கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test..

 

சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test..


#முதலாளி: நீ flightல போய்கிட்டு இருக்க, அதில் 50 செங்கல் இருக்கு, அதில் ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?


#வேலையாள்: 49 இருக்கும்.


முதலாளி:   ஒரு யானையை எப்படி 3 Stepல fridgeக்குள் வைப்பது?


வேலையாள்:  Fridgeஐ திறக்கனும், யானையை உள்ளே வைக்கணும், fridgeஐ மூடணும்.


 ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?


fridgeஐ திறக்கணும், யானையை வெளியே எடுக்கணும், மானை உள்ள வைக்கணும், fridgeஐ மூடணும்.


அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல.. அது எது?


 மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.


முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க.?


 தாரளமாக கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சு.


 ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க எப்படி?


🤔🤔🤔


குளத்தில் மூழ்கிட்டாங்க..


Boss: அதான் இல்ல, முதல்ல flightல இருந்து ஒரு செங்கலை தூங்கி போட்டே இல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு....

இப்படி கவனம் இல்லாம நீ வேலை பார்த்துட்டு இருக்க, இந்த லட்சணத்தில்  உனக்கு சம்பளம் வேற கூட்டி கேக்குற.. ஒழுங்கா கவனமா வேலைய பார், இல்லைனா சீட்டு கிழிஞ்சிரும்...


🥺🥺🥺🥺🥺


#நீதி:

நிர்வாகம்  கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது...


12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...



 12 கோடி பண மோசடி வழக்கில் வட்டாரக் கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர் கைது...


திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் சித்ரா 12 கோடி  பண மோசடி வழக்கில் தர்மபுரி குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவருடைய கணவர் செல்வம் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் ஆகிய மூன்று பேர் கைது.


சி.சித்ரா, BEO வருகிற July-2025-ல் ஓய்வு பெறவுள்ள நிலையில்...


தனியார் பள்ளி ஆரம்பிக்க பல ஆசிரியர்களிடம் கோடிக் கணக்கில் வசூல் வேட்டை நடத்தி, அது தொடர்பான நிதி மோசடி வழக்கில் தர்மபுரி Economic Wing காவல்துறையினரால் நேற்று இரவு 9.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்...


லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான Pager கருவிகள் - 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயம் - இஸ்ரேல் காரணமா..?

 


லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர் கருவிகள் - 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயம் - இஸ்ரேல் காரணமா..?


லெபனான் நாட்டில் ஒரே நேரத்தில் வெடித்த கருப்பு பேஜர் கருவிகள்...


ஹெஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதல் என தகவல்.


லெபனான் நாடு முழுவதும் நேற்று நடந்த பேஜர் வெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழப்பு. 2750 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்.


தகவல் தொடர்பு சாதனமான பேஜர்-ன் ரேடியோ சிக்னல்களை மறித்து, இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது.


தெரியாத மனிதர்களால் லெபனான் முழுவதும் 1000 பேஜர்கள் வெடித்தன. 


ஒரே தடவையில் சுமார் 5 ஆயிரம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். 


முழு அதிர்ச்சியில் அல் ஜசீரா, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா!!. 


ஹமாஸ் & ஹிஸ்புல்லா இயக்கத்தினருக்கு இதை யார் செய்தது என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.



தெரியாத மனிதர்களால் லெபனான் முழுவதும் 1000 பேஜர்கள் வெடித்தன.


ஒரே தடவையில் சுமார் 5 ஆயிரம் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர்.


முழு அதிர்ச்சியில் அல் ஜசீரா, ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா!!


இஸ்ரேலுக்கு மகத்தான வெற்றி. ஹமாஸ் & ஹிஸ்புல்லா இன்று அதை செய்தது யார் என்பது பற்றி எந்த துப்பும் கிடைக்கவில்லை.


எச்சரிக்கை:

பின்வரும் காணொளிகள் மனதுக்கு சங்கடம் ஏற்படுத்தலாம். மென்மனம் கொண்டவர்கள் காணொளிகளை தவிர்த்து விடுங்கள்...



பேஜர் வெடிக்கும் காணொளி 1...



பேஜர் வெடிக்கும் காணொளி 2...

ஷாப்பிங் செய்யும் போது அவரது பேஜர் வெடித்ததால் காயமடைந்த ஹிஸ்புல்லாவின் மற்றொரு வீடியோ





 காயமடைந்தவர்களுக்கு  மருத்துவமனையில்  சிகிச்சை...

