத் திட்டினார். டைடல் பார்க் போன்ற கட்டமைப்புகளை மாநிலத்தில் உருவாக்கி உலக நிறுவனங்களின் முதலீட்டு மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார். இதன் மூலம் சென்னை ஒரு ஐ.டி ஹப் ஆக மாறியது இன்றைக்கு பழைய மகாபலிபுரம் சாலை முழுவதும் காணப்படும் ஐ.டி நிறுவனங்கள் அனைத்திற்கும் அன்றே வித்திட்டது அன்று கருணாநிதி உருவாக்கிய தனி கொள்கைதான்.
இதையடுத்து அரசுத் துறைகளை கணினிமயமாக்கியது கருணாநிதி செய்த தகவல் தொழில்நுட்பப் புரட்சி. E-governance எனப்படும் மின் நிர்வாக முறையை முதன்முதலில் திருவாரூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தினார். அதன் தொடர்ச்சியாகவே குக்கிராமங்கள் தொடங்கி தலைநகரம் வரை படிப்படியாக ஒவ்வொரு துறையும் கணினி மயமாகி ஊழியர்களின் பணிச்சுமையை குறைத்தது. தகவல் சேமிப்பும் எளிதாகி இருக்கிறது. இந்த தொடர் ஓட்டத்தின் தொடர்ச்சியாக செயற்கை நுண்ணறிவுக்கென தனியே ஒரு கொள்கை தமிழ்நாட்டில் 2020ல் உருவாக்கப்பட்டது. தேசிய கல்விக் கொள்கை என்கிற ஒன்று உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவையெல்லாம் நடந்தன.
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் அதில் மாநிலங்கள் அடைய வேண்டிய இலக்குகள் என்று சொல்லப்பட்டிருக்கும் பலவற்றை தமிழ்நாடு ஏற்கனவே அடைந்துவிட்டது. எடுத்துக்காட்டாக தேசிய அளவில் மாணவர் சேர்க்கை விகிதத்தை 50 % ஆக ஆக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது.
ஆனால் அகில இந்திய மேல்நிலைக் கல்வி ஆய்வறிக்கையின் படி (All India Survey of Higher Education (AISHE) தமிழ்நாட்டின் மாணவர் சேர்க்கை விகிதம் 51.4 சதிவிகிதத்தை 2019-20 கல்வியாண்டிலேயே எட்டிவிட்டது. 2035 ஆம் ஆண்டுக்குள் 50 சதவிகிதத்தை எட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்திருக்கிறது தேசிய கல்விக் கொள்கை. ஆனால் தமிழ்நாடு 100 சதவீதத்தையே 2035ல் எட்டிவிடும்.
தமிழ்நாடு அரசு செய்ததை, செய்துகொண்டிருப்பதை தேசிய கல்விக் கொள்கையில் இணைத்துவிட்டு தேசிய கல்விக் கொள்கையின்படி தமிழ்நாடு செயல்படுகிறது என்று சொல்வது நகைப்புக்குரியது. குறிப்பாக தொழில்நுட்பம் சார்ந்து தமிழ்நாட்டுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை . நாட்டின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு எப்பொழுதும் தொழில்நுட்பத் துறையில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னோடி மாநிலமாகவே திகழ்ந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.
முன்னோடி மாநிலமான தமிழ்நாட்டில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்றவற்றில் வருங்காலத்தில் மிகத் தீவிரமாக பயிற்சிகள் அளிக்கப்படும். ஏனெனில் செயற்கை நுண்ணறிவை கையிலெடுக்கும் மாநிலமே இன்னும் பத்தாண்டுகளில் முன்னணி மாநிலமாக இருக்கப்போகிறது.
பெரியார் காட்டிய பாதையில் தமிழ்நாடு அரசு முற்போக்குப் பாதையில் செல்லும் அரசாகவே செயல்படும். அண்ணாமலை பகல் கனவு காண்பது போல மும்மொழிக் கொள்கை ஒருபோதும் தமிழ்நாட்டில் உருவாக்க வாய்ப்பு இல்லை; இருமொழிக் கொள்கையே தொடரும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புதிய பரிமாணம் - ரேபிட் நிறுவனத்தின் புதிய கருவி...
Pocket Companion & Future of Human Machine Interface
அமெரிக்காவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான ரேபிட் இன்க். (Rabbit inc.) லாஸ் வேகாசில் நடந்த சிஇஎஸ் - 2024 (CES - 2024) நிகழ்ச்சியில் தனது புதிய செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி தன் போட்டியாளர்களை மிரளவைத்துள்ளது.
