கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர் விவரங்களை சேகரிக்க உத்தரவு - கல்வி சாராத பணிகள் கொடுக்கப்படுகின்றன என ஆசிரியர்கள் அதிருப்தி...

 

 அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவர் விவரங்களை சேகரிக்க உத்தரவு - கல்வி சாராத பணிகள் கொடுக்கப்படுகின்றன என ஆசிரியர்கள் அதிருப்தி...




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024...

 

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.07.2024 - School Morning Prayer Activities...



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம் :அறிவு உடைமை

குறள் எண் :426

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
அவ்வது உறைவது அறிவு.

பொருள் : உலகம் எவ்வாறு நடைபெறுகின்றதோ உலகத்தோடு பொருந்திய வகையில் தானும் அவ்வாறு நடப்பதே அறிவாகும்.


பழமொழி :
ஐந்தில் அறியாதவன் ஐம்பதில் அறிவானா?

The child is father to the man.


இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.

*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

"வேலையை வெறுத்துச் செய்பவன் அடிமை, வேலையை விரும்பிச் செய்பவன் அரசன். "-----ஓஷோ


பொது அறிவு :

1.பெட்ரோலுக்குப் பதிலாக பயன்படும் கலவை

விடை: எத்தனால் + டை எத்தில் ஈத்தர்

2. பெட்ரோலின் கலோரி மதிப்பு ( K cal / kg ) ?

விடை: 11500


English words & meanings :

with stand-தாங்கு,

  detain-தடு


வேளாண்மையும் வாழ்வும் :

இதற்கு இப்பெயர் வரக் காரணம் பண்டையக் காலத்திலிருந்து இந்த அரிசியில் செய்த உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.


ஜூலை 25

ஜிம் கார்பெட் அவர்களின் பிறந்தநாள்

புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் (ஜூலை 25, 1875- ஏப்ரல் 19, 1955) இமயமலைத் தொடரில் உள்ள குமாவுன் மலையில் அமைந்துள்ள கோடைவாழிடமான நைனித்தாலில் பிறந்தவர். ஆங்கில மரபினர். இயற்கையைப் பேணுவதில் ஆர்வம் மிகக்கொண்டிருந்தவர். புலிகள் மற்றும் சிறுத்தைப்புலிகள் பற்றிய இவரது நூல்களுக்காகப் புகழ்பெற்றவர்.



நீதிக்கதை

புதையல் ரகசியம்

ஒரு ஊரில் ராஜன் என்ற பணக்காரர் சீரும் சிறப்புமாக வாழ்ந்து வந்தார். முதுமை பருவத்தை அடைந்தார். அவருக்கு நான்கு மகன்கள் இருந்தனர். நான்கு பேரும் ஒற்றுமையாகவும், தந்தையிடம் பாசத்துடனும் இருந்தார்கள்.

திடீரென்று ஒரு நாள் ராஜனுக்கு உடல்நிலை பாதித்தது. மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள். இருப்பினும் அவரின் உடல்நிலை நாளுக்கு நாள் நலிந்து வந்தது. நான்கு மகன்களும் தந்தைக்கு அருகிலேயே இருந்து கவனித்துக் கொண்டனர்.

அவர்களிடம் ராஜன்,"என் அருமை மகன்களே! எனக்கும் வயதாகி விட்டது. உடல்நிலை மோசமாகி கொண்டே வருகிறது. நான் படுத்து இருக்கும் இந்த கட்டிலின் கால்களை பார்த்துக் கொள்ளுங்கள்.

முதலாவது கால் மூத்தவனுக்கு, இரண்டாவது கால் இரண்டாவது மகனுக்கு, மூன்றாவது கால் அடுத்த மகனுக்கும், நான்காவது நான்காவது கால் கடைசி மகனுக்கும் சொந்தமானது.

என்னுடைய மரணத்திற்கு பின்பு நான் கூறியபடி கட்டில் கால்களுக்கு கீழே இருக்கும் புதையலை எடுத்து நீங்கள் நான்கு பேரும் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் என்றார்.

சில தினங்களில் ராஜனும் மறைந்தார். தந்தையருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை நான்கு மகன்களும் செய்தனர். பின்னர் தந்தை கூறியபடி  கட்டில் கால்களுக்கு கீழே புதையலை தோண்டினார்கள். தந்தையார் கூறியபடி ஒவ்வொருவருக்கும் குறிப்பிட்டபடி இருந்த பானைகளை எடுத்துக் கொண்டார்கள்.

