கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10th Std Public Exam - Answer Sheet Stitching - Instructions to HMs - DGE Letter


மார்ச் / ஏப்ரல்-2025 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள்,  / தலைமையாசிரியர்கள் - விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம்


MARCH- APRIL 2025 SSLC EXAM - TOP SHEET - ANSWER SHEET instruction for chief superintendent - Head Master


March / April-2025 10th Class Public Examination - Examination Center Principal Superintendents, / Headmasters - Stitching of Covering Sheet with Answer Sheet - Instructions Regarding - Letter from Director of Government Examinations



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


Changes made in UG NEET – 2025 Exam

 

 

UG NEET - 2025 தேர்வில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் - தேசிய தேர்வு முகமை Natoinal Testing Agency NTA Public Notice 


Changes made in UG NEET – 2025 Exam - NTA Public Notice 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




NEET 2025 UPDATE

26.01.2025


2019 முதல் நடைபெறும் NEET தேர்வு

180 கேள்விகள் Phy45 Che 45 Bio 90

180 நிமிடம் (3 மணி நேரம்)


என நடைபெற்று வந்த நிலையில் Covid பெருந்தொற்று காரணமாக 200 கேள்விகளாக மாற்றப்பட்டிருந்தது.


மீண்டும் இந்த ஆண்டு NEET 2025 தேர்வு 180 கேள்விகள் 180 நிமிடங்கள் என்ற பழைய முறைப்படியே நடத்தப்படும் என NTA அறிவித்துள்ளது. அறிவிப்பு நாள் 25.01.2025. தேவைப்படுவோருக்கு தெரிவிக்கவும். நன்றி.



28-01-2025 - School Morning Prayer Activities

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-01-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால் : பொருட்பால்

அதிகாரம் குடிமை

குறள் எண்:957

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண மறுப்போல் உயர்ந்து.

பொருள்: விண்நிலவு களங்கம் போல், உயர்குடி பிறந்தோர் குற்றம் ஊருக்குத் தெரிந்துவிடும்.


பழமொழி :
செய்வன திருந்தச் செய். 

Do well what you have to do.


இரண்டொழுக்க பண்புகள் :  

*எனது பெற்றோர் பெருமைப்படக்கூடிய வகையில் நான் நன்கு படிப்பேன்.

*எனது பெற்றோரும் ஆசிரியரர்களும் தரக்கூடிய ஆலோசனைகளை கேட்டு நடப்பேன்.


பொன்மொழி :

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அது போலத்தான் நாம் உயர்வதும் - அரிஸ்டாட்டில்


பொது அறிவு :

1. திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் எது?

விடை:  நெருஞ்சிப் பழம்.   

2. திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள்______,________

விடை: அனிச்சம் , குவளை


English words & meanings :

Dam.        -      அணை

Desert.      -     பாலைவனம்


வேளாண்மையும் வாழ்வும் :

பல நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வருவாய் பெருக்கம் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் உணவு தேவையை அதிகப் படுத்தி உள்ளது. விளைவு வேளாண்மை உற்பத்தி அதிகரிக்க வேண்டும்: அதற்கு நீர் தேவையும் அதிகரிக்கும்.


ஜனவரி 28

லாலா லஜபதி ராய் அவர்களின் பிறந்தநாள்

லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்


நீதிக்கதை

கிணற்றைத்தானே விற்றேன்

ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.

அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.

விவசாயிக்குக் கோபம் வந்தது."எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.

விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.

விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் நீதிபதியிடம் சென்று முறையிட்டான்.

நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால்கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.

விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவறுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.


இன்றைய செய்திகள்

28.01.2025

*தமிழகத்தில் பொது இடங்கள், சாலைகளில் உள்ள கட்சிக் கொடிக் கம்பங்களை 12 வாரத்தில் அகற்ற ஐகோர்ட் உத்தரவு.

* 'திறன்மிகு வகுப்பறை’ திட்டத்தின்கீழ் 7 மாதங்களில் 22,931 ஸ்மார்ட் போர்டுகளை அமைத்து பள்ளிக் கல்வித்துறை சாதனை.

* தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்தின்போது உயிரிழப்புகளைத் தவிர்க்க, மூங்கில் கழியால் உருவாக்கப்படும் சாலையோரத் தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

* உத்தராகண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.

* அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

* மகளிர் ஹாக்கி இந்தியா லீக்: ஒடிசா வாரியர்ஸ் சாம்பியன்.

* பிக்பாஷ் இறுதிப்போட்டி: சிட்னி தண்டரை வீழ்த்தி ஹோபார்ட் ஹரிகேன்ஸ் சாம்பியன்.


Today's Headlines

* Under the 'Efficient Classroom' program, 22,931 smart boards were set up in 7 months, a great achievement in record time in the school education department.

* Court order to remove party flag poles from public places and roads in Tamil Nadu within 12 weeks.

* Roadside barriers made of bamboo cuttings are being erected on national highways to avoid casualties during accidents.

* The General Civil Code came into force in the state of Uttarakhand from yesterday.

