கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 29.12.2020 (செவ்வாய்)...

 


🌹சிலருக்கு பிடித்தவராய் மாறும் போது 

பலருக்கு பிடிக்காதவராய் மாறி விடுகிறோம்.!

🌹🌹பணக்காரனாக வேண்டுமென்று விரும்புகிறவர்கள் கஞ்சனாக இருக்கிறார்கள்.

தான் பணக்காரன் என்று நினைத்து செலவு செய்பவர்கள் ஏழையாகின்றார்கள்.!!

🌹🌹🌹ஒரு மனிதனை 

பலசாலி ஆக்குவதும் அன்பு தான்.

பலவீனமாக்குவதும் அன்பு தான்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                                            

📕📘தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் சார்பாக மாநில அளவிலான இருபது அம்சக்கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி 

06.01.2021(புதன்கிழமை) மாலை 5.00 மணியளவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் 

-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம். நா.சண்முகநாதன் அறிவிப்பு

📕📘தமிழகம் முழுவதும் 17.01.2021 முதல் 23.01.2021 வரை ஏழு நாட்கள் போலியோ தடுப்பு மருந்து முகாம் நடைபெறுதல் சார்ந்த பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரின் கடிதம் வெளியீடு 

📕📘பிரதமரின் உதவித் தொகை திட்டத்தில் நாடு முழுவதும் 330 பேர் பயன்பெற்ற நிலையில் தமிழகத்தில் பயனடைந்தது மாணவர்கள் மிக மிக குறைவு                                                                

📕📘10,11,12.ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

📕📘பொதுத் தேர்வு அட்டவணை முதல்வர் ஒப்புதலுடன் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

📕📘115 தொழிற்கல்வி பயிற்றுநர் பணியிடங்களுக்கு ஓராண்டிற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு.

📕📘 நீதி மன்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்தல் குறித்து - உரிய அறிவுரைகள் வழங்குதல் - சார்பு - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - நாள். 28/12/2020

📕📘 யோகா-இயற்கை மருத்துவக் கலந்தாய்வு ஓரிரு நாள்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

📕📘சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கணக்கீடு செய்வது குறித்த விளக்கம்:சம்பளமற்ற அசாதாரண விடுப்பிற்கு மட்டுமே ஈட்டிய விடுப்பு குறைத்து வழங்கப்பட வேண்டும் என தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வித் துறை தலைமைச் செயலக அரசு துணைச் செயலாளர் கடிதம்

📕📘தஞ்சை மாணவன் கண்டுபிடித்த மிகச்சிறிய செயற்கைகோள்: நாசா ராக்கெட்டில் ஏவப்படுகிறது

📕📘சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சந்திப்பு

கடந்தாண்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் 5068 பேர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி அனைத்து கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டினர்.

📕📘திமுக ஆட்சி மலரும் போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்த கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்

👉தமிழ்நாடு ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் பணிபுரிந்த காலத்தில் உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார்.

📕📘TNPSC தேர்வுக்கு ஆதார் இணைக்க ஜன., 31 வரை அவகாசம்

📕📘கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை எனில் பிப்.10-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

📕📘 தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிவிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதிநேர ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கை வருகின்றனர் - நாளிதழ் செய்தி 

📕📘அகில இந்திய வானொலி வாயிலாக நாட்டு மக்களிடம் பகிர்ந்து கொள்ளும் மன்கிபாத் நிகழ்ச்சியில் கொண்டு பேசினார். அப்போது, கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களை வீடியோவாக பதிவு செய்து வழங்கி தொலைபேசி மூலம் மாணவர்களின் சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ள விழுப்புரம் தமிழாசிரியை ஹேமலதாவிற்கு பிரதமர் மோடி பாராட்டு 

📕📘இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட திறந்தநிலை ஆன்லைன் படிப்புகள் அறிமுகம். மேலும் விவரங்களுக்கு மத்திய அரசின் Swayam.gov.in இணையதளத்தை அணுகவும் 

📕📘குரூப்-1 தேர்வுக்கு பழைய நடைமுறையிலேயே ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்- டிஎன்பிஎஸ்சி

