கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>இடைநிலை ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் மதுரை ஐகோர்ட் உத்தரவு

இடைநிலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வில் பங்கேற்க வேண்டும் என்ற ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்யக்கோரிய வழக்கில், மத்திய அரசிடம் தமிழக அரசு அறிவுரைகள் பெற்று முடிவெடுக்கலாம் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி ஜஸ்டின் பிரபாகர் தாக்கல் செய்த மனு: நான் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். சுப்ரீம் கோர்ட் உத்தரவைத்தொடர்ந்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். மத்திய அரசு 2009 ல், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்தது. அதன்படி, ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) நிர்ணயித்தது.
இதன்படி, தமிழக பள்ளிக் கல்வித்துறை 2011 நவ.,15 ல் அரசாணை 181 வெளியிட்டது. அதில், ‘பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமிக்கப்படுவர். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில், மாநில பதிவு மூப்பு பின்பற்றப்படும்,’ என தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனத்திற்கு, தகுதித் தேர்வு அவசியமில்லை.
ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 மார்ச் 7 ல், ‘அரசு உதவி பெறும் மற்றும் அரசு உதவி பெறாத பள்ளிகளில், 2010 ஆக.,23 க்கு பின், இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தால், அவர்கள் தகுதித்தேர்வு எழுத வேண்டும்,’ என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது, ஏற்கனவே வெளியான அரசாணை 181 க்கு முரணானது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்ற தேர்வு வாரிய அறிவிப்பை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேபோல், திருநெல்வேலி புதூரை சேர்ந்த ஜெயக்குமார் உட்பட சிலர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இம்மனுக்கள், ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது தனி நீதிபதி, “ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பிற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையால், இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைமுறைகள் பாதிக்கப்படும். தடை விலக்கிக் கொள்ளப்படுகிறது,” என்றார்.
மனுக்கள் நேற்று நீதிபதி கே.வெங்கட்ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் சில விதிவிலக்குகள் பெறலாம். ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியான பின், தகுதியுள்ள போதிய ஆசிரியர்கள் கிடைக்கவில்லை எனில், கட்டாயக் கல்விச் சட்டம் விதி 18 ன்படி, மத்திய அரசிடம் விலக்கு பெறுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம். இம்மனுக்கள் பைசல் செய்யப்படுகிறது, என்றார்.
நன்றி-தினமலர்

>>>ஜூலை 31 [July 31]....

  • ஜார்ஜியா ஐ.நா.,வில் இணைந்தது(1992)
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை இறந்த தினம்(1805)
  • உலகின் முதலாவது குறுகிய அகல ரயில்பாதை ஆஸ்திரேலியாவில் அமைக்கப்பட்டது(1865)
  • சந்திரனின் முதல் மிக அருகிலான படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)

எளிய அறிவியல் சோதனைகள் - கட்டகம் [Simple Science Experiments - Module]


>>>பள்ளிக்கல்வி - 165 உயர்நிலை/மேல்நிலைப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் ஆங்கிலவழிக்கல்வி பிரிவுகள் தொடக்கம்

>>>குரூப் - 1 முதன்மைத் தேர்வு: 2,800 பேர் பங்கேற்பு

குரூப் - 1 முதல்நிலைத் தேர்வுக்குப் பின், நேற்று முன்தினம் முதன்மைத் தேர்வு நடந்தது. சென்னையில் நடந்த தேர்வில், 2,800 பேர் பங்கேற்றனர்.
பொது அறிவு முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதற்கு, 300 மதிப்பெண்கள். பொது அறிவு, இரண்டாம் தாள் தேர்வு நேற்று நடந்தது. இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில், நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில், 131 பணியிடங்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும்.

>>>ஐ.ஏ.எஸ். முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு

ஐ.ஏ.எஸ்., பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும், 1,052 ஐ.ஏ.எஸ்., பணியிடங்களை நிரப்புவதற்காக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) சார்பில், கடந்த மே மாதம் 23ம் தேதி, முதல் நிலை எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில், மொத்தம், 4.5 லட்சம் பேரும், தமிழகத்தில், 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பங்கேற்றனர். இத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. ஐ.ஏ.எஸ்., முதல் நிலைத் தேர்வில், மொத்தம் 13 ஆயிரத்து 92 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில், தமிழகத்தைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்டோர் தேர்வு பெற்றிருப்பர் என தெரிகிறது.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும் அக்டோபர் 5ம் தேதி, முதன்மை தேர்வு நடைபெறும்.

>>>டி.இ.டி. தேர்வு: வெளியிடப்பட்ட விடைகளால் குழப்பம்

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட இடைநிலை ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கீ ஆன்சரில் பதில்கள் குழப்பமாக உள்ளன.
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 12ல் தகுதி தேர்வு நடந்தது. இத்தேர்வுக்கான கீ ஆன்சர்களை டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. இதில், ஏ, பி, சி, டி ஆகிய பிரிவுகளில் இடம்பெற்றுள்ள ஒரே கேள்விக்கு வெவ்வேறு பதில்கள் குறிப்பிட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியது.
உதாரணமாக, "சி" பிரிவில் ஆங்கிலம் பகுதியில் 78வது கேள்வியாக "அசெம்பிள்" வார்த்தைக்கு அர்த்தம் "மேணுபேக்சர்" என்றும், "டி" பிரிவில் 61வதாக இடம்பெற்றுள்ள இதே கேள்விக்கு "பிட்"' என்றும் கீ ஆன்சரில் விடை குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், ஆங்கிலத்தில் மட்டும், ஏ, பி, சி, டி பிரிவுகளில் பல கேள்விகளுக்கு விடைகள் வெவ்வேறாக தரப்பட்டுள்ளன. இதனால், எந்த "ஆன்சர்" சரியானது என்று தெரியவில்லை என தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு விடைகள் ஏற்கனவே, இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அதன் மீதான ஆட்சேபனைகளை, 30ம் தேதி வரை தெரிவிக்கலாம் என, ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இடைநிலை ஆசிரியருக்கான, டி.இ.டி., முதல் தாள் தேர்வுக்கான விடைகளையும் (கீ-ஆன்சர்), நேற்றிரவு, இணையதளத்தில்(http://trb.tn.nic.in/) வெளியிட்டது.
விடைகள் மீதான ஆட்சேபனைகளை, ஆகஸ்ட் 3ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

 Key Answers also Available at Our Blog 

>>>ஜூலை 30 [July 30]....

  • பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
  • முதலாவது கால்பந்து உலகக் கோப்பையை உருகுவே வென்றது(1930)
  • பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
  • ஜெருசலம் அரசிலமைப்பு சட்டம் இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டது(1967)

>>>SCHOOL EDUCATION - SGT TO BT PROMOTION PANEL SENIORITY LIST 2012

>>>தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்

தையல், ஓவியம் உள்ளிட்ட தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுத்துறை அறிவிப்பு: வரும் நவம்பர் மாதம், தொழில்நுட்பத் தேர்வுகள் நடக்கின்றன. ஓவியம், தையல், இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம் மற்றும் கைத்தறி நெசவு ஆகிய பிரிவுகளின் கீழ், தொழில்நுட்பத் தேர்வுகள் நடக்கின்றன. தேர்வுகள், கீழ்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய இரு நிலைகளில் நடக்கின்றன.
விண்ணப்பதாரர்களின் தேர்வுகளுக்கான கல்வித் தகுதி, கீழ்நிலை தேர்வுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சியும், மேல்நிலை தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் கிடைக்கும்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, "கூடுதல் செயலர் (தொழில்நுட்பத் தேர்வு), அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்லூரி சாலை, சென்னை-6" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

>>>ராகிங் செயல்பாட்டிற்கெதிரான வலைத்தளம் மற்றும் ஹெல்ப்லைன்

ராகிங் செயலுக்கெதிரான வலைதளத்தையும், ஹெல்ப்லைனையும் மனிதவள அமைச்சர் கபில்சிபல் டெல்லியில் தொடங்கி வைத்தார்.
இந்த போர்டல், ராஜேந்திர கச்ரூ என்பவரின் கீழ் செயல்படும் அமன் சத்யா கச்ரூ ட்ரஸ்ட் என்ற அமைப்பால் ஏற்படுத்தப்பட்டது.
கடந்த 2009ம் ஆண்டில், ராகிங் செயல்பாட்டிற்கு எதிரான ஒரு போர்டலை உருவாக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிகழ்ச்சியில் பேசிய சிபல், "ராகிங் என்பது ஒரு பெருங்குற்றம். இது, ஒரு மாணவரின் தன்னம்பிக்கையை அழித்து, அவரை தற்கொலைக்கும் தூண்டுகிறது" என்றார்.
"இந்த புதிய போர்டல், ராகிங் பற்றிய புகார்களுக்கு, அரைமணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கும்" என்று கச்ரூ நம்பிக்கை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: இந்த போர்டலில் புகார் அளித்தவுடன், உடனடியாக கல்லூரி முதல்வர் அல்லது நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அவர்களை தொடர்புகொள்ள முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும்.
ராகிங் செயல்பாட்டிற்கு எதிரான புகாரை 18001805522 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் அல்லது www.antiragging.in மற்றும் www.amanmovement.org. என்ற இணையதளங்களில் பதிவு செய்யலாம்.
நாடு முழுவதும் ஏறக்குறைய 40 ஆயிரம் கல்லூரிகள் உள்ளன. அனைத்து கல்லூரிகளின் தரவுகளும்(Data base) உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>>ஜூலை 29 [July 29]....

  • சர்வதேச புலிகள் தினம்
  • தாய்லாந்து, தாய்மொழி தினம்
  • ருமேனியா தேசிய கீத தினம்
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)
  • பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(1957)

ஆசிரியர் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பள்ளியிலிருந்து நீங்குதல் மற்றும் சேர்க்கை அறிக்கை படிவங்கள் [Teachers Transfer & Promotion, Releiving & Joining Report Format]...

>>>பள்ளியில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் (Junior Most) பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியரை ஒன்றியத்தில் சேர்ந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்தல் வேண்டும் என்பதற்கான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

>>>ஜூலை 28 [July 28]....

  • உலக கல்லீரல் நோய் தினம்
  • பெரு விடுதலை தினம்(1821)
  • முதல் உலகப் போர் ஆரம்பமானது(1914)
  • முதல் முறையாக பிரிட்டனில் உருளைக் கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டது(1586)

>>>தொடக்கக்கல்வி - மாறுதல் மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு


28.07.2012 - காலை  - ஒன்றியத்திற்குள் பணி நிரவல் மற்றும் 
                               ஒன்றியம் விட்டு ஒன்றியம்பணி  நிரவல் 
           மதியம் - ஒன்றியத்திற்குள் பொது மாறுதல் 

29.07.2012 - காலை - ஒன்றியம்விட்டு ஒன்றியம்பொது மாறுதல் 

31.07.2012 - காலை - மாவட்டம்விட்டு மாவட்டம்பொது மாறுதல் 

>>>Direct Recruitment of Special Teachers Through Employment Registration State Seniority 2010 - 11 and 11 - 12 - Tentative List of Candidates Selected for Appointment (DSE Department)

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Special Teachers 2010 - 11 and 2011 - 12   

Vacancies Through Employment Registration State Seniority 


Provisional Results after Certificate Verification

For Recruitment of Special Teachers (2010 -11 and 2011 - 12) Vacancies through Employment State Seniority, Certificate Verification was held from 21.04.2011 to 28.04.2011 and 11.05.2011
After the Completion of Certificate Verification, the Board is now releasing the list of 1451 candidates provisionally selected as special Teachers.The said Selection list was prepared based on the list sponsered by and received from the Director of Employment and Training, in the ratio of 1:5. The said selection was purely carried on the basis of Employment State Seniority, Communal rotation and certain priorities laid down by the Government of Tamil Nadu. The formal selection intimation will be sent to them by post. Further communication will be issued by the Director of School Education regarding posting and placement.

 Post       -   Nos
P.E.T       -  1023
Drawing   -    304
Music       -     40
Sewing     -     84
Total        - 1451
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.
Dated: 26-07-2012                                                                         Chairman


>>>Please Click here Tentative List of Candidates Selected for Appointment 
 
>>>Please Click here Direct Recruitment of Special Teachers 2010-11 and 2011 - 12 Vacancies in State level Employment Seniority  
 
All Queries / Clarifications relating to Employment Seniority and other issues may be got from the Director of Employment and Training, Guindy, Chennai - 600 032. Ph: 22501002/22501006/22500911/22500900
 Website: tn.gov.in

>>>Recruitment of Post Graduate Assistants for the year 2011 - 12 - Key Answer for all Subject and Tentative List of Candidates Called for Certificate Verification

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

AS per Notification No.3/2012 published on 29.02.2012 the Written Competitive Examination for the Recruitment of PG Assistants and Physical Education Directors Grade I in Government Schools was held on 27.05.2012. The Answer key since been finalised by Subject Experts, the Marks obtained by all the candidates are hereby released. Subject-wise list of Candidates short-listed for Certificate Verification based on the Written Examination Marks and Communal Rotation are also released. In the case of Candidates obtained Equal Marks in the last Communal Turn, all the Candidates secured equal marks are called for Certificate Verification. Call letters for Certificate Verification along with necessary forms are being sent to the candidates individually.
It may be noted that the list now released are purely tentative. Calling for Certificate Verification is NOT a guarantee for selection. The Provisional list of candidates selected for appointment will be released after Certificate Verification for the short-listed candidates. 
Utmost care has been taken in preparing the list and in publishing them. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list will not confer any right of enforcement.

>>>Please Click here Tentative List of Candidates Called for C.V

>>>Please Click here to the Examination Results & Key Answers

>>>Key Answer for Paper I of Tamil Nadu Teacher Eligiblity Test - 2012



Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Key Answer for Paper I of 
Tamil Nadu Teacher Eligibility Test 2012


Tentative answer key for the Paper I of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 3rd August 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.

>>>Key Answer for Paper II of Tamil Nadu Teacher Eligiblity Test - 2012


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Key Answer for Paper II of
 Tamil Nadu Teacher Eligibility Test 2012

Tentative answer key for the Paper II of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 30th of July 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.

>>>ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.
ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.

>>>ஐஎம்எஸ் அறிமுகப்படுத்தும் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டடி பட்டி

மாணவர்கள், தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும் வகையில், ப்ளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டடி பட்டி(Study Buddy) என்ற பிரத்யேக அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிவார்ந்த வளம் மற்றும் ஆராய்ச்சி அடிப்படையிலான உள்ளடக்கத்தைக் கொண்டுள்ள இந்த பட்டி, கேட் மற்றும் சிமேட் போன்ற முன்னணி எம்பிஏ நுழைவுத் தேர்வுகளுக்கான மாதிரி தேர்வுகளை அளிக்கிறது. கல்லூரி வளாகங்களில் மேற்கொள்ளப்படும் பணியாளர் சேர்க்கைக்காக முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளின் மாதிரியும் இதில் அடங்கும்.
ஓம்னி - பிரிட்ஜ் சிஸ்டம்ஸ் உருவாக்கியுள்ள இந்த ஸ்டடி பட்டி ஆப், ப்ளாக்பெர்ரி ஆப் வேர்ல்ட் -லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதன் சிறப்பம்சங்கள்
* வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச பதிவிறக்கம்
* டைனமிக் யுஐ ரென்டரிங் - அனைத்து தகவல்களும் சர்வரில் இருந்து உடனுக்குடன் அளிக்கப்படுகிறது.
* ரேண்டம் வினாத்தாள் - கேள்விகள் சர்வரில் இருந்து தோராயமாக எடுக்கப்படுகிறது.
* பிளாக்பெர்ரி மெசஞ்சர் இன்டெக்ரேஷன் - தங்கள் பிளாக்பெர்ரி தொடர்புகளுடன் மாணவர்கள் சாட் செய்யலாம்.
* முந்தைய மட்டங்களில் பெற்ற சதவிகித அடிப்படையில் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு செல்லலாம்.
* பேக் எண்ட் கேள்விகள் வடிவமைப்பு மற்றும் ரிபோர்டிங் எஞ்சின்.
"ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு இளைஞர்களிடையே அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்த அப்ளிகேஷனை உருவாக்க வேண்டிய உறுதியான அவசியம் ஏற்பட்டுள்ளது. இது மாணவர்கள், தங்களை தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ளவும், அவற்றில் தங்களது திறன்களை வெளிப்படுத்துவதற்கும் நிச்சயம் உதவும்" என்று ஐஎம்எஸ் வர்த்தக தலைவர் சரித் நாயர் கூறினார்.
மாணவர்களின் தயார் நிலைக்கு ஏற்றவகையில் பல்வேறு மட்டங்களில் ஸ்டடி பட்டி மாதிரி தேர்வுகளை கொண்டுள்ளது. ஒரு மாணவர் பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தி கொள்வதற்கு கடுமையான மட்டங்கள் அடிப்படையில் ஸ்டடி பட்டியின் பின்புலப் பொறியில் உள்ள பல்வேறு வினாக்களில் இருந்து கேள்விகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
முன்பெல்லாம், பணிக்கு செல்பவர்கள்தான்ப்ளாக்பெர்ரி பயன்படுத்துவார்கள் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றோ மாணவர்களும் பரவலாக ப்ளாக்பெர்ரி பயன்படுத்தும் நிலை வந்துள்ளது.

