கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 06-02-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

பால்:பொருட்பால்            

அதிகாரம்: மானம்

குறள் எண்:964

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை.

பொருள்:
நற்குடிமக்கள் உயர்ந்த பண்பிலிருந்து இறங்கிய விடத்து தலையிலிருந்து உதிர்ந்த மயிரினைப் போல் இகழப்படுவர்.


பழமொழி :
தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்.

  Having ascertained your own ability , display it in the assembly.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

தீமை செய்வதற்கும் மட்டும் பயப்படு.

வேறு எந்த பயமும் உனக்கு வேண்டாம்

-- விவேகானந்தர்


பொது அறிவு :

1. சைக்கிளில் அலுவலகம் செல்வதற்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது?

விடை : நெதர்லாந்து. 

2. வாழை மரத்தின் ஆயுட்காலம் என்ன?

விடை :25 ஆண்டுகள் 


English words & meanings :

Path.   -    பாதை

Pond.     -    குளம்


வேளாண்மையும் வாழ்வும் :

இன்று உலக மக்கள் தொகையில் 40% மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


பிப்ரவரி 06

பெண் பிறப்புறுப்பு சிதைவுக்கான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை நாள் (FGM), ஆண்டுதோறும் பிப்ரவரி 6 அன்று அனுசரிக்கப்படுகிறது, இது முன்னேற்றத்தை முன்னிலைப்படுத்தவும் இந்த தீங்கு விளைவிக்கும் நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.


நீதிக்கதை

நன்றி மறவாத புலி

நெடு நாட்களுக்கு முன்பு அந்த காட்டில் இந்தப் புலி வசித்து வந்தது. ஒரு நாள் அது உறுமிக் கொண்டே நடந்து சென்றது. உறுமிக் கொண்டே செல்லும்போது, அது முள்ளின் மீது கால் வைத்தது, முள் குத்தியதில் வலியால் மிகவும் துடித்தது.

அது தானாகவே அந்த முள்ளை எடுக்க முயற்சி செய்தது. ஆனால் புலியால் அந்த முள்ளை எடுக்க முடியவில்லை. அது வலி தாங்க முடியாமல் மிகவும் கத்திக் கொண்டிருந்தது. அப்போது அந்த மனிதன் அந்த வழியாக வந்து கொண்டு இருந்தான். அவன் காதில் இந்த சத்தம் விழுந்தது.

“என்ன சத்தம் இது? ஏதோ ஒரு மிருகம் வலியால் துடித்துக் கொண்டிருப்பது போலிருக்கிறதே” என்று அந்த சத்தத்தை  கவனித்துக்கொண்டே புலி இருக்கும் இடத்திற்கு வந்தான்.

அந்தப் புலியை பார்த்து “அடக்கடவுளே! இது ஒரு புலி ஆச்சே..” என்று பயந்தான் இருந்தும் பாவம் பார்த்து அந்த புலிக்கு உதவ மனிதன் முன்வந்தான். மெதுவாக நடந்து அதன் அருகே சென்று அந்த முள்ளை புலியின் காலிலிருந்து எடுத்து விட்டான். புலி நன்றியோடு அந்த மனிதன் முகத்தில் நக்கிக் கொடுத்தது. அந்த மனிதனுக்கு எந்த ஒரு தீங்கும் செய்யாமல் அதன் வழியே சென்றது.

சில நாட்களுக்குப் பிறகு, கொள்ளைக்காரர்கள் அந்த காட்டுக்குள் வந்து விலங்குகளை

தூரத்தினர். அப்போது காட்டில் உள்ள வனவிலங்குகள் கிராமத்துக்குள் புகுந்தன. அதில் புலி ஒன்றும் இருந்தது.