📕📘ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சிபிஎஸ்இ தேர்வு நடத்தப்படாது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்சி பொதுத்தேர்வு தேதிகள் பற்றி டிசம்பர் 31-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

📕📘மத்திய பல்கலை.யில் சேருவதற்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு 

📕📘முதுநிலை பாா்மசி (எம்.பாா்ம்) படிப்பில் சேர தேசிய அளவிலான நுழைவுத் தோ்வுக்கு (‘ஜிபாட்’) ஜன.22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

📕📘நூல்களை பதிப்பிக்க நிதியுதவி - தமிழில் கருத்தாழமிக்க, அரிய கலை நூல்களை பதிப்பிக்க, அரசின் உதவித் தொகை பெற, ஜன., 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

📕📘எங்களுக்கு ஒரு "வலுவான இந்தியா" வேண்டும் !

இந்தியா ஆசியாவின் ஈர்ப்பு புள்ளி. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை பாதுகாக்க இந்தியா மேலும் செயல்பட வேண்டும்.

இந்தியாவின் அதிக அர்ப்பணிப்பை எதிர்பார்க்கிறோம்.

- ஜப்பான் துணை பாதுகாப்பு அமைச்சர்

📕📘9 மாதங்களுக்கு பிறகு பழனியில் மீண்டும் தொடங்கியது ரோப்கார் சேவை

இணையதளத்தில் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே ரோப் காரில் செல்ல அமைக்கப்படவுள்ளனர்.

📕📘பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்திய அறையே தற்போது இல்லை.

அறையின் பூட்டு உடைக்கப்பட்டு, இளையராஜா பயன்படுத்திய பொருட்களை வேறிடத்தில் குப்பைபோல் போட்டுள்ளனர் 

மன உளைச்சலில் இருக்கிறார் இளையராஜா.

- வழக்கறிஞர் சரவணன்.

📕📘புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு மேல் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் 

-மத்திய அரசு

📕📘"வெற்றிநடைபோடும் தமிழகம்" என்ற தலைப்பில் அதிமுக தேர்தல் பிரசாரம்;இன்று நாமக்கல்லில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

📕📘தேசிய புதிய கல்வி கொள்கை சட்டத்தை ஆதரித்து தமிழக பாஜக கையெழுத்து இயக்கம் மூலம் 50 லட்சம்பேர் கையெழுத்திட்ட புத்தகத்தை முதல்வரிடம் வழங்கினார் தமிழக பாஜக தலைவர் L. முருகன்

📕📘அரசியலில் நான் சம்பாதிப்பதற்காக வரவில்லை மக்கள் பணியாற்றுவதற்காக தான் வந்துள்ளேன் 

-  திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில்  பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு

📕📘தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகள் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிப்பு

📕📘இந்தோனேசியாவில் புதிய வகை கொரானா தொற்று காரணமாக வெளிநாட்டினர் வர இரண்டு வார தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது

📕📘டெஸ்லாவின் மின்சார கார் விற்பனை இந்தியாவில் அடுத்தாண்டு முதல் தொடங்கும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

📕📘தட்டுப்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கி ஜனவரி-1 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

ஜனவரி 1ம் தேதி முதல் அனைத்து வகை வெங்காயத்தையும் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

📕📘வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜா 40 ஆண்டுகளாக இருந்த அறை உரு தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளது

இளையராஜா உடன் கலந்து ஆலோசித்து அடுத்த செய்ய வேண்டியதை செய்வோம் 

- சரவணன் இளையராஜா தரப்பு வழக்கறிஞர்

📕📘ஜெர்மனியில் முதல் கொரோனா தடுப்பூசியை 101 வயது மூதாட்டிக்கு போடப்பட்டது

📕📘மருத்துவ சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என ரோஜர் பெடரர் அறிவிப்பு.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                              

  என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

USA - Wildfires in California & Los Angeles - Hundreds of homes in ashes

அமெரிக்கா - கலிபோர்னியா & லாஸ் ஏஞ்சல்ஸில் காட்டுத் தீ - சாம்பலான நூற்றுக்கணக்கான வீடுகள் - காணொளி USA - Wildfires in California & Lo...