கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடி, மின்னலை அறிய 'தாமினி' செயலி; 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம்...



இடி, மின்னலை அறிய 'தாமினி' செயலி - Damini - Lightning Alert App ; 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம்...


இடி, மின்னல் பற்றி அறிந்து கொள்ள, மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் 'தாமினி' மொபைல் செயலி மக்கள் இடையே பிரபலமாகியுள்ளது.


மின்னலின் சரியான இடம் மற்றும் இருக்கும் இடத்தின் அடிப்படையில், 40 சதுர கிலோமீட்டர் சுற்றளவில் மின்னல் வர வாய்ப்பு உள்ள பகுதிகளும், அதன் அசைவு மற்றும் திசையை இந்த செயலியில் அறியலாம்.


இருக்கும் இடத்தின், 20 கிலோமீட்டர் சுற்றளவில் மின்னலுக்கு வாய்ப்பிருந்தால், 45 நிமிடங்களுக்கு முன், இந்த செயலி எச்சரிக்கை செய்யும்.


இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் இந்த செயலியை வெளியிட்டு உள்ளன. புனேயில் உள்ள ஐ.ஐ.டி.எம்., மத்திய செயலாக்க அலகு உடன் இணைத்து, ஜி.பி.எஸ்., உதவியுடன், நாட்டில் 48க்கும் அதிகமான மையங்களில் உள்ள 'லைட்டனிங் லொகேஷன்' பயன்படுத்தி இந்த செயலி செயல்படுகிறது.


கடந்த, 2018 நவம்பர் மாதம் இச்செயலி வெளியிடப்பட்டு இருந்தாலும், மாநில மொழிகள் சேர்க்கப்பட்டதால் பயன்பாடு அதிகரித்துள்ளது. இந்த செயலியை, இதுவரை 10 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர். மின்னல் எச்சரிக்கையை வழங்கும் பல தனிப்பட்ட மொபைல் செயலிகள் தற்போதுள்ளன.


அதில் சில உலகளவில் இயங்கும், 2015ல் வெளியான 'லைட்டனிங் அலாரம் வெதர்பிளாசா' - lightening alarm weather plaza, செயலியில், 10 லட்சம் பயனர்கள் உள்ளனர். கடந்த 2012ல் வெளியான 'வெதர் அண்ட் ரேடார்- ஸ்ட்ரோம் அலெர்ட்ஸ் - weather and radar strom alerts, 100 மில்லியன் பயனர்கள் உள்ளனர். 2016ல் வெளியான 'தண்டர் ஸ்டோம் வெதர்வானிங்' 

 thunder strom whether warning, ஒரு லட்சம் பயனர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இரு கைகளை இழந்த வாலிபருக்கு முதன்முறையாக கார் ஓட்டுனர் உரிமம்...



இரு கைகளை இழந்த வாலிபருக்கு முதன்முறையாக கார் ஓட்டுனர் உரிமம்...


சென்னை: 

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத தான்சென் என்ற வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்.


சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென், 31. இவர், 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார்.


 தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார்.

தற்போது திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார். 


பிறரை சார்ந்து வாழ விரும்பாத இவர், ஸ்ரீவாரி சங்கர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் உதவியுடன், கார் ஓட்ட பழகி உள்ளார். தன்னம்பிக்கையுடன் ஓட்டுனர் உரிமம் பெற விண்ணப்பித்தார்.


அறிவுறுத்தல்

வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சோதனையின் போது, இவர் சில நடைமுறை சிக்கல்களை சந்திப்பதை உணர்ந்து, சென்னை கே.கே., நகரில் உள்ள புனர்வாழ்வு மருத்துவமனையின் உதவியை நாடும்படி பரிந்துரைத்தனர்.


அங்கு, காரின் வடிவமைப்பை இவருக்கு ஏற்றாற்போல மாற்றவும், தானியங்கி, 'கியர்' முறையை கையாளும்படியும் அறிவுறுத்தப்பட்டது.


மேலும், அம்மருத்துவமனையின் உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் திருநாவுக்கரசு, டாக்டர்கள் வளவன், அப்துல் உள்ளிட்டோரும் வழிகாட்டினர். 


