கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை



 சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 15,672 மாணவர்கள் சேர்க்கை


சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த 2 மாதங்களில் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ், 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலை, 46 உயர்நிலை, 35 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.


இந்த பள்ளிகளில், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.


சென்னை மாநகராட்சி பள்ளிகளில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாதங்களில் மட்டும் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.


இதுதொடர்பாக மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநகராட்சிப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 1.12 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் மார்ச் மாதத்துக்குப் பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த ஆண்டு மே 23-ம் தேதிக்குள் 15,672 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மழலையர் வகுப்புகளில் மட்டும் 8 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். 2 மாதங்களில் இவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளது இதுவே முதல்முறை. விஜயதசமி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும்.


இந்த ஆண்டு 33 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். இதற்காக மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சலுகைகள் குறித்தும், கல்வி தரம் மேம்பட்டிருப்பது குறித்தும், 45 ஆட்டோக்கள் வாயிலாக பொதுமக்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.


மழலையர் வகுப்புகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், பச்சை வண்ணப் பலகைகள், ஸ்மார்ட் போர்டு, விளையாட்டுடன் கல்வியில் ஆர்வத்தைத் தூண்டும் வண்ணமயமான புத்தகங்கள் உள்ளிட்டவை உள்ளன. புத்தகப் பைகள், காலணிகள், அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி சீருடைகள், எழுது பொருட்கள், பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், காலை சிற்றுண்டி, பள்ளிக்கு 100 சதவீதம் வருகை தந்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, மாலை சிற்றுண்டியுடன், மாலைநேர சிறப்பு வகுப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தரப்படுகிறது.


மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கல்வித் தரத்தை மேம்படுத்தவும், விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கும் அழைத்து செல்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Off-road jeep safariயின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்

 


ஆஃப் ரோடு ஜீப் சஃபாரியின் பொழுது நூலிழையில் யானைகளிடமிருந்து உயிர் தப்பிய சுற்றுலாப் பயணிகள்


Tourists narrowly escape from elephants during off-road jeep safari




>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 


மைசூர் அரச குடும்பத்திற்கு ரூபாய் 3400 கோடி இழப்பீடு வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு


கர்நாடக மாநிலம், பெங்களூரின் பல்லாரி சாலை மற்றும் ஜெயமஹால் சாலை பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி மிக அதிகமாக உள்ளது.


இதற்கு தீர்வு காணும் நோக்கில், பல்லாரி சாலை, ஜெயமஹால் சாலையை அகலப்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது.


இப்பணிகளுக்காக, பெங்களூரு அரண்மனை மைதானத்தை சேர்ந்த 15.39 ஏக்கர் நிலத்தை, மாநில அரசு 2023ல் கையகப்படுத்தியது.


இதற்கு மைசூரு அரச குடும்பத்தினர் ஆட்சேபம் தெரிவித்தனர். நிலத்துக்கான நிவாரணம் வழங்கும்படி வலியுறுத்தினர். ஆனால், அரசு மவுனம் சாதித்தது.


இதுகுறித்து, உச்ச நீதிமன்றத்தில், அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு ஏக்கருக்கு 220 கோடி ரூபாய் வீதம், 3,400 கோடி ரூபாய் டி.டி.ஆர்., எனும் மாற்றக்கூடிய மேம்பாட்டு உரிமை தொகையாக அளிக்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.



இந்த தொகையை உச்ச நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யும்படியும் உத்தரவிட்டது. இதன்படி, கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற பதிவாளர் பெயரில் 3,400 கோடியை டிபாசிட் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர்.


மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், அரவிந்த்குமார் முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.


மன்னர் குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 3,400 கோடி ரூபாயை உடனடியாக, அரச குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டனர்.



