கட்டடங்களுக்கு நிறைவுச் சான்று பெறுவதிலிருந்து விலக்கு - புதிய அரசாணை G.O. Ms. No. 123, Dated: 28-06-2024 வெளியீடு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
கட்டடங்களுக்கு நிறைவுச் சான்று பெறுவதிலிருந்து விலக்கு - புதிய அரசாணை G.O. Ms. No. 123, Dated: 28-06-2024 வெளியீடு...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
Teachers Transfer 2024 - இன்று ( 12.07.2024 ) யாருக்கு?
DSE - பள்ளிக் கல்வித்துறை
12.07.2024 வெள்ளிக்கிழமை
* பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு
DEE - தொடக்கக் கல்வித்துறை
12.07.2024 வெள்ளிக்கிழமை
* பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு (கல்வி மாவட்டத்துக்குள்)...
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.07.2024 - School Morning Prayer Activities...
திருக்குறள்:
பால்: பொருட்பால்
அதிகாரம்:கேள்வி
குறள் எண்:417
பிழைத்து உணர்த்தும் பேதமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.
பொருள்: நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வி யறிவை உடையவர். (ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும்,
பேதமையானவற்றைச் சொல்லார்.
பழமொழி :
Spare the rod and spoil the child.
அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவார்களா?
இரண்டொழுக்க பண்புகள் :
*எல்லோரிடமும் மரியாதையாகவும் இனிமையாகவும் பேசுவேன்.
*யாரிடமும் கெட்ட வார்த்தைகளை பேச மாட்டேன்.
பொன்மொழி :
படித்தால் வாழ்க்கையை மாற்ற முடிகிறதோ இல்லையோ, உங்களின் வாழ்க்கை பற்றிய பார்வையை மாற்றலாம்.
-------- இறையன்பு .ஐ .ஏ .எஸ்
பொது அறிவு :
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
விடை: பெங்களூரு
2. தமிழ்நாட்டின் உள்ள கடற்கரை நீளம்?
விடை: சுமார் 1000 கிலோமீட்டர்
English words & meanings :
Deeds- செயல்கள்,
Deportment-ஒழுக்கம்
வேளாண்மையும் வாழ்வும் :
நோயில்லா உலகை படைக்க!
இயற்கை வேளாண்மையை பின்பற்றுவோமாக
ஜூலை 12
மலாலா தினம்
மலாலா யோசப்சையி (மாற்று: மலாலா யூசுஃப்சாய், ஆங்கிலம்: Malala Yousafzai பாசுதூ: ملاله یوسفزۍ, பிறப்பு 1997) என்பவர் பாகிசுத்தான் நாட்டின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள மிங்கோரா எனும் சிற்றூரில் வசிக்கும் ஒரு மாணவி ஆவார். இவர் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயற்பாடுகளுக்காக அறியப்படுகிறார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் பாடசாலை செல்வதற்கான தாலிபானின் தடையை மீறி இவர் பள்ளி சென்றுவந்தார். 2009ஆம் ஆண்டிலேயே இவரது பி.பி.சியின் உருது வலைப்பதிவு ஊடாக தானும் தனது ஊரும் பாக்கித்தானிய தாலிபானால் எவ்வாறு கட்டுப்படுத்தப்பட முயற்சி செய்யப்படுகிறது என்று விவரித்து வந்தார்.இருப்பினும் புனைபெயரில் எழுதிவந்தமையால் இவரது அடையாளம் தெரியாதிருந்தது. தொலைக்காட்சி நேர்முகமொன்றில் நேரடியாக தோன்றியதிலிருந்து பரவலாக அறியப்பட்டதுடன் பழைமைவாத தாலிபான்களின் இலக்கிற்கும் ஆளானார். பல விருதுகளைப் பெற்ற மலாலாவிற்கு பாக்கித்தானின் முதல் அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது. மலாலாவை அக்டோபர் 9, 2012 அன்று தாலிபான் சுட்டுக் கொல்ல முயன்றது.இவர் படுகாயம் அடைந்ததைத் தொடர்ந்து இதற்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மிகவும் சிறுவயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். 2013ஆம் ஆண்டு ஜூலை 12-ல் மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த நிகழ்வை ஐக்கிய நாடுகள் "மலாலா தினம்" என்று குறிப்பிட்டனர்.
