கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு SMC மறுகட்டமைப்பு அறிமுகக் கூட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் செய்தி & காணொளிகள்...



பள்ளி மேலாண்மைக் குழு SMC மறுகட்டமைப்பு அறிமுகக்  கூட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறையின் செய்தி & காணொளிகள்...


அனைவருக்கும் பள்ளிக் கல்வித்துறையின் வணக்கங்கள்🙏. 


🛑🛑 ஆகஸ்ட் - 2ஆம் தேதி நம் பள்ளிகளில் நடைபெறவுள்ள SMC மறுகட்டமைப்பு அறிமுகக்  கூட்டத்தில் அனைவரும் பங்கேற்போம்!! 


📍நமது குழந்தைகளுக்கு தரமான கல்வியையும், பாதுகாப்பான பள்ளிச்சூழலையும் உறுதி செய்வது பள்ளி மேலாண்மைக் குழு. 


📍பள்ளி மேலாண்மைக் குழுவும், அரசின் பல்வேறு துறைகளும் இணைந்து, கடந்த 2 வருடங்களாக செய்த முயற்சிகளால், ஒவ்வொரு பள்ளியிலும் சிறியது முதல் பெரியது வரை பல குறிப்பிடும் படியான முன்னேற்றங்கள் நடந்துள்ளன.  


📍பெற்றோர்கள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் - உங்கள் அனைவரையும் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்🤝🤝


📌SMC மறுகட்டமைப்பு தொடர்பாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் காணொளி குறிப்பு⬇

https://youtu.be/pyYu8yURzfE


📌SMC மாவட்ட மாநாடுகளின் காணொளி தொகுப்பு ⬇️

https://youtu.be/WUi4VqoQCdQ


🏫அரசு உயர்நிலைப் பள்ளி, ஆயக்குடி SMC காணொளி ⬇️

 https://youtu.be/E25H-WJXEvY


 நம் பள்ளி !! நம் பெருமை !! 

📞மேலும் தகவலுக்கு 14417


Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்...

 


Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள் & மாணவர்கள் பெயர்...


Dear team,


மாணவர் கற்றல் ஆய்வு திட்டம் மூலம் மாணவர்களின் கற்றல் திறன்களை அறிந்து உதவும் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இதில் உங்கள் மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 4 பள்ளியின் 5 ஆம் வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களிடம் Google Meet மூலம் மதிப்பீடு நடத்தப்படும். 


▪மதிப்பீடு நடத்தப்படும் தேதி, நேரம், meeting link மற்றும் SOP document ஆகியவை பள்ளி தலைமை ஆசிரியருக்கு  WhatsApp  மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. 


▪தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் விவரம் பள்ளிகளுக்கு DC மூலமாக தெரியப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


▪இத்துடன் இணைக்கப்பட்டுள்ள sheet -ல், மாணவர்களின் பட்டியல், மதிப்பீடு நடத்தப்பட வேண்டிய schedule இணைக்கப்பட்டுள்ளது. 


இந்த தகவலை பட்டியலில் உள்ள பள்ளிகளுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.



>>> Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பு ஆய்வு செய்யப்படும் பள்ளிகள்...



>>> Google meet மூலம் தமிழ்நாடு முழுவதும் 5 ஆம் வகுப்பில் ஆய்வு செய்யப்படும் மாணவர்கள் பெயர்...



>>> கையடக்க கணினி மூலம் இணைய வழியில் மாணவர்கள் கற்றல் ஆய்வு திட்டம் (தொடக்கப் பள்ளிகள்) - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... 

மாவட்டங்கள் & ஒன்றியங்கள் வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம்...


 மாவட்டங்கள் & ஒன்றியங்கள் வாரியாக இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விவரம்...


SGT Vacant Places...

 


அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.2024...


 அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -6
ந.க.எண்‌. 001358/எம்‌1/1/2024, நாள்‌ 26.07.24

பொருள்‌ : பள்ளிக்கல்வி - அரசுப்பள்ளி மாணவ/மாணவியருக்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ 7.5% இடஒதுக்கீடு பெறுவதற்கு உறுதிச்‌ சான்றிதழ்‌ ( Bonafide Certificate ) அளித்தல்‌ குறித்து அறிவுரைகள்‌ வழங்குதல்‌ - சார்பாக

பார்வை 1. அரசாணை (நிலை) எண்‌.438 மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்துறை, நாள்‌ 29.10.2010

2. அரசாணை (நிலை) எண்‌:167 உயர்கல்வித்துறை, நாள்‌ 31.08.2021


பார்வையிற்காணும்‌ அரசாணைகளின்படி அரசுப்பள்ளிகளில்‌ பயின்ற மாணவ/மாணவியர்க்கு மருத்துவம்‌ மற்றும்‌ பொறியியல்‌ படிப்பில்‌ சேர்வதற்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு, அதற்காக அம்மாணவர்கள்‌ தாங்கள்‌ பயின்ற பள்ளிகளில்‌ உறுதிச்சான்றிதழ்‌  (Bonafide Certificate ) பெறுவதற்கு அணுகும்போது அவற்றை வழங்குவதற்கு காலதாமதம்‌ ஏற்படுவதாக தெரிய வருகிறது. அம்மாணவர்கள்‌ 6-8 ஒரு பள்ளியிலும்‌, 9-12 வகுப்புகள்‌ வேறு பள்ளியிலும்‌ பயின்றுள்ள நிகழ்வுகளில்‌ கடைசியாக பயின்றுள்ள பள்ளியிலிருந்து மேற்படி சான்றிதழ்கள்‌ உடன்‌ வழங்கப்படாமல்‌ காலதாமதம்‌ ஏற்படுவதாகவும்‌ தெரிகிறது.

எனவே, இதுபோன்று வெவ்வேறு பள்ளிகளில்‌ பயின்ற மாணவர்கள்‌ சார்பான விபரங்களை கல்வி மேலாண்மை தகவல்‌ மையத்‌ (EMIS) தளத்திலிருந்து பெற்று அதனடிப்படையில்‌ மேற்படி உறுதிச்‌ சான்றிதழை (Bonafide Certificate ) எவ்வித தாமதமின்றி உடனுக்குடன்‌ சம்பந்தப்பட்ட மாணவ/மாணவியர்களுக்கு வழங்கிடுமாறு சார்ந்த பள்ளித்‌ தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்குமாறும்‌ மேற்படி சான்றிதழை சார்ந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ உடன்‌ மேலொப்பம்‌ செய்து வழங்குமாறும்‌ அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்‌வி இயக்குநர்‌.


பெறுநர்‌

அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌

நகல்‌

திரு. மகேஷ்‌, Chief Technical Officer

கல்வி மேலாண்மை தகவல்‌ மையம்‌ (EMIS)
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, சென்னை - 6.

டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க 29.07.2024 வரை கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதுக்கு விண்ணப்பிக்க 29.07.2024 வரை கால அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


27.07.2024 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...

 

 

இன்றைய 27.07.2024 கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் விவரம்...




பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் - தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-07-2024...


 பட்டதாரி ஆசிரியர் மாறுதல் ஆணை - பணியில் இருந்து விடுவிக்க தெரிவித்தல் -  தொடக்கக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 25-07-2024...





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Magizh Mutram - House System Handbook Manual - Tamil Nadu Government School Education Department Released

மகிழ் முற்றம் - கையேடு - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை வெளியீடு - தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மகிழ் முற்றம் சார்ந்து அமைக்கப்பட...