>>>கேட் தேர்வு தேதிகளை அறிவித்தன ஐஐஎம் -கள்

ஐஐஎம் போன்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படும் கேட் தேர்வை 2012ம் ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 11ம் தேதி துவங்கும் கேட் தேர்வானது நவம்பர் 6ம் தேதி வரை மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.
கேட் தேர்வின் மூலம் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் சேர்க்கப்படக்கூடிய சில முதுநிலை மேலாண்மை பாடத்திட்ட விபரங்கள்:
PGP, PGP - ABM, PGSEM, PGPPM, PGP - PGDM, PGP - PGDCM, EPGP, PGDHRM
போன்ற படிப்புகள் திருச்சி, பெங்களூர் மற்றும் கோழிக்கோடு உள்பட, நாட்டில் மொத்தமுள்ள 13 ஐஐஎம் களில் வழங்கப்படுகின்றன.
மேலும் FPM(Fellow Programmes in Management) எனப்படும் முனைவர் பட்டத்திற்கு இணையான படிப்பானது, அகமதாபாத், பெங்களூர், கொல்கத்தா, இந்தூர், கோழிக்கோடு, லக்னோ, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருச்சி ஆகிய இடங்களிலுள்ள ஐஐஎம் களில் வழங்கப்படுகிறது.
இத்தேர்வை எழுதுவதற்கான தகுதிகள்
குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது CGPA தகுதி பெற்றிருக்க வேண்டும். SC/ST பிரிவு மாணவர்கள் 45% மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. இளநிலைப் பட்டப் படிப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண், சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தால் பின்பற்றப்படும் பயிற்சியின் அடிப்படையில் மதிப்பிடப்படும். இறுதியாண்டு படிப்பவர்கள் மற்றும் இறுதி தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பவர்களும் இத்தேர்வை எழுதலாம்.
அதுபோன்ற தகுதி நிலையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், அவர்கள் படித்த கல்வி நிறுவனத்தின் முதல்வர் அல்லது பதிவாளர் அளிக்கும் தகுதி சான்றிதழின் அடிப்படையிலேயே தற்காலிகமாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். ஐஐஎம் கள் பலவிதமான நிலைகளில் ஒரு மாணவரின் தகுதியை சரிபார்க்கும்.
பொருத்தமான தகுதியுடைய மாணவர்கள், தேர்வுசெய்யும் செயல்பாடு முழுவதும் முடிவடையும்வரை, தங்களது மின்னஞ்சல்(E-mail) முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாற்றாமல் வைத்து, பராமரிக்க வேண்டும்.
இடஒதுக்கீட்டு முறை
இந்திய அரசின் விதிப்படி, 15% இடங்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும், 7.5% இடங்கள் பழங்குடியின மக்களுக்காகவும், 27% இடங்கள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 3% இடங்கள் ஊனமுற்ற மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டிற்கு தகுயுள்ள மாணவர்கள், விண்ணப்பத்தில் அதை குறிப்பிடுவதுடன், தகுதி விதிமுறைகளையும் தெளிவாகப் படிக்க வேண்டும்.
கேட் - 2012 தேர்வின் வவுச்சர்களை அக்சிஸ் வங்கியின் கிளைகள் மற்றும் அது சார்ந்த கிளைகளில், ஜுலை 30 முதல் செப்டம்பர் 17 வரை பெற்றுக் கொள்ளலாம். அதன் விலை ரூ.1600. SC/ST பிரிவு மாணவர்களுக்கு ரூ.800. வவுச்சரை ஒரு தடவை வாங்கி விட்டால், அதை மீண்டும் திருப்பி கொடுத்து பணம் வாங்க முடியாது.
தேர்வு மையங்கள்
நாடு முழுவதும் மொத்தம் 36 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. எந்த தேர்வு மையத்தையும் மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ அல்லது டெஸ்ட் விண்டோ நேரம் மற்றும் தேதியை மாற்றவோ ஐஐஎம் களுக்கு அதிகாரம் உண்டு.
கேட் 2012 மதிப்பெண்
கேட் 2012 தேர்வின் மதிப்பெண்களை, www.catiim.in என்ற வலைத்தளத்தில் 9 ஜனவரி, 2013 முதல் பார்க்கலாம். மதிப்பெண் அட்டையின் பிரிண்ட் அவுட் நகலை மாணவர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த கேட் 2012 மதிப்பெண் அட்டையானது, 31 டிசம்பர், 2013 வரை செல்லும்.
இந்த மதிப்பெண் அட்டையை 31 டிசம்பர், 2013 வரை, www.catiim.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
சேர்க்கை செயல்முறை
எழுத்து திறன் தேர்வு(WAT), குழு கலந்தாய்வு(GD) மற்றும் நேர்முகத் தேர்வு போன்றவை சேர்க்கை செயல்முறையில் பின்பற்றப்படுகின்றன. மேலும், கேட் தேர்வில் ஒருவரின் செயல்பாடு, மாணவர் சேர்க்கையில் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும்.
இவைத்தவிர, ஒரு மாணவரின் முந்தைய கல்வி நிலைய செயல்பாடுகள், தொடர்புடைய பணி அனுபவம் போன்றவையும் கணக்கில் எடுக்கப்படும்.
இந்தத் தேர்வைப் பற்றி முழுமையான அம்சங்களை அறிந்துகொள்ள www.catiim.in என்ற வலைத்தளம் செல்க.

>>>ஜூலை 27 [July 27]....

  • தமிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)

>>>Microsoft Windows Keyboard Shortcuts...

>>>யோகா கையேடு [Yoga Module]...

>>>Communication Skill Module

>>>ஆங்கில இலக்கணம் கையேடு [English Grammar Module]

>>>எட்டாம் வகுப்பு அறிவியல் கையேடு

>>>ஏழாம் வகுப்பு கையேடுகள் [VII Standard Modules]

>>>ஆறாம் வகுப்பு கையேடுகள் [VI Standard Modules]

>>>Advertisement for recruitment of staff in State Project Support Unit

>>>மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கு சிறப்பாக செயல்படுவோருக்கு விருதுகள்...

>>>அரசிதழ் எண் 27, நாள் 25-07-2012 [Gazette Issue No.27,Dt:25-07-2012]

>>>வெள்ளி பனி மலையில் வீரப்போராட்டம்: இன்று கார்கில் நினைவு தினம்

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே 1999ல் நடந்த கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றது. இருப்பினும் 500க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர். இவர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கார்கில் நினைவு தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் கரடுமுரடான 18000 அடி உயர சிகரங்களை கொண்ட கார்கிலில் சாதாரண சூழ்நிலையிலேயே தாக்கு பிடிப்பது கடினம். குளிர் காலத்தில் வெப்பநிலை மைனசுக்கும் கீழ் இறங்கிவிடும். இரு நாட்டு வீரர்களும், செப்., 15ம் தேதி முதல் ஏப். 15ம் தேதி வரை பழைய ஒப்பந்தப்படி, கார்கில் சிகரங்களிலிருந்து பின்வாங்குவர். ஏப்ரல் பிற்பகுதியில் மீண்டும் பாதுகாப்பு பணியை தொடர்வர்.