KTM பைக் நிறுவனத்தை வாங்குகிறது Bajaj



கேடிஎம் பைக் நிறுவனத்தை வாங்குகிறது பஜாஜ்


Bajaj to acquire KTM bike company


கேடிஎம் பைக்குகளை தயாரிக்கும் ஆஸ்திரிய நாட்டு நிறுவனத்தை கையகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்


கேடிஎம் நிறுவனத்தில் ரூ.7,765 கோடி முதலீடு செய்து அதன் 4 பெரும்பான்மை பங்குகளை வாங்குகிறது பஜாஜ்


கேடிஎம்ஐ வாங்குவதன் மூலம் உயர் திறன் மோட்டார் பைக் சந்தையில் பஜாஜ் முக்கிய இடம் பிடிக்கிறது


பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உதவியுடன் சில ஐரோப்பிய பைக் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படுகின்றன. டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), கேடிஎம் (KTM) மற்றும் ஹஸ்க்வர்னா (Husqvarna) என்பன அந்த சில ஐரோப்பிய பைக் நிறுவனங்கள் ஆகும். இவற்றில் சில நிறுவனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் மூலமாகவே,  இன்னமும் செயல்பட்டு வருகின்றன. அதாவது, ஐரோப்பிய நிறுவனங்கள் நம் இந்தியாவின் பஜாஜ் மூலமாகவே உயிர்பிப்புடன் உள்ளன.


ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தை காட்டிலும் பழமையான பைக் உற்பத்தி நிறுவனம் ஆகும். இரு நண்பர்கள் மூலமாக 1934ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கேடிஎம் நிறுவனம் முதல் 55 வருட கால கட்டத்திற்கு பெரியதாக எந்தவொரு சறுக்கலையும் சந்திக்கவில்லை.


நிறுவனத்தை நிறுவிய நண்பர்கள் இருவரும் இறந்து போனாலும், அவர்களில் ஒருவரது மகன் கேடிஎம் நிறுவனத்தை தூக்கி பிடித்தது மட்டுமின்றி, மெல்ல மெல்ல நிறுவனத்தையும் வளர்க்க ஆரம்பித்தார். இருப்பினும், அவரும் 1989இல் இயற்கை எய்ததை அடுத்து, 1991க்கு பிறகு எந்த பக்கம் செல்வது என தெரியாமல் கேடிஎம் நிறுவனம் தடுமாறியது.


அப்போதுதான், ஆஸ்திரியா நாட்டை தாயகமாக கொண்ட பியரர் மொபிலிட்டி ஏஜி (Pierer Mobility AG) நிறுவனத்தால் கேடிஎம் நிறுவனம் வாங்கப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் சறுக்கலை சந்தித்துவரும் கேடிஎம் நிறுவனத்தை காப்பாற்றி இருப்பது, பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனம் கிடையாது; இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ ஆகும்.


பல்சர் (Pulsar) பைக்குகள் மூலமாக இலாபத்தை சம்பாதிக்க ஆரம்பித்த 2007ஆம் ஆண்டு சமயத்தில் அந்த இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை பியர் மொபிலிட்டி ஏஜி நிறுவனத்தின் கேடிஎம் பிராண்டின் பங்கை வாங்க பஜாஜ் பயன்படுத்தியது. அதன்பின் ஒவ்வொரு வருடமாக கேடிஎம் பிராண்ட் மீதான தனது உரிமையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்த பஜாஜ் நிறுவனம், 2012ஆம் ஆண்டில் கேடிஎம் நிறுவனத்தை இந்தியாவிற்கு கொண்டுவந்தது.


இதன் மூலமாக பஜாஜ் ஆட்டோ உடன் இன்னும் நெருக்கமாகியதன் மூலம் 2013இல் கேடிஎம் நிறுவனத்தின் சுமார் 47.97% பங்கை பஜாஜ் பெற்றது. தற்போது, கேடிஎம் நிறுவனம் மீதான பஜாஜ் ஆட்டோவின் பங்கு மதிப்பு 49.9% ஆகும். இந்த நிலையில், கேடிஎம் நிறுவனத்தை பியர் மொபிலிட்டி நிறுவனத்திடம் இருந்து பிரித்து முழுவதுமாக தானே சொந்தமாக்கி கொள்ள பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது.


இதன் ஒரு பகுதியாக, தனித்து செயல்பட வேண்டி கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கேடிஎம் நிறுவனம் சார்பில் ஆஸ்திரியா நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு கேடிஎம் நிறுவனம் சார்பில் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், எல்லா காரணங்களும் கேடிஎம் நிறுவனத்தை பெரியதாக்க வேண்டும் என்பதாக தான் இருந்தன. இந்த நிலையில், சுமார் 56.6 கோடி யூரோக்களை (ரூ.5,431 கோடி) பியர் மொபிலிட்டி நிறுவனத்திற்கு பஜாஜ் ஆட்டோ கடனுதவியாக வழங்க உள்ளது.