மனிதன் ஒருவனைக் கண்ட புலி அந்த மனிதன் மீது பாயத் தயாராக இருந்தது. ஆனால் திடீரென்று நின்றுவிட்டது. அன்றைக்கு புலிக்கு உதவி செய்த அதே மனிதன் தான் அவர். வலிமையான அந்த புலி அந்த மனிதன் அருகே சென்று அவன் முகத்தில் நக்கிக் கொடுத்தது, அவரும் அந்த புலியை அன்புடன் அரவணைத்தார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த  கொள்ளைக்காரர்கள் அவர்கள் தவறை உணர்ந்தார்கள். அன்று முதல் புலியும் அந்த மனிதனும் மிக நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

நீதி : எந்த நல்ல செயல் செய்தாலும் அதற்கு உரிய பலன் கிடைக்கும்.


இன்றைய செய்திகள்

06.02.2025

* போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் கூடிய ஓய்வூதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

* பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வில் உடைந்த நிலையில் தங்கத்தின் சிறு பகுதியும், எலும்புமுனைக் கருவியும் கண்டெடுக்கப்பட்டன.

* சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றி வந்த அமெரிக்க விமானம் இந்தியா வந்தடைந்தது.

* காசாவை ‘கைப்பற்றும்’ ட்ரம்ப்பின் அறிவிப்புக்கு சீனா, சவுதி அரேபியா, துருக்கி கடும் எதிர்ப்பு.

* 38-வது தேசிய விளையாட்டு போட்டி:  பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழகத்தின் சதீஷ் கருணாகரன்  தங்கப்பதக்கம் வென்றார்.

* ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகி விருதை இந்தியாவின் தொடக்க வீராங்கனையான கோங்கடி திரிஷா பெற்றுள்ளார்.


Today's Headlines

* Pensions with increased dearness allowance have been credited to the bank accounts of transport pensioners.

* A small piece of broken gold and a bone-pointed tool were found in the ongoing excavations at the Golden Fort.

* A US flight carrying 104 Indians who had illegally immigrated to the US has arrived in India.

* China, Saudi Arabia and Turkey strongly oppose Trump's announcement to 'capture' Gaza.

* 38th National Games: Tamil Nadu's Satish Karunakaran wins gold medal in badminton men's singles.

* India's opening player, Gongadi Trisha, has won the player of the season award in the Junior Women's T20 World Cup.


Covai women ICT_போதிமரம்


Environment Clubs to be established in all schools - Chief Minister



 தமிழ்நாட்டின் எல்லாப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு


Environment forums to be established in all schools of Tamil Nadu - Announcement by Hon'ble Tamil Nadu Chief Minister Mr. M. K. Stalin



TERM - 2 ( 2024 - 2025 ) 1- 5 வகுப்புகளுக்கான CCE REGISTER ஐ தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

 TERM - 2 ( 2024 - 2025 ) 1- 5 வகுப்புகளுக்கான CCE REGISTER ஐ தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்



05-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 05-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்:பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:963

பெருக்கத்து வேண்டும் பணிதல்; சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

பொருள்: செல்வம் பெருகும் போது அடக்கம் வேண்டும். செய்வம் குறையும் போது இழிவற்ற பெருமிதம் வேண்டும்.


பழமொழி :
தருமமே தலை காக்கும்.

Charity guards the head.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

இந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல கைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான். -- மாவீரன் நெப்போலியன்


பொது அறிவு :

1. நிலவில் விளையாடிய முதல் விளையாட்டு எது?

விடை : கோல்ப். 

2. அடிடாஸ் எந்த நாட்டின் நிறுவனம்?

விடை : ஜெர்மனி


English words & meanings :

Mud.    -    சேறு

Ocean.    -   பெருங்கடல் / சமுத்திரம்


வேளாண்மையும் வாழ்வும் :

நீர் வளத்திற்கான தேவை மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் அதிகரிக்கிறது, அதனால்தான் நீர் மேலாண்மை முக்கியமானது.