பாகிஸ்தான் சதி: 1999 ஏப்ரலில் கார்கில் சென்ற இந்திய ராணுவத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பாகிஸ்தான் ராணுவம், காஷ்மீர் பயங்கரவாதிகளுடன் கை கோர்த்துக்கொண்டு இந்திய பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. 5 ஆயிரம் பேர் எல்லை தாண்டி இந்திய நிலைகளுக்குள் ஊடுருவி இருந்தனர். இது திடீரென நடந்த ஊடுருவல் அல்ல, பாகிஸ்தானால் திட்டமிடப்பட்ட "ஆபரேஷன் பாதர்' என்ற பெயரில் நடந்த அத்துமீறல் இது. பாகிஸ்தானின் சதியை முறியடிக்க, "ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் இந்தியா 1999 மே 26ம் தேதி ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

விமான தாக்குதல்: கார்கில் பகுதி முழுவதும் மலை பிரதேசம் என்பதால் எங்கெல்லாம் ராணுவ முகாம் இல்லையோ, அங்கெல்லாம் பாகிஸ்தானிய ராணுவத்தினர் உட்புக ஆரம்பித்தனர். இவர்கள் மலை உச்சியில் இருந்ததால்... கீழிருந்து நமது ராணுவத்தினர் தாக்குவது சிரமமாக இருந்தது. எனவே, மே 26ம் தேதி விமான தாக்குதல் துவங்கியது. இதன் படி ஸ்ரீநகர் விமான நிலையம் ராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

ராணுவ வீரர்கள் தியாகம்: தொடர்ந்து போர் நடந்து வர.... எல்லை பகுதியில் போர் வீரர்களை சந்தித்து ஊக்கம் தர அப்போதைய பிரதமர் வாஜ்பாய் ஜூன் 13ம் தேதி கார்கில் சென்றார். அவர் பேச இருந்த இடத்தில் பீரங்கி தாக்குதல் நடந்தது. அவர் உயிர் தப்பினார். இந்திய வீரர்களின் அதிரடி தாக்குதல் தொடர்ந்தது. 66 நாட்கள் நடந்த இப்போர் 1999 ஜூலை 26ல் முடிவுக்கு வந்தது. இந்திய ராணுவ வீரர்கள், இன்னுயிரை தியாகம் செய்து பெற்ற இந்த வெற்றியை இந்நாளில் நினைவு கூர்வோம்.

>>>பள்ளிச் சீருடை அணிந்தால் பஸ் கட்டணம் கிடையாது

இலவச கையடக்க பேருந்து பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்படாக, மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தாலோ அல்லது பழைய பஸ் பாஸ் வைத்திருந்தாலோ, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பேருந்து நடத்துனர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படுகிறது. இந்தாண்டு முதல், பழைய முறை மாற்றப்பட்டு, சென்னை மாநகரில் வழங்கப்படுவது போன்று, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களிலும், கையடக்கப் பேருந்து பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம், 19ம் தேதி, 30 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதல் முறையாக கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டை வழங்கும் திட்டத்தை, முதல்வர் துவக்கி வைத்தார். ஆனால், பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும், மாணவர்களுக்கு பயண அட்டைகள் வழங்கப்படவில்லை. இதனால், தினமும் கட்டணம் செலுத்தி, பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய முறையில் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகம் வழங்குவதில் காலதாமதம் போன்ற காரணங்களால், மாணவர்களுக்கு உரிய நேரத்தில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இதனால், பேருந்து பயண அட்டை கிடைக்காததால், கிராமப்புற ஏழை மாணவர்கள், பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர். தினமும், 20 ரூபாய் வரை பேருந்துக்கு கட்டணம் செலுத்தி, பள்ளிகளுக்கு வந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இதற்கு மாற்று ஏற்பாடாக, பேருந்து பயண அட்டைக்கு பதில், சீருடை அணிந்து வந்தாலே, கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும் போது, பேருந்து பயண அட்டை வழங்கும் வரை, பழைய பேருந்து பயண அட்டையைக் கொண்டு மாணவர்கள் பயணிக்கலாம்; அல்லது பள்ளி சீருடையுடன் வந்தால் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளோம். இதுகுறித்து, அந்த கழக அதிகாரிகள் நடத்துனர்களிடம் அறிவுறுத்தி உள்ளனர் என்றனர்.
புதிய முறையில் வழங்கப்படும் பேருந்து பயண அட்டைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அந்தந்த பள்ளி நிர்வாகங்கள் அனுப்பியுள்ளன. கடந்தாண்டு, இந்த விண்ணப்பத்திற்கு, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்தாண்டு, விண்ணப்பத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
கட்டணம் ஏதுமில்லாததால், பள்ளி நிர்வாகத்தினர், இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தரும் பணியை மேற்கொள்வதில் அலட்சியம் காட்டியுள்ளனர். அதனால், மாணவர்களே தங்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பள்ளி நிர்வாகத்திடம் அளித்துள்ளனர்.
மேலும், விண்ணப்பங்கள் சரிபார்க்கப் படாமலேயே பள்ளி நிர்வாகங்கள் சார்பில், பயண அட்டை வழங்கும் மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் உள்ள விவரங்களின் படி, பயண அட்டைகள் அச்சடிக்கப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பெரும்பாலான பயண அட்டையில் தவறான விவரங்கள் அச்சடிக்கப்பட்டிருப்பதை கண்ட மாணவர்கள், அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற காரணங்களாலேயே பயண அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகின்றனர்.
புதிய முறையில் ஒரு பயண அட்டையை அச்சடிக்க, 10 ரூபாய் வரை செலவாகிறது. பள்ளி நிர்வாகங்கள் காட்டிய அலட்சியத்தால், பயண அட்டை வழங்குவதில் காலதாமதமும், கூடுதல் செலவும் ஏற்பட்டுள்ளன எனவும் அவர்கள் கூறினர்.
இப்பிரச்னை தொடர்பாக, அனைத்து பள்ளிகளுக்கும் பயண அட்டை பெறுவதில் உரிய முறையை பின்பற்ற வேண்டும் என, போக்குவரத்துத் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