பின், ரெட்டேரி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்று, தமிழகத்திலேயே முதல்முறையாகவும், நாட்டிலேயே மூன்றாவது நபராகவும் கைகள் இல்லாத கார் ஓட்டுனர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


இதுகுறித்து, உடலியல் மருத்துவம் மற்றும் மறுவாழ்வியல் துறை இயக்குனர் பி.திருநாவுக்கரசு கூறியதாவது:


மேலும், தானாக காரின் கதவை திறப்பது, 'சீட் பெல்ட்' அணிவது, அவசர நேரத்தில் 'பிரேக்' பிடிப்பது, 'ஹாரன்' அடிப்பது போன்றவற்றை மூன்று மாதங்களாக கண்காணித்து, சில பயிற்சிகளையும் வழங்கினோம். 


அவரது காரின் வடிவமைப்பிலும் சில மாற்றங்களுக்கு பரிந்துரைத்தோம்.


அதில், அவர் தேர்ச்சி பெற்று, எவ்வித இடர்ப்பாடும் இல்லாமல், சுயமாக கார் ஓட்டினார். 


எனவே, ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான பரிந்துரை அளித்தோம். தற்போது, ஓட்டுனர் உரிமம் பெற்றுள்ள அவர், மற்றவர்களை போல இயல்பாகவே, அனைத்து வகையிலும் கார் ஓட்டுகிறார்.


ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்...



ராமேஸ்வரம் - திருச்சி ரயிலில் இனி திருவாரூர் வரை தொடர்ந்து செல்லலாம்...


16850 / ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் திருச்சி சென்று, அங்கிருந்து 15 நிமிடங்களில் 06876/ திருச்சி - திருவாரூர் வண்டியாக புறப்படும்... 


அதே போல 06871/ திருச்சி - திருவாரூர் ரயில் திருச்சி வந்து, 5 நிமிடங்களில் திருச்சி - ராமேஸ்வரம் வண்டியாக புறப்படும்...


திருவாரூரில் இருந்து புதுக்கோட்டை பயணிக்க


🚂06871 / திருவாரூர் - திருச்சி ரயில் (தினசரி)

🚇திருவாரூர் - 04:45 am

🚇கொரடச்சேரி - 05:00 am

🚇நீடாமங்கலம் - 05:11 am

🚇தஞ்சாவூர் - 05:45 am

🚇பூதலூர் - 06:04 am

🚇அய்யனாபுரம் - 06:10 am 

🚇திருவெறும்பூர் - 06:29 am

🚇பொன்மலை - 06:42 am

🚇திருச்சி - 07:00 am


🚂16849 / திருச்சி - ராமேஸ்வரம் வண்டி (தினசரி)

🚇திருச்சி - 07:05 am

🚇புதுக்கோட்டை - 07:53 am


✅திருவாரூர் - புதுக்கோட்டை -₹70/-.

✅நீடாமங்கலம் - புதுக்கோட்டை - ₹60/-

✅பூதலூர் - புதுக்கோட்டை -₹50/-

✅திருவெறும்பூர் - புதுக்கோட்டை - ₹40/-

✅பொன்மலை - புதுக்கோட்டை ₹35/-


புதுக்கோட்டையில் இருந்து திருவாரூர் செல்வதற்கு


🚂16850/ராமேஸ்வரம் - திருச்சி விரைவு ரயில் (தினசரி)

🚇புதுக்கோட்டை - 06:33 pm மாலை 

🚇திருச்சி - 08:10 pm இரவு செல்லும்


🚂06876/திருச்சி - திருவாரூர் ரயில்(தினசரி)

🚇திருச்சி - 08:25 pm இரவு

🚇பொன்மலை - 08:33 pm

🚇திருவெறும்பூர் - 08:45 pm

🚇அய்யனாபுரம் - 09:05  pm 

🚇பூதலூர் - 09:11 pm

🚇தஞ்சாவூர் - 09:40 pm

🚇நீடாமங்கலம் - 10:20 pm

🚇கொரடாச்சேரி - 10:31 pm

🚇திருவாரூர் - 11:05 pm இரவு செல்லும்


கட்டணம்:

✅புதுக்கோட்டை -திருவாரூர்  -₹70/-.

✅ புதுக்கோட்டை -நீடாமங்கலம் - ₹60/-

✅புதுக்கோட்டை- பூதலூர் -₹50/-

✅புதுக்கோட்டை- திருவெறும்பூர்  - ₹40/-

✅புதுக்கோட்டை-  பொன்மலை- ₹35/-

✅புதுக்கோட்டை- திருச்சி- ₹35/-


உயர்கல்வி சேர்க்கை 35%க்கும் குறைவான 100 அரசுப் பள்ளிகளின் விவரம் வெளியீடு...

