கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

லஞ்சம் வாங்கிய புகாரில் ஆரணி வட்டாட்சியர் கைது...



 லஞ்சம் வாங்கிய புகாரில் ஆரணி வட்டாட்சியர் கைது...


ரூ. 10 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில், வட்டாட்சியர் மஞ்சுளா மற்றும் இரவு காவலர் பாபு கைது செய்யப்பட்டனர். 


சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க வட்டாட்சியர் மஞ்சுளா லஞ்சம் கேட்டதாக சீனிவாசன் என்பவர் புகார் அளித்துள்ளார். 


ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் விடிய விடிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (50). இவர் அமிர்தி பகுதியில் கேன்டீன் எடுத்து நடத்தி வருகிறார். ஊராட்சி பகுதிகளில் அரசு கட்டிட பணிகள் சம்பந்தமாக ஒப்பந்த டெண்டர் எடுத்து பணி செய்யும் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஒப்பந்த டெண்டர் ரூ.20 லட்சத்தில் எடுத்துள்ளார்.


இதற்கு அரசு சொத்து மதிப்பு சான்று கோரி ஆரணி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த சான்று வழங்குவதற்காக துணை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம், வருவாய் ஆய்வாளருக்கு ரூ.10 ஆயிரம், விஏஓவுக்கு ரூ.5 ஆயிரத்தை சீனிவாசன் லஞ்சமாக கொடுத்துள்ளார். இந்த லஞ்சத்தை பெற்றுக் கொண்டவர்கள் சான்றுக்கு பரிந்துரை செய்து, தாசில்தாருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


இதையடுத்து சீனிவாசன் நேற்று முன்தினம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று சான்றிதழ் குறித்து கேட்டுள்ளார். அப்போது தாசில்தார் மஞ்சுளா ரூ.1 லட்சம் மதிப்புக்கு ஆயிரம் வீதம், ரூ.20 லட்சத்திற்கு ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சீனிவாசன் பேசிப் பார்த்த நிலையில் ரூ.10 ஆயிரம் கொடுத்தால் தான் சான்று வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதையடுத்து, தாசில்தார் லஞ்சம் கேட்டது குறித்து திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையில் சீனிவாசன் புகார் அளித்தார். புகாரையடுத்து அவர்கள் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரம் ரூபாய் பணத்தை நேற்று சீனிவாசனிடம் கொடுத்து அனுப்பினர். தொடர்ந்து, 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.


சீனிவாசன் நேற்று இரவு தாசில்தார் மஞ்சுளாவை அணுகி பணம் கொடுத்தார். அவர் அதனைப் பெற்றுக் கொள்ளாமல் பணியில் இருந்த இரவுக் காவலர் பாபுவிடம் கொடுக்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து, இரவு காவலர் பாபு ரூ.10 ஆயிரம் பணத்தை வாங்கி தாசில்தார் மஞ்சுளாவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரையும் காவலாளி பாபுவையும் கையும் களவுமாக கைது செய்தனர்.


இதையடுத்து பணம் வாங்கிய துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர், விஏஓவிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இரவு முதல் விடிய விடிய சுமார் 10 மணி நேரமாக விசாரணை நடத்தப்பட்டு, லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்ட நிலையில், தாசில்தார் மஞ்சுளா, காவலர் பாபு இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மஞ்சுளா, ஆரணி வட்டாட்சியராக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


நன்றி : தினகரன்

தானியங்கி பட்டா மாறுதல் - வருவாய் துறை அறிவுறுத்தல்...



தானியங்கி பட்டா மாறுதல் - வருவாய் துறை அறிவுறுத்தல்...


தானியங்கி முறை பட்டா மாறுதல் பணிக்காக, பத்திரப்பதிவின்போது, 


சரியான மொபைல் போன் எண்ணை அளிக்க வேண்டும்' என, வருவாய் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தில், ஒரு சர்வே எண்ணுக்கு உட்பட்ட முழு சொத்தும் கைமாறும் போது, அதற்கான பத்திரப்பதிவு அடிப்படையில், பட்டா மாறுதல் செய்யப்படும்.




*தானியங்கி முறை*


பெரும்பாலான சார் - பதிவாளர் அலுவலகங்களில், இதற்கான நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. 