பிப்ரவரி 05

கிறிஸ்டியானோ ரொனால்டோ அவர்களின் பிறந்தநாள்

கிறிஸ்டியானோ ரொனால்டோ டோசு சாண்டோசு அவேரோ (பிறப்பு: 5 பிப்ரவரி 1985) ஒரு போர்த்துகீசிய கால்பந்து வீரர் ஆவார். இவர் சவுதி புரோ லீக்கில் அல் நாசர் அணிக்காகவும், போர்ச்சுகல் தேசிய அணிக்காகவும் விளையாடுகிறார். ஒரு முன்கள வீரரான இவர் தான் விளையாடும் அணிகளின் தலைவராகவும் உள்ளார். ரொனால்டோ ஐந்து பாலோன் தி'ஓர் விருதுகளையும், மூன்று யுஇஎஃப்ஏ ஆண்டின் சிறந்த வீரர் விருதுகளையும், நான்கு ஐரோப்பிய தங்க காலணி விருதுகளையும் வென்றுள்ளார். இவர் ஏழு லீக் பட்டங்கள், ஐந்து யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு, யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கோப்பை மற்றும் யூஈஎஃப்ஏ பன்னாட்டு கூட்டிணைவு உட்பட 33 கோப்பைகளை வென்றுள்ளார்.


நீதிக்கதை

ஆணவம் அழிந்தது

போரில் வெற்றி பெற்ற  மன்னர் ஆணவம் கொண்டார் . தன்னை யாராலும் வெற்றி கொள்ள இயலாது என்பதால்  மன்னரின் ஆணவம் அதிகரித்தது.

அதன் முடிவாக பிறரை அவமானப்படுத்தி பேசுவதில் பெரு மகிழ்ச்சி கொண்டார். ஒருநாள் அரண்மனைக்கு வந்த துறவியை பார்த்து, "என்ன எருமை மாடு போல் நடந்து வருகிறீர்களே?"   எனக் கூறி சிரித்தார்.

துறவி சற்றும் கலங்கவில்லை.

மாறாக மன்னரைப் பார்த்து புன்னகைத்தபடியே, "நான் வணங்கும் கடவுளான புத்தரைப் போல் நீங்கள் இருக்கிறீர்கள்" என்று புகழ்ந்தார்.

தான் இகழ்ந்து பேசினாலும் தன் மீது கோபம் கொள்ளாத துறவியை பார்த்து மன்னர் வியந்தார்.

மன்னர் துறவியிடம், "நான் உங்களை இகழ்ந்து பேசியும் நீங்கள் என்னை புத்தர் என்று கூறுகிறீர்களே! ஏன்?"என்று கேட்டார்.

அதற்கு துறவி,"மன்னரே! நமது உள்ளம் போலவே இந்த உலகம் காட்சியளிக்கும் என்பார்கள். எனது உள்ளத்தில் புத்தர்  இருப்பதால் எங்கும் புத்தமயமாகவே காட்சியளிக்கிறது.அதைப்போல தாங்களும் சிந்தித்தால் தமக்கே புரியும் "என்று கூறினார்.

மேலும், துறவி,"இந்த உலகில்  தாழ்ந்தவரோ உயர்ந்தவரோ எவரும் இல்லை" என்றார் துறவியின் பேச்சைக் கேட்ட மன்னர் உண்மை விளங்கி தனது ஆணவத்தை கைவிட்டார்.


இன்றைய செய்திகள்

05.02.2025

* தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சூழல் மன்றங்கள் ஏற்படுத்தப்படும். காலநிலை கல்வியறிவுக்கென ஒரு கொள்கையை தமிழக அரசு விரைவில் வகுத்து அறிவிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

* புற்றுநோய் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவும் வகையில், நாட்டிலேயே முதல்முறையாக புற்றுநோய்க்கான மரபணு வரைபடத்தை சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது.

* தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்.

* சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை கடந்த நிதியாண்டில் இரண்டு லட்சம் உயர்ந்துள்ளது.

* தேசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷ் போட்டியில் தமிழக வீரர் தங்கம் வென்றார்.

* சென்னை ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இத்தாலி வீரர் வெற்றி.


Today's Headlines

* Chief Minister Stalin has said that the "Environment Club" will be created in all schools in Tamil Nadu. Soon a pilicey will be declared for the Environmental Education.

* In order to help with cancer research work, Chennai IIT has released for the first time in the country a cancer gene map.

* Rs.6,626 crore has been allotted for the Railway Projects which are going to be done at Tamil Nadu

* The number of Indian workers working in Saudi Arabia has risen by two lakhs in the last financial year.

