கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

After the meeting with the Chief Minister and the Ministers, an interview about tomorrow's strike by JACTTO GEO organisers

முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் நாளைய போராட்டம் குறித்த பேட்டி


After the meeting with the Chief Minister and the Ministers, an interview about tomorrow's strike by JACTTO GEO organisers





>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...



முதலமைச்சருடன் 45 நிமிட ஆலோசனையை அடுத்து அமைச்சர்கள் குழு, ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் ஆலோசனை.


நாளை மறியல் போராட்டத்திற்கு பதிலாக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்ட நிகழ்வாக நடைபெறும்


நீதிமன்ற உத்தரவின் படி செயல்பட வேண்டி உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும்

      

மாவட்டத் தலைநகரங்களில் காலை 11.00 மணிக்கு சங்கமித்து நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்போம்


ஜாக்டோ - ஜியோ மாநில அமைப்பு அறிவிப்பு


நாளை திட்டமிட்டபடி போராட்டம் - ஜேக்டோ ஜியோ  மாநில ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் பேட்டி


அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து  நாளை போராட்டம்


போராட்டத்தை 4 வாரங்கள் தள்ளி வைக்கும் படி அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.


நாளை ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அடுத்த கட்ட‌நகர்வு குறித்து ஒரு வாரத்தில் முடிவு




Details of today's talks of JACTTO GEO officials with ministers









அமைச்சர்களுடன் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களின் இன்றைய பேச்சுவார்த்தை விவரங்கள்


Details of today's talks of JACTTO GEO officials with ministers


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில மாவட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம் 


இன்றைய தினம் காலை 11 மணி அளவில் தலைமைச் செயலகம் பத்தாவது மாடியில் மாண்புமிகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் மாண்புமிகு  எ வ வேலு அவர்கள் தலைமையில் மாண்புமிகு நிதியமைச்சர் மற்றும் மாநில பள்ளி கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு மனிதவளமேம்பாட்டு துறை அமைச்சர் ஆகியோர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றது


 பேச்சுவார்த்தைக்கு சுழல்முறை தலைமையாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் திரு  கே பி ரக் ஷித், அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் திரு சீனிவாசன் , தமிழக தமிழ் ஆசிரியர் கழக கௌரவத் தலைவர் புலவர் திரு ஆ ஆறுமுகம் ஆகியோர் தலைமை ஏற்றனர்


 பேச்சுவார்த்தையில் 32 ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டு தமது கருத்துகளை எடுத்துரைத்தனர் 


ஜாக்டோ ஜியோவின் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு மற்றும் ஈட்டிய விடுப்பு சரண் ஒப்படைப்பு, அரசாணை 243 ரத்து உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளும் முழுமையாக அமைச்சர் குழுவிடம் மிக விளக்கமாக தெரிவிக்கப்பட்டது 


இறுதியில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அவர்கள் நமது கருத்துகள் அனைத்தையும் உள்வாங்கி இன்றைய தினம் மாலை 7 மணி அளவில் முதல்வரை சந்தித்து 8 மணி அளவில் மீண்டும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திலேயே சந்தித்து விவரங்களை தெரிவிப்பதாக தெரிவித்து கூட்டம் முடிவடைந்தது 


உறுதியான எந்த முடிவும் எட்டப்படாத காரணத்தினால் போராட்ட நடவடிக்கைகள் எந்தவித தடையும் இன்றி தொடர்கின்றன 


இரவு 8 மணிக்கு நடைபெறும் அமைச்சர் குழு உடனான பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுகள் தெரிவிக்கப்படும் 


கே பி ரக் ஷித் மாநிலத் தலைவர் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு


Ban on JACTTO GEO picketing - High Court orders


ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு


▪️ அரசு ஊழியர்கள், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நடத்த இருந்த போராட்டத்திற்கு எதிராக திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது


▪️ அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய 4 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தகவல்


▪️ இரு தரப்பு பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்





Chief Minister meeting JACTTO GEO Executives today 24-02-2025 at 8 PM


ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் இன்று 24-02-2025 இரவு 8 மணிக்கு சந்திப்பு


Chief Minister meeting JACTTO GEO Executives today 24-02-2025 at 8 PM


சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று சந்திப்பு


ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.






10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)

 


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று (24-02-2025) மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வழங்கியுள்ள 10 அம்சக் கோரிக்கைகள் கடிதம்


10 point demand letter given by JACTTO GEO organization to Hon'ble Chief Minister today (24-02-2025)



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO State high level committee members press meeting


 ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் செய்தியாளர்கள் சந்திப்பு


JACTTO GEO State high level committee members press conference




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


JACTTO GEO negotiation results

 


ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை முடிவுகள் 


JACTTO GEO negotiation results


🔥 பேச்சுவார்த்தை முடிவுற்றதை தொடர்ந்து நான்கு அமைச்சர்கள் குழு முதலமைச்சர் அவர்களை சந்தித்து விவாதிக்க உள்ளது. முதலமைச்சருடன் விவாதித்து கோரிக்கைகள் ஏற்கப்பட்டது குறித்த மற்ற விவரங்கள் தெரிவிக்கப்படும் 


🔥 முதலமைச்சருடனான சந்திப்புக்கு பிறகு அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் போராட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லையேல் போராட்டம் தொடரும்.


🔥 ஜாக்டோ ஜியோ குழு மீண்டும் 7:00 மணிக்கு அமைச்சர் பெருமக்களுடன் சந்திப்பு


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...