நீதிக்கதை
எண்ணப்படி வாழ்வு
ஓர் ஊரில் ஒரு விறகு வெட்டி இருந்தான். அவன் நாள்தோறும் ஊர் எல்லையில் இருந்து காட்டுக்கு சென்று விறகுகளை வெட்டி அவற்றை ஊர் மக்களிடம் விற்று பிழைப்பு நடத்தி வந்தான்.
ஒரு நாள் அவன் வழக்கமாக விறகு வெட்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு களைப்பு ஏற்பட்டது. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் படுத்தான். அந்த மரமானது நினைப்பதையெல்லாம் கொடுக்கும் மந்திர மரம் ஆகும்.
இந்த விஷயம் அவனுக்கு தெரியாது, அப்பொழுது தென்றல் காற்று சில்லென்று வீசியது. அது அவனுக்கு சுகமாக இருந்தது. இம்மாதிரியான நேரத்தில் ஒரு பஞ்சுமெத்தை இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று அவன் மனதில் நினைத்தான்.
என்ன ஆச்சரியம்!
அடுத்த கணம் அவன் அருகில் ஒரு கட்டிலும் அதில் பஞ்சு மெத்தையும் வந்து சேர்ந்தது. விறகு வெட்டிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. உடனே அவன் அதில் ஏறிப் படுத்தான். விறகு வெட்டிக்கு ஒன்றுமே புரியவில்லை. இவ்வளவு சுகங்கள் இருந்தும் வயிற்றுக்கு உணவில்லாமல் பட்டினியாக இருக்கிறோமே! இப்பொழுது அறுசுவை உணவு இருந்தால் எவ்வளவு நலமாக இருக்கும் என்று எண்ணினான்.
மறுகணமே தங்கத்தட்டில் அறுசுவை உணவு வந்தது. பல வகை உணவுகள் வந்தன, விறகுவெட்டி அனைத்தையும் வயிறார உண்டான். “உண்ட மயக்கம் தொண்டனுக்கு உண்டு” என்ற பழமொழிக்கு ஏற்ப விறகு வெட்டிக்கு உறக்கம் வந்தது, படுத்தான். அவன் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தான்.நினைப்பதெல்லாம் நடக்கின்றதே!
அவன் மனதில் திடீரென்று ஒரு பயம் தோன்றியது. “நாம் காட்டில் தனியாக அல்லவா இருக்கிறோம்?. இப்பொழுது ஒரு சிங்கம் ஒன்று நம் முன் வந்தால் என்னவாகும்?” என்று நினைத்தான்.
மறுகணம் அவன் முன்னால் ஒரு சிங்கம் தோன்றியது.
நீதி : நம் எண்ணத்தின்படிதான் நம் வாழ்க்கை அமையும். நாம் உயர்ந்தவற்றை, நல்லதை எண்ணினால் நம் வாழ்க்கை நல்லதாகவே அமையும். தவறான எண்ணங்களை எண்ணினால் நம் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கும். எனவே நாம் உயர்ந்தவற்றையே நினைக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
12.07.2024
🌸சி.ஏ. படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு: இதுவரை இல்லாத அளவில் தேர்ச்சி.
🌸அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் படுக்கை மற்றும் இருக்கை வசதி கொண்ட 200 புதிய பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
🌸நீட் விவகாரம்: முக்கிய குற்றவாளி பாட்னாவில் கைது.
🌸ஸ்டார்லைனர் விண்கலம் எங்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்.. விண்வெளி வீரர்கள் நம்பிக்கையுடன் விண்வெளியிலிருந்து பேட்டி.
🌸கோபா அமெரிக்க கால்பந்து: உருகுவே அணியை வீழ்த்தி கொலம்பியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்.
🌸விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி.
Today's Headlines
🌸CA Exam results released: The number of passed people surpassed the so far results.
🌸200 new buses with sleeper and seater facility will soon be on road by the Government Express Transport Corporation.
🌸NEET Case: Main accused arrested in Patna.
🌸The Starliner spacecraft will bring us safely to Earth.. Astronauts confidently gave interview from space.
🌸Copa America: Colombia beat Uruguay to advance to final.
🌸Wimbledon tennis: Italian player Lorenzo Musetti advanced to the semi-finals.
Prepared by
Covai women ICT_போதிமரம்
11.07.2024...
Rechance Counseling Update News...
2024 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் இதுவரையில் மாறுதலுக்கு விண்ணப்பிக்காத அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளித்துள்ளது.
