கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS Scholarship Exam – Hallticket Released on 17th Feb 2025

 

 NMMS கல்வி உதவித்தொகை தேர்வு - பிப்ரவரி 17ல் ஹால்டிக்கெட் வெளியீடு


NMMS Scholarship Exam – Hallticket Released on 17th Feb 2025


என்எம்எம்எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் பிப்ரவரி 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத் துறை அறிவித்துள்ளது.


 தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்.


அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) பிப்ரவரி 17ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும்.


இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும்.


இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


POCSO - Rules that Teachers / Head Teachers should be aware of

 

மாணவிக்கு மாணவர்கள் பாலியல் தொந்தரவு -  குற்றம் செய்யாத ஆசிரியர்கள்  / தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன? - ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்


Female Student sexual harassment by students - What is the reason why non-criminal teachers/headmaster has been arrested under POCSO Act? - Terms that Teachers / Head Teachers should be aware of


7ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கு, 11ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்ததன் விளைவாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களான ஒரு பெண் ஆசிரியர், ஒரு ஆண் ஆசிரியர் என குற்றம் செய்யாத மூன்று ஆசிரியர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன?



POCSO சட்டம் என்ன சொல்கிறது


POCSO என்பது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை  செய்தவர்களுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் வகையிலும் மட்டுமே உருவாக்கப்பட வில்லை.


அதில் குற்றம் செய்தவர்களை தாண்டி மற்றவர்களுக்கும் தண்டனை வழங்கும் பல்வேறு பிரிவுகள் உள்ளன.


📌குறிப்பாக ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்கள் அறிந்து இருக்க வேண்டிய விதிமுறைகள்: 


1)போக்சோ சட்டம் பிரிவு 19 மற்றும் 21 என்றால் என்ன?


1)19(1)-இன்படி, 

பாலியல்

ஒரு குழந்தைக்கு எதிரான பாலியல் குற்றம் குறித்து தெரிந்த எவரும் காவல்துறையிடம் நியாயமான நேரத்தில்

புகார் அளிக்க வேண்டும்.    இது கட்டாயப் புகாரளிக்கும் தேவையாகும்,  மேலும் புகாரளிக்கத் தவறிய எந்தவொரு நபரும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் பெறும் அளவுக்கு குற்றவாளிகளாக கருதப்படுவார்கள்.


📌 மேற்கண்ட பிரிவில் கல்வி நிறுவனங்களின் நிலை :-


ஒரு குழந்தை  பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அறிந்திருந்த எவரும் (பள்ளி அளவில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் அடங்குவர்)


📌பிரிவு 19 இன் துணைப்பிரிவு (2) இன் கீழ் 24 மணி நேரத்தில் குற்றத்தை பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.


குற்றத்தைப் பதிவு செய்யத் தவறியவருக்கு 

ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கக்கூடிய இரண்டு வகையான சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.



இது போன்று நிகழ்வுகளில் இருந்து ஆசிரியர்கள் தப்பிக்க செய்ய வேண்டியவைகள்:-


1) பாடம் நடத்துவது மட்டும் நமது வேலை என்று ஒதுங்கும் சூழல் தற்போது இல்லை, மாணவர் / மாணவிகளுக்கு பள்ளி மற்றும் வெளியில் என எங்கு பிரச்சனை நடந்தாலும் அவை நமது கவனத்திற்கு வருகின்ற நிலையில் மாணவிகள்/ மாணவர்கள் சொல்லும் தகவலை ஆசிரியர்கள் உடனேயே தலைமை ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்லவும்.


2) குறிப்பாக பாலியல் சார்ந்த புகார்களை மாணவர்கள் உங்களிடத்தில் கூறியவுடன்  , அந்த மாணவர் / மாணவியையும் உடன் வைத்துக் கொண்டு குற்றம் நடந்து உள்ளதாக மாணவர் கூறுவதாக குறிப்பிட்டு தலைமை ஆசிரியரிடம் கடிதம் மூலமாக தகவல் கொடுத்து விடவும். 

கடிதத்தை நகல் எடுத்து தலைமை ஆசிரியர் கையொப்பம் பெற்று வைத்துக் கொள்ளவும்.


3) தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வட்டாரக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவல் கொடுத்தது மட்டுமல்லாமல் 

ந.க.எண் போட்டு கடிதம் ஒன்றை அனுப்பி விடவும்.


4) தலைமை ஆசிரியர் PTA & SMC க்கு தகவல் மட்டும் கொடுத்து விடவும். அவர்கள் தீர்த்து வைப்பதாக கூறினாலும் 

உயர் அலுவலர் / CEO வுக்கு  சொல்லித்தான் ஆக வேண்டும் என்று தெளிவாக கூறி விடவும்.


5) எக்காரணம் கொண்டும் PTA, SMC, கட்சி பிரமுகர்களுடன் இணைந்து சமாதான பஞ்சாயத்துகளில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டாம்.


6) முதன்மைக் கல்வி அலுவலர் ஒப்புதலுடன் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து விடவும்.


விழிப்புணர்வுக்காக மட்டுமே இத்தகவல் பகிரப்படுகிறது.


POCSO தொடர்பான அரசின் வழிகாட்டுதல் / வரைவுத் திட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பின்பற்றவும்.


Where is the Rs 1,050 crore provided by the central government to the school education department under the Samagra Shiksha scheme? - Annamalai question

 

 சமக்ர சிக்சா திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.1,050 கோடி எங்கே? - அண்ணாமலை கேள்வி


Where is the Rs 1,050 crore provided by the central government to the school education department under the Samagra Shiksha scheme? - Annamalai question

 

தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்துக்காக மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.


இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது குழந்தைகள் அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018-2019 ஆம் ஆண்டு, சமக்ர சிக்‌ஷா திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) தொடர்பாக, சில விதிமுறைகளை மத்திய அரசு வகுத்துள்ளது.


இதன்படி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஆறாம் வகுப்பிலிருந்து. 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், தனிப் பாடமாக இடம்பெற வேண்டும் என்றும், இதற்காக, ஒவ்வொரு பள்ளிகளிலும், ICT Labs அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவற்றை அமைக்க, மூலதனச் செலவுகளுக்காக, ரூ.6.40 லட்சமும், இந்தப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் பயிற்றுனருக்கு மாத ஊதியமாக ரூ.15,000 மற்றும் இதர செலவுகள் சேர்த்து, ஆண்டுக்கு ரூ. 2.50 லட்சமும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.


இதன்படி, கடந்த மூன்று ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி (ICT) பாடத்திட்டத்துக்காக, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ள நிதி ரூ.1,050 கோடி. ஆறாம் வகுப்பிலிருந்து, 12 ஆம் வகுப்பு வரை, தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில், அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறு வயதிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நமது குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும் என்ற இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கமே சிதைந்திருக்கிறது.


டெல்லி, தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட பிற மாநிலங்களில் எல்லாம், ஆறாம் வகுப்பில் இருந்தே பாடத்திட்டத்தில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் என்பது தனிப்பாடமாக அமைக்கப்பட்டுள்ளது. திமுகவின் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்டுகள் ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தில், தமிழ் உட்பட மும்மொழிகளில், ஆறாம் வகுப்பில் இருந்தே தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்விப் பாடம் உள்ளது. குறைந்தபட்சம், கேரள மாநிலத்திடம் இருந்து, தமிழில் இருக்கும் அந்தப் பாடநூலையாவது வாங்கி, நமது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.


ஆனால், திமுக செய்திருப்பது என்ன? இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் செயல்பட்ட தன்னார்வலர்களை, கேரள மாநில அரசு நிறுவனமான Keltron நிறுவனத்தின் கீழ், மாதம் ரூ.11,500 ஊதியத்தில், அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற புதிய பணியிடத்தை உருவாக்கிப் பணியில் அமர்த்தியுள்ளது.


கடந்த 2008 ஆம் ஆண்டு, உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின்படி, கணினி அறிவியல் ஆசிரியர்கள், B.Ed பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவியலில் முறையான கல்வித் தகுதி பெறாதவர்களை, அலுவலகப் பணியாளர் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பப் பயிற்றுனர் என்ற பெயரில் நியமித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை மீறியிருக்கிறது திமுக அரசு.