லெபனானில் நூற்றுக்கணக்கான ஹிஸ்புல்லா செயற்பாட்டாளர்களின் பேஜர்கள் ஒரே நேரத்தில் தகர்க்கப்பட்டதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.



பெய்ரூட்: லெபனானில் நடைபெற்ற பேஜர் தாக்குதலுக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. லெபனான் சூழலையடுத்து இஸ்ரேலில் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. லெபனானில் நடைபெற்ற பேஜர் வெடி விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்த நிலையில் 2,750 பேர் காயமடைந்துள்ளனர். தங்கள் பெயரை பயன்படுத்தி ஐரோப்பிய நிறுவனம் பேஜர் தயாரித்ததாக தைவானை சேர்ந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.



லெபனானில் அடுத்தடுத்து வெடித்து சிதறிய தகவல் தொடர்பு சாதனங்கள்.. ஆயிரம் பேர் காயம்...சைபர் தாக்குதலின் பின்னணி என்ன?

லெபனானில் பேஜர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்து சிதறியதில் ஹில்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1000 பேர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


டெல்அவிவ் (இஸ்ரேல்): லெபனானில் பேஜர் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதில் ஹில்புல்லா அமைப்பை சேர்ந்தவர்கள் சுமார் 1000 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று அரேபியா செய்திகளை மேற்கோள்காட்டி லெபனான் குற்றம் சாட்டியுள்ளது.லெபனான், சிரியா உள்ளிட்ட நாடுகளில் ஹிஸ்புல்லா அமைப்பு தங்களுக்கு எதிராக ஆயுதத் தாக்குதலில் ஈடுபட்டதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில்  ஹில்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய பேஜர் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின.

இதில் ஹில்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 1.000 பேர் காயம் அடைந்துள்ளதாக அரேபிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிரியாவிலும் இதேபோன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், லெபனானுக்கான ஈரானிய தூதர் முஸ்தபா அமானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது இஸ்ரேலின் சைபர் தாக்குதல் என்று லெபனான் குற்றச்சாட்டியுள்ளது. லெபனானின் இக்குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை.லெபனானின் வடக்கு எல்லைப் பகுதியில் வசிக்கும் 60 ஆயிரம் இஸ்ரேலியர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நோக்கில், அக்குடியிருப்பு மீது ஹில்புல்லா அமைப்பு தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு நாளைக்கு சராசரியாக 40 ராக்கெட்டுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்றும், இதுவரை 6,700 ராக்கெட் மற்றும் ட்ரோன்களை கொண்டு அங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் இஸ்ரேல் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில், லெபனானில் இன்று நூதன தாக்குதல் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.



உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் - Local Body Election மாநில தேர்தல் ஆணையம் கடிதம்...


 உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம் -  மாநில தேர்தல் ஆணையம் கடிதம்...


Local Body Election - State Election Commission Letter...



புதுச்சேரியில் 18-09-2024 அன்று 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை...


 புதுச்சேரியில் 18-09-2024 அன்று 1-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது...


புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.


மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இந்தியா கூட்டணி பந்த் அறிவித்த நிலையில் விடுமுறை.


புதுவையில் கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. மக்களவைத் தேர்தல் குறுக்கிட்டதால், மின் கட்டண உயர்வை அரசு நிறுத்தி வைத்தது. தேர்தல் முடிந்த பின் ஜூன் 16-ம் தேதி முன்தேதியிட்டு மின் கட்டண உயர்வை அரசு அமல்படுத்தியது. மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் கடந்த 2-ம் தேதி ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, விநாயகர் சதுர்த்திக்கு பிறகு 18-ம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்தனர்.


இதையடுத்து, உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 85 பைசா மானியம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனாலும், முழுமையாக மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை புதன்கிழமை புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் என மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.


இதையொட்டி வணிகர்கள், பேருந்து உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் என பல தரப்பினரிடமும் இந்தியா கூட்டணி கட்சியினர் ஆதரவு திரட்டினர். பந்த் போராட்டத்தால்  பேருந்துகள் ஓடாது. இந்த நிலையில்,  1-8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக ரங்கசாமி அறிவித்துள்ளார்.


தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் - AI மூலம் கலைஞர் உரை - காணொளி...

 தி.மு.க. முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில் - செயற்கை நுண்ணறிவு AI Artificial Intelligence தொழில்நுட்பம் மூலம் கலைஞர் உரை - காணொளி...




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் - EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-09-2024...


 உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி Career Guidance பெற்ற ஆசிரியர்கள் - EMIS இணையதளத்தில் பதிவு செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள், நாள் : 14-09-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...