கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024...

 

 மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு - பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024...


Transfer order in the interests of the District Education Officer and officers working in related posts - Issuance of amended transfer order - Proceedings of the Director of School Education, Rc.No.00768/A1/E1/2024, Dated 09.09.2024...



>>> பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌, சென்னை -06.
முன்னிலை: முனைவர்‌.ச.கண்ணப்பன்‌
ந.க.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌.09.09.2024

பொருள்‌: தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி பணி - வகுப்பு IV-ன்‌ கீழ்‌ வரும்‌ மாவட்டக்கல்வி அலுவலர்‌ மற்றும்‌ அதனையொத்த பணியிடங்களில்‌ பணிபுரியும்‌ அலுவலர்களுக்கு நிருவாக நலன்‌ கருதி மாறுதல்‌ ஆணை வழங்கப்பட்டமை - திருத்திய மாறுதல்‌ ஆணை வழங்குதல்‌ - சார்பு.

பார்வை: சென்ணை -06, தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின்‌ செயல்முறைகள்‌ நக.எண்‌.00768/அ1/இ1/2024, நாள்‌. 20.08.2024.

பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ வழங்கப்பட்ட நிருவாக மாறுதலுக்கு கீழ்க்காணுமாறு திருத்திய ஆணை வழங்கப்படுகிறது. 


மேற்காணும்‌ திருத்திய மாறுதல்‌ பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர்கள்‌, முதன்மைக்கல்வி அலுவலர்களால்‌ நியமணம்‌ செய்யப்படும்‌ பொறுப்பு அலுவலர்களிடம்‌ தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடணடியாக புதிய பணியிடத்தில்‌ பணியில்‌ சேர வேண்டும்‌ என அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..


தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌ பார்வையில்‌ காணும்‌ செயல்முறைகளில்‌ அறிவுத்தியுள்ளவாறு திருத்திய மாறுதல் ஆணை பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில்‌ உள்ள அரசு உயர்‌/ மேல்நிலைப்‌ பள்ளி தலைமையாசிரியர்களிலிருந்து பணியில்‌ மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம்‌ செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்படியும்‌  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.

பணிவிடுவிப்பு / பணியில்‌ சேர்ந்த அறிக்கை மற்றும்‌ பொறுப்பு ஒப்படைப்புச்‌ சான்றிதழ்‌ (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும்‌, தொடர்புடைய இயக்ககம்‌ / முதன்மைக்கல்வி அலுவலர்‌ / மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்‌ எனவும்‌ தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக் கல்வி இயக்குநருக்காக

பெறுதல்‌. 
சம்மந்தப்பட்ட மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌. 

நகல்‌

1. சம்மந்தப்பட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்‌

2. சம்மந்தப்பட்ட கருவூல அலுவலர்கள்‌ / மாவட்டக்‌ கருவூல அலுவலர்கள்‌

3. இயக்குநர்‌, தொடக்கக்‌ கல்வி இயக்ககம்‌, சென்னை -06.

4. இயக்குநர்‌, தனியார்‌ பள்ளிகள்‌ இயக்ககம்‌, சென்னை -06

5. அரசு செயலாளர்‌, பள்ளிக்கல்வித்‌ துறை, தலைமைச்‌ செயலகம்‌, சென்னை -09.


(தகவலின்‌ பொருட்டு பணிந்தனுப்பப்படுகிறது)


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...