தமிழகம் முழுவதும், கணினி பயிற்சி பெற்ற B.Ed பட்டதாரிகள் சுமார் 60,000 பேர் இருக்கையில், அவர்களுக்குப் பணி நியமனம் வழங்காமல் வஞ்சித்திருப்பது ஏன்? கடந்த மூன்று ஆண்டுகளில், சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் செயல்பாடுகள் பாடத்திட்டத்திற்காக, மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது?


அரசு மற்றும் அரசு உதவி பெறும் எத்தனை பள்ளிகளில், ICT Labs செயல்பாட்டில் உள்ளது? ஏன் ஆறாம் வகுப்பிலிருந்தே, தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வி, தனிப் பாடமாக அமைக்கப்படவில்லை? இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பொதுமக்களுக்குத் கடமைப்பட்டிருக்கிறார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Government schools producing achievers - District Collector

சாதனையாளர்களை உருவாக்கும் அரசு பள்ளிகள் - மாவட்ட ஆட்சியர் பெருமிதம்


Government schools producing achievers - District Collector


அரசு பள்ளியில் படித்து, மாவட்ட ஆட்சியராக உயர்ந்துள்ளேன் - திருவாரூர் கலெக்டர்


நானும் அரசு பள்ளி மாணவன் தான் - அரசு பள்ளியில் படிப்பவர்கள் சாதனை படைக்கிறார்கள்.


 அதற்கு நானே எடுத்துக்காட்டு - மாவட்ட ஆட்சியர் மாணவர்கள் மத்தியில் உற்சாக உரை 


அரசுப் பள்ளிகளில் கல்வியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.


கொரடாச்சேரி ஒன்றியம் மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித் துறை சாா்பில், 112ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட பள்ளி விழா, கல்வி சீா்கொடுக்கும் விழா, விளையாட்டு விழா, மாணவா் சோ்க்கை விழா, பள்ளி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே.கலைவாணன் ஆகியோா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.



இதில் ஆட்சியா் பேசியது: அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் பெற்றோா்கள் எதிா்காலத்தில் தங்கள் குழந்தைகள் தொழிலதிபா்களாக, மருத்துவா்களாக, பொறியாளா்களாக, மாவட்ட ஆட்சியா்களா என பல்வேறு உயா்நிலை பதவிகளில் பணிபுரிய வாய்ப்புள்ளது என்பதை உணர வேண்டும். தற்போது, அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியிலும், விளையாட்டிலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனா். இப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், அருகிலுள்ள மற்ற குழந்தைகளின் பெற்றோா்களுக்கும், அரசுப் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து தெரியப்படுத்தி மாணவ சோ்க்கையை அதிகப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வியுடன், விளையாட்டு, கலை, பொது அறிவு மேம்பாடு உள்ளிட்ட திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் வழங்கி வருகிறது. நானும் அரசுப் பள்ளியில் படித்து இந்த நிலைக்கு உயா்ந்துள்ளேன் என்றாா்.


தொடா்ந்து, பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்ற பள்ளி மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதன்மைக் கல்வி அலுவலா் சௌந்தர்ராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.


14-02-2025 - School Morning Prayer Activities

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:


பால்: பொருட்பால். இயல்: அரசியல். அதிகாரம்: அறிவுடைமை.


குறள் 424:


எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்

நுண்பொருள் காண்ப தறிவு.


விளக்கம்:


நாம் சொல்ல வேண்டியவைகளை எளிய முறையில் கேட்போரின் இதயத்தில் பதியுமாறு சொல்லிப் பிறர் சொல்லும் நுட்பமான கருத்துக்களையும் ஆராய்ந்து தெளிவதே அறிவுடைமையாகும்.



பழமொழி : 


Look before you leap


ஆழமறியாமல் காலை விடாதே.


பொன்மொழி:


Great works are performed not by strength, but perseverance.  


மிகப் பெரிய வேலைகள் விடாமுயற்சியால்தான் சாதிக்கப்படுகின்றன. அவரது வலிமையால் அல்ல.


