கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய செய்திகள் தொகுப்பு... 28.02.2021(ஞாயிறு)...

 


🌹மனிதர்கள் எத்தனை அழகாக மாறுவேடம் போட்டாலும் காலமும் சூழ்நிலையும் அவர்களது இயல்பான குணத்தை காட்டி கொடுத்து விடும்.!

🌹🌹மருந்தால் சரியாகாத

சில காயங்கள் கூட 

மறந்தால் சரியாகும்.!!

🌹🌹🌹இன்று உண்மையான அன்பை அலட்சியம் செய்பவர்கள்                                 நிச்சயம் ஒரு நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்குவார்கள்.!!!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🍒🍒தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்த‌ காரணத்தால் இன்று 28-02-2021(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்த ஜாக்டோ ஜியோ மாநில மாநாடு  ஒத்திவைக்கப்படுகிறது.  சட்டமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் எதிர்வரும் மே மாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை ஏற்பு மற்றும் உரிமைகள் மீட்கபட்ட வெற்றி மாநாடு மிக பிரமாண்டமாக நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

 மாநில ஒருங்கிணைப்பாளர்கள்.   

🍒🍒பள்ளிக் கல்வி - முறைசாரா கல்வி (Non Formal Education) திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு உயர்கல்வி பயில சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களே இணைத்தன்மை வழங்கலாம் - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒மாநில பாடத்திட்டத்தின் கீழ் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்கள் அனைவரும்  பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி - அரசாணை வெளியீடு.

🍒🍒சட்டமன்ற தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் COVID_19 தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் -படிவம் பூர்த்தி செய்யக் கோருதல் சார்ந்து நாகை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் வெளியீடு.

🍒🍒அரசு பாலிடக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது சரி தான்: மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

🍒🍒அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர்/வட்டார கல்வி அலுவலரின் அனுமதி பெறாமல் கல்வி மேற்படிப்புகள் படித்து இருந்தாலும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பு வெளியீடு.

🍒🍒பள்ளிக் கல்வி - M.Phil., உயர் கல்வி பயில முன் அனுமதி கோரி, அனுமதி வழங்காமல் விடுபட்ட விண்ணப்பங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் அளவில் ஆணை வழங்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு.

🍒🍒1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு அடுத்த மாதம் 31-ந்தேதி விண்ணப்பம் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

🍒🍒தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க தேர்தல் ஆணையம் உத்தரவு.

இன்று முதல் எம்.எல்.ஏக்களின் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்கப்படும்

எம்.எல்.ஏ.க்களின் சொந்த பொருட்கள் மற்றும் கோப்புகள் இருந்தால் அவற்றை காலி செய்து அறையை ஒப்படைக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

🍒🍒திமுக ஆட்சி அமைந்ததும் அரசு பள்ளிகளின் தரம் மேலும் உயர்ததப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திருமண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதன் முதலில் துவக்கி வைத்தவர்தான் கலைஞர் என்று சென்னை மாதவரத்தில் நடைபெற்று வரும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.                                           

🍒🍒தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மத்திய அரசு அவமதித்து வருகிறது 

நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும் மதிப்பட வேண்டும். மத்திய அரசின் அடிமையாக அதிமுக அரசு உள்ளது

தூத்துக்குடி பிரச்சார கூட்டத்தில் ராகுல்காந்தி

🍒🍒சட்டப்பேரவையில் அதிக கேள்விகள் எழுப்பியவர், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு 

சபாநாயகர் தனபால்

🍒🍒மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் அதிமுக அரசை அகற்றப்பட வேண்டும் – ராகுல் காந்தி எம்.பி

🍒🍒தமிழகத்தில் இருக்கும் முக்கிய பிரச்னைகளை கவனத்திற்கு கொண்டு வந்து மு.க.ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டார்

- சபாநாயகர் தனபால் புகழாரம்

🍒🍒தேர்தல் நடத்தை வழிமுறைகளை அரசியல் கட்சிகள் முழுமையாக பின்பற்ற வேண்டும்

தமிழக தேர்தல் ஆணையம்

🍒🍒சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்குக்கான நேர்காணல் மார்ச் 2ம் தேதி தொடங்கும்.

மார்ச் 2ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை நடைக்கும்

கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு.

🍒🍒சர்வதேச விமானப் பயணிக்களுக்கான கட்டுப்பாடுகள் மார்ச் 31 வரை நீடிப்பு

🍒🍒மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி

🍒🍒தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு உத்தரவு.

🍒🍒ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹256 குறைந்து, சவரன்₹34,648 க்கு விற்பனை.

🍒🍒நல்லவர்கள் எல்லாம் இணையலாம் என்ற அடிப்படையில் கமலை சந்தித்தேன்; ஒருமