🌹இனிப்பாய் இருந்தால் விழுங்கி விடுவார்கள்.
கசப்பாய் இருந்தால் துப்பி விடுவார்கள்.
எனவே உப்பாய் இருப்போம்.அப்போது தான் நம்மை சரியாய் உபயோகிப்பார்கள்.!
🌹🌹எதிர்பார்ப்பதைவிட
எதிர்கொள்வதை கற்றுக் கொள்ளுவோம்.
ஏனெனில் இங்கு எதிர்பார்க்கும் வாழ்க்கை கிடைப்பதில்லை.
எதிர்கொள்ளும் வாழ்க்கையே கிடைக்கிறது.!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌈🌈98 சதவீத பெற்றோர் ஆதரவால் பள்ளிகள் திறக்கப்பட்டது- அமைச்சர் செங்கோட்டையன்
🌈🌈அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்ட முன்பணம் பெறுவது தொடர்பான அரசு முதன்மை செயலாளரின் தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது. எந்த மாவட்டத்தில் வீடு கட்ட உத்தேசித்துள்ளனரோ அந்த மாவட்ட ஆட்சித் தலைவரே வீடு கட்டும் முன்பணம் வழங்க ஒப்புதல் அளிக்கலாம் என கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது.
🌈🌈UGC வழிகாட்டுதலின் படி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களாக பணிநியமனம் செய்ய அடிப்படைக் கல்வித்தகுதி நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
G.O 5 - date 11.1.2021
🌈🌈2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ மெயின் தோ்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் ஜனவரி 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
🌈🌈மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயரவுள்ளதாக தகவல்.
🌈🌈அதிகமாக செலுத்தப்பட்ட வருமான வரி - வங்கிக் கணக்குக்கு திருப்பி அனுப்பிய தகவல் அறிய Refund Status Website
🌈🌈 மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் கொரோனா பரிசோதனை - பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்.
🌈🌈டிராக்டர் பேரணியை அனுமதிக்க டெல்லி காவல்துறைக்கே அதிகாரம் உள்ளதால், இதில் தலையிட போவதில்லை என உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டம்
டிராக்டர் பேரணிக்கு எதிரான மனுவை திரும்ப பெற மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.
🌈🌈அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றறார்.
துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பொறுப்பேற்றார்.
🌈🌈தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர், அரசூழியர்கள் தங்கள் வாக்குகளை மின்னனு வாக்கு பதிவு எந்திரத்திலேயே வாக்குகளை பதிவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு
🌈🌈தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி
👉தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
👉3.08 கோடி ஆண் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
👉பெண் வாக்காளர்கள் 3.18 கோடி பேர் உள்ளனர்.
👉மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 7246 பேர் உள்ளனர்.
🌈🌈தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் 18 வயது பூர்த்தியடைந்தவர்களும் நேரிலும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம்
அறிவிப்பு.
🌈🌈தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரும் 22-ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதாக கூறப்படுகிறது.
நேற்று காலை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வார் என அறிவித்திருந்த நிலையில் அவசர பணியின் காரணமாக அமைச்சர் புதுக்கோட்டை செல்வதால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
🌈🌈ஜன. 29-ம் தேதி முதல் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும்
மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் முதல்கட்டமாக 15-ம் தேதி வரையிலும், 2-ம் கட்டமாக மார்ச் 1-ம் தேதி வரையிலும் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.
கொரோனா கட்டுப்பாடுகளால் மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடைபெற உள்ளது.
🌈🌈ஜன. 30-ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு:
காணொலியில் நடைபெறும் என தகவல்.
🌈🌈புதுச்சேரியில் நண்பர்களுடன் இணக்கமாக இருக்க விரும்புகிறோம்; தனித்து நிற்கவும் தயார்
கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸ் தலைவர்
🌈🌈நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த கல்யாணசுந்தரம் - கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமனம்.
🌈🌈அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக ஜோ பைடன் 2 விரல்களை காட்டுகிறார்
- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு
🌈🌈ஆளுநர் கிரண்பேடி சர்வாதிகாரி போக்கில் செயல்பட்டு வருகிறார் - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
🌈🌈கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன் என மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிந்தேன். அவர் விரைந்து முழு நலன் பெற விழைகிறேன். பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் உடல்நிலை பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்திட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
🌈🌈எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று இனி முதல்வர் பழனிசாமி என்றுதான் அழைப்பேன் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் மு.க.ஸ்டாலின் பேசினார்.சொந்த தொகுதிக்கே அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான பெயரை ஏற்படுத்தி கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
🌈🌈நேற்று முதல் ஆறு நாடுகளுக்கு கோவிட் தடுப்பு மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்ய உள்ளது.
நேபாளம், வங்காள தேசம், மியான்மர், பூட்டான், மாலத்தீவுகள் மற்றும் செசலிஸ் ஆகியவற்றுக்கு கோவிட் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதனை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைத்து உலக மக்களுக்கும் இந்தியா தனது ஆதரவுக்கரம் நீட்டும் என்றும் அனைத்து நாடுகளுக்கும் தடுப்பு மருந்தை அனுப்பி வைக்க தயார் என்றும் தெரிவித்துள்ளது.
இலங்கை,ஆப்கானிஸ்தான், மொரீஷஸ் போன்ற சில நாடுகளின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் ஒப்புதல் கிடைத்ததும் தடுப்பு மருந்து அனுப்பி வைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது
🌈🌈இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய வீரர்கள் பட்டியல் அறிவிப்பு
விராட் கோலி (C)
ரோஹித் சர்மா
சுப்மன் கில்
மயங்க் அகர்வால்
புஜாரா
ரஹானே (VC)
ரிஷப் பண்ட்
சாஹா
ஹர்ஹிக் பாண்டியா
கே.எல் ராகுல்
ஜஸ்பிரித் பும்ரா
இஷாந்த் சர்மா
முகமது சிராஜ்
சர்துல் தாக்கூர்
ரவி அஸ்வின்
குல்தீப் யாதவ்
வாசிங்டன் சுந்தர்
அக்சர் பட்டேல்
🌈🌈சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது திருந்தி வந்தால் நல்லது - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
🌈🌈வேளான் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மாற்றி அமைக்க கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
🌈🌈வன்னியர் இடஒதுக்கீடு கோரி, வரும் 29ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் - பாமக தலைவர் ஜி.கே.மணி
🌈🌈பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுதலைவர் தான் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
🌈🌈மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா சிறையில் இருந்து பெங்களூரு பவ்ரிங் கர்சான் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர் & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926