அறிவியல்  பொது அறிவு வினா விடைகள் :


 திட்ட அலகு என்பது - SI முறை

அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை

நிலவு இல்லாத கோள் - வெள்ளி

கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு

பில்லியன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்

உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு


ஆங்கில சொற்கள் - தமிழ் விளக்கம் :


Daily - தினமும்

Decrease - குறை 

Dark - இருட்டு 

Deaf - காது கேட்காமை 

Debt - கடன் 


ஆரோக்கியம்


செயற்கையான சுவையூட்டிகளில் சேர்க்கப்படும் சர்க்கரை, காஃபீன் ஆபத்தானதா?


செயற்கையான சர்க்கரை, காஃபீன் போன்றவற்றைச் சத்துணவுகளில் சேர்ப்பது பெரும் ஆபத்தாக முடியும். இவை உடல் செயல்பாடுகளை, பல்வேறு வகைகளில் பாதிக்கின்றன. குறிப்பாகச் செயற்கை சர்க்கரையைத் தொடர்ந்து பல வருடங்களுக்குப் பயன்படுத்தும்போது புற்றுநோய் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதீதச் சர்க்கரை உடல்பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றையும், காஃபீன் பக்கவாதம், வலிப்பு சார்ந்த பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


இன்றைய சிறப்புகள்


பிப்ரவரி 14


1946 – இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.


1949 – இசுரேலிய நாடாளுமன்றம் முதற்தடவையாகக் கூடியது.


1961 – 103வது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.


1990 – வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.


2000 – நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.


2005 – கல்லூரி மாணவர்கள் சிலரால் யூடியூப் முதன் முதலில் வெளியிடப்பட்டது.



பிறந்த நாள் 

1483 – பாபர், முகலாயப் பேரரசர் (இ. 1530)


நினைவு நாள் 

269 – புனித வேலண்டைன், ரோம கத்தோலிக்க ஆயர், புனிதர் (பி. 176)


1995 – யு நூ, பர்மாவின் 1வது பிரதமர் (பி. 1907)


சிறப்பு நாட்கள்

வேலன்டைன் நாள்



நீதிக்கதை



ஆணவத்தின் முடிவு அவமானம் 


ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.


அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.


ஆனால், வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு கொண்டிருந்ததால் சூரியன் கூறியது எதையும் கேட்பதாக அது இல்லை.


“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.


இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது


” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.


இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.


சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.



சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.


இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.


ஆனால், காற்று வேகமாக, வலுவாக வீச, வீச, குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.


சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. அவன், மேலும் வெப்பம் பரவுவதை உணர்ந்தான்.


சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; தலையை மூடிக் கொண்டான். இன்னமும் வெப்பம் அதிகரிக்கவே, தன்னுடைய மேலங்கியை எடுத்துவிட்டு அங்கிருந்த குளத்திற்குள் குதித்து விட்டான்.


இவற்றையெல்லாம் பார்த்த காற்று  அவமானமடைந்தது; தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்தது; தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.


 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.




இன்றைய முக்கிய செய்திகள் 


14-02-2025

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி சந்திப்பு...


நட்பு நாடுகள்தான் அதிக வரி விதிக்கின்றன: டிரம்ப் ஆதங்கம்...


பா.ஜ.க. ஆளாத மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் கிடையாது - நிர்மலா சீதாராமன்...


திபெத்திய புத்தமத தலைவரான தலாய் லாமாவிற்கு இசட் பிரிவு பாதுகாப்பு - மத்திய அரசு...


அரசுத் துறையை கலைக்க வேண்டும் - எலான் மஸ்க் கருத்தால் அமெரிக்கர்கள் அதிர்ச்சி...


ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்க கூடாது - மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயம்...




Today's Headlines:

14-02-2025


PM Modi meets US President Donald Trump...


Allies impose high taxes: Trump Anxiety... 


BJP Opposition's allegation that Center is neglecting non-ruled states has no basis - Nirmala Sitharaman...


Z Wing Protection for Tibetan Buddhist Leader Dalai Lama - Central Govt... 


Americans are shocked by Elon Musk's idea to dissolve the government department... 


No driving without driving license - Motor Vehicle Accident Compensation Tribunal...


