கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.01.2024 - School Morning Prayer Activities...


திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: கேள்வி.


குறள் 411:


செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்து ளெல்லாந் தலை.


விளக்கம்:


செழுமையான கருத்துகளைச் செவிவழியாகப் பெறும் செல்வமே எல்லாச் செல்வங்களுக்கும் தலையாய செல்வமாகும்




பழமொழி : 


Do not rob peter to pay paul.

கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.


பொன்மொழி:


“If you can dream it, you can do it.” ~ Walt Disney


உங்களால் கனவு காணமுடியும் என்றால் கண்ட கனவை நனவாக்கவும் உங்களால் முடியும் - வால்ட் டிஸ்னி 



அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்

குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு

சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்

கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு

பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்

நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயன்படும் இரும்பின் வகை - தேனிரும்பு



ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Bug - பூச்சி

Building - கட்டடம் 

Bundle - கட்டு 

Burn - எரி 

Burst - வெடி 


ஆரோக்கியம்


ரெட் ஸ்னைப்பர் என்ற மீனில் சிறப்பான சத்துகள் இருந்தாலும், அதில் அபாயகரமான நச்சுத்தன்மையும் உள்ளது. இதை சரியாக சுத்தம் செய்யாவிட்டால் சத்துக்கு பதிலாக நச்சை உட்கொள்ள நேரிடும். விஞ்ஞானிகள் இதற்கு கொடுத்திருக்கும் ஊட்டச்சத்து மதிப்பெண் 69..



இன்றைய சிறப்புகள்


ஜனவரி 23


1957 – சென்னை மாகாணத்தில் தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.



பிறந்த நாள் 

1897 – சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியல்வாதி (இ. 1945)



நினைவு நாள் 

-


சிறப்பு நாட்கள்

சுபாசு சந்திர போசு பிறந்தநாள் (ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்காளம்)





நீதிக்கதை


 நிதானம் பிரதானம்


ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.


ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்டினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.


இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.


வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள்.


என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது


அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.


அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.


எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே


செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.


 

இன்றைய முக்கிய செய்திகள் 


23-01-2024 


அலங்காநல்லூர் அருகே உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் 24ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி: 9,312 காளைகள், 3,669 வீரர்கள் பதிவு...


தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரை கடல் பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை இந்திய அரசு மேற்கொள்ள திட்டம்...


புதுச்சேரி ஆட்டுப்பட்டி பகுதியில் 3 அடுக்குமாடி கட்டடம் சரிந்து விழுந்தது...


சூரிய ஒளி மின்சாரம் பெற நாட்டில் ஒரு கோடி வீடுகளில் சோலார் மேற்கூரைகள் அமைக்கப்படும்: பிரதமர் மோடி...


அயோத்தியில் ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை பூஜை நிறைவு: பால ராமருக்கு முதல் பூஜையை செய்தார் பிரதமர் மோடி...


டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் அமெரிக்காவை விஞ்சியது இந்தியா:  அமைச்சர் ஜெய்சங்கர்...



Today's Headlines:

23-01-2024


Jallikattu competition on 24th at Kalaignar Jallikattu Ground near Alanganallur: 9,312 bulls, 3,669 players registered... 


Government of India plans to carry out feasibility study for construction of sea bridge from Dhanushkodi to Thalaimannar... 


3 floor building collapsed in Attupatti area of ​​Puducherry...


Solar roofs will be installed on one crore houses in the country to get solar power: PM Modi... 


Prana Pradhista pooja for Rama statue completed in Ayodhya: Prime Minister Modi performed the first pooja to Bala Rama... 


India surpasses US in digital payments: Minister Jaishankar...

NMMS தேர்வு - Hall Ticket Download செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...

 

2023 - 2024ஆம் கல்வியாண்டு - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS) - தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தரவிறக்கம் செய்தல் - அரசுத் தேர்வுகள் இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...


8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS HALL TICKET வரும் 24.1.2024 புதன்கிழமை பிற்பகல் முதல் DOWNLOAD செய்து கொள்ளலாம்...



>>> NMMS தேர்வு - Hall Ticket Download செய்தல் - இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 22-01-2024...


கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை தனியார் நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை...


கல்லூரி கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ரூ.75000 வரை சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை நிறுவனம் வழங்கும் கல்வி உதவித்தொகை...



>>> விவரங்கள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வற்றாத மற்றும் வற்றும் அதிசய கிணறுகள்...

 அதிசய கிணறு 


சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா என்ற இடம் செங்கடலில் இருந்து 80 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது . இங்குள்ள பாலைவனப் பகுதியில்  அமைந்துள்ளது ஜம் ஜம் என்ற அதிசய கிணறு.  பாலைவன தேசத்தில் எந்த நீர் நிலைகளும் இல்லாத இடத்தில் அமைந்துள்ள இந்த கிணற்றிலிருந்து தினசரி எடுக்கும் தண்ணீரானது லட்சக்கணக்கான மக்களுக்கு தினமும் வழங்கப்படுகிறது.