மூத்த மகனின் பானையில் முழுவதும் மண் இருந்தது. அடுத்த மகனின் பானையில் உமி இருந்தது.மூன்றாவது மகன் எடுத்த பானையில் பொன் துகள்கள் இருந்தன. கடைசி மகனின் பானையில் சாம்பல் நிரம்பி இருந்தது.

நான்கு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை. பானைக்குள் இந்த பொருள்களை வைத்தது ஏன்? இதை வைத்து என்ன செய்வது? என்று குழம்பிப் போனார்கள்.

எனவே தங்கள் ஊரில் இருந்த மரியாதை ராமனிடம் சென்று கேட்டார்கள். மரியாதை ராமனும் நான்கு பானைகளையும் உற்றுப் பார்த்தார். பின்பு யோசித்தார். தீர்வை கூறினார்.

நான்கு பேரையும் கூப்பிட்டார். "உங்கள் தந்தையார் புத்திசாலித்தனமாக தான் செய்திருக்கிறார். மண்ணைப் பெற்ற மூத்த மகன் தந்தையாரின் நிலங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். உமியைப் பெற்ற இரண்டாவது மகன் தானியங்களுக்கு சொந்தக்காரர். பொன் துகளை பெற்றவர் நகைகளை சொந்தமாக்கி கொள்ள வேண்டும். சாம்பலைப் பெற்றவர் ஆடு மாடுகளை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் இப்படி ஒரு திட்டத்தில் தான் உங்கள் தந்தையார் சொல்லியிருக்கிறார் அதன்படி பிரித்துக்  கொண்டு ஒற்றுமையாக வாழுங்கள்" என்று கூறினார் மரியாதை ராமன்.

நான்கு சகோதரர்களும் மரியாதை ராமனுக்கு நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.



இன்றைய செய்திகள்

25.07.2024

🌐21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, கடந்த 20 ஆண்டுகளில் 12.30 லட்சம் வழக்குகளை விசாரித்து சாதனை படைத்துள்ளது.

🌐தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

🌐நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடகாவில் தீர்மானம்: அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

🌐இளநிலை ‘நீட்’ தேர்வு முடிவை ரத்து செய்ய முடியாது: 20 லட்சம் மாணவர்களை பாதிக்கும் என உச்ச நீதிமன்றம் கருத்து.

🌐உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசைப் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யக்கூடிய தகுதியை பெற்றுள்ள இந்தியா, இந்த தரவரிசையில் 82-வது இடம் பிடித்துள்ளது.

🌐இந்திய ஆக்கி அணியின் முன்னணி கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் பாரீஸ் ஒலிம்பிக்குடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு.

🌐மகளிர் ஆசிய கோப்பை: மலேசிய அணியை வீழ்த்தி வங்காளதேசம் அபார வெற்றி.

🌐டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் மதுரையை வீழ்த்தி கோவை அணி 5-வது வெற்றியோடு அடுத்த சுற்றுக்கும் முன்னேறியது.


Today's Headlines

🌐Entering into its 21st year, the Madurai Bench of the High Court has set a record of hearing 12.30 lakh cases in the last 20 years.

🌐Chance of rain with thunder and lightning in Tamil Nadu today: Chennai Meteorological Department.

🌐 Karnataka resolution against NEET exam with Cabinet's  approval

🌐Junior 'NEET' result cannot be annulled: Supreme Court says that it will affect 20 lakh students.

🌐Singapore has topped the world's most powerful passport rankings.  With visa-free travel to 58 countries, India is ranked 82nd in this ranking.

🌐 India's leading goalkeeper Sreejesh retired from international competition with the Paris Olympics.

🌐Women's Asia Cup: Bangladesh beat Malaysia to win.

Prepared by

Covai women ICT_போதிமரம்


மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...

 

மாணவர்களது வங்கிக் கணக்கு எண் விவரங்களை EMISல் பதிவு செய்யும் முறை - அறிவுரைகள் வழங்குதல் - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள், நாள்: 23-07-2024...


Bank Account Details Updation in EMIS Website...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


3 ஆண்டு LLB, LLB(Hons.) படிப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு...


