கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்று (10-09-2024) டிட்டோஜாக் TETOJAC சார்பாக நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ள சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு...

 

 இன்று (10-09-2024) டிட்டோஜாக் சார்பாக நடைபெற உள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட வாரியாக பங்கேற்க உள்ள  சங்கங்களின் மாநிலப் பொறுப்பாளர்கள் பெயர் பட்டியல் வெளியீடு...


Today (10-09-2024) the name list of the state officials of the associations who will participate district wise in the one-day symbolic strike demonstration to be held on behalf of TETOJAC...





மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024...

 

 மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024...


Transfer order in the interests of the District Education Officer and officers working in related posts - Issuance of amended transfer order - Proceedings of the Director of School Education, Rc.No.00768/A1/E1/2024, Dated 09.09.2024...



>>> பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -06.
முன்னிலை: முனைவர்‌.ச.கண்ணப்பன்‌
ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024

பொருள்‌: தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி - வகுப்பு IV-ன்‌ கீழ்‌ வரும்‌ மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு.

பார்வை: சென்ணை -06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ நக.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌. 20.08.2024.

பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ வழங்கப்பட்ட நிருவாக மாறுதலுக்கு கீழ்க்காணுமாறு திருத்திய ஆணை வழங்கப்படுகிறது. 


மேற்காணும்‌ திருத்திய மாறுதல்‌ பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌, முதன்மைக்கல்வி அலுவலர்களால்‌ நியமணம்‌ செய்யப்படும்‌ பொறுப்பு அலுவலர்களிடம்‌ தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடணடியாக புதிய பணியிடத்தில்‌ பணியில்‌ சேர வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..


தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ அறிவுத்தியுள்ளவாறு திருத்திய மாறுதல் ஆணை பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில்‌ உள்ள அரசு உயர்‌/ மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து பணியில்‌ மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம்‌ செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்படியும்‌  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

பணிவிடுவிப்பு / பணியில்‌ சேர்ந்த அறிக்கை மற்றும்‌ பொறுப்பு ஒப்படைப்புச்‌ சான்றிதழ்‌ (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும்‌, தொடர்புடைய இயக்ககம்‌ / முதன்மைக்கல்வி அலுவலர்‌ / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநருக்காக

பெறுதல்‌. 
சம்மந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌. 

நகல்‌

1. சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌

2. சம்மந்தப்பட்ட கருவூல அலுவலர்கள்‌ / மாவட்டக்‌ கருவூல அலுவலர்கள்‌

3. இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை -06.

4. இயக்குநர்‌, தனியார்‌ பள்ளிகள்‌ இயக்ககம்‌, சென்னை -06

5. அரசு செயலாளர்‌, பள்ளிக்கல்வித்‌ துறை, தலைமைச்‌ செயலகம்‌, சென்னை -09.


(தகவலின்‌ பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது)


2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு : புதிய பள்ளி நாட்காட்டி...


 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி (குறைக்கப்பட்ட வேலை நாட்கள்) வெளியீடு சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - இணைப்பு : புதிய பள்ளி நாட்காட்டி...







பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10-09-2024...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 10-09-2024  - School Morning Prayer Activities...


திருக்குறள்:

பால் :பொருட்பால்

அதிகாரம்: நட்பு

குறள் எண்:781

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு

பொருள்: நட்பைப் போல் செய்து கொள்வதற்கு அருமையானவை எவை உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை எவை உள்ளன?


பழமொழி :
An old man's sayings are seldom untrue.

மூத்தோர் சொல் பொய்ப்பது அரிது.


இரண்டொழுக்க பண்புகள் : 

1. வார்த்தையால் பேசுவதை விட வாழ்ந்து காட்டுவதே சிறப்பு எனவே சிறப்பான வாழ்க்கை வாழ முயற்சிப்பேன்

2. எல்லோருக்கும் உதவி செய்வது உன்னதமான வாழ்க்கை எனவே என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.


பொன்மொழி :

பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர், நீ இறக்கும் போது உன்னோடு தான் இருக்கும் . அதை உன் சாவிற்கு கொடுக்காமல் சரித்திரத்திற்கு கொடு"----ஹிட்லர்


பொது அறிவு :

1. சோழ நாடு உள்ளடக்கிய முதன்மை பகுதிகள் எவை?

