கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாட்டில், 9 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...

 

 தமிழ்நாட்டில், 9 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு...


சிதம்பரம் நகராட்சி ஆணையர் பிரபாகரன், திருவாரூர் நகராட்சிக்கு மாற்றம்.

திருவாரூர் நகராட்சி ஆணையர் மல்லிகா, சிதம்பரம் நகராட்சிக்கு மாற்றம்.

பல்லடம் நகராட்சி ஆணையர் முத்துசாமி, ராசிபுரம் நகராட்சிக்கு மாற்றம்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி ஆணையர் பிரான்சிஸ் சேவியர், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு மாற்றம்.

பழனி நகராட்சி ஆணையர் பாலமுருகன், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு மாற்றம்.

உடுமலைப்பேட்டை நகராட்சி ஆணையர் டெரன்ஸ் லியான், பழனி நகராட்சிக்கு மாற்றம்.

ஒட்டன்சத்திரம் நகராட்சி ஆணையர் கணேஷ், மேலூர் நகராட்சிக்கு மாற்றம்.

மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்கு மாற்றம்.

அருப்புக்கோட்டை நகராட்சி ஆணையர் அசோக் குமார், திருமங்கலம் நகராட்சிக்கு மாற்றம்.


1-5ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளி அளவில் 27/2/2024 முதல் 29/2/2024வரை பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்துதல் குறித்த தகவல்கள்...

 


அனைவருக்கும் வணக்கம்.


அனைத்து வகையான *அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்* பள்ளிகளில் பயிலும் *1-5ஆம் வகுப்பு* மாணவ மாணவிகளுக்கு *பள்ளி அளவில் 27/2/2024 முதல் 29/2/2024வரை*  மதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் திட்ட இயக்குனர்,பள்ளி கல்வி இயக்குனர் மற்றும்தொடக்க கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் உள்ளவாறு *பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகள்* நடத்தப்பட வேண்டும்.


அதற்கு முன்னர் அந்த *போட்டிகளில் பங்கேற்கும் மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை emis ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* என்று முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


எனவே *அரசு துவக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்* பள்ளிகளின் *தலைமை ஆசிரியர்கள்* போட்டிகளில் பங்கேற்கும் 1-5 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் பெயர் பட்டியலை தயார் நிலையில் வைத்திருந்து *தகவல் அளிக்கப்பட்டவுடன் emis ல் பதிவேற்றம் செய்ய வேண்டும்* என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


*வட்டார கல்வி அலுவலர்கள் , வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் emis ஒருங்கிணைப்பாளர்கள்* அனைத்து அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் 1-5 வகுப்பு மாணவ மாணவிகள் *பண்பாடு மற்றும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க அதிக எண்ணிக்கையில் emis ல் பதிவேற்றம் செய்யப்படுவதை* உறுதி செய்ய வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.


நன்றி



>>>  1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்" கொண்டாட உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE & SPD Joint Proceedings...


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு...


 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிநிரவல்: பள்ளிக்கல்வித் துறை வழிமுறைகள் வெளியீடு...


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:


கூட்டு மேலாண்மை நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிதி உதவிபெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் உபரியாக பணிபுரியும் ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அவர்களை அந்த நிர்வாகக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள பிற பள்ளிகளில் தகுந்த காலிப் பணியிடங்களில் பணி நிரவல் செய்ய வேண்டும். ஆனால், கூட்டுமேலாண்மை பள்ளிகளால் அதே நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டு வரும் பிற பள்ளிகளில் தகுந்த காலிப்பணியிடம் இருந்தும் பணிநிரவல் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.


அவ்வாறு பணிநிரவல் செய்ய தவறிய நிலையில் உரிய விதிகளை பின்பற்றி அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மாவட்டத்துக்குள் பள்ளிக் கல்வி இயக்குநரால் பணி நிரவல் செய்து ஆணை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், சிறுபான்மை பள்ளி நிர்வாகம் தங்களிடம் உள்ள அரசுமானியம் பெறும் நிரப்ப தகுந்தகாலியிடங்களுக்கு பிற பள்ளிகளில் இருந்து உபரி ஆசிரியர்களை ஈர்த்துக் கொள்ள ஒப்புதல் தரப்பட்டுள்ளது. மேலும், அத்தகைய கோரிக்கைகளுக்கு உடனே பணிநிரவல் ஆணை வழங்க வேண்டும்.


அதன்படி கூட்டு மேலாண்மை பள்ளி மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிநிரவல் முடிந்த பின்னர், அதில் எஞ்சிய உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்யும் நடவடிக்கையானது எமிஸ் வலைதளம் வழியாக மேற்கொள்ளப்பட உள்ளது.


இந்த கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், பணிநிரவலாகும் உபரி ஆசிரியர்களை இந்த கல்வியாண்டின் இறுதி வேலை நாளில் புதிய பள்ளியில் பொறுப்பேற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



>>>  அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல் செய்தல் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்" கொண்டாட உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE & SPD Joint Proceedings...

 


கலைத் திருவிழா - 1 to 5 மாணவர்களுக்கு பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம் - Sports and Cultural Week- கொண்டாடுதல் -  தொடர்பாக - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்...


Block level மார்ச் 5,6,7 போட்டிகள்...


1- 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு "பண்பாடு மற்றும் விளையாட்டு வாரம்" கொண்டாட உத்தரவு - வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE & SPD Joint Proceedings...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்குநர் & தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


எண்ணும் எழுத்தும் - வளரறி மதிப்பீடு (ஆ) - மதிப்பீடு- 1 மேற்கொள்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு...

 


எண்ணும் எழுத்தும் - ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வளரறி மதிப்பீடு (ஆ) - மதிப்பீடு- 1(Assessment-1) மேற்கொள்வதற்கான காலக்கெடு வருகின்ற 26-02-2024 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது - Ennum Ezhuthum - First to Third Class Formative Assessment (b) - The deadline for conducting Assessment-1 has been extended upto 26-02-2024...



You can logout and login the app once and do the evaluation...


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமுயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 339, நாள் 21-02-2024...


அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் அலுவலர்கள், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் முழுமுயற்சியோடு பணியாற்றிட வேண்டுமென மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வேண்டுகோள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 339, நாள் 21-02-2024...



>>> தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண்: 339, நாள் 21-02-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...