கையடக்க கருவி ஒன்றினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள நிறுவனம் அதன் பயன்பாடுகளைக் காணொலி ஒன்றின் மூலம் விளக்கியுள்ளது.
இந்தக் கையடக்க கருவியின் மூலம் குரலைக் கொண்டு பல வேலைகளைச் செய்யலாம். ஏற்கனவே இதே வசதியை அறிமுகம் செய்த மற்ற நிறுவனங்கள், வெறும் பாடல்கள் கேட்பதற்கும், கடிகாரத்தில் அலாரம் வைப்பதற்குமே பயன்பட்டு வந்த நிலையில், இந்த புதிய ரேபிட், அதையும் தாண்டி பல வேலைகளைச் செய்கிறது.
அதாவது, இந்தக் குட்டி கருவியிடம் நீங்கள் 'எனக்கு அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு செல்ல ஒரு கார் வேண்டும், அப்படியே வீட்டிற்கு ஒரு பிரியாணி ஆர்டர் செய்துவிடு. அதோடு நான் விளையாட வரவில்லை என என் நண்பர்களிடம் சொல்லிவிடு' எனச் சொன்னால் போதும்,
உங்களது ஊபர் (uber) கணக்கிற்குள் சென்று உங்கள் முகவரிக்கு ஒரு காரை அதுவே பதிவு செய்து அனுப்பிவிடும், உங்களுக்கு விருப்பமான கடையில் பிரியாணி ஆர்டர் செய்து வீட்டு முகவரிக்கு அனுப்பிவிடும். உங்களை விளையாட அழைத்த அனைத்து நண்பர்களுக்கும் நீங்கள் வரமாட்டீர்கள் என குறுஞ்செய்தியும் அனுப்பிவிடும்.
வெறும் குரல்வழிக் கட்டுப்பாடு மட்டுமல்லாமல், இதிலுள்ள 360 கோணங்களில் திரும்பக்கூடிய கேமரா மூலம் பார்க்கவும் செய்கிறது. இதிலுள்ள கேமராவை ஆன் செய்து, சமையலறையில் காய்கறிக்கூடையைக் காட்டி இதை வைத்து என்ன சமையல் செய்யலாம் எனக் கேட்டவுடன், இருக்கும் பொருள்களை வைத்து என்ன செய்யலாம் என்ற சமையல் குறிப்புகளையும் வழங்குகிறது.
அது மட்டுமல்லாமல் இதற்கு புதிய வேலைகளையும் கற்றுக்கொடுக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.16,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜும் அளிக்கப்படுகிறது. தொடுதிரை, ஸ்பீக்கர்ஸ், கேமரா மற்றும் 1000mAh பேட்டரி திறனையும் கொண்டுள்ளது இந்த ரேபிட். புளூடூத் மற்றும் வைபை வசதிகளும், ஒரு சிம்கார்ட் பொருத்தும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.
விற்பனை அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே முன்பதிவுகள் குவிந்துவருவதாக தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு ஜப்பானிய இக்கிகை புத்தகம் சொல்லும் பத்து விதிகள்...
ஹெக்டர் கார்ஸியா மற்றும் பிரான்சிஸ் மிராலஸ் எழுதிய 'இக்கிகை; நீண்ட மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஜப்பானிய ரகசியம்’ என்ற நூல் மிகப் பிரபலமான ஒன்றாகும். இக்கிகை (Ikigai) என்பதற்கு எப்போதும் பிசியாக இருப்பதற்கான மகிழ்ச்சி என்று பொருள்.
இது மனித வாழ்வின் முக்கிய குறிக்கோளை சுற்றி அமைகிறது. அவரவருக்கு பொருத்தமான இக்கிகையை தேடிக்கொள்வதே வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக்கும் என்பதே இந்தப் புத்தகத்தின் சாராம்சம்.
'எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதே நூறு வயது வாழ்வதற்கான சூட்சுமம்' என்று ஒரு ஜப்பானிய பழமொழி சொல்கிறது. மனிதர்கள் எப்போதும் இக்கிகையில் தங்களை ஆழ்த்திக்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.
இக்கிகையின் 10 முக்கியமான விதிகள்...