விடை: திருச்சி, தஞ்சாவூர்

2. சங்க காலத்தில் நிலம் எத்தனை வகைகளாக இருந்தது?

விடை: 5


English words & meanings :

shame-அவமானம்,,

envy-பொறாமை


வேளாண்மையும் வாழ்வும் :

இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.


நீதிக்கதை

திருடர்களை ஏற்றமிறைக்க வைத்த தெனாலிராமன்

தெனாலிராமனின் வீட்டைச் சுற்றியிருந்த ஒரு பெரிய தோட்டம் கோடை காலத்தில் வறட்சி கண்டிருந்தது. தோட்டத்திலிருந்த ஆழமான கிணற்றில் இருந்து தண்ணீர் இறைப்பது தெனாலிராமனுக்குச் சிரமமாகவும், அதிக செலவை உண்டாக்கக் கூடியதாகவும் தோன்றியது.

நள்ளிரவு  ஆறு திருடர்கள் தெனாலி ராமனின் வீட்டில் திருடுவதற்காக கொல்லைப்புற தோட்டத்தில் மறைந்திருந்தார்கள். அதைத் தெனாலிராமன் ஜாடையாகக் கண்டதும்,அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வீட்டின் உள்ளே போனார்.

தன் மனைவியிடம் “ இந்தப் பஞ்சகாலத்தில் திருடர்கள் நம் வீட்டில் புகுந்து திருட வருவார்கள் ஆதலால் நம் வீட்டிலுள்ள பொன் பொருளையெல்லாம் பழைய பெட்டிகளில் வைத்து நம் தோட்டத்திலுள்ள ஆழமான கிணற்றில் போட்டு வைத்தால் பத்திரமாயிருக்கும்” என்று திருடர்களின் காதில் விழும்படி உரத்த குரலில் கூறிவிட்டு, பெட்டிகளில் கல்லையும் மண்ணையும் அள்ளிப்போட்டு மனைவியும் தானும் சிறு மகனுமாக அப்பெட்டிகளைத் தூக்கிச்சென்று கிணற்றுக்குள் தொப்பென்று போட்டான்.

அவன் வீட்டினுள் போனதும் திருடர்கள் ஆனந்தப்பட்டு பெட்டிகளை எடுப்பதற்காக கிணற்றிலுள்ள ஏற்றத்தில் பொழுது விடியும் வரை தண்ணீரை இறைத்து வெளியே விட்டுக் கொண்டிருந்தார்கள்.

தெனாலிராமன் தந்திரமாகத் தோட்டத்திற்குள் சிறு மண்வெட்டியுடன் ஓசைப்படாமல் வந்து திருடர்கள் இறைக்கும் தண்ணீரையெல்லாம் தோட்டத்திலுள்ள மரங்களுக்குப் பாத்திகளில் செல்லும்படி வெட்டிவிட்டான்.

பொழுது விடிந்து மக்கள் நடமாட்டம் தொடங்கும் நேரத்தில் தெனாலி ராமன் திடீரென்று, “ஐயா! நல்லவர்களே நீங்கள் தண்ணீயிறைத்தது போதும்! மரங்களுக்கெல்லாம் தண்ணீர் பாய்ந்து விட்டது!  பொழுது விடியப் போகிறது

ஆகையால் பத்திரமாகப்  வீட்டுக்குச் போய்ச் சேருங்கள்!” என்று கூவிச் சிரித்தான்.

அதைக்கேட்ட திருடர்கள் திடுக்கிட்டு, மன்னரிடம் பிடித்து கொடுத்து விடுவாரோ என்று பயந்து ஓடிவிட்டார்கள்.


இன்றைய செய்திகள்

10.09.2024

* தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒரு முதியோர் இல்லம் அமைக்கும் பணியை 6 மாதத்தில் தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* ஐஏஎஸ் பயிற்சி முடித்த அதிகாரிகள் 10 பேருக்கு தமிழகத்தில் பணி: தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவு.

* சாகித்திய அகாதமி விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர் பேராசிரியர் கா. செல்லப்பன் மறைவு. முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் இரங்கல்.

