🌹நாம் சென்ற இடத்தில் நமக்கு மரியாதை தரவில்லை என்பது தவறு.
ஏனெனில் மரியாதை கிடைக்காத இடத்திற்கு நாம் சென்று இருக்கிறோம் என்பதே சரி.!
🌹🌹மறக்காத முடியாத
சில நாட்களும் உண்டு.
மறந்து விடாதா என சில
நாட்களும் உண்டு.!!
🌹🌹🌹தேவையான இடத்தில் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால்,
வார்த்தையும்,வாழ்க்கையும் அர்த்தமில்லாமல் போய்விடும்.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
⛑⛑தனியார் மருத்துவக் கல்லூரி கல்வி கட்டணத்தில் தலையிட முடியாது: வழக்கை முடித்து நீதிமன்றம் உத்தரவு
⛑⛑ஐகோர்ட் உத்தரவை மீறி முழு கட்டணம் வசூல் 2 சிபிஎஸ்இ பள்ளிகள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு: ஜன.8க்குள் பதிலளிக்க நீதிபதி உத்தரவு
⛑⛑2020 - 2021ஆம் கல்வி ஆண்டில் அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி! முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்புதல் - தொடர்பாக - பழங்குடியினர் நல இயக்குநரக செயல்முறைகள் வெளியீடு ⛑⛑பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்,& உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வின் போது DEO பதவிக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தலைமை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
⛑⛑பொறியியல் படிப்பில் சேர கால அவகாசம் நாடு முழுவதும் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு
⛑⛑ஜிப்மா் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று நுழைவுத் தோ்வு
⛑⛑பள்ளிக்கல்வி பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு First Aid for Students and teachers (FAST ) என்ற செயலியை பதிவிறக்கம் செய்தல் சார்ந்து இயக்குநரின் செயல்முறைகள் & Mobile Application Direct link வெளியீடு
⛑⛑டெட் தேர்வு அறிவிப்பு எப்போது தேர்வாளர்கள் எதிர்பார்ப்பு
⛑⛑தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறையை வெளியிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு G.O 707- DATE- 05.12.2020
⛑⛑ஊரகப் பகுதி மாணவர் திறனாய்வுத் தேர்வு ( TRUST EXAM ) நடத்துதல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவிக்கை வெளியீடு
⛑⛑கல்வெட்டியல், தொல்லியல் டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பம்:உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு வெளியீடு
⛑⛑தமிழகத்தில் டிச. 7-ல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியீடு
⛑⛑வாரத்திற்கு 6 நாட்கள் கல்லூரிகள் செயல்படும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மாணவர்களுக்கு அனுமதி இல்லை.
⛑⛑தொலைதூர, திறந்த நிலை, ஆன்லைன் கல்வி மாணவர் சேர்க்கைக்குக் கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு
⛑⛑ஆசிரியர்களுக்கான 07.12.2020 மற்றும் 08.12.2020 தேதிகளில் பயிற்சி நடத்த திட்டமிட்டமை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படும் விபரம் அனுப்புதல் - சார்பு அறிவிப்பு வெளியீடு
⛑⛑கொரோனாவுக்கு தடுப்பூசி போடும் பணி ரஷ்யாவில் தொடக்கம் நிம்மதி பெருமூச்சில் மக்கள்
⛑⛑2016-19 ஆண்டுகளில் TNPSC குரூப் 1 தேர்வில் 20% தமிழ்வழி இடஒதுக்கீட்டில் தேர்வானவர்களின் சான்றிதழ்களை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
⛑⛑பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலை. அறிவிப்பு
⛑⛑சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக நேற்று 5.12.2020 முதல் 20.12.2020 வரை மாற்றி கொள்ளலாம்: தமிழக அரசு
⛑⛑பெண்களுக்கு சமவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு அளிக்கும் நகரங்களின் பட்டியலில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. நகரங்களில் பெண்களின் வாழ்க்கை தரம், அவர்களுக்கான சமவாய்ப்பு, பாதுகாப்பு குறித்து ஐஐடி மும்பை ஆய்வு செய்து ரேங்க் பட்டியலை வெளியிட்டது. அந்த பட்டியலில் சென்னை முதலிடம்
⛑⛑மத்திய பாஜக ஆட்சியிலும், அதிமுக ஆட்சியிலும் செம்மொழி தமிழாய்வு பாழ்படுத்தப்பட்டுவிட்டது
- எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்
⛑⛑ரஜினி ஆரம்பிக்கும் புதுக் கட்சியுடன் தனது காந்திய மக்கள் இயக்கத்தையும் அதன் தொண்டர்களையும் இணைக்கிறார் தமிழருவி மணியன்
⛑⛑ விவசாயிகளுக்கு என்றும் திமுக துணை நிற்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். மேலும், சுதந்திர இந்தியாவில் இப்படி ஒரு விவசாய போராட்டம் நடைபெற்றதில்லை, விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் ஜனநாயகத்தை மதிக்காமல் உள்ளது பாஜக அரசு என அவர் தெரிவித்துள்ளார்.