1. எப்போதும் சுறுசுறுப்பாக இரு:
ஓய்வு பெறாதே! இந்த உலகில் 80லிருந்து 90 வயது வரை நீண்ட காலம் வாழும் மக்கள் தங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெறுவதில்லை. ஜெய்னி பென்ஸ் என்கிற நூறு வயது பெண்மணி ஒஹியாவில் உள்ள ஒரு கலைப் பொருள்கள் கடையில் வேலை செய்கிறார். தன்னுடைய நூறாவது பிறந்த நாள் விருப்பமாக அவர் தெரிவித்தது என்னவென்றால் வேலை செய்துகொண்டே இருக்க வேண்டும் என்பதுதான்.
2. எதையும் லேசாக எடுத்துக்கொள்ளுதல்:
பரபரவென்று ஓடிக்கொண்டு எதையும் அவசர அவசரமாக செய்வது ஆரோக்கியக் கேடு. அது மனதையும் பாதிக்கும். எனவே, நிதானமாக எந்த செயலையும் செய்ய வேண்டும். அது உங்கள் வாழ்க்கைக்கு நிறைய அர்த்தத்தை கொடுக்கும் என்பதே இதன் இரண்டாவது விதி
3. வயிறு நிறைய உண்ணாதீர்கள்:
எப்போதும் தட்டை முழுக்க முழுக்க உணவால் நிரப்ப வேண்டாம். எண்பது சதவீதம் மட்டுமே அதில் உணவு இருந்தால் போதும். உணவிற்குப்பின் அதிகமாக உண்ணும் ஒரு சிறு தீனி கூட நல்லதல்ல. அது குறைந்த அளவு நேரத்திற்கு சந்தோஷத்தை கொடுக்கும். ஆனால், அதை உண்ணாமல் இருந்தால் வாழ்க்கையை நீட்டிக்கும் என்கிறார்கள்.
4. நல்ல நண்பர்கள் சூழ இருத்தல்:
நல்ல நட்பு வட்டத்தை பெற்றிருப்பது மகிழ்ச்சியையும் ஆயுளையும் நீட்டிக்கும் என்று ஹார்ட்வேர்ட் ஆராய்ச்சி சொல்கிறது. நூறு வயதான ஒக்கினாவா மக்கள் தங்கள் சொந்த கிராமத்தில் இருக்கும் நட்பு மற்றும் சுற்றத்தினரோடு மகிழ்ச்சியான விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்கள்.
5. உடற்பயிற்சி:
நீண்ட நாள் வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியம். மிகச் சிரமப்பட்டு செய்யும் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டியதில்லை. ஆனால், மிகவும் வயதான ஜப்பானியர்கள் கூட ஐந்து நிமிடத்தில் செய்யும் ரேடியோ டெய்சோ என்கிற உடற்பயிற்சியை தினமும் செய்கிறார்கள்.
6. புன்னகை:
தினந்தோறும் நாம் பார்த்து ரசிக்கும் சாதாரண மக்கள் மற்றும் நம்மை சுற்றி உள்ளவர்களைப் பார்த்து புன்னகை புரிவது ஒரு மிகச்சிறந்த ஆன்ம பலத்தை தருகிறது.
7. இயற்கையோடு தொடர்பில் இருப்பது:
ஒரு பெரிய நகரத்தில் வசித்தாலும் தினமும் சிறிது நேரமாவது திறந்தவெளியில் சுத்தமான காற்றை சுவாசித்தபடி நடங்கள். இயற்கையோடு செலவு செய்யும் நேரம் உங்களுடைய ஆற்றலையும் ஞாபக சக்தியையும் அதிகரிக்கும். செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.
8. நன்றி உணர்வு:
உங்களது அன்புக் குடும்பத்தினருக்கும் அற்புதமான நண்பர்களுக்கும், உங்களுக்கும் எப்போதும் நன்றி சொல்லுங்கள். நன்றி உணர்வுடன் இருங்கள் என்கிறது எட்டாவது விதி.
9. இந்த கணத்தில் வாழ்வது:
பழைய முடிந்துபோன கடந்த கால வாழ்க்கையைப் பற்றி புலம்பாமல் வருங்கால அச்சங்களையும் புறந்தள்ளி இன்றைய கணத்தில் வாழுங்கள். இன்றைய நாளை மிகச் சிறப்பாக வாழுங்கள்.
10. இக்கிகையை பின்பற்றுங்கள்:
உங்களுடைய லட்சியம் என்ன என்பதை கண்டறிந்து அதை நோக்கி செயல்படுங்கள். இக்கிகையை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்டு நிறைய சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...