* மத்திய அரசின் குடியிருப்பு கல்வி திட்டத்துக்கான ‘சிரஸ்தா’ நுழைவுத் தேர்வு குறித்து பெருமளவில் விளம்பரப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

* வெள்ளம் பாதித்த பகுதிகளில் வறட்சி; வறட்சி பகுதிகளில் வெள்ளம் என பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் தலைகீழ் மாற்றம்: ஐபிஇ குளோபல் மற்றும் எஸ்ரி- இந்தியா என்ற அமைப்பு ஆய்வில் தகவல்.

* அல்ஜீரிய நாட்டின் அதிபராக டெபோன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தலைவராக இந்தியாவின் ரந்தீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

* ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி: ஜப்பானை பந்தாடி 2-வது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

* மகளிர் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்தார் இங்கிலாந்தின் பியூமண்ட்.


Today's Headlines

* The Madurai branch of the High Court has directed the Tamil Nadu government to start the construction of an old age home per district in 6 months.

* Chief Secretary Muruganandam orders 10 IAS officers to work in Tamil Nadu

* Sahitya Akademi award winning translator Prof. Chellappan passed away. Chief Minister Mr. M.K. Stalin gave his obituary for him.

*  The Madurai branch of the High Court has ordered that the  'Chirastha' entrance examination for Central Govt's  residential education program should be widely advertised.

* Drought in flood affected areas; floods in drought areas:Reversal of climate change in India as per  IPE Global and Esri- India organization's report on study.

* Debon re-elected as Algerian president.

* India's Randhir Singh has been elected as the President of the Olympic Council of Asia.

* Asian Champions Cup Hockey: India beat Japan and made its 2nd win.

* Women's Cricket: England's Beaumont ranks 3rd in the massive record list.



Prepared by

Covai women ICT_போதிமரம்


கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷாவின் அடியில் சிக்கிய தாயை காப்பாற்றிய துணிச்சலான பள்ளி மாணவி...




 மங்களூரு அருகே தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை ஒற்றை ஆளாக தூக்கிய சிறுமி...


சாலையை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ பெண் மீது மோதி விபத்து...


தனது முழு பலத்தை பயன்படுத்தி ஆட்டோவை தூக்கி தாயை காப்பாற்றிய சிறுமி...


14 வயது சிறுமி தாயை காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவல்...



1.30 நிமிடத்திற்கு மேல்...


>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



கர்நாடகாவில் கவிழ்ந்த ஆட்டோ ரிக்ஷாவின் அடியில் சிக்கிய தாயை காப்பாற்றிய துணிச்சலான பள்ளி மாணவி...


 சிசிடிவியில் சிக்கிய வியத்தகு மீட்பு நடவடிக்கையில், மங்களூருக்கு அருகிலுள்ள கினிகோலியில் ஒரு பள்ளி மாணவி, தனது தாயையும் மற்றொரு பயணியையும் காப்பாற்ற கவிழ்ந்த ஆட்டோ ரிக்‌ஷாவை தூக்கி அற்புதமான துணிச்சலை வெளிப்படுத்தினார். 


35 வயதான சேதனா தனது மகளை டியூஷன் சென்டரில் இருந்து அழைத்துச் செல்வதற்காக சாலையைக் கடக்கும்போது ஆட்டோ ரிக்ஷாவில் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 


ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், வாகனம் கவிழ்ந்து சேதனா ஆட்டோவின் அடியில் சிக்கினார். விபத்தை நேரில் பார்த்த இளம்பெண், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆட்டோ ரிக்ஷாவை வீரத்துடன் தூக்கியதால், அவரது தாயும் மற்றொரு பயணியும் தப்பினர். 


பலத்த காயம் அடைந்த சேதனா உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஓட்டுநருக்கும் மற்ற பயணிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. சிறுமியின் துணிச்சலான செயலின் காட்சிகள் வைரலாக பரவி, நாடு முழுவதும் பரவலான பாராட்டைப் பெற்றன.



 Brave schoolgirl rescues mother trapped under overturned auto-rickshaw in #Karnataka


In a dramatic rescue caught on CCTV, a schoolgirl in Kinnigoli, near #Mangalore, displayed remarkable bravery by lifting an overturned auto-rickshaw to save her mother and another passenger.


