கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

June 2025 School Calendar

 


ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி 


June 2025 School Calendar



🔖அனைத்து வித பள்ளிகள் திறப்பு 02.06.2025 


🔖BEO அலுவலக குறைதீர் நாள் 07.06.2025



🔖R.L நாட்கள் :


06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா 


26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி 



🔖அரசு விடுமுறை நாட்கள் : 


07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத் 


🔖பயிற்சி : 


எண்ணும் எழுத்தும் - 1 நாள் / 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்கட்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது...


🔖சனிக்கிழமை வேலை நாள் எதுவும் இல்லை.



🔖இம்மாத வேலைநாட்கள் : 21🙏


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-06-2025

 


 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 03-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்: 


குறள் 397:


யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்

சாந்துணையுங் கல்லாத வாறு.


விளக்கம்: கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.


பழமொழி :

Say well is good, but do well is better. 


நல்லதைச் சொல்வது நல்லது; அதை விட நல்லதை செய்வது நல்லது.


இரண்டொழுக்க பண்புகள் :


1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.


2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :


மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே உண்மையான கல்வி. -மகாத்மா காந்தி


பொது அறிவு : 


01.எந்த நாள் சர்வதேச கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது?

ஜனவரி 24 (January 24)


02.எந்த நதி பூமத்திய ரேகையை இருமுறை கடக்கிறது?

காங்கோ ஆறு (Congo River)


English words & Tips :


intelligent - clever. விரைவில் புரிந்து கொள்ளும் ஆற்றல்.‌ 

wisdom - ability to make sensible decisions with one's knowledge. விவேகம், மதிநுட்பம்



 What Is a Common Noun?

Common Nouns Referring to Human Beings

Common Nouns Referring to Animals

Common Nouns Referring to Birds

Common Nouns Referring to Insects

Common Nouns Referring to Reptiles

Common Nouns Referring to Places

Common Nouns Referring to Things/Objects

Common Nouns Referring to Ideas



அறிவியல் களஞ்சியம் :


 பூமியும் வெள்ளியும் ஒன்று போலவே இருப்பதால் இவற்றை ‘இரட்டைக்கோள்கள்’ என்று அழைக்கிறோம். பூமியைப் போலவே வெள்ளியிலும் கண்ட நகர்வு நடப்பதை அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளும் மேரிலாண்டு பல்கலை. ஆய்வாளர்களும் உறுதி செய்துள்ளனர்..


ஜூன் 03


உலக மிதிவண்டி நாள்

உலக மிதிவண்டி நாள் (World Bicycle Day) ஆண்டுதோறும் சூன் 3 நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. 2018 ஏப்ரலில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இந்நாளை பன்னாட்டு நாளாக அறிவித்தது. உலக மிதிவண்டி நாளுக்கான ஐக்கிய நாடுகளின் தீர்மானம் "இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்த மிதிவண்டிகளின் தனிச்சிறப்பு, நீண்டகாலப் பயன்பாடு, பல்திறன், மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற ஒரு எளிமையான, மலிவான, நம்பகமான, சுத்தமான போக்குவரத்துக் கருவி" என்பதை அங்கீகரித்தது.


கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த தினம்

முத்துவேல் கருணாநிதி (M. Karunanidhi, சூன் 3, 1924 - ஆகத்து 7, 2018) இந்திய அரசியல்வாதிகளுள் ஒருவர். தமிழக முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 1969 முதல் 2018 வரை பதவி வகித்துள்ளார். 1969, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராகப் பணியாற்றினார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது பட்டுக்கோட்டை அழகிரி, இவருக்கு, 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இவர் முத்தமிழறிஞர் என்றும் அழைக்கப்படுகின்றார். இவர் இந்திய அரசியலில் தொடர்ந்து பங்குவகித்த மிக முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 2018 ஆகத்து 7-ஆம் நாள் தன்னுடைய 94-ஆம் அகவையில் சென்னையில் காலமானார்.


நீதிக்கதை


 கிளியின் நட்பு

கதை :

வேடன் ஒருவன் விஷம் தோய்த்த அம்பை கொண்டு மான் கூட்டத்தின் மீது எய்தினான். அம்பு குறிதவறிப் பக்கத்தில் இருந்த மரத்தில் பட்டு நாளடைவில் மரம் காய்ந்துவிட்டது. 


அம்மரத்தின் பொந்தில் நீண்ட நாட்களாக வசித்து வந்த கிளி அதை கண்டு வருந்தினாலும் அந்த மரத்தைவிட்டு போகவில்லை. 