>>>10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

தமிழகத்தில், 10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரம், நடப்பு கல்வியாண்டில் ரத்து செய்யப்பட்டிருப்பதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது. பி.எட்., - எம்.எட்., படிப்புகளுக்கான சேர்க்கை விரைவில் நடைபெற உள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
போதிய உள் கட்டமைப்பு வசதி இல்லாத மற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இல்லாத கல்லூரிகளுக்கு, நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விசாரணை நடத்தி, ஆசிரியர் கல்விக்கான தேசியக் கவுன்சில் (என்.சி.டி.இ.,) உரிய நடவடிக்கை எடுக்கிறது.
அதன்படி, தமிழகத்தில் 10 கல்வியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, என்.சி.டி.இ., நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெறாது.
கல்லூரிகளின் பெயர் பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
1. மியாசி கல்வியியல் கல்லூரி, சென்னை.
2. பாரதியார் கல்வியியல் கல்லூரி, சேலம் மாவட்டம்.
3. குட் ஷெப்பர்டு கல்வியியல் கல்லூரி, நாகர்கோவில்.
4. ஜேம்ஸ் கல்வியியல் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம்.
5. எம்.எஸ்.இ.எஸ்., கல்வியியல் கல்லூரி, தான்தோன்றிமலை, கரூர் மாவட்டம்.
6. நரேந்தர் கல்வியியல் கல்லூரி, வெங்கடாசலபுரம், திருச்சி மாவட்டம்.
7. ஏ.ஆர்.ஆர்., கல்வியியல் கல்லூரி, வளையபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
8. ஏ.ஆர்.ஆர்., மகளிர் கல்வியியல் கல்லூரி, வளையபேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
9. மாதா கல்வியியல் கல்லூரி, மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்.
10. ஸ்ரீ கல்வியியல் கல்லூரி, பாப்பநாயக்கன்பட்டி, நாமக்கல் மாவட்டம்.

>>>ஜூலை 26 [July 26]....

  • மாலத்தீவு விடுதலை தினம்(1965)
  • உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்(1856)
  • உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை தெற்கு லண்டனில் ஆரம்பமாகியது(1803)
  • நியூயார்க் அமெரிக்காவின் 11வது மாநிலமாக இணைந்தது(1788)
  • டிஸ்கவரி விண்ணோடம் ஏவப்பட்டது(2005)

>>>நாட்டின் 13வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் பிரணாப்

 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டு, நாட்டின், 13வது புதிய ஜனாதிபதியாக, பிரணாப் முகர்ஜி இன்று பதவியேற்கிறார். பார்லிமென்ட் மைய மண்டபத்தில் நடக்கும் கோலாகல பதவியேற்பு விழாவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரணாப் முகர்ஜி, நாட்டின், 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ளதால், டில்லியில், இதற்கான விழா ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. புதிய ஜனாதிபதியை வரவேற்று, பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக, டில்லி பார்லிமென்ட் வளாகத்தின் மைய மண்டபம், ஜோராக வண்ண, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மைய மண்டபத்தில், இன்று காலை 11.30 மணியளவில், ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார்.

பலத்த பாதுகாப்பு: இதையொட்டி, பார்லிமென்ட் வளாகமும், அதை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும், நேற்றே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது குடியிருக்கும் தல்கோத்ரா சாலை இல்லத்தில் இருந்து, காலையில் கிளம்பி, பிரணாப் முகர்ஜி நேராக ஜனாதிபதி மாளிகை செல்வார். அங்கு, ஜனாதிபதி பதவியில் இருந்து விடைபெறும் பிரதிபா பாட்டீலுக்கு, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு, பிரணாப் முகர்ஜியை அழைத்துக் கொண்டு, பிரதிபா பாட்டீல் நேராக பார்லிமென்டிற்கு வருவார். குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், இருவரும் அமர்ந்து வருவர். அவர்கள் இருவரையும், பார்லிமென்டில், துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், சபாநாயகர் மீராகுமார் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கபாடியா ஆகியோர் வரவேற்று, பார்லிமென்ட் மைய மண்டபத்திற்கு அழைத்து வருவர்.

பதவி பிரமாணம்: இதன்பின், பதவி ஏற்பு விழா துவங்கும். பிரணாப் முகர்ஜிக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியான கபாடியா, பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். பிரணாப் பதவியேற்றதும், ராணுவ வீரர்கள், 21 குண்டுகள் முழங்க, வரவேற்பு அளிப்பர். ஜனாதிபதி, முப்படைகளின் தலைவர் என்பதால், தங்களது புதிய தலைவரை வரவேற்கும் வகையில், குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன் பின், புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி, உரை நிகழ்த்துவார்.

புத்தகங்கள்: கடந்த ஒரு வாரமாகவே, பார்லிமென்ட் நூலகத்தில் இருந்து, நிறைய புத்தகங்களை பிரணாப் வரவழைத்து படித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதிகளான ராஜேந்திர பிரசாத் மற்றும் ராதாகிருஷ்ணனின் பேச்சுக்கள் அடங்கிய புத்தகங்கள் நிறையவற்றை, பிரணாப் வாங்கிச் சென்றுள்ளதாக, பார்லிமென்ட் நூலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், புதிய ஜனாதிபதியான பிரணாப், இன்றைய உரையில், முன்னாள் ஜனாதிபதிகள் பற்றியும், அவர்களது பங்களிப்பையும், நிறைய குறிப்பிடுவதற்கு வாய்ப்பு உள்ளது. பதவியேற்பு விழா நிகழ்ச்சி நிறைவு பெற்றதும், மீண்டும் பிரதிபா பாட்டீலும், பிரணாப்பும், குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில், பார்லிமென்டிலிருந்து கிளம்பி, நேராக ஜனாதிபதி மாளிகைக்கு செல்வர். அங்கு, புதிய ஜனாதிபதியாக வந்திறங்கியுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, முப்படை ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படும். இதை ஏற்றுக் கொண்டு, அதிகாரப்பூர்வமாக, தன் பதவியில் பிரணாப் அமர்வார். அந்த இடத்திலேயே, பிரதிபா பாட்டீலுக்கு, சிறியதாக, பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெறும்.

