கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 26.02.2021 (வெள்ளி)...

 


🌹வாய் தவறி விழும் பேச்சுக்கள்.கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது.

யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுவோம்.!

🌹🌹மற்றவர் தவறைக் கவனித்துக் கொண்டே இருப்பவர்கள்.

தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பதை மறந்து விடக்கூடாது.!!

🌹🌹🌹தன்னுடைய செயலும்,தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியென்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதியை மட்டுமே நமது ஆயுதமாக வைத்துக் கொள்ளுவோம்.அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது.சிந்தித்து செயல்படுவோம். இதுவும் கடந்து போகும் அல்லது இதுவும் பழகி போகும்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🌈🌈தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் மாறுதல் இன்றி பதவி உயர்வு மட்டும் அளித்து 

வெளியிட்ட கலந்தாய்விற்கான செயல்முறையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி 

ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் அவர்களால் 2 

வழக்குகள் தொடரப்பட்டதில் மதுரை உயர்நீதிமன்ற கிளை கலந்தாய்விற்கு  தடையாணை 

வழங்கியுள்ளது.

🌈🌈ஆசிரியர்-அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60ஆக உயர்த்தி  வெளியிட்டுள்ள அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் பொதுச்செயலாளர் மன்றம்.நா.சண்முகநாதன் தமிழக அரசுக்கு கோரிக்கை 

🌈🌈இடைக்கால பட்ஜெட்டை ஆவலுடன் எதிர் நோக்கும் 2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள்                                                                           

 🌈🌈தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும்- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு.

🌈🌈9, 10,  11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக சட்ட பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

🌈🌈9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள்  தேர்ச்சி என்றாலும் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும்- பள்ளிக்கல்வித்துறை

🌈🌈26.2.2021 முதல் 28.2.2021வரை நடைபெற இருந்த தொடக்க, நடுநிலை,பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு /BEO பதவி உயர்வு கலந்தாய்வு நீதிமன்றம் உத்தரவுப்படி ஒத்தி வைக்கப்படுகிறது. -தொடக்கக் கல்வி இயக்குநர் -PROCEEDINGS வெளியீடு.

🌈🌈பள்ளிக் கல்வி- பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சர்வதேச அறிவியல் நாள் – பெண் குழந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த பெண் குழந்தைகளின் விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற் கல்வி) உத்தரவு

🌈🌈10 மற்றும் 12ம் வகுப்பு பாடங்களை ஒலிப் பாடங்களாக ( Audio Lessons) அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பு செய்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈1-1-2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு.

🌈🌈பள்ளிக் கல்வி – இந்திய நீர்வளத்துறை என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டம் - இணையவழி பயிற்சியில் கலந்து கொள்ளலாம் - DSE Proceedings வெளியீடு

🌈🌈DGE - மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வு - மே -2021 - தனித் தேர்வர்கள் சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிப்பது சார்ந்த அறிவுரைகள் அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு

🌈🌈UPSC தேர்வைத் தவறவிட்டவர்களுக்கு மறுவாய்ப்பு இல்லை: வழக்கைத் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.

🌈🌈EMIS – இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் – தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு

🌈🌈பட்டப்படிப்பை மட்டும் தமிழ் வழியில் படித்தால் இடஒதுக்கீடு வழங்க முடியாது எனக் கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை, இட ஒதுக்கீடுக்கான சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது

🌈🌈12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால் பாடங்களை விரைவில் முடிக்க ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் 

🌈🌈மார்ச் முதல்வாரத்தில் Zonal officers, AROக்களுக்கு  தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பயிற்சி வகுப்புகள் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு 

🌈🌈முதுகலைப் படிப்புகளுக்கான உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இதற்கு பிப்ரவரி 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

கேட் (GATE) அல்லது ஜிபேட் (GPAT) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்க மாணவர்களுக்கு வழங்கப்படும் 

🌈🌈மார்ச் 1 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறக்க அனுமதி - உத்தரகாண்ட் மாநில அரசு உத்தரவு.

🌈🌈தவறான நபர்கள் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து டிடிவி தினகரனை தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர வைக்க அயராது உழைக்க சூளுரை.