அக்கிளியின் அன்பைக் கண்டு தெய்வம் மனித உருவில் வந்து மரத்தைவிட்டு விலகாமலிருக்க கிளியிடம் காரணம் கேட்டது. அதற்கு கிளி எல்லா வகையிலும் சிறந்த குணம் கொண்ட இந்த மரத்தில்தான் நான் பிறந்து வளர்ந்தேன். இளமை பருவத்தில் இந்த மரம் தான் பாதுகாப்பை கொடுத்தது இப்போது காய்ந்துவிட்டது என்று விலகிசெல்வது எவ்வளவு மோசமான செயல். அதனால் நான் அதை செய்ய இயலவில்லை என்றது. 


கிளியின் பரிவை கண்ட தெய்வம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றது, அதற்கு அந்த கிளி இந்த மரம் மீண்டும் பூத்து குலுங்க வேண்டும் என்று வரம் கேட்டது. 


இந்த கிளியை போல நாமும் நண்பர்கள் துன்பத்தில் பங்கு கொள்ளவேண்டும். அவர்கள் துயர் துடைக்க வழிவகுக்க வேண்டும் அதுதான் நல்ல நட்பாகும். 


நீதி :

தனது நண்பர்களின் துன்பங்களில் பங்கு கொள்ள வேண்டும்.



இன்றைய செய்திகள்


03.06.2025


இன்றைய செய்திகள் 

⭐அரசுப் பள்ளிகளில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.


⭐ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.


⭐ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவு.சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன.


⭐உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் - 


விளையாட்டுச் செய்திகள்

🏀ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்ற நிலையில் 7 பேர் பதக்கம் வென்றனர். தொடர் ஓட்ட பந்தயங்களில் 2 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் சுபா வெங்கடேசன். 


🏀தென்கொரியாவில் நடந்த இத்தொடரில் 8 தங்கம், 10 வெள்ளி, | 6 வெண்கலம் என 24 பதக்கங்களுடன் இந்தியா 2வது இடம் பெற்றது.



Today's Headlines


TODAY'S HEADLINES

✏ Tamilnadu School Education Department orders temporary appointment of teachers in government schools.


✏ UGC instructs colleges to submit anti-ragging schemes.


✏ Powerful earthquake in Japan. 6.0 hertz is recorded on the Richter scale. Buildings shook due to the powerful Earthquake.


✏In the two-and

a-half-year war in Ukraine, a highest toll of 45,287 Russian soldiers have died in 2024 alone -


 SPORTS NEWS

🏀 Out of the 9 athletes from Tamil Nadu who participated in the Asian Athletics Championships, 7 won medals. Subha Venkatesan won 2 medals in the relay races.


🏀 India finished second in the tournament held in South Korea with 24 medals, including 8 gold, 10 silver and 6 bronze.


Covai women ICT_போதிமரம்


உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள்

 

 உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள் 


Hi-tech Lab மற்றும் Smart Classகளில் AIக்கள் செய்ய வேண்டிய பணிகள் 


வணக்கம்🙏


02-06-2025 முதல் பள்ளிகள் செயல்பட உள்ளதால் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகள் அரசால் வழங்கப்பட்ட நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி AIக்கள் மற்றும் ஒவ்வொரு பள்ளிகளில் உள்ள ICT Nodal Teacherக்கள் வாயிலாக உரிய முறையில் பயன்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவ்வாறு உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை  பயன்படுத்தும் போது ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த குறைபாடுகளுக்கு *044 - 40116100 (Helpdesk Number)* என்ற எண்ணிற்கும் மற்றும் இணைய வசதி சார்ந்த குறைபாடுகளுக்கு *18004444 (BSNL Helpline)* என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ள பள்ளிகளை  கேட்டுக் கொள்ளப்படுகிறது


பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள்

 

*அனைவருக்கும் வணக்கம்!!* 


 பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள் 


🌹1) தங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் பயின்று வரும் கல்வி ஆண்டுக்கு TC கொடுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC பிரிண்ட் எடுத்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும் 


🌹2) TC கொடுக்க உள்ள மாணவர்கள் ஏற்கனவே Common pool அனுப்பி இருப்போம்! மற்ற வகுப்பு மாணவர்களை Promotion கொடுத்து அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்து பணிகளை முடித்து விடுங்கள்!! தொடக்க /நடுநிலை பள்ளிகளை பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் தற்போது எந்த ஒரு மாணவனும் இருக்க கூடாது.