 சட்டப் பிரிவில் 3 ஆண்டு LLB, LLB(Hons.) படிப்பிற்கு விண்ணப்பிக்க ஜூலை 31ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு - அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவிப்பு...



தொழில் வரி 25% உயர்வு...

 


தொழில் வரி Professional Tax 25% உயர்வு...


01.04.2024 தேதி முதல் தொழில்வரி உயர்தப்பட்டுள்ளது.


 தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 (ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.


ஊராட்சி பகுதியில் அரசு நிறுவனத்தில் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவன பணியாளர்களிடம் தொழில் வரி வசூல் அரசாணை எண் : 8 ( ஊவதுறை ) நாள் : 10.01.2000 ன்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊராட்சி தீர்மானம் இயற்றி மாற்றம் செய்யப்பட வேண்டும் . அதன் அடிப்படையில் 01.04.2024 தேதி முதல் மாற்றம் செய்ய வேண்டும் . அதன்படி தற்போது தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.



தொழில்வரி 1250 இல் இருந்து 1565 ஆக உயர்த்தப்பட்டுள்ளது...



கடவுளின் கருணை - எடிசனின் பதில்...

 


கடவுளின் கருணை - எடிசனின் பதில்...


எடிசன் தனது அறுபத்தைந்தாவது வயதை நெருங்கிக் கொண்டிருக்கையில், 

அவரைப் பேட்டி கண்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை நிருபர்,


 "இத்தனை கண்டுபிடிப்புகளை உங்களைச் செய்யத் தூண்டிய ஆண்டவரின் கருணையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்.?" என்று கேட்டார்.


எடிசன் சிரித்துக் கொண்டே சொன்னார், 


"இன்று மதியம் நான் உண்ட உணவில் அற்புதமான மீன் கறி ஒன்றை எனக்குப் பரிமாறினார்கள். எனக்குக் கிடைத்த மதிய உணவு கடவுளின் கருணை என்றால், 

அந்த மீனுக்கு கடவுள் காட்டிய கருணை என்ன.? 

நான் உண்ட மீனையும் அந்தக் கடவுள்தானே படைத்திருக்க வேண்டும்..?"


 என்று கேட்டுச் சிரித்தார். 


தொடர்ந்து அவரே சொன்னார்.


 "கடவுள் என்று தனியே ஒன்றும் இல்லை. 

எல்லாம் இயற்கைதான். இயற்கைக்குக் கருணையோ, கொடூரத் தன்மையோ எதுவும் கிடையாது. 

இயற்கைதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. 

அது தன் போக்கில் எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கிறது.!" என்றார் எடிசன்.


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.07.2024 - School Morning Prayer Activities...

 

திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:425
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும்

கூம்பலும் இல்லது அறிவு.

பொருள்: உலகத்து உயர்ந்தவரை நட்பாக்கிக் கொள்வது சிறந்த அறிவு; முன்னே மகிழ்ந்து
விரிதலும் பின்னே வருந்திக் குவிதலும் இல்லாதது அறிவு.


பழமொழி :
ஐந்தில் ல் வளையாதது ஐம்பதில் வளையுமா?

A young twig is easier twisted than an old tree


இரண்டொழுக்க பண்புகள் :

*மழை பெய்யும் போது மரம் மற்றும் மின்கம்பிகள் அருகில் நிற்க மாட்டேன்.

*மழைக்காலங்களில் பாதுகாப்பு ஆடைகள், சூடான குடிநீர் பயன்படுத்துவேன்.


பொன்மொழி :

தயங்குபவர் கை தட்டுகிறார், துணிந்தவர் கை தட்டல் பெறுகிறார். ---பிடல் காஸ்ட்ரோ


பொது அறிவு :

1. மிகப்பெரிய வால் நட்சத்திரம் எது?

விடை: ஹோம்ஸ்

2. நமது மூளையானது எத்தனை லட்சம் செல்களால் ஆனது?

விடை: ஏறக்குறைய 60 லட்சம்


English words & meanings :

Thorough-முழுமையான,

  perfect-சரியான



வேளாண்மையும் வாழ்வும் :

மாப்பிள்ளை சம்பா
இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது


நீதிக்கதை

பொறுமை

ஒருமுறை தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள் வெஸ்டர்ன் யூனியன்  நிறுவனத்திற்கு ஒரு இயந்திரம் வடிவமைத்து கொடுத்தார்.  அவருக்கு அந்த இயந்திரத்திற்கு என்ன விலை நிர்ணயம் செய்வது என்று ஒரே குழப்பமாக இருந்தது.