வற்றாத ஜம்ஜம் ஊற்று


 எந்த ஊற்றாக இருந்தாலும் தோண்டிய காலத்திலிருந்து ஒரு சில ஆண்டுகளிலே வற்றிப் போக வாய்ப்பு இருக்கும் சூழலில் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக  உருவான ஒரு கிணறு இன்று வரை தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை கொடுப்பது மிகப்பெரிய அதிசயம். தினமும் வினாடிக்கு 8000 லிட்டர் தண்ணீரை ராட்சத மோட்டார் கொண்டு உறிஞ்சி எடுக்கப்பட்டு மக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.  692.2 மில்லியன் லிட்டர்  நீரை தினமும் வெளியேற்றிய பிறகும் அந்த கிணற்றின் தண்ணீர் வற்றாமல் அதே அளவு இருப்பது அதிசயத்திலும் அதிசயம்.


சுகாதார நடவடிக்கை


 கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் சுகாதார நடவடிக்கையாக கிணற்றை சுத்தப்படுத்த வேண்டும் என்று அரேபிய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட சவுதி அரசு 8  அதிநவீன ராட்சச பம்பு செட்டுகளை வைத்து நீரை வெளியேற்றியது. ஆனாலும் நீரின் அளவு குறையாமல் ஏற்கனவே இருந்த அளவை விட ஒரு பங்கு கூடுதலாக நிரம்பி இருந்தது என்பது பெரும் ஆச்சரியமாக உள்ளது. எது எப்படி இருந்தாலும் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ஒரு கிணறு இன்றும் பயன்பாட்டில் உள்ளது என்பது வியப்பின் உச்சமாக இருக்கின்றது. வற்றாத இந்த கிணறு எப்படி ஒரு அதிசயமோ அதே போல் எவ்வளவு தண்ணீரை அந்த கிணற்றில் ஊற்றினாலும் அத்தனையும் உறிஞ்சி உள்ளே இழுத்து உடனடியாக வற்றிப் போகும்  ஒரு அதிசய கிணறு ஒன்றும்  உள்ளது. 


வற்றும் அதிசய கிணறு


இந்த கிணறு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் அமைந்துள்ளது.  வெள்ளக் காலங்களில் உபரி நீரை இந்த அதிசய கிணற்றில் விடுகின்றனர் வினாடிக்கு 3000 கன அடி தண்ணீரை இந்த அதிசய கிணற்றுக்குள் விட்டாலும் உறிஞ்சி உள்ளே இழுத்து வற்றிப் போகிறது. இந்த அதிசய கிணறு மூலம் சுற்றுப் பகுதியில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நிலப்பரப்பில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதால் இந்த பகுதி மக்கள் இந்த கிணற்றை பொக்கிஷமாக கருதி மகிழ்ச்சி அடைகின்றனர். அப்படி என்ன அதிசயம் இந்த கிணற்றுக்குள் இருக்கிறது என்ற ஆய்வு சமீபத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பெருமழை பெய்து பெருவெள்ளம் வந்த சமயத்தில் கூட இந்த அதிசய கிணறு நிரம்ப வில்லை என்றதும் சென்னை ஐஐடி   அறிவியல் ஆய்வாளர்கள் இங்கு வந்து இந்த கிணற்றை ஆய்வு செய்தனர். கிணற்றின் கீழ்  சுண்ணாம்பு பாறைகள் உள்ளது என்றும் அது 50 கிலோ மீட்டர் தூரம் வரை பரவியுள்ளது என்பதனையும் கண்டறிந்துள்ளனர். அதுதான் மிக விரைவாக நீரை உறிஞ்சுவதற்கு காரணமாக உள்ளது என்றும்  விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தி கூறியுள்ளனர். வற்றும் அதிசய கிணறுக்கான காரணம் கிடைத்துவிட்டது. ஆனால் வற்றாத கிணற்றுக்குள் இருக்கும் அதிசயம்  என்னவென்று இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த பிரபஞ்சத்தின்  இது போன்ற நிறைய அதிசயங்களை தன்னகத்தே புதைத்து வைத்துள்ளது.




ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் - RRB - விரிவான மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு - Railway Recruitment Board - RRB - Detailed Centralised Employment Notice...


ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் - RRB - விரிவான மையப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பு - Railway Recruitment Board - RRB - Detailed Centralised Employment Notice... 



>>> Click Here to Download...


சிவில் நீதிபதி வாய்மொழித் தேர்வு 29.01.24 முதல் 10.02.24 வரை 11 நாட்களுக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும்...


சிவில் நீதிபதி வாய்மொழித் தேர்வு - TNPSC அறிக்கை...



சிவில் நீதிபதி வாய்மொழித் தேர்வு 29.01.24 முதல் 10.02.24 வரை 11 நாட்களுக்கு TNPSC அலுவலகத்தில் நடைபெறும் - Civil inJudge OralTest to be held from 29.01.24 to 10.02.24 (for 11 days) at the TNPSC office...



>>> TNPSC தேர்வு முடிவுகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தின் (26.01.2024) கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the State Project Director regarding on incorporation of School Management Committee meeting resolutions as meeting items of Gram Sabha meeting on Republic Day - 26.01.2024)...

 


>>> பள்ளி மேலாண்மை குழு கூட்டத் தீர்மானங்களை குடியரசு தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தின் (26.01.2024) கூட்டப் பொருளாக இணைத்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the State Project Director regarding on incorporation of School Management Committee meeting resolutions as meeting items of Gram Sabha meeting on Republic Day - 26.01.2024)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

UPS, NPS & CPS - Comparison

Comparison of UPS vs NPS vs CPS in Tamilnadu  UPS - Unified Pension Scheme Effect from 01.04.2025 for Central Govt Employees >>> Cl...