 🌹3) நாளை பள்ளியில் சேர்க்கும் மாணவர்களை உடனுக்குடன் EMIS இல் பதிவேற்றம் செய்திட வேண்டும்!! மேலும் ஏற்கனவே முதல் வகுப்பு சேர்க்கையில் Compaign உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வருகை தருவதை உறுதி செய்து கொண்டு அவர்களையும் முறையாக EMIS இல் உள்ளீடு செய்திடுங்கள்!!


🌹4) அனைத்து நலத்திட்டங்களையும் நாளையே மாணவர்களுக்கு வழங்கி பதிவேட்டில் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று விடுங்கள்!! நல த்திட்டங்கள் வழங்கப்பட்ட விவரத்தை  EMIS இல் உடனுக்குடன் பதிவு செய்து விடுங்கள்!!


🌹5) வகுப்பு ஆசிரியர்கள் பணிமாறுதல் /பணிநிறைவு பெற்று இருப்பின் அவர்களுக்கு பதில் வேறு ஆசிரியரை வகுப்பு ஆசிரியராக EMIS இல் மாற்றம் செய்து விடுங்கள்!


🌹6) நாளைய தேதியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளுக்கு உரிய உயர் அலுவலர் EMIS Login மூலம் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு புதிய Emis ID உருவாக்கிட உடனே ஏற்பாடு செய்திடுங்கள்(ஏற்கனவே பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு புதிய ID பெற்றவர்கள் தவிர)


🌹7) ஜூன் 13 ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை EMIS இல் அவசியம் உள்ளீடு செய்திடுங்கள்! 


🌹8) EMIS இல் உள்ள விவரப்படி உயர் அலுவலர்கள் EMIS Login மூலம் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பெறப்பட்ட விலையில்லா பாடநூல்கள் &பாடக்குறிப்பேடுகள் விவரம் சரி பார்க்க உள்ளதால் அவசியம் EMIS இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையும் மாணவர்கள் வருகை பதிவேட்டில் உள்ள விவரமும் மிக சரியாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!


 நன்றி 🙏🙏


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-06-2025

 

 

 பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 02-06-2025 - School Morning Prayer Activities


திருக்குறள்:

குறள் 391:

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

விளக்கம்: கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.


பழமொழி :
He who has an art, has everywhere a part.

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு.


இரண்டொழுக்க பண்புகள் :

1.புதிய கல்வியாண்டில் அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.

2.எனது கடமைகளை சரிவர செய்து அனைவரிடமும் நற்பெயர் எடுப்பேன்.


பொன்மொழி :

எந்த வேலை செய்தாலும் இறைவனை நினைத்து பலன் கருதாமல் செய்யத் துவங்குங்கள். உயர்ந்த பலனைப் பெறுவீர்கள். - விவேகானந்தர்


பொது அறிவு :

01.உலகின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் எது?

மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8811மீ) Mount Godwin Austin

02. மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படும் ஆறு எது?

ஹோவாங்கோ ஆறு ( சீனா ) Huang He River


English words & Tips :

surprise        -        ஆச்சரியம்

wonderful     -        அற்புதம்


When two singular subjects are connected by or, use a singular verb. The same is true for either/or and neither/nor.

John or Joe is coming tonight.
Either coffee or tea is fine.
Neither Kavi nor Nandhini was late.


அறிவியல் களஞ்சியம் :

நிலவின் ஈர்ப்பு விசையால் பூமியில் கடல் அலைகள் தோன்றுகின்றன. அதுபோல, மேச்சோ எனும் ஒரு நட்சத்திரத்தில், அதன் அருகே இருக்கும் சிறிய நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையால், நமது சூரியனைப் போல மூன்று மடங்கு உயரம் மிக்க அலைகள் தோன்றுவதை ஹார்வர்ட் பல்கலை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இந்த நட்சத்திரம் நம்முடைய சூரியனை விட 35 மடங்கு அதிக நிறையை உடையது.


ஜூன் 02

கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் நினைவுதினம்

கவிக்கோ அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான் (S. Abdul Rahman, நவம்பர் 9, 1937 - சூன் 2, 2017), தமிழ்நாட்டைச் சேர்ந்த கவிஞரும், தமிழ்ப்பேராசிரியரும் ஆவார். கவிக்கோ என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறார். 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்தியங்கியவர். எழுதுபவர்களின் தலைவாயிலில் தம் கவிதை வெளியீடுகளின் வாயிலாகப் புதுக்கவிதைத் துறையில் நிலைநிறுத்திக் கொண்டவர்களுள் அப்துல் ரகுமான் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கவர் ஆவார். அவர் பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல்ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.