ஆனால் ஏற்கனவே விண்ணப்பித்து மாறுதல் ஆணை பெறாதவர்கள் (not willing கொடுத்தவர்கள்) மற்றும் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாதவர்களும் (Absent ஆனவர்கள்) தற்போது புதியதாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
அவரவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலந்தாய்வு நாள் அன்று நேடியாக கலந்து கொள்ளலாம் என இணை இயக்குநர் அவர்கள் அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்..
The applicants who were *Absent* and *Not willing* in the previous counselling are *no* *need* *to* *apply* *again* for the Rechance counselling.
Absent and Not willing of previous counselling can also participate in the Rechance counselling (MHM,PHM,BT,SGT).
The applicants who are *not* *applying* *so* *far* can apply for Rechance Counselling today.(MHM,PHM,BT,SGT).
இன்று (12-07-2024) நடைபெறும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (ஒன்றியத்திற்குள் ) கலந்தாய்வில் ஏற்கனவே நாட் வில்லிங் & ஆப்சென்ட் ஆன ஆசிரியர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்கப்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. வருகை பதிவேடு மூன்று பிரதிகளில் தயார் செய்துவருமாறு தெரிவிக்கப்படுகிறது.
ஆச்சரியப்படுத்திய விடயங்கள் - தினா சனிச்சார்...
வருடம் : 1867
உத்திரபிரதேச மாநிலம் புலந்த்ஷார் மாவட்டதிலுள்ள ஓர் அடர்ந்த காட்டினுள் வேட்டையர்கள் சென்றுகொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஓநாய் கூட்டம் அவர்களது பாதையை கடக்கிறது .
அந்த கூட்டத்தில் வினோத ரூபத்தில் நான்கு கால்களில் ஒரு உருவம் நடந்து போவதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்பட, நொடிப்பொழுதில் அந்த ஓநாய் கூட்டம் மறைந்துவிடுகிறது.
அந்த வினோத விலங்கை வேட்டையாடும் நோக்கத்தில் இவர்களும் ஓநாய் கூட்டத்தின் காலடி பாதையை பின்தொடர, அந்த கூட்டம் ஒரு குகையை சென்றடைந்ததை அறிகின்றனர்.
குகையின் வாயிலில் தீயை மூட்ட, புகையினால் உள்ளிருந்த ஓநாய் கூட்டம் திசைக்கு ஒன்றாக சிதற, அப்போது தான் அந்த வினோத உருவம் விலங்கல்ல, அது ஒரு 6 வயது மதிக்கத்தக்க சிறுவன் என்று தெரியவருகிறது.
பிறகு அந்த ஒநாய்க்கூட்டத்தை வேட்டையாடி விரட்டியடித்து, அந்த வினோதச் சிறுவனை நகருக்குள் அழைத்து வந்தனர்.
அழைத்துவந்த சிறுவன் ,ஆக்ராவிலுள்ள சிகாந்த்ரா அனாதை இல்லத்தில் ஒப்படைக்கப்படுகிறான்.
சனிக்கிழமை இல்லத்திற்கு வந்ததால், தினா சனிச்சார் என்று அங்கிருந்த பாதிரியாரால் ஞானஸ்தானம் செய்யப்பட்டு பெயர் சூட்டப்பட்டது.
அதுவரை மனிதர்களையே பார்க்காத அந்த சிறுவனுக்கு அங்கிருந்த சூழல் முற்றிலும் புதுமையாக இருந்தது.
நான்கு கால்களில் நடந்து, பற்களை கூர்மையாக்கிக் கொண்டு, என அவன் மனிதர்களுடன் இருந்தாலும் ஓநாயை போலவே நடந்துகொண்டான்.
அதே போல் சமைத்த உணவை அளித்தபோதும் அதை மிருகத்தை போல் நுகர்ந்து பார்த்து, அவற்றை தள்ளி விட்டு பச்சையாக கறியை உண்டான்.
கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு கால்கள் நிற்க கற்றுக்கொண்டாலும் நான்கு கால்களில் நடப்பதையே விரும்பினான்.
அவனுக்கு மனிதர்களின் மொழி புரியாததால் அவன் எது தேவையாக இருந்தாலும் ஊளையிட்டே கேட்டு வாங்கிக்கொண்டான்.
காலப்போக்கில் உணவருந்த, ஆடை அணிய கற்றுக்கொண்டதாக ஒரு சில குறிப்புக்கள் கூறுகிறது.
இருப்பினும் நம்மை போல் சாதாரண மனிதனாக அவனால் கடைசி வரை இருக்க முடியவில்லை.
கடைசி வரை அவனால் மனித மொழி பேச முடியவில்லை.