* President Donald Trump ordered to lift the embargo  on the supply of explosives to Israel by Former US President Joe Biden

* Women's Hockey India League: Odisha Warriors are champions.

* Big Bash Final: Hobart Hurricanes beat Sydney Thunder to become champions.


Covai women ICT_போதிமரம்


Adjournment of High School Headmaster promotion case in Supreme Court to 11.02.2025


உச்சநீதிமன்றத்தில் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழக்கு 11.02.2025க்கு ஒத்திவைப்பு


Adjournment of High School Headmaster promotion case in Supreme Court to 11.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO State Coordinators Meeting Decisions


ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


JACTTO GEO State Coordinators Meeting Decisions


04/02/2025 மாநில உயர்மட்டக்குழுக்கூட்டம் - திருச்சி


06/02/2025 மாவட்டத் தலைநகரங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம்


14/02/2025 வட்ட அளவில் மாலை நேர  ஆர்ப்பாட்டம்


25/02/2025 மாவட்டத் தலைநகரில் மறியல் போராட்டம்


- ஜாக்டோ ஜியோ


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting


ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து பொறுப்பாளர்கள் பேட்டி


State bearers Interview about the decisions taken at the JACTTO GEO High Level Committee meeting 





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்....



47,013 temporary posts converted into permanent posts by School Education Department G.O. Ms. No: 19, Dated: 27-01-2025

 

47,013 தற்காலிகப் பணியிடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 வெளியீடு


SSA, RMSA உள்ளிட்ட அனைத்து பணியிடங்களும் நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைப்பு. இனி  Pay continuation order தேவைப்படாது.


47,013 temporary posts converted into permanent posts issued by School Education Department Ordinance G.O. (Ms) No: 19, Dated: 27-01-2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



பள்ளிக் கல்வி இயக்குநரக ந.க.எண்ணுடன், தற்காலிகப் பணியிடங்களை  நிரந்தரப் பணியிடங்களாக மாற்றியமைக்கப்பட்ட அரசாணை (நிலை) எண் : 19, நாள்: 27-01-2025 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 பள்ளிக் கல்வித் துறையில் 47,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளீயீடு...


பள்ளிக் கல்வித் துறையில் 28,030 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் உள்பட 47,000 தற்காலிகப் பணியிடங்கள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளன.


அதேசமயம், 5,418 பணியிடங்களில் பணிபுரிபவா்கள் ஓய்வு பெறும்போது அவை ரத்து செய்யப்படும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதற்கான அரசாணையை பள்ளிக் கல்வித் துறைச் செயலா் சோ.மதுமதி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.


அரசாணையில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலா், மெட்ரிக் பள்ளி ஆய்வாளா், சட்ட அலுவலா் உள்பட 55 வகையான பணியிடங்கள் உள்ளன.



 இந்தப் பணியிடங்களில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிகமாக பணியாற்றும் பணியாளா்களை நிரந்தரம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 



இந்தக் குழுவின் கூட்டம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தற்காலிகமாக இருக்கக் கூடிய 52,578 பணியிடங்களில் 47,013 இடங்களை நிரந்தரப் பணியிடங்களாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டது.


பணி நிரந்தரம்: மேலும், ஆசிரியா் மற்றும் பல்வேறு ஆசிரியா் அல்லாத 5,418 தற்காலிக பணியிடங்களில் பணியாற்றுவோா் ஓய்வு பெற்றவுடன், அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யவும் முடிவு செய்யப்பட்டது. 



இந்த முடிவுகளை ஏற்று உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டுமென பள்ளிக் கல்வி இயக்குநா் சாா்பில் அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத 47,013 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்.


இதேபோன்று 5,418 பணியிடங்களில் ஊழியா்கள் ஓய்வு பெற்ற பிறகு ரத்தாகும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பட்டதாரி ஆசிரியா்கள் 28 ஆயிரம் போ்: நிரந்தரம் செய்யப்படும் பணியிடங்களில் முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள் 5,741, பட்டதாரி ஆசிரியா்கள் 28,030, கணினி பயிற்றுநா் 1,880 போ் உள்ளனா்.


ஆசிரியா் அல்லாத பணியிடங்களைப் பொருத்தவரையில், இளநிலை உதவியாளா்கள் 3,073 பேரும், ஆய்வக உதவியாளா்கள் 5,711 பேரும், தொழிற்கல்வி ஆசிரியா்கள் 3,035 பேரும் உள்ளனா். குறைந்தபட்சமாக உயா் கல்வி இயக்குநா், திட்ட ஒருங்கிணைப்பாளா், நிா்வாக அலுவலா், உதவி கணக்கு அலுவலா், உதவி இயக்குநா் (மின்ஆளுமை) போன்ற பணியிடங்களில் தலா ஒரு தற்காலிக பணியிடம் மட்டுமே உள்ளன. அரசின் உத்தரவால் அவை நிரந்தரம் செய்யப்பட்டுள்ளன.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

04-02-2025 - School Morning Prayer Activities

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities திருக்குறள்: பால்: பொருட்பால் அதிகாரம்: மானம் குறள்...