அவரும்,அவரது மனைவியும் அந்த விலை நிர்ணயத்தை பற்றி விவாதித்தார்கள்.

எடிசனின் மனைவி " 20000 டாலர் கேளுங்கள்" என்றார்.எடிசன் "இந்த தொகை அதிகமாக இருந்தால் நமது இயந்திரத்தை வேண்டாம் என்று சொல்லி விட்டால் என்ன செய்வது" என்று யோசித்தார்.

பணத்தை தருவதற்காக, மூத்த அதிகாரி ஒருவரை  வெஸ்டன் யூனியன் நிறுவனம் அனுப்பி இருந்தது. அதிகாரி எடிசனிடம், "இயந்திரம் என்ன விலை"? என்று கேட்டார்.

எடிசன் ஒன்றும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாகவே இருந்தார். பொறுமை இழந்த அதிகாரி," எடிசன் சார், இதோ உங்களது இயந்திரத்திற்கான  விலை நூறாயிரம் டாலர்கள் இதோ உங்கள் இயந்திரத்திற்கான முதல் தவணை தொகை இது" என்று காசோலையை  எடிசனிடம், கொடுத்துவிட்டு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.

அவசரப்படாமல் பொறுமை காத்த எடிசனுக்கு நான்கு மடங்கு லாபம் ஏற்பட்டது. அவசரம் நமக்கு சிப்பிகளை தரலாம்.ஆனால் பொறுமையே நமக்கு முத்துக்களை தரும். பொறுமை அனுபவத்தின் வெளிப்பாடு அதுவே நம் வாழ்க்கையில் ஏற்படும்  துன்பங்களைத் துடைக்கும்  துடுப்பாய் பயன்படும்.


இன்றைய செய்திகள்

24.07.2024

🔖கற்பித்தல், பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.

🔖ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 77 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அனைத்து அருவிகளும் முழுமையாக மூழ்கின.

🔖வங்கதேசத்தில் சிக்கித் தவித்த தமிழக மாணவர்கள் 131 பேர் பாதுகாப்பாக சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

🔖மத்திய பட்ஜெட் 2024 எதிரொலி: தங்கம், வெள்ளி, செல்போன், காலணி விலை குறைகிறது.

🔖அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராகிறார் கமலா ஹாரிஸ்: 7 மணி நேரத்தில் ரூ.391 கோடி நன்கொடை குவிந்தது.

🔖மகளிர் ஆசிய கோப்பை வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனையாக வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீராங்கனை சமாரி அத்தபத்து.

🔖மகளிர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ. அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி.

🔖ஒலிம்பிக் தொடருடன் டென்னிஸ் போட்டியிலிருந்து ஓய்வு - ஆண்டி முர்ரே அறிவிப்பு.


Today's Headlines

🔖Teachers should not be engaged in other work except teaching, school administration: High Court Madurai branch ordered.

🔖  Water flow into Okanagal Cauvery River is increased to 77,000 cubic feet : All waterfalls completely submerged.

🔖131 Tamil Nadu students who were stranded in Bangladesh have been safely brought to Chennai.

🔖Union Budget 2024: Gold, Silver, Cellphone, Footwear Prices Drop.

🔖 Kamala Harris is becoming the Democratic Party candidate in the US presidential election: 391 crores of donations were accumulated just in 7 hours.

🔖Sri Lankan player Samari Athapatthu made history by becoming the first female player to score a century in the history of Women's Asia Cup.

🔖Women's Asia Cup:   A huge victory for Pakistan by defeating the UAE  team.

🔖Andy Murray Announced his Tennis Retirement after  Olympic Series.

Prepared by

Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Joint Director Mr. Pon Kumar's speech was of very low quality - Teachers' Fedaration condemned

முறைசாராக் கல்வி இணை இயக்குநர் திரு.பொன்.குமார் அவர்களின் பேச்சு மிகவும் தரம் தாழ்ந்தது - ஆசிரியர் கூட்டணி கண்டனம்  Joint Director Mr. Pon K...