அவன் மனித இனத்திடம் கற்றுக்கொண்ட ஒரே பழக்கம், புகைப்பழக்கம்.
ஆம், செயின் ஸ்மோக்கரான சனிச்சார், தன்னுடைய முப்பத்தி ஐந்தாவது வயதில் காசநோயால் இறந்து போனான்.
இவரது வாழ்க்கை குறிப்பை அடிப்படையாய் வைத்து தான் பிரபல எழுத்தாளர் ருட்யார்ட் கிப்ளிங், ஜங்கிள் புக் புத்தகத்தை எழுதியதாக நம்பப்படுகிறது.
இவரைப்போல் உலகில் பல மனிதர்கள் விலங்குகளால் வளர்க்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
☑️ Important Days in July 2024
🏅 *July 2, 2024*
- World Sports Journalists Day
- World UFO Day
🛍️ *July 3, 2024*
- International Plastic Bag Free Day
🎆 *July 4, 2024*
- USA Independence Day
🐾 *July 6, 2024*
- World Zoonoses Day
- International Day of Cooperatives
🍫 *July 7, 2024*
- World Chocolate Day
🌍 *July 11, 2024*
- World Population Day
- International Day of Reflection and Commemoration of the 1995 Genocide in Srebrenica
🛒 **July 12, 2024*
- Malala Day
- International Day of Combating Sand and Dust Storms
🇫🇷 *July 14, 2024*
- Bastille Day
🛠️ *July 15, 2024*
- World Youth Skills Day
- Social Media Giving Day
⚖️ *July 17, 2024*
- World Day for International Justice
- World Emoji Day
✊ *July 18, 2024*
- International Nelson Mandela Day
♟️ *July 20, 2024*
- World Chess Day
- Moon Day
🧬 *July 25, 2024*
- World Embryologist Day
- World Drowning Prevention Day
🦠 *July 28, 2024*
- World Hepatitis Day
🐅 *July 29, 2024*
- International Tiger Day
🤝 *July 30, 2024*
- International Day of Friendship
- World Day against Trafficking in Persons
🛡️ *July 31, 2024*
- World Ranger Day
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் சாலைமறியல்...
பாலியல் வழக்கில், கைதான 2 ஆசிரியர்கள் மீது தவறாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு...
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி ஆசிரியர்களை விடுவிக்கக் கோரி மாணவிகள் சாலை மறியல்...
திருவள்ளூர் அருகே போக்சோ வழக்கில் இரண்டு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் தங்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்கவில்லை எனக் கூறி ஆவடி - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளூர் அடுத்த செவ்வாய்பேட்டையில் அரசு ஆதி திராவிட நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் செவ்வாய்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவிகள் படித்து வரும் நிலையில், மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக, ஆதி திராவிட நலத்துறை அமைச்சருக்கு ஏராளமான புகார்கள் சென்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த ஜூலை 1-ம் தேதி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பள்ளியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். மேலும், பள்ளி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் தீவிர விசாரணை நடத்தியுள்ளார். அதில், மாணவிகள் சிலர் கணித ஆசிரியர் ஜெகதீசன் மற்றும் அறிவியல் ஆசிரியர் பிரேம்குமார் ஆகிய 2 பேரும் மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிக்கை பெறப்பட்டதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகம் மூலம் இது உறுதி செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, புகார் தெரிவிக்கப்பட்ட 2 ஆசிரியர்களும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனையடுத்து, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து வழக்குப்பதிவு செய்து 2 ஆசிரியர்களையும் போக்சோவில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், 2 ஆசிரியர்களை போக்சோவில் கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர்-ஆவடி சாலையில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 ஆசிரியர்களும் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டவர்கள் என்றும், வேண்டுமென்றே அவர் மீது பொய்யான புகார் கொடுத்து போக்சோவில் கைது செய்து இருப்பதால் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் காவல் துறை அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால், கைது செய்யப்பட்ட 2 ஆசிரியர்களையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் மாணவிகளுக்கு உறுதுணையாக அவர்களது பெற்றோர் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். பின்னர், எழுத்துப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் புகார் மனுக்களை எழுதி கொடுத்துள்ளனர். இதனையடுத்து, புகார் மனுக்கள் ஆட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என காவல் துறையினர் மாணவிகளிடம் கூறிய நிலையில், மாணவிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு விலகிச் சென்றுள்ளனர். 4 மணிநேரத்திற்கும் மேலாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
நன்றி : ETV
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...