இதற்கான ஒப்பந்தங்கள் சமீபத்தில்தான் கையெழுத்தாகி முடிந்துள்ளன. கேடிஎம் நிறுவனத்தில் முதலீடுகள் வருகிற மே 23ஆம் தேதியோடு நிறைவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. வழக்கம்போல், கேடிஎம் நிறுவனத்தின் வணிகம் சமீப காலமாக மிகவும் சரிவை சந்தித்து வருகிறது. இத்தகைய நேரத்தில் கடனுதவியை கொடுத்து, கேடிஎம் நிறுவனத்தை வளைத்து போடலாம் என்பதுதான் பஜாஜ் ஆட்டோவின் ராஜ தந்திரமாக உள்ளது.


மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை எண்: 70, நாள் : 15-05-2025 வெளியீடு

 

20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 30.06.2026 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை (நிலை) எண்: 70, நாள் : 15-05-2025 வெளியீடு


Government Order (Ms) No.: 70, Dated: 15-05-2025 issued extending the deadline for applications till 30.06.2026 for regularization of all sold and unsold plots situated in plots registered on or before 20.10.2016




>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2024-2025ஆம் நிதியாண்டிற்கான TPF / GPF Account slip வெளியீடு


2024-2025ஆம் நிதியாண்டிற்கான ஆசிரியர் சேமநல நிதி / வருங்கால வைப்பு நிதி கணக்கீட்டுத் தாள் TPF / GPF Account slip வெளியீடு


வலைதள முகவரி: 

 https://www.agae.tn.nic.in/onlinegpf/





தற்போது வெளியாகி உள்ள 2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை (How to Download Teacher Provident Fund Account Slip (TPF Account Slip) / General Provident Fund Account Slip (GPF Account Slip) for the financial year 2024-2025)...


 TPF / GPF Account Slip 


2024-2025ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தற்போது வெளியாகி உள்ளது.


ஆசிரியர் சேமநலநிதி கணக்கீட்டு தாள் (TPF account slip) / பொதுவருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (GPF account slip) தரவிறக்கம் செய்யும் முறை: 


* கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய https://www.agae.tn.nic.in/onlinegpf/ (என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்... 


* தங்களது GPF/ TPF எண் மற்றும் suffix, மற்றும் கடவுச்சொல்லாக தங்களது பிறந்த தேதியை (Date of birth) உள்ளீடு செய்யவும்.


* ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP  எண் வரும்.


* அதனை உள்ளீடு செய்தால் தோன்றும் திரையில் Download Account Slip என்பதை Click செய்யவும்.


* Year என்பதில் 2024-2025 தேர்ந்தெடுப்பதன் மூலம் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.



Cut-off மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?



 உயர்கல்வி - கட்-ஆஃப் மதிப்பெண்களைக் கணக்கிடுவது எப்படி?


Higher Education - How to calculate cut-off marks?


மாணவர்கள் அதிகமும் சேரும் பொறியியல் படிப்புக்கு பிளஸ் டூ தேர்வில் கணிதப் பாடத்தில் 100 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள் எவ்வளவு, இயற்பியல், வேதியியல் ஆகிய இரு பாடப்பிரிவுகளிலும் சேர்த்து 100 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்க்க வேண்டும்.


இந்த இரண்டையும் சேர்த்து 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களோ, அதுதான் பொறியியல் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் என்று சொல்லப்படும் தகுதி மதிப்பெண்களாகும். இதன் அடிப்படையில்தான் தர வரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.


தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவு (Vocational) மாணவர்களுக்கு, தொடர்புடைய பாடத்திற்கு நூறு மதிப்பெண்களும் தொழிற் பயிற்சிப் பாடத்திற்கு எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வைச் சேர்த்து 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பதன் அடிப்படையில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தனியே கவுன்சலிங் நடைபெறும்.