வெளியேறுவார்: இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டதும், மூத்த மத்திய அமைச்சர் யாராவது ஒருவர், பிரதிபா பாட்டீலை அழைத்துக் கொண்டு, ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறுவார். பிரதிபா தங்குவதற்காக, டில்லி துக்ளக் சாலையில் தயார் செய்யப்பட்டிருக்கும் பங்களாவில், அவரை மத்திய அமைச்சர் அழைத்துக் கொண்டு போய், விட்டுச் செல்வார். புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில், அமைச்சர்கள், பத்திரிகையாளர்கள், எம்.பி.,க்கள், பல்வேறு தூதரகங்களின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

ஜனாதிபதி இல்லை: நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக தேர்வாகி, கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய பிரதிபா பாட்டீலின் பதவிக் காலம், நேற்றுடன் முடிவடைந்தது. அதனால், பிரதிபாவின் அலுவலகமும், நேற்று நள்ளிரவு, 12 மணியுடன் மூடப்பட்டு விடும். அவரின் அதிகாரங்களும், அத்துடன் நிறைவு பெற்று விடும். புதிய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜியோ, இன்று காலை 11.30 மணிக்குத் தான் பொறுப்பை ஏற்கிறார். ஆக, இடைப்பட்ட 12 மணி நேரங்களுக்கு, ஜனாதிபதியாக யாருமே இல்லை என்றாகிறது. முப்படைகளின் தலைவர் என்ற, மிக முக்கிய பதவி காலியாக இருக்கப் போகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அரசியல் சட்ட காப்பாளராக, ஜனாதிபதியின் இடத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே இருந்து செயல்படுவார். ஏதேனும், இக்கட்டுகளோ நெருக்கடியோ, இந்த 12 மணி நேரத்தில் ஏற்பட்டால், அதை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தான் கையாள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவரது "லிஸ்ட்'டும் ரொம்ப நீளம்: இன்றைக்கு நடைபெறவுள்ள ஜனாதிபதி பதவியேற்பு விழாவில், மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருப்பது, பாஸ் பிரச்னை. விழாவில் பங்கேற்பவர்களுக்காக, மிக குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே இருக்கைகள் உள்ளதால், அதற்கேற்ற வகையில், பாஸ்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி பதவியில் இருந்து கீழிறங்கும் பிரதிபா பாட்டீல் மற்றும் ஜனாதிபதியாகப் போகும் பிரணாப் முகர்ஜி என, இருவரது குடும்பத்தினருக்கும், ஏகப்பட்ட பாஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களது குடும்ப உறுப்பினர்களது பட்டியல், பெரியதாக நீள்வதே, இதற்கு காரணம். துணை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரின் குடும்பத்தினரை தவிர, அமைச்சர்களோ அல்லது எம்.பி.,க்களோ, தங்களது குடும்பத்தினரை அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பிரணாப்பிற்கு கிடைக்கும் வசதிகள் என்னென்ன? நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள பிரணாப் முகர்ஜிக்கு, மாதம் ஒன்றுக்கு, 1.5 லட்ச ரூபாய் சம்பளம் வழங்கப்படும். டில்லியில் உள்ள பிரமாண்டமான மாளிகையில் வசிக்கலாம். இந்த மாளிகையில், மிகப் பெரிய அறைகளும், பூங்காக்களும் உள்ளன. அவருக்கு உதவி செய்ய, மாளிகையில், 200 ஊழியர்கள் பணியாற்றுவர். அவர் ஓய்வெடுக்க, சிம்லா மற்றும் ஐதராபாத்தில் மாளிகைகள் உள்ளன. முப்படைக்கும் தளபதியான அவர், தனி விமானத்தில், எந்த நாட்டுக்கும் பறக்கலாம். வேண்டுமானால், குடும்பத்துடன் செல்லலாம். நிதி அமைச்சராக பதவி வகித்தபோது, பிரணாப் முகர்ஜி ராணுவத் துறையால் பதிவு செய்யப்பட்ட அம்பாசிடர் காரில் தான் பயணித்து வந்தார். இன்று முதல், அவர், மெர்சிடஸ் பென்ஸ் காரில் பயணிக்கலாம். அதுதான், இனி அவரது அலுவலக கார். குண்டு துளைக்காத வகையில் தயாரிக்கப்பட்டது. அவர் பதவியில் இருக்கும்போது, இந்த வசதிகள் எல்லாம் கிடைக்கும் என்றால், அவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றதும், அவருக்கு, மாதந்தோறும் ஓய்வூதியமாக, 75 ஆயிரம் ரூபாயும், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய பங்களா, அதில், இரு தரைவழி தொலைபேசி இணைப்புகள் இருக்கும். அத்துடன், மொபைல்போன் இணைப்பும் வழங்கப்படும். ஒரு கார், ஒரு தனிச் செயலர் உட்பட, ஐந்து ஊழியர்கள் அவருக்காக பணி அமர்த்தப்படுவர். அவர்களது மாதச் செலவுக்கென, 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இலவசமாக விமானத்திலும், ரயிலிலும் அவரின் மனைவியுடன், நாடு முழுவதும் செல்ல சலுகையும் வழங்கப்படும்.

பிரணாப் தொகுதியில் போட்டியிட மகன் அபிஜித் ஆசை: நாட்டின் 13வது ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி தேர்வாகியுள்ளதால், அவரின் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, அவரது மகனும், மேற்குவங்க சட்டசபை எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். நாட்டின் 13வது ஜனாதிபதியாக, இன்று பதவியேற்க உள்ள பிரணாப் முகர்ஜி, கடந்த 2009ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மேற்கு வங்கம் முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.,யானார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேர்ந்ததால், அவர் தன் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், தன் தந்தை போட்டியிட்டு வெற்றி பெற்ற, ஜாங்கிபூர் லோக்சபா தொகுதியில் போட்டியிட, பிரணாப்பின் மகனும், பிர்பும் மாவட்ட நல்ஹாதி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வுமான, அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.பி.,யுமான, ஆதிர் சவுத்திரி கூறுகையில், ""ஜாங்கிபூர் தொகுதியில் போட்டியிட அபிஜித் முகர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். அவரது விருப்பத்தை நாங்கள் வரவேற்கிறோம். இத்தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியில், பிரணாப் முகர்ஜி, நிறைய வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். எனவே, அபிஜித் முகர்ஜி போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது நிச்சயம்,'' என்றார்.