- Kalvi Anjal


A double decker bus is an amazing vehicle to enjoy the beautiful greenery



 அழகான பசுமைவெளியை ரசிக்க ஒரு அற்புதமான வாகனம் இரட்டை அடுக்கு பேருந்து


A double decker bus is an amazing vehicle to enjoy the beautiful greenery in Munnar


கேரள மாநிலத்தின் மூணாறு மலைவாழிடத்தின் சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக கேரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (KSRTC) சார்பில் கடந்த சனிக்கிழமை அன்று மூணாறில் புதிய இரட்டை அடுக்கு பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்த திரு. கணேஷ் குமார், இரட்டை அடுக்குப் பேருந்து சேவை சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்றார்.


மூணாறு ராயல் வியூ இரட்டை அடுக்குப் பேருந்து, தேயிலைத் தோட்டங்கள் மற்றும் உயர் மலைத்தொடரின் 360 டிகிரி காட்சியை பேருந்திலிருந்து வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



 வெளிப்படையான கண்ணாடிப் பலகை கொண்ட இந்தப் பேருந்தில் மேல் தளத்தில் 38 பேரும், கீழ் தளத்தில் 12 பேரும் அமரலாம். இந்தப் பேருந்து மூணாறு-தேவிகுளம் வழித்தடத்தில் தினசரி நான்கு சேவைகளை இயக்கும்.


13-02-2025 - School Morning Prayer Activities

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-02-2025 - School Morning Prayer Activities



திருக்குறள்:

பால்: பொருட்பால்

அதிகாரம்: மானம்

குறள் எண்:968

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?

பொருள்:
உயர் நலங்கெட்டு மானமிழந்த நிலையில், உடலை வளர்த்தல் உயிருக்கு மருந்தாகுமா?


பழமொழி :


Health is happiness.

ஆரோக்கியமே ஆனந்தம்.


இரண்டொழுக்க பண்புகள் :  

* ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு  தனித்திறமை இருக்கும். யாருடைய திறமையையும் குறைவாக எண்ணமாட்டேன். ‌

*தேர்வுகள் மூலம் எனது கற்றலை மதிப்பிட முடியும். எனவே தைரியமாக தேர்வுகளை எழுதுவேன்.


பொன் மொழி:

நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.


பொது அறிவு :

1. எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது?

விடை: இங்கிலாந்து.    

2. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ், தகவலை பெறுவதற்கான கால அளவு_____________

விடை: 30 நாட்கள்


English words & meanings :

Tunnel     -       சுரங்கப்பாதை

Volcano     -     எரிமலை


வேளாண்மையும் வாழ்வும் :

தற்போதைய, சுற்றுச்சூழல், சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தண்ணீரைப் பயன்படுத்த நீர் மேலாளர்கள் அதிக நிலையான தீர்வுகளைத் தேடுகின்றனர்.


பிப்ரவரி 13

உலக வானொலி நாள்

உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது.[1] வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.


கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா [1] (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை

நரியின் வஞ்சகம்‌

ஒரு காட்டில்‌ எருது ஒன்று இருத்தது. அந்தக்‌ காட்டின்‌ ஒரு பகுதியில்‌ பச்சைப்பசேல்‌ என்று புல்‌ மண்டிக்‌ கிடந்தது. தான்‌ இருந்த இடத்தில்‌ கிடைத்த

புல்லே எருதுக்கு போதுமானதாக இருக்கும்‌.

எனினும்‌, தூரத்துப்‌ புல்லே கண்ணுக்கு அழகாக இருந்ததால்‌, புல்‌ மண்டிக்‌ கிடந்த பகுதியை நோக்கி ஒரு நாள் புறப்பட்டது. அது  போகும்போது, மரத்தில்‌ இருந்த பச்சைக்‌ கிளி அதைக்‌ கூப்பிட்டது. “*எருதண்ணா எங்கேபோகிறீர்கள்‌?” * என்று கேட்டது பச்சைக்கிளி. "எதிரில்‌ உள்ள புல்வெளிக்குப்‌ புதுப்‌ புல்‌ தின்னப்‌ போகிறேன்‌”? என்றது.

எருது.

“அண்ணா, வேண்டாம்‌; அங்கே புலியிருக்‌கிறது!”” என்று எச்சரித்தது பச்சைக்கிளி.