⛑⛑அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீதான புகார் பற்றி விசாரிக்க ஆணையம் அமைத்ததற்கு மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேர்மைக்காக ஒருவர் வேட்டையாடப்பட்டால் நான் சும்மா இருக்க மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
⛑⛑வேளாண் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்தும் இது தொடர்பாக இந்திய அரசிடம் பேசுமாறும் இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ரப்பிற்கு அந்நாட்டின் 36 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
⛑⛑போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் உடன் மத்திய அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி - வரும் 9ம் தேதி மீண்டும் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடக்க இருப்பதாக தகவல்
⛑⛑'நமோ அற்புத மருத்துவக் காப்பீடு திட்டம்' எனக்கூறி கரூரின் பல்வேறு பகுதிகளில் ₹300 ரூபாய் வரை பணம் பெற்றுக் கொண்டு பாஜகவினர் மக்களை ஏமாற்றுகின்றனர். தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
- கரூர் எம்.பி ஜோதிமணி பேட்டி
⛑⛑"மக்களுக்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. அவர்கள் அமைதி வழியில் போராட அனுமதிக்க வேண்டும் "
பிரிட்டன் எம்பிக்கள், கனடா பிரதமரை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கருத்து.
⛑⛑இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஆய்வு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன; இன்னும் சில வாரங்களுக்குள் கொரோனா
தடுப்பூசி தயாராகி விடும் - பிரதமர் மோடி.
⛑⛑செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்
சென்னையிலேயே தொடர்ந்து செயல்பட
வேண்டும்; இடமாற்றும் முடிவினை மத்திய
அரசு கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்.
⛑⛑பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவை தொடர்ந்து தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி. ஜனவரி மாதம் ராகுல் காந்தியும் தமிழகம் வரவுள்ளார்.
⛑⛑2020-ம் ஆண்டின் சிறந்த குழந்தையாக இந்திய அமெரிக்கரான 15 வயது கீதாஞ்சலி ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவர், 'கைன்ட்லி' என்ற, 'செல்போன்' செயலியை உருவாக்கினார். இது, 'ஆன்லைன்' துன்புறுத்தல்களை, ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடித்து, பயனாளியை எச்சரிக்கும் திறன் கொண்டது. 'ஏஐ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு திறன் உதவியுடன், இந்த செயலி இயங்குகிறது.
⛑⛑இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சீனாதான் அமெரிக்காவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்க தேசிய உளவு அமைப்பின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் கூறியுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
⛑⛑90 மில்லியன் டாலர் மதிப்புள்ள ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
⛑⛑முதல் டி20 போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து ஜடேஜா விலகல், அவருக்கு மாற்று வீரராக ஷர்துல் தாகூர் அணியில் சேர்ப்பு.
⛑⛑மத்திய அரசு வழங்கி வரும் கல்வி உதவித் தொகையை குறைக்கக் கூடாது ; ஏற்கனவே உள்ள நிலுவைத் தொகையையும் வழங்க வேண்டும் - பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்.
⛑⛑9ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு (TRUST) குறித்த அறிவிக்கை வெளியீடு : தேர்வுநாள் - 24.1.2021 ; 07.12.2020 முதல் 14.12.2020 வரை www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
⛑⛑Specific Concept Oriented Programme ( SCOPE ) என்ற திட்டம் தொடர்பாக +1 கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி விரைவில் வழங்கப்பட உள்ளது : முதற்கட்டமாக மாவட்டத்திற்கு 10 பள்ளிகள் வீதம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
⛑⛑அரசு அலுவலகங்களில் அரசியல் கட்சி தலையீட்டை தடுக்க வேண்டும் - தமிழ்நாடு
அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்.
⛑⛑அரியர் வைத்துள்ள மாணவர்கள் 10.12.20க்குள் விண்ணப்பிக்கலாம் - அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு.
⛑⛑பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த, வர்க்கி என்னும் அறக்கட்டளை, சர்வதேச அளவில், கல்விப் பணியில் சிறப்பாக சேவை செய்து வரும் ஆசிரியரை தேர்வு செய்து, அவர்களை ஒவ்வொரு வருமுடம் கௌவுரவித்து வருகிறது. இந்த ஆண்டிற்கு
மஹாராஷ்டிராவை சேர்ந்த, ஆரம்ப பள்ளி ஆசிரியர் ரஞ்சித்சின்ஹ் திசேல்லாவுக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
⛑⛑பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை, டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு - இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926