>>>கட்டடம் கட்ட தலைமையாசிரியர்கள் தயக்கம்...பள்ளிகளுக்கு வகுப்பறைகள் கிடைக்காமல் போகும் அபாயம்...

அரசு பள்ளிகளில் கட்டடம் தேவையிருப்பினும், அதை கட்டுவதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, தலைமை ஆசிரியர்கள், அப்பணியினை எடுக்காமல் தவிர்த்து வருகின்றனர். இதனால் இடநெருக்கடி இருந்தும், அதற்கு அரசு நிதி ஒதுக்க தயாராக இருந்தும், மாணவர்களுக்கு கட்டடம் கிடைக்காத நிலை காணப்படுகிறது.
தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் கல்வி திட்டமும், ஒன்பது, பத்தாம் வகுப்பு உள்ள பள்ளிகளில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் இத்திட்டங்கள் மூலம், ஒவ்வொரு ஆண்டும், தேவைக்கேற்ப, வகுப்பறைக் கட்டடத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.இதற்காக, வகுப்பறை பற்றாக்குறை உள்ள பள்ளிகளைக் கண்டறியும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அனைத்து பள்ளிக்கும் வகுப்பறை தேவையா என்பது குறித்த கணக்கெடுப்பு, தலைமை ஆசிரியர்களிடம் சேகரிக்கப்படுகிறது. வகுப்பறை கட்டடம் கட்டுவதில், பல்வேறு சிக்கல்கள் தலைதூக்குவதால், தலைமை ஆசிரியர்கள் வகுப்பறை கட்டும் பணியை தவிர்ப்பதிலேயே குறியாக உள்ளனர்.கட்டடம் தேவையாக இருந்தாலும், போதுமான அளவு கட்டடம் உள்ளது என்றே, அறிக்கையில் தெரிவிக்கின்றனர். இதனால் திட்டங்களில் கட்டடத்துக்கு என, நிதி இருந்தும், அவற்றை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.கட்டடப் பணிகளுக்கு, திட்டங்களில் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு பல ஆண்டுகளாகவே அதிகரிக்காமல் உள்ளது. நிதி ஒதுக்கீடு செய்து விட்டால், அதில் வகுப்பறை கட்டடத்தை கட்டிமுடிக்க வேண்டிய கடமை, தலைமை ஆசிரியரை சேர்ந்தது. கட்டடத்தில் சரியான தரம் இருக்க வேண்டும் என்பதையும், திட்டத்தின் கீழ் செயல்படும் இன்ஜினியர்கள் அவ்வப்போது சோதனை செய்து கொண்டே உள்ளனர்.
இந்நிலையில், கட்டுமான பொருட்களின் விலையேற்றம், தினம் தினம் அதிகரிக்கிறது. சிமென்ட் மூட்டை, இரும்பு கம்பிகளின் விலை பலமடங்கு அதிகரித்து வருவதால், அந்த குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுக்குள் கட்டடம் கட்டுவது, இயலாத காரியமாகி விடுகிறது.இதனால், ஒரு வகுப்பறை கட்டடம் கட்டத் துவங்கினால், பல ஆண்டு வரை நிதிப் பற்றாக்குறையால் இழுபறியில் நிற்கிறது. சமீபத்தில் கட்டட பணிகளை மேற்கொண்ட தலைமை ஆசிரியர்கள், அதை முடிக்கும் முன், அப்பணியிலிருந்து பணிமாறுதல் பெறவோ, பதவி உயர்வு மாறுதல் பெறவோ முடியாது என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதனால் தலைமை ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பள்ளியில் வகுப்பறை உள்ளிட்ட கட்டட பணிகளைஎடுக்க தயக்கம் காட்டுகின்றனர். பள்ளியில் இடநெருக்கடி இருந்தாலும், போதுமான அளவு வகுப்பறை உள்ளது என்று கணக்கு காட்டுகின்றனர். இதனால் திட்டங்களில் போதுமான நிதி இருந்தும், மாணவ, மாணவியருக்கு, புதிய வகுப்பறை கிடைக்காத நிலை உருவாகியுள்ளது.கட்டுமான பணிகள் கட்டுவதில், தலைமை ஆசிரியர்களுக்கு உருவாகியிருக்கும் நெருக்கடிகளை தளர்த்த வேண்டும் எனவும், அதிகரித்து வரும் கட்டுமான பொருட்களின் விலையேற்றத்துக்கு ஏற்றவாறு, கட்டடங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

>>>ஜூலை 25 [July 25]....

  • துனீசியா குடியரசு தினம்(1957)
  • அஜினமோட்டோ கண்டுபிடிக்கப்பட்டது(1908)
  • இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பிரதிபா பாட்டீல் பதவியேற்றார்(2007)
  • சோவியத் செய்தி நிறுவனமான டாஸ் நிறுவப்பட்டது(1925)
  • முதல் சீன-ஜப்பானியப் போர் துவங்கியது(1894)

>>>நிதியுதவி பெறும் பள்ளிகள் - 1990-91 & 1991-92 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பூதிய நியமனம் பெற்றவர்களை முறையான நியமனம் செய்தல் - உரிய கணக்கு தலைப்பு - தொடக்கக் கல்வி இயக்ககம் விவரம் கேட்பு

>>>Tamil Nadu Teacher Eligiblity Test 2012 - Key Answer for Paper II

Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Key Answer for Paper II of Tamil Nadu 
Teacher Eligibility Test 2012
 
Tentative answer key for the Paper II of Teacher Eligibility Test conducted on 12.7.2012 is uploaded for information of the candidates.  Candidates are advised to go through it carefully and submit their specific objections, if any, along with evidence to the Teachers Recruitment Board on or before 30th of July 2012 for consideration, without fail.  Objections submitted thereafter won’t be  considered.








இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Husband should be given leave to look after wife during maternity - High Court

மகப்பேறு காலத்தில் மனைவியை கவனிக்க கணவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் - உயர்நீதிமன்றம் Husband should be given leave to look after wife durin...