 

2022-23ஆம் கல்வியாண்டில் குறைவாக உயர் கல்வியில் சேர்ந்த 100 அரசுப் பள்ளிகளின் விவரம் வெளியீடு...


AY 2022-23 Class 12 Students Enrolled in Higher Education - The first 100 Government Higher Secondary Schools with the lowest enrollment in higher education - UMIS-EMIS Reconciliation Report...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...



இன்று (05-05-2024) நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்கான முக்கியக் குறிப்புகள்...


🔹🔸 🩺நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவச் செல்வங்களே உங்களுக்கான மிக முக்கிய அறிவுரைகள் ஒரு நிமிடம் இதை முழுமையாக படித்துவிட்டு நீட் தேர்வு எழுத செல்லுங்கள் உங்களுக்கு நிச்சயம் பயனளிக்கும்...


1. மாணவர்கள் நுழைய சீட்டில் உள்ளபடி உரிய நேரத்திற்கு தேர்வு மையத்தை அடைய வேண்டும்


2. தேர்வு மையத்தின் நுழைவு வாயிலை மூடிய பிறகு எந்த மாணவரையும் அனுமதிக்க இயலாது


3. தேர்வு முடிவதற்கு முன்னர் எக்காரணத்திற்காகவும் மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியேறக்கூடாது


4. தேர்வு முடிந்த பிறகு தேர்வு கண்காணிப்பாளர் தேர்வு அறையினை விட்டு வெளியேறலாம் என்று கூறிய பிறகு அறையை விட்டு வெளியேற வேண்டும்


5. மாணவர்கள் நுழைச்சீட்டிலுள்ள அனைத்து அறிவுரைகளையும் நன்கு படித்து அதன்படி நடந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


6. நுழைவு சீட்டில் உள்ள மூன்று பக்கங்களையும் பதிவிறக்கம் செய்து தேர்வு அறைக்கு எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்


7. மாணவர்கள் தேர்வு மையத்தின் முகவரியை கொண்டு ஒரு நாள் முன்னதாக விசாரித்துக் கொண்டால் தேர்வு நாள் என்று தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்கலாம்.


8. சில மாணவர்கள் தங்கள் சார்ந்த மதத்தின் அடிப்படையில் ஆடைகள் அணிந்திருப்பர். அதுபோன்றோர் தேர்வு மையத்திற்கு முன்னதாகவே சென்று முழுமையான சோதனைக்கு தங்களை உட்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


9. நுழைவு சீட்டு அடையாள அட்டை போன்றவை அவசியம் தேர்வு அறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். மாணவர்கள் மெட்டல் டிடெக்டர்களை கொண்டு மட்டுமே ஆய்வு மேற்கொள்ளப்படுவதை தவிர கைகளால் தொட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட மாட்டாது.


10. மாணவர்கள் தேர்வு அறைக்கு கீழ்க்கண்டவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்


i. ஒளிபுகு தண்ணீர் பாட்டில்


ii. வருகை பதிவேட்டில் ஒட்டுவதற்கு கூடுதலாக ஒரு புகைப்படம் (விண்ணப்பத்தில் உள்ளபடி)


iii. நுழைவு சீட்டு மற்றும் சுய உறுதிமொழி படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து தபால் அட்டை அளவு புகைப்படத்தை உரிய இடத்தில் ஒட்டவும்.


iv. PwD சான்றிதழ் மற்றும் ஆவண எழுத்தர் சம்பந்தமான ஆவணங்கள் தேவைப்படின்


11. மாணவர்கள் தங்களது கையெழுத்தை உரிய இடத்தில் இட்டும் மற்றும் புகைப்படத்தை சரியான இடத்தில் ஒட்ட வேண்டும். இடதுகை கட்டை விரல் முழுமையாகவும் தெளிவாகவும் இட வேண்டும்.


12. பேன் அட்டை/ ஓட்டுநர் உரிமம்/ வாக்காளர் அடையாள அட்டை/ பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நுழைவு சீட்டு/ பாஸ்போர்ட்/ ஆதார் அட்டை/ e-ஆதார்/ ரேஷன் அட்டை மற்றும் அனைத்து அடையாள அட்டைகள்/ கைபேசியில் ஸ்கேன் செய்யப்பட்ட நுழைவு சீட்டுகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது


13. மாணவர்கள் எலக்ட்ரானிக் உபகரணங்கள், கைபேசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தங்களது உடைமைகள் காணாமல் போனால் அதற்கு யாரும் பொறுப்பேற்க இயலாது.