இதில், பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


இதற்கிடையில், 2024 ஜூன் 15 முதல் தானியங்கி பட்டா மாறுதல் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த, பதிவுத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 


இதற்காக சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.


தானியங்கி முறை பட்டா மாறுதல் திட்டத்தில், பெரும்பாலான விண்ணப்பங்கள் பாதியில் முடங்குகின்றன.


இந்த விண்ணப்பங்களில், சொத்து வாங்குவோர் தங்களது சரியான மொபைல் போன் எண்ணை கொடுக்காமல் இருப்பதே, விண்ணப்பங்கள் முடங்க காரணம் என, தெரியவந்துள்ளது.


'ஆன்லைன்' முறையில் பத்திரப்பதிவுக்கு விபரங்களை உள்ளீடு செய்யும் போது, சொத்து வாங்குவோரின் உண்மையான மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வேண்டியது அவசியம்.


எனவே, பத்திரப்பதிவு பணியின் போது, மொபைல் போன் எண் விபரத்தை சரியாக பதிவிடுவதை, சார் - பதிவாளர்கள், ஆவண எழுத்தர்கள் உறுதி செய்ய வேண்டும். 


பொது மக்களும் இதில் பொறுப்புடன் நடக்க வேண்டும்.


அப்போது தான் பட்டா மாறுதல் தொடர்பாக, எஸ்.எம்.எஸ்., தகவல்களை பெற முடியும். 


இதன் அடிப்படையிலேயே தொடர் நடவடிக்கைகள் எடுக்க முடியும்.


Hi-Tech Lab - Language Lab - 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இணையவழி பயிற்சி...




HITECH LAB - LANGUAGE LAB

அனைவருக்கும் வணக்கம், 


*LL - Period Allotment

 உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம் உள்ள அனைத்து அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்குரிய கால அட்டவணையில் வெள்ளிக்கிழமை அன்று மொழிகள் ஆய்வகத்திற்கென (Language Lab) ஒரு பாடவேளை  ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 


*Language Lab

ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் 6 முதல் ஆம் 8 வகுப்பு மாணாக்கர்களை Language lab பாட வேளையில் Hitech lab க்கு அழைத்துச் சென்று Language lab சார்ந்து பயன்பெறச் செய்தல் வேண்டும்.


*LL-Posters

Hitech lab ல் Language lab சார்ந்து Posters (TNTP link-ல் தரப்பட்டுள்ளது) ஒட்டப்பட்டு இருக்க வேண்டும். 


*LL- Training

6 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்கள் ( BT English  Teachers மட்டும் அல்ல) அனைவரும் Language lab சார்ந்து TNTP App ல் Self Training எடுத்துக் கொள்ள வேண்டும்.


*TNTP link👇


https://tntp.tnschools.gov.in/courseList


ஆசிரியர் பணித்திறன் மேம்பாட்டுப் பயிற்சி 3 - ஆங்கிலம் பேசுதல் - மொழி ஆய்வகங்கள் அறிமுகம் - பயிற்சி கையேடு...


முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்...

 முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம்...



உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களின் பணி - இணைப்பு: மாவட்ட வாரியாக பணிநியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை...

 

உயர் தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களின் பணி - இணைப்பு: மாவட்ட வாரியாக பணிநியமனம் பெற்றவர்களின் எண்ணிக்கை...


Duties of Hi-Tech Laboratory Administrator and Instructors – Link: District wise number of recruits...






ஐஐடி மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...


ஐ.ஐ.டி., IIT மாணவர்களுக்கு வகுப்பறை நேரம் குறைப்பு...




சமீபத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் 195 / 210 நாட்களிலிருந்து 220 நாட்கள் என அதிகரித்து அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது...


பள்ளிக் கல்வித் துறை - ஐம்பெரும் விழா அழைப்பிதழ்...

 பள்ளிக் கல்வித் துறை - ஐம்பெரும் விழா அழைப்பிதழ்...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

An unprecedented 41 cm Rain in Rameswaram - Cloud burst in Pamban - Chennai Met Office

ராமேஸ்வரத்தில் வரலாறு காணாத 41 செ.மீ. மழை  - பாம்பனில்  மேக வெடிப்பு நிகழ்ந்துள்ளது - சென்னை வானிலை மையம்  ராமேஸ்வரத்தில் 41 செ.மீ. மழை   கா...