* National Sports Tournament: Tamil Nadu player won gold in the squash competition.

* Chennai Open Tennis: Italian player won in the first round.


Covai women ICT_போதிமரம்


A committee formed to make recommendations regarding the appropriate pension scheme - TN Govt Press Release No: 271, Dated: 04-02-2025


உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு அமைப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு எண் : 271, நாள் : 04-02-2025


A committee consisting of officials to make recommendations to the government regarding the appropriate pension scheme - Tamil Nadu Government Press Release No: 271, Dated: 04-02-2025


மாநில அரசின் நிதி நிலையினையும், பணியாளர்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில் கொண்டு பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நடைமுறைப்படுத்தத் தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையினை அரசிற்கு அளித்திட  அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது


DIPR-P.R No.-271- TN Govt Press Release - Pension Scheme, Date - 04.02.2025



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



 தமிழக அரசு ஊழியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய குழு


பழைய ஓய்வூதியத் திட்டம் உள்பட மூன்று வகையான ஓய்வூதியத் திட்டங்களை ஆராய தமிழக அரசு குழு அமைந்துள்ளது.


ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங்பேடி உள்ளிட்ட 3 போ் கொண்ட குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு பரிந்துரை அறிக்கை அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: கடந்த 2003-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் மாநில அரசுப் பணியாளா்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதே தருணத்தில் மத்திய அரசுப் பணியாளா்களுக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும் மாநில அரசுப் பணியாளா்களுக்கு தொடா்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமே தொடர அனுமதிக்கப்பட்டது.


மாநில அரசுப் பணியாளா்கள் 01.04.2003-க்கு முன்பிருந்த திட்டத்தைச் செயல்படுத்த தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதனிடையே மத்திய அரசுப் பணியாளா்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 


குழு அமைப்பு: இந்நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய ஒரு குழு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் நிதிநிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க உரிய ஓய்வூதிய முறை குறித்து பரிந்துரையை அரசுக்கு அளிக்க 3 அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.


அதன்படி, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் முன்னாள் இயக்குநா் கே.ஆா்.சண்முகம், நிதித் துறை துணைச் செயலா் (பட்ஜெட்) பிரத்திக் தாயள் ஆகியோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.


இக்குழு தனது விரிவான அறிக்கை மற்றும் பரிந்துரையை ஒன்பது மாதங்களுக்குள் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


04-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 04-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:962.

சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

பொருள்: புகழொடு
மானமும் வேண்டுபவர், புகழில்லா இழிவான செயல் செய்யார்.


பழமொழி :
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. 

There is no words superior to one's father's advice.


இரண்டொழுக்க பண்புகள் :  

* எனது பாடங்களோடு ஒழுக்கம், நற்பண்பு, வாழ்வியல் கலைகளும் கற்றுக் கொள்ள முயற்சி எடுப்பேன்.

* சிறு வயதில் இரு சக்கர விரைவு வாகனங்கள் ஓட்டக்கூடாது போன்ற அரசாங்க கட்டுப்பாடுகளை நிச்சயம் கடைபிடிப்பேன்.


பொன்மொழி :

அதிர்ஷ்டம் என்பது நல்லநேரம் அல்ல.

உழைக்கும் நேரம்.


பொது அறிவு :

1. தேனீக்களுக்கு எத்தனை கண்கள் உள்ளன?

விடை : 5.   

2. பின் பக்கமாகவும் நீந்தும் உயிரினம் எது?

விடை : இறால்


English words & meanings :

Meadow.    -  புல்வெளி

Mine.      -     சுரங்கம்


வேளாண்மையும் வாழ்வும் :

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தண்ணீர் முக்கியமானது - அதற்கு மாற்றீடு எதுவும் இல்லை. எனவே நீர் மேலாண்மை மிக முக்கியமான ஒன்று ஆகும்.