- அ.ம.மு.க, பொதுக்குழு & செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

🌈🌈புதுச்சேரி வந்த பிரதமர், சமத்துவ சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கருப்புக்கொடி, கருப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டது

🌈🌈அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 59லிருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார் முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு. கடந்தாண்டு 58-லிருந்து ஓராண்டு உயர்த்தப்பட்டபோது அரசு ஊழியர்கள் விமர்சனம் செய்தனர். ஓய்வுக்கால பலன்களை தர கஜானாவில் நிதி இல்லாததே காரணம் என கண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

🌈🌈திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட லியோனி அண்ணா அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

🌈🌈பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பயணிக்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

🌈🌈9, 10 & 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெறுவார்கள் என்ற முதலமைச்சர் அறிவிப்பு, CBSE மாணவர்களுக்கு பொருந்தாது.

CBSE பள்ளிகளில் பயிலும் 9,10 & 11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு தொடர்ந்து தயாராக வேண்டும் என்று CBSE அதிகாரிகள் அறிவுறுத்தல்.

🌈🌈ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் நியமன தேர்வுக்கு 40 வயது கடந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது என வெளியிட்ட அறிவிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு - அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு.

🌈🌈பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவர் தா.பாண்டியன் விரைந்து நலம் பெற விழைகிறேன் - ஸ்டாலின்

🌈🌈குரூப்-4 முறைகேடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி ஆவணங்களை பாதுகாக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

🌈🌈கோவை வந்த பிரதமர் மோடிக்கு வெங்கடாசலபதி வெள்ளி சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பரிசளித்தார்.

🌈🌈ஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்

🌈🌈சின்னம்மா உடல் நலம் பெற்று தங்களுடைய பங்களிப்பை அரசியலில் காட்ட வேண்டும். 

- உ.தனியரசு எம்.எல்.ஏ

🌈🌈பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித் தேர்வர்கள் இன்று முதல் மார்ச் 6-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

🌈🌈அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி.

🌈🌈பாஜக-வுடன் அதிமுக கொண்டுள்ள உறவு அதிமுக-வின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் 

- சென்னையில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு பேட்டி

🌈🌈டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி

🌈🌈பத்மஸ்ரீ விருதுபெற்ற கோவையை சேர்ந்த 105 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள் பாட்டியை சந்தித்து ஆசி வாங்கினார் பிரதமர் நரேந்திரமோடி

🌈🌈கட்சிக்கு அப்பாற்பட்டு இருக்கின்றவர்கள் இதுபோன்று கருத்துக்களை கூறி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி, இந்த குழப்பத்திற்கு அதிமுகவினர் ஆட்படமாட்டார்கள் என அதிமுக தொண்டர்களை ஒருங்கிணைந்து செயல்பட சசிகலா அழைப்பிற்கு துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பதில்.

🌈🌈கொரோனா பாதிப்பு - புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடப்பட்டது தமிழக அரசு.

கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோர் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க அறிவுறுத்தல்

🌈🌈வன விலங்குகளை வதம் செய்யாமல், கோவில்களில் வழிபாடு நடத்துபவர்கள் வைச முறையில் வழிபாடு நடத்த வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

🌈🌈சேலம் மாவட்டம் தலைவாசலில் அமைந்துள்ள கால்நடை பூங்காவை அனைத்து கட்சியினரும் பார்க்க வேண்டும்.

இது முதல்வரின் வரலாற்று சாதனை - உடுமலை ராதாகிருஷ்ணன்

🌈🌈திமுகவுடன் நல்ல முறையில், மகிழ்ச்சிகரமாக பேசினோம்

இரண்டு தரப்பும் அவரவர் கருத்துகளை தெரிவித்தோம்

இரண்டு தரப்பும் அவரவர் கட்சியுடன் பேசியபிறகு அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை

- கே.எஸ். அழகிரி

🌈🌈தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தீவிரப்படுத்தபடும் 

தொழிற்சங்கங்களை அழைத்து அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை 

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை போராட்டம் தொடரும் - சிஐடியு மாநில தலைவர் சௌந்தரராஜன்

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                

என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...