கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இன்றைய செய்திகள் தொகுப்பு... 03.11.2020 (செவ்வாய்)...

🌹எல்லாம் இருந்தும் எதுவுமில்லை. எல்லோரும் இருந்தும் நமக்காக யாரும் இல்லை என யோசிக்க வைக்கிறது வாழ்க்கை சில நேரங்களில்.!

🌹🌹அவசியம் இல்லாதவரிடம் உண்மைகளை சொல்லாதீர்கள்.

அதுபோல அவசியமானவர்களிடம் பொய்களை சொல்லாதீர்கள்.ஏனெனில் இரண்டுமே உங்களை காயப்படுத்தும்.

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கூடுதலாக வேளாண்மைத்துறை அளிக்கப்பட்டதையொட்டி துணை முதல்வரிடம் அமைச்சர் வாழ்த்து பெற்றார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீச்செல்வத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

🌈🌈“கொடைக்கான‌லை சுற்றி இருக்க‌ கூடிய‌ அனைத்து ப‌ழ‌ங்குடி கிராம‌த்திற்கும் "வார‌ம் ஒரு ப‌ழ‌ங்குடி கிராம‌ம்" என‌ அனைத்து துறை அர‌சு அதிகாரிக‌ளுட‌ன் சென்று குறைக‌ளை கேட்டறிந்து ஒரு வார‌த்திற்க்குள் தீர்க்க‌ப்ப‌டும்”-ஆட்சிய‌ர் சிவ‌குரு பிர‌பாக‌ர‌ன்

🌈🌈சமூக நீதிக்கு விரோதமான ஆட்சியால் மருத்துவக் கல்வியில் இந்திய அளவில் 3,758; தமிழக அளவில் 764 இடங்கள் இழப்பு: கி.வீரமணி வேதனை

🌈🌈அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் நவ.4-ம் தேதி ஆலோசனை

🌈🌈திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய திரைப்படங்கள் வெளியாகாது: பாரதிராஜா அறிக்கை.                                                                           

 🌈🌈தீபாவளிக்கு திரைப்படங்களை திரையிடுவது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் காணொலிக் காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

🌈🌈நவ.16-ல் பள்ளி, கல்லூரிகளைத் திறக்க வரவேற்பு: மாணவர்கள் மொத்தமாகக் கூடுவது தவிர்க்கப்படுமா?- சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தக் கோரிக்கை

🌈🌈பேட்டரி மூலம் இயங்கும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 100% வரி விலக்கு: தமிழக அரசு அரசாணை வெளியீடு.

🌈🌈கல்வியுடன் ஒழுக்கம் அறநெறியை கற்றுக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு நீதிபதி கிருபாகரன் அறிவுரை

🌈🌈நவம்பர் 16 பள்ளிகள் திறப்பு - மாணவர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய கோரிக்கை

🌈🌈முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழை 5 நாளில் வழங்க வேண்டும்: உயர்கல்வித் துறை அறிவுறுத்தல்

🌈🌈BE - முதலாமாண்டு வகுப்புகள் நவ.23-ஆம் தேதி முதல் தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்.

🌈🌈3 ஆண்டுகளாக காத்திருக்கும் சிறப்பாசிரியர்களுக்கு பணி ஆணை வழங்க கோரிக்கை

🌈🌈10-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இந்தி மொழி குறித்த எந்த குறிப்பும் இடம் பெறவில்லை: பள்ளிக்கல்வித்துறை.

🌈🌈நவ.18-க்கு முன்பாக மருத்துவ படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு தொடங்கும்: சுகாதாரத்துறை தகவல்

🌈🌈பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி

🌈🌈ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்குதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் வெளியீடு.நாள் 20.10.2020

🌈🌈லஞ்சம் நாட்டை புற்றுநோய் போல் அரிக்கிறது: லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை தூக்கிலிட்டால் என்ன? உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கேள்வி

🌈🌈பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை.

தமிழகத்தில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுல்கு வரும் 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை

🌈🌈கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகின்ற 6ஆம் தேதி திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொள்கிறார்.

🌈🌈கொரனா தடுப்பு பணிகள் மற்றும் திட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய 10 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், 11 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கும் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம்

🌈🌈மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நவம்பர் 4, 5 ஆகிய இரண்டு நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு 

- வானிலை ஆய்வு மையம்

🌈🌈தமிழகத்திலிருந்து  சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் பின்பற்றப்படவேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.

👉சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்  தமிழக ஐயப்ப பக்தர்கள் கேரள காவல் துறையின்  மெய்நிகர் இணைய வழி ( Virtual Que Portal) தரிசன வரிசையில்  (sabarimalaonline.org) பதிவு செய்ய வேண்டும்.

முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 1000 பக்தர்களுக்கும், வார இறுதி நாட்களில் நாள் ஒன்றுக்கு 2000 பக்தர்களுக்கும் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படும்.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்கள், தரிசனத்திற்கு முந்தைய 48 மணிநேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, தொற்று இல்லை என்று  கொரோனா எதிர்மறை சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

10 வயதுக்கு குறைவான மற்றும் 60-65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்களுக்கு தரிசனத்திற்கான அனுமதி இல்லை.  நோயால் உடல் நலம் குன்றிய பக்தர்களும்  சபரிமலை யாத்திரை மேற்கொள்ள தடைசெய்யப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு  கீழ் உள்ளவர்களுக்கான அடையாள அட்டை, ஆயுஸ்மான் பாரத்   அடையாள அட்டை போன்றவற்றை வைத்துள்ளவர்கள் யாத்திரை பயணத்தின்போது அவற்றினை உடன் கொண்டு வருதல் வேண்டும்.

நெய் அபிஷேகம், பம்பை ஆற்றில் நீராடல் மற்றும் இரவு நேரங்களில்  சன்னிதானம், பம்பை மற்றும் கணபதி திருக்கோயில்  ஆகிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி இல்லை.

எருமேலி மற்றும் வடசேரிக்கரை வழியாக மட்டுமே பக்தர்கள் சபரிமலை யாத்திரை மேற்கொள்ள வேண்டும்.

🌈🌈திமுக விடுதலைச் சிறுத்தைகள் கூட்டணியில்  எந்த  குழப்பமும் இல்லை. கூட்டணியில் பிரச்சினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அது நடக்காது..

- திருமாவளவன்

🌈🌈தமிழக அரசு - பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு:

பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ், கருணைத்தொகை அறிவிப்பு

"சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 10% போனஸ் வழங்கப்படும்"

நிரந்தர தொழிலாளர்கள் போனஸ் மற்றும் 

கருணைத்தொகையாக ரூ.8,400 பெறுவர் - தமிழக அரசு

2 லட்சத்து 91 ஆயிரத்து 975 பேர் பயனடைவார்கள் என தமிழக அரசு அறிவிப்பு.

நிரந்தர தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.8,400 மற்றும் அதிகபட்ச ஊதியம் ரூ.16,800 வரையும் வழங்கப்படும். போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு ஊழியர்க்கும் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும் தற்காலிக ஊதியமாக ரூ.3000 போனஸ் வழங்கப்படும். தொடக்க கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ரூ.2,400 போனஸ் வழங்கப்படும்.

🌈🌈அமைச்சர் துரைக்கண்ணு காலமானதை அடுத்து, தஞ்சை மாவட்டம் பாபநாசம் சட்டப்பேரவை தொகுதி காலியாக இருப்பதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு.

🌈🌈பங்களாதேஷில் 50,000க்கும் மேற்பட்ட இஸ்லாமிய மக்கள் ஒன்றுகூடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நபிகள் நாயகம் குறித்து மேக்ரான் கூறிய கருத்துக்கு எதிராக அந்நாட்டில் தொடர் போராட்டம்.

🌈🌈வட்டிச் சலுகையை மூன்று நாட்களுக்குள் கடன் பெற்றவர்களுக்கு வழங்க வேண்டும் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு.

🌈🌈கொரோனா பேரிடரால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இரண்டாவது நிதித் தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக தகவல்.

🌈🌈பீகாரில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

🌈🌈பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நவம்பர் 4 ம் தேதி இந்தியா வருகை.

🌈🌈மத்திய அரசு இருப்பு வைக்காததே வெங்காய விலை உயர்வுக்குக் காரணம் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு குற்றச்சாட்டு.

🌈🌈அமெரிக்காவில் இன்று அதிபர் தேர்தல். முன்கூட்டியே வாக்கை பதிவு செய்த 8.5 கோடி வாக்காளர்கள்.

🌈🌈பிரேசிலில் சீனாவின் கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

🌈🌈ஆர்மேனியா- அஜர்பைஜான் போரில் அப்பாவிகள் ரத்தம் சிந்துவதை தடுக்க இரு நாடுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க போப் பிரான்சிஸ் வேண்டுகோள்.

🌈🌈வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் ஆன்ட்ரி ருப்லேவ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

🌈🌈ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 2015 - 16ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

🌈🌈மாதம் 3 ஆயிரம் ஊக்கத் தொகையுடன் IAS, IPS தேர்வுக்கான தமிழக அரசு வழங்கும் இலவச பயிற்சி வகுப்பிற்கு  விருப்பம் உள்ளவர்கள் இன்று 03/11/2020 இணையதளத்தில் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம் - நாளிதழ் செய்தி

🌈🌈மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை

மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைத்துள்ளார்கள் 

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

🌈🌈தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் புதுக்கோட்டையில் சிறப்பு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

👉சிறப்பு தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் காணொளிக்காட்சி மூலம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். புதுக்கோட்டைக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி கொடுத்தவர் கலைஞர். மேலும் சுகாதார நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய வகையில் ஏற்பாடு செய்தவர் கலைஞர் என அவர் கூறியுள்ளார்.

🌈🌈திருமலை: திருப்பதியில் உண்டியல் காணிக்கை அதிகரித்த்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் ரூ.2.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...