பிப்ரவரி 04

லூயிஸ் பிரெய்ல் அவர்களின் பிறந்தநாள்

லூயிஸ் பிரெய்ல் (ஜனவரி-4, 1809. ஜனவரி-6, 1852, பிரான்ஸ்) பார்வையற்றவர்களுக்கான பிரெய்ல் எழுத்தினை உருவாக்கியவர். பிரெஞ்சுக்காரரான இவர் பார்வையற்றவர். பார்வையற்றவர்கள் தடவிப் பார்த்துப் படிக்க ஏற்ற பிரெய்லி எழுத்தினைக் கண்டுபிடித்தார். பிரெயில் முறையில் ஒன்று முதல் ஆறு புடைப்புப்புள்ளிகளையும் ஓட்டைகளையும் கொண்டு எழுதிய எழுத்துகளை விரல்களை வைத்துத் தடவுதலின் மூலம் இனங்கண்டு கொள்வர்.

உலக பிரெயில் நாள்

புற்றெழுத்து அல்லது பிரெயில் (Braille) என்கிற எழுத்து முறை 1821-இல் பார்வையற்றோர்க்குப் படிக்க உதவ லூயி பிரெயில் என்கிற பிரான்சியரால் உருவாக்கப்பட்ட எழுத்து முறை ஆகும். ஒவ்வொரு பிரெயில் எழுத்தும் ஆறு புள்ளிகள் கொண்டுள்ள செவ்வகக் கலம் ஆகும். புள்ளிகள் 6 இடநிலைகளில் எங்கேயும் உயர்த்தப்பட்டு (26), அதாவது 64 எழுத்துச் சேர்ப்புகள் உருவாக்கப்படலாம். சில இடங்களில் புள்ளிகள் உயர்த்தப்படாமல் அமையலாம். இலக்கணக் குறிகளுக்கு தனி எழுத்துகள் உண்டு.

பிரெயில் எழுத்து முறையின் கருத்தமைவு நெப்போலியன் கோரிக்கைக்கு ஏற்ப சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய இரகசிய தொடர்பு முறையில் தோற்றுவிக்கப்பட்டது. பாபேஜ் பார்வையற்றோர் கல்வி நிலையத்தில் லூயி பிரேயிலை சந்தித்து, லூயி பிரெயிலின் ஆலோசனைகளுக்கு ஏற்ப குறிமுறையை மாற்றி அமைத்தார்.


நீதிக்கதை

ஒற்றுமை

ஒரு பெரியவருக்கு நான்கு மகன்கள். அவர்கள் நால்வரும் எப்போதும் சண்டையிட்டு கொண்டே இருப்பார்கள். அதைப் பார்த்த பெரியவர் மிகவும் வருத்தப்பட்டார்.

அவர்களை "ஒற்றுமையாக இருங்கள்" என்று எவ்வளவோ கூறியும், அவர்கள் முடியாது என்று கூறி விட்டார்கள்.

ஒரு நாள் அவருக்கு உடல்நிலை  சரியில்லாமல் போகவே நால்வருக்கும்  ஒற்றுமை பற்றிய பாடத்தினை புகட்ட அவர் நால்வருக்குள் ஒரு போட்டியை வைத்தார்.

நான்கு பேரும் ஆளுக்கு ஒரு கொம்புகளை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார். அவர்களும் கொண்டு வந்தனர்.  நான்கு கொம்புகளையும் கயிறு கொண்டு ஒன்றாக கட்டச் சொன்னார். பின்பு ஒவ்வொருவராக வந்து அந்த கட்டை உடைக்கச் சொன்னார் ஆனால் எவராலும் உடைக்க இயலவில்லை.

 

பின்னர் கட்டுக்களை அவிழ்த்து ஒவ்வொரு  கொம்புகளாக எடுத்து உடைக்க சொன்னார்.விரைவில் சுலபமாக உடைத்து விட்டனர்  அப்போது செல்வந்தர் "ஒற்¡றுமையின் பலம் என்ன என்று இப்போது புரிகிறதா"?என்று கேட்டார். மேலும்,"நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் எவராலும் உங்களை அசைக்க முடியாது" என்றும் கூறினார்


இன்றைய செய்திகள்

04.02.2025

* கேரளாவில் இருந்து குமரிக்கு மருத்துவ கழிவுகள் ஏற்றி வந்த வாகனங்களை திரும்ப ஒப்படைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அவற்றை ஏலத்தில் விட உத்தரவிட்டுள்ளது.