நீதிக்கதை

மாயக்கண்ணாடி

ஒரு சிறுவன், புத்தகக் கடையில் ஒரு அழகான கண்ணாடியைப் பார்த்தான்.அதில் பார்த்ததெல்லாம்  அப்படியே தெரிந்தது.தன் முகமும் புன்னகைப்பது போலவே தெரிந்தது.அதை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

அவன் சந்தோசத்தில் சிரிக்கும் போது கண்ணாடியும் சிரித்தது. அவன் கோபப்பட்டபோது கண்ணாடியும் கோபப்படுவது போலவே தெரிந்தது.அதை வைத்து மகிழ்ச்சியுடன்  விளையாடினான்

ஒரு நாள்,அவன் கண்ணாடியை  தரையில் வீசினான். அது உடைந்து போனது. அந்த நேரம் தான் அவனுக்கு உண்மை தெரிந்தது. அவன் முகத்தையே கண்ணாடி காட்டியது! அவன் முகம் எப்படி இருக்கிறதோ, அதையே பிரதிபலித்தது என்பதைஅவன் உணர்ந்தான்.

வாழ்க்கையும் இப்படித்தான்! நாம் எப்படி இருப்போமோ, உலகமும் அதுபோலவே பிரதிபலிக்கிறது. நாம் நல்லவர்களாக இருந்தால், உலகமே நல்லது தான்!

அதிகம் எதிர்பார்க்காமல், நம் மனதைச் சுத்தமாக வைத்தால் போதும்.நம்மால் உலகமே மாறும்.இதுவே மாயக்கண்ணாடி அவனுக்கு உணர்த்திய வாழ்க்கையின் பெரிய பாடமாகும்.

அவன் சிரித்தான் — உண்மையுடன்.


இன்றைய செய்திகள்

02.06.2025

⭐ கோடை விடுமுறை முடிந்து அனைத்து வகை பள்ளிகளும் திறப்பு .

⭐புதிய பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம். -போக்குவரத்து துறை அறிவிப்பு.

⭐சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு, அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி விதித்தார்.

⭐ பூமியில் இருந்து நெப்டியூனை விட 3 மடங்கு தொலைவில் உள்ள சிறிய கிரகம் கண் டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய கிரகத்திற்கு 'பிளானட் நைன்' என பெயர் சூட்டினர் அமெரிக்க விஞ்ஞானிகள்.

விளையாட்டுச் செய்திகள்

⭐ஆசிய தடகளம் சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான உயரம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை பூஜா சிங் 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

  ⭐ தென்கொரியாவில் நடைபெறும் ஆசிய தடகள போட்டியில், கால் வீக்கத்துடன் ஓடி, 400 மீ தடை தாண்டுதலில் வெண்கலம் வென்றார் தமிழ்நாட்டு வீராங்கனை வித்யா ராம்ராஜ்!


Today's Headlines

✏All types of Tamil nadu state schools reopen after the summer vacation.

✏Students can travel using their old bus passes until a new bus pass is issued. -Transport Department announcement.

✏America'S President Trump imposed a 50% tariff on steel and aluminum imports from China.

✏A small planet three times farther from Earth than Neptune has been discovered. American scientists have named the new planet 'Planet Nine

Sports news

🏀Indian athlete Pooja Singh won the gold medal in the women's high jump at the Asian Athletics Championships, clearing 1.89 meters.

🏀Tamil Nadu athlete Vidya Ramraj won bronze in the 400m hurdles at the Asian Athletics Championships in South Korea, running with a swollen foot!


Covai Women ICT_போதிமரம்


அரசுப் பள்ளிகளில் Level Up English மொழித் திறன் பயிற்சிகள் - ஆசிரியா்களுக்கான பாடத்திட்டம் வெளியீடு



அரசுப் பள்ளிகளில் Level Up ஆங்கில மொழித் திறன் பயிற்சிகள் - ஆசிரியா்களுக்கான பாடத்திட்டம் வெளியீடு


TN Level up - English - DSE Proceedings


>>> Click Here to Download...



TN Level Up June Syllabus


>>> Click Here to Download...