பி.ஆர்க். படிப்பில் சேர்வதற்கு நேட்டா (National Aptitude Test In Architecture- NATA) நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதுடன் பிளஸ் டூ தேர்வில் மாணவர்கள் பெற்றுள்ள மொத்த மதிப்பெண்களில் 200க்கு எவ்வளவு எடுத்துள்ளர்கள் என்பதும் கணக்கிடப்பட்டு பி.ஆர்க். தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுத் தனியே கவுன்சலிங் நடைபெறும்.


கால்நடை மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் கால்நடை மருத்துவப் படிப்பில் (BVSc) சேர விரும்புபவர்கள் உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் சேர்த்து 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


தொழிற் பயிற்சி பாடப்பிரிவு மாணவர் களைப் பொறுத்தவரை உயிரியல் (விலங்கியல் மற்றும் தாவரவியல்) படிப்பில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் தொழிற் பயிற்சிப் பாடப்பிரிவுகளில் 100க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்றும் பார்க்க வேண்டும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என்பதை வைத்து கட்-ஆஃப் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.


கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் ஃபுட் டெக்னாலஜி, பவுல்ட்ரி டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் பிடெக் படிப்பில் சேர விரும்புவோர் உயிரியல், கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய நான்கு பாடப்பிரிவு களிலும் தலா 50 மதிப்பெண்களுக்கு எவ்வளவு என்று பார்த்து, 200க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்பது கணக்கிடப்பட்டுத் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


மீன்வளப் படிப்புகள்: தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப் பட்டு (Aggregate Mark Calculation) தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.


BFSc படிப்பில் சேர விரும்பும் தொழிற்பயிற்சிப் பாடப்பிரிவு மாணவர்களுக்கும் இதே போல 200 மதிப் பெண்களுக்குக் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். B.Voc. பட்டப்படிப்பில் பிளஸ் டூ மாணவர்கள் மட்டுமல்ல பட்டதாரி மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள். ஆனால், பிளஸ் டூ தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இப்படிப்புகளில் சேர்க்கப்படுவார்கள்.


அரசு கலை, அறிவியல் கல்லூரிகள்: தமிழ்நாட்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ. தமிழ் இலக்கியம், பி.லிட். படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் பிளஸ் டூ தேர்வில் பெற்ற தமிழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். பிளஸ் டூ தேர்வில் ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தயாரிக்கப் படும் தரவரிசைப் பட்டியல் மூலம் பி.ஏ. ஆங்கிலப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


பிளஸ் டூ தேர்வில் மொழிப்பாடங்கள் நீங்கலாக மீதமுள்ள 4 பாடங்களின் மதிப்பெண்களின் (400 மதிப்பெண்கள்) அடிப்படையில் தயாரிக்கப்படும் பொதுத் தரவரிசைப் பட்டியல் மூலம் பிஏ, பிஎஸ்சி, பிகாம், பிபிஏ, பிசிஏ, பிஎஸ்டபிள்யூ ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


வேளாண் படிப்புகள்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் உள்ள படிப்புகளில் சேர்வதற்கு அந்தந்தப் பாடப்பிரிவுகளுக்கு உரிய நான்கு முக்கியப் பாடங்களில் ஒவ்வொரு பாடத்திலும் தலா 50 மதிப்பெண்கள் வீதம் கணக்கிடப்பட்டு, மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது கணக்கிடப்பட்டு வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, பிஎஸ்சி அக்ரி (ஆனர்ஸ்) படிப்பில் சேர கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்கள் கருத்தில் கொள்ளப்படும். இதேபோல மற்ற பாடங்களுக்கும் கணக்கிடப்படும்.


சட்டப் படிப்புகள்: நேஷனல் லா ஸ்கூல் என்று அழைக்கப்படும் தேசியச் சட்டப் பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு கிளாட் (Common Law Admission Test - CLAT) என்கிற நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். அதன் அடிப்படையில் நேஷனல் லா ஸ்கூல்களில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேர்வதற்கு நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் டூ தேர்வில் மொழிப் பாடங்கள் நீங்கலாக மற்ற பாடங்களில் எடுத்த ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டுச் சட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் பதிவு

06-06-2025 அன்று திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்களின் பதிவு  மாண்புமிகு ம...