* ராகிங் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததாக தமிழகத்தில் 2 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 18 மருத்துவ கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

* அமெரிக்க பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

* டேவிஸ் கோப்பை டென்னிஸ்: டோகோவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி.

* சர்வதேச செஸ் போட்டி: குகேஷை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாம்பியன்.


Today's Headlines

* The High Court has dismissed a petition seeking the return of vehicles carrying medical waste from Kerala to Kumari and ordered them to be auctioned.

* The UGC has issued notices to 18 medical colleges across the country, including 2 colleges in Tamil Nadu, for not following anti-ragging regulations.

* Canadian Prime Minister Justin Trudeau has announced a 25 percent tax on American goods.

* Davis Cup tennis: Indian team wins by defeating Togo.

* International chess tournament: Praggnanandhaa defeats Kukesh to become champion.


Covai women ICT_போதிமரம்


Hindu Religious Charitable Endowment Department Jobs - Vacancies : 109



தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை TN HRCE வேலை வாய்ப்பு‌கள் - பணியிடங்கள் : 109


Tamilnadu Hindu Religious Charitable Endowment Department Jobs - Vacancies : 109


தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


இதில் மொத்தம் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 28.02.2025க்குள் விண்ணபிக்கலாம்.


1. பதவி பெயர் : தட்டச்சர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 18,500 - 58,600


2.பதவி பெயர் : காவலர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 70


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 15,900 - 50,400


3.பதவி பெயர் : கூர்க்கா


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 15,900 - 50,400


4. பதவி பெயர் : ஏவலாள்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 10,000 - 31,500


5. பதவி பெயர் : உபகோயில் பெருக்குபவர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 10,000 - 31,500


6. பதவி பெயர் : கால்நடை பராமரிப்பாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 10,000 - 31,500


7. பதவி பெயர் : உபகோயில் காவலர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 11,600 - 36,800


8. பதவி பெயர் : திருமஞ்சனம்


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 11,600 - 36,800


9. பதவி பெயர் : முறை ஸ்தானீகம்


காலியிடங்களின் எண்ணிக்கை: 10


சம்பளம்: ரூ. 11,600 - 36,800


10. பதவி பெயர் : ஓடல்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


சம்பளம்: ரூ. 15,900 - 50,400


11. பதவி பெயர் : தாளம்


காலியிடங்களின் எண்ணிக்கை: 3


சம்பளம்: ரூ. 18,500 - 58,600


12. பதவி பெயர் : தொழில்நுட்ப உதவியாளர் (மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு)


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியலில் பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 20,600 - 65,500


13. பதவி பெயர் : பிளம்பர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 4


கல்வித் தகுதி: பிளம்பர் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 18,000 - 56,900


14. பதவி பெயர் : உதவி மின்பணியாளர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 2


கல்வித் தகுதி: வயர்மேன் பிரிவில் ஐ.டி.ஐ படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 16,600 - 52,400


15. பதவி பெயர் : தலைமை ஆசிரியர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: தமிழில் முதுகலைப் பட்டமும் ஆசிரியர் பயிற்சி இளநிலை பட்டமும் படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 36,700 - 1,16,200


16. பதவி பெயர் : தேவார ஆசிரியர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400


17. பதவி பெயர் : சங்கீத இசை ஆசிரியர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: குரலிசையில் மூன்று வருட பட்டய படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 35,400 - 1,12,400


18. பதவி பெயர் : ஆகம ஆசிரியர்


காலியிடங்களின் எண்ணிக்கை: 1


கல்வித் தகுதி: வேத, ஆகம சாலையில் நான்கு ஆண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.


சம்பளம்: ரூ. 35,900 - 1,13,500


தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://annamalaiyar.hrce.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2025.


முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை - 606601.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Aadhaar Correction - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள்

ஆதார் திருத்தம் - தேவையான ஆவணங்கள், விதிமுறைகள் மற்றும் வரம்புகள் Aadhaar Correction - Required Documents, Terms and Limitations UIDAI (Uniq...