அப்போது, அங்கே  நரி ஒன்று வந்து சேர்ந்தது. அது பச்சைக்கிளியைப்‌ பார்த்து, “ஒருவர்‌ ஒரு வேலையாகப்‌ போகும்போது எங்கே போகிறீர்கள்‌? என்று கேட்பதே  தவறு; மேலும்‌ எருதண்ணா ஆசையாகப்‌ புதுப்புல்‌  தின்னப்‌ போவதைத்‌  தடுப்பது சரியில்லை. அங்கே புலியிருக்கிறது என்று சொல்லி அவரை பயமுறுத்துவது மிகமிகத்‌ தவறு"என்றது.

மேலும், நரி, "புல்வெளியிலே புலியிருப்பதில்லை. புலி பசித்தாலும்‌ புல்லைத்‌ தின்னாது என்று நீ கேள்விப்பட்டது இல்லையா?அப்படியே புலியிருந்தாலும்‌ எருதண்ணாவை  நீ என்னவென்று நினைத்துக்‌ கொண்டாய்‌?” எருதண்ணாவின்‌ கொம்பு அதன்‌ குடலைக்‌ கிழித்து விடாதா?,"என்று கேட்டது.

நரியின்‌ பேச்சைக்‌ கேட்ட எருதுக்குக்‌ கிளியின்‌ மேலே கோபம்‌ கோபமாக வந்தது. தன்‌ வீரத்தைப்‌ பாராட்டிய நரியோடு புல்வெளியை நோக்கிச்‌ சென்றது. அது பேசிக்கொண்டே இன்பமாக மேய்ந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்து நரி தழுவியது.

புல்வெளியின் ஒரு புறத்தில்‌ மறைந்திருந்த கிழட்டுப்‌ புலி எருதின்‌  மேல்‌   பாய்ந்தது.  பச்சைக்கிளியின்‌ எச்சரிக்கையை

பொருட்படுத்தாமல்‌

நரியின்‌   நயவஞ்சகத்திற்கு ஆளானதை எண்ணி எருது வருந்தியது.

கருத்துரை:--  வஞ்சகமில்லாதவர்கள்‌ கூறும் கடுஞ்‌சொல்லும்‌  நன்மையைத்‌தரும்‌.  வஞ்சகரின்‌ இன்சொல்லோ துன்பத்தையே தரும்‌.


இன்றைய செய்திகள்

13.02.2025

* தமிழ்நாட்டின் திட்டங்களுக்கு நிதியுதவி கோரி ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ்விடம் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனு அளித்தார்.

* சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் கூடுதல் இருக்கை....ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை.

* பாண்டிச்சேரியில் Heritage Car Rally 2025 – சுதந்திரத்திற்கு முன்பிருந்த பண்டைய கார்கள் முதல் ‘90களின் இளமை வரை!அணிவகுத்த வின்டேஜ் கார்கள்! - முதலமைச்சர், ஆளுநர் சிறப்பித்த பாரம்பரிய கார் விழா! ஆச்சர்யத்துடன் மக்கள்கண்டு ரசித்தனர்.

* சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கித் தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் வில்மோர் ஆகியோர் மார்ச் மாத மத்தியிலேயே பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  அதற்கான அறிவிப்பை நாசா வெளியிட்டது

* இங்கிலாந்துக்கு எதிரான 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.


Today's Headlines

* Tamil Nadu Finance, Environment and Climate Change Minister Thangam Thennarasu submitted a request to Union Environment, Forest and Climate Change Minister Bhupender Yadav for financial assistance for Tamil Nadu's projects.

* Additional seats at Chennai Central Suburban Railway Station....Railway Administration takes action!

* Heritage Car Rally 2025 in Pondicherry - From ancient cars from before independence to the youth of the '90s! Vintage cars paraded! - Heritage car festival celebrated by the Chief Minister and Governor! People watched in amazement.

* Sunitha Williams and Butch Wilmore, who are stranded at the International Space Station, are expected to return to Earth by mid-March. NASA made an announcement to this effect

* The Indian team won the 3rd and final ODI against England and won the series 3-0.


Covai women ICT_போதிமரம்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025

  உயர்கல்வி வழிகாட்டல் செய்திகள் 06.07.2025 ஞாயிறு நாளை 07.07.2025 தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் +2 மதிப்பெண் அடிப்படையில் BSC Nurs...