TN Level Up - English Website Address:

https://sites.google.com/view/tnlevelup



Telegram Group Address:

https://t.me/+CKuOKCnQtV9lOWJl


திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து



திட்டியதால் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன் - ஆசிரியர் மீதான வழக்கு உச்ச நீதி மன்றத்தில் ரத்து


திட்டுவது ஒருவரை தற்கொலைக்கு தூண்டுவதாகாது: உச்ச நீதி மன்றம்


 பள்ளி மற்றும் விடுதிக்கு பொறுப்பான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவனின் புகாருக்குப் பிறகு மாணவனை திட்டினார். அதைத் தொடர்ந்து, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் 


ஒரு மாணவனை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரை உச்ச நீதிமன்றம் விடுவித்துள்ளது. 


 பள்ளி மற்றும் விடுதியின் பொறுப்பாளரான குற்றம் சாட்டப்பட்டவர், மற்றொரு மாணவரின் புகாரைத் தொடர்ந்து இறந்தவரை திட்டியுள்ளார். சம்பவத்திற்குப் பிறகு, மாணவர் ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 


ஒரு சாதாரண மனிதனால் திட்டுவது இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது என்று நீதிபதிகள் அஹ்சானுதீன் அமானுல்லா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக ஆசிரியரை விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 


"இந்த விஷயத்தை முழுமையாகப் பரிசீலித்த பிறகு, இது தலையிடுவதற்கு ஏற்ற வழக்கு என்று நாங்கள் கருதுகிறோம். மேல்முறையீட்டாளர் சரியாகச் சமர்ப்பித்திருப்பது போல, ஒரு மாணவரின் புகாரின் அடிப்படையில்  திட்டுதல், அதுவும் ஒரு மாணவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு இவ்வளவு துயரத்தை விளைவிக்கும் என்று எந்த ஒரு சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


இறந்தவருக்கு எதிராக மற்றொரு மாணவர் செய்த புகார் கவனிக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இதுபோன்ற திட்டுதல் மிக சாதாரணம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.


"இந்த நீதிமன்றத்தின் கருத்தில் கொள்ளப்பட்டதில்,  ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை நிலைப்பாட்டின் கீழ், இறந்தவர் செய்த தற்கொலையைக்காக, எந்த  காரணத்தையும் (தவறு பற்றிய அறிவு) மேல்முறையீட்டாளருக்குக் காரணம் காட்ட முடியாது," என்று பெஞ்ச் கூறியது. 


அந்த நபர், தனது வழக்கறிஞர் மூலம், தனது பதில் நியாயமானது என்றும், இறந்தவர் மீண்டும் குற்றத்தைச் செய்யாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும், விடுதியில் அமைதியையும் பேணுவதற்கும் ஒரு பாதுகாவலராக  திட்டியதாகவும் மட்டுமே கூறினார். தனக்கும் இறந்தவருக்கும் இடையே தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என்று அவர் சமர்ப்பித்திருந்தார்.


DECLARED BY THE HONOURABLE SUPREME COURT


தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் மாணவியை திட்டியதால், அம்மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதனால் அந்த ஆசிரியர் மீது IPC 306-ல் கொலைவழக்கு பதியப்பட்டது. இந்த அப்பீல் வழக்கில் உச்சநீதிமன்றம தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. 

அதில் “மாணவர்களை ஆசிரியர்கள் திட்டுவது எதார்த்தமானது என்றும், அவ்வாறு திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டது துரதிஷ்டமானது என்றும், இந்த வழக்கில் ஆசிரியர் சற்றும் எதிர்பார்க்காத சம்பவம் நடந்துவிட்டது. அதனால், சம்மந்தப்பட்ட ஆசிரியர் தற்கொலைக்குத் தூண்டினார் என்று கருதமுடியாது. தற்கொலைக்குத் தூண்டும் எண்ணத்தில் ஆசிரியர் திட்டியிருக்கிறார் என்பதற்கு தகுதியான ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதால், இவ்வழக்கில் இருந்து ஆசிரியரை விடுவிப்பதான உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.”

” The Appellant acted as a responsible authority addressing a complaint; no evidence suggested he intended the tragic outcome, the court said. Furthermore, to establish the charge of abetment to suicide, it is essential to prove elements such as instigation, provocation, or intentional aid in committing the act; without proof of these ingredients, the offence of abetment to suicide is not made out”. 

THANGAVEL Vs THE STATE OF TN


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ்

கடலூர் ரயில் விபத்து : பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து - பள்ளிக்கு நோட்டீஸ் - கடலூர் செம்மங்குப்பம் பகுதியி...