The accident occurred when 35-year-old Chetana was hit by the auto-rickshaw while crossing the road to pick up her daughter from a tuition center. The driver lost control, causing the vehicle to overturn and trap Chetana underneath.


Witnessing the accident, the young girl rushed to the scene and heroically lifted the auto-rickshaw, enabling her mother and another passenger to escape. Chetana, who suffered critical injuries, was quickly taken to the hospital. The driver and the other passenger sustained minor injuries.


The footage of the girl's courageous act has gone viral, earning widespread admiration across the country.


விற்பவருக்கு ஒரு கண் போதும்... வாங்குபவருக்கு பல கண்கள் வேண்டும் - இன்றைய சிறுகதை...


விற்பவருக்கு ஒரு கண் போதும்... வாங்குபவருக்கு பல கண்கள் வேண்டும் - இன்று ஒரு சிறு கதை - Today's Short Story...


 கந்தன் வெளிநாட்டிலிருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார்,. அப்போது அங்கே வந்த கடம்பன் கேட்டார்.. " மணி என்ன ஐயா?"


கந்தன் இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு..


"ஆறாக 10 நிமிடம் இருக்கு".


"வாவ். உங்க கடிகாரம் நல்லா இருக்கு . எங்க வாங்கினீங்க்?"


"நன்றி. இது நானே டிசைன் பண்ணின கடிகாரம்... இங்க பாருங்க" என்று தன் வாட்சைக் காட்டினார் கந்தன் . ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது அந்த வாட்ச். அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த கடம்பனுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கிறேன் என்று டிராக் பண்ணிக்கொண்டே இருக்கும்". அதோட பல நகரங்களின் தெளிவான வரைபடம்(map), இரவு விளக்கு, மேப்பை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் புரொஜெக்டர் திறன், அதில் இருந்த லேசர் பாயிண்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்த கடம்பன் அசந்து போய் விட்டார்.


"நீங்களே டிசைன் பண்னினது என்று சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"


"இல்ல . இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகவில்லை. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன விசயங்கள் எல்லாம் சரி செய்ய வேண்டி இருக்கு"


"நீங்க வேற தயார் பண்ணிக்கோங்க.. . இந்த கடிகாரத்தை எனக்கு விலைக்கு தாங்க"


"இல்லை ஐயா"


"ரூ. 10 ஆயிரம் தர்றேன் சார்"


"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகவில்லை"


"சரி. ஒரே விலை 15000'


"சொன்னா கேளுங்க.."


"ம்ஹீம். 25000 ரூபாய்.. இப்பவே தாங்க"


"இல்ல...."


"ம் . ஒண்ணும் பேசாதீங்க. 40000. இப்ப என்ன சொல்றீங்க?"


"அட உண்மையாவே இது இன்னும் முழுசா....."


"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி விலை 50,000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"


கந்தன் யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்ச்சுக்கு செலவழித்தது ரூ.10000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ 50000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் கந்தன் அவரிடம் இருந்து 50000 வாங்கிக் கொண்டு கடிகாரத்தைக் கழட்டிக் கொடுத்தார். வாங்கிய கடம்பன் ஆனந்தமாய் கையில் கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.


"ஹலோ ஒரு நிமிசம்" என்று கந்தன் கூப்பிட்டார் .


கடிகாரத்தை வாங்கிய கடம்பன், "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப கந்தன் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி சொன்னார்....


"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"



2024-25ஆம் ஆண்டிற்கான திருத்திய கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு...


 2024-2025ஆம் ஆண்டிற்கான திருத்திய கல்வியாண்டு நாட்காட்டி வெளியீடு...



Release of Revised Academic Year Calendar for 2024-25...


பள்ளி நாட்காட்டி...


பயிற்சி நாட்காட்டி...


கால அட்டவணை...


உயர்கல்வி வழிகாட்டி வகுப்பு கால அட்டவணை...


மனநலம் மற்றும் வாழ்வியல் திறன் வகுப்பு கால அட்டவணை...


உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கால அட்டவணை...


செய்முறை பாடத்திட்டக் கால அட்டவணை...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



School Calendar... 


Training calendar... 


Time table... 


Higher Education Guide Class Time Table... 


Mental Health and Life Skills Class Time Table... 


Hi Tech Lab Time Table... 


Practical Syllabus Time Table...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...