14. சீரான உடை மற்றும் காலணிகள் அணிய வேண்டும். தடித்த அடித்தோல் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. பெரிய பொத்தான் கொண்ட உடையை அணியக்கூடாது.


15. தேர்வு அறைக்கு உள்ளே வெற்றுக் காகிதங்கள் எடுத்துச் செல்லக்கூடாது. வினாத்தாளின் இறுதியில் உள்ள வெற்றிடத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 


16. தேர்வு முடிவுற்ற பிறகு நுழைவு சீட்டை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் தங்களது விடைத்தாள் திருத்தப்பட மாட்டாது.


17. CCTV கேமராக்கள் மற்றும் ஜேமர்கள் வழியாக மாணவர்கள் தவறிழைப்பது கண்டறியப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.


18. AI தொழில்நுட்பம் மூலமாக மாணவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் தவறிழைக்கும் மாணவர்கள், AI தொழில்நுட்ப கருவிகள் மூலம் கண்டறியப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.


19. தேர்வு முடிந்த பிறகு மாணவர்கள், OMR தாள்கள் ( உண்மை மற்றும் நகல்), நுழைவு சீட்டு ஆகியவற்றை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வினாத்தாளை மட்டும் மாணவர்கள் வெளியே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. OMR தாளில் தங்களது கையொப்பம் மற்றும் கண்காணிப்பாளரின் கையொப்பம் இரண்டையும் சரி பார்ப்பது மாணவர்களின் கடமையே ஆகும்.


20. மாணவர்கள் NTA வெப்சைட்டை தினம் தோறும் பார்க்க வேண்டும். மேலும் e-mail மற்றும் SMS ஐ தினந்தோறும் ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


21. சந்தேகம் அல்லது உதவிக்கு, NTA விற்கு neet@nta.ac.in என்ற e-mail மூலமாகவோ அல்லது 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


🔹👉அன்பான மாணவச் செல்வங்களே தன்னம்பிக்கையுடன், பொறுமையாக மற்றும் சிந்தித்து விடை எழுதவும்.  நீட் தேர்வினை சிறப்பாக எழுதி அதிக மதிப்பெண் பெற்று மருத்துவராகி சமுதாயத்திற்கு சேவை செய்ய வாழ்த்துகள்!



ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை EMIS வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்...


ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிசார் கோரிக்கைகளை கல்வி மேலாண்மை தகவல் முறைமை EMIS வாயிலாக விண்ணப்பிக்க EMIS இணையதளத்தில் சிறப்பு வசதி ஏற்படுத்திட மாநிலத் திட்ட இயக்குநருக்கு பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம்...



>>> பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் கடிதம் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பணிவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...

 கணினி ஆசிரியர் பணிவாய்ப்பு தொடர்பான போலி விளம்பரங்களை மக்கள் நம்ப வேண்டாம் - பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை...


அரசுப் பள்ளிகளில் கணினிஆசிரியர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக போலிதுண்டுப் பிரசுரம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


அதில், 5 ஆண்டுகள் ஒப்பந்தம், தினமும் 3 மணி நேரம் வேலை, தொகுப்பூதியம் ரூ.10,000, கல்வித் தகுதிகள், தொடர்பு எண் உட்பட பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


இந்நிலையில் இத்தகைய போலி விளம்பரங்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று பள்ளிக்கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறும்போது, ''கணினி ஆசிரியர் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் எதுவும் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்படவில்லை. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் விளம்பரம் போலியானது.


இதுபோன்ற மோசடி விளம்பரங்களை பட்டதாரிகள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம். மேலும், சந்தேகத்துக்குரிய தகவல்களை பள்ளிக்கல்வித் துறையின் இலவச உதவி மைய எண்ணில் (14417) தொடர்பு கொண்டு உறுதி செய்துகொள்ள வேண்டும்'' என்றனர்.


போலி துண்டுப் பிரசுரம் 👇🏻👇🏻👇🏻




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The completion of direct inspection conducted by Minister Anbil Mahesh Poiyamozhi in all 234 constituencies

234 தொகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் மேற்கொண்ட நேரடி ஆய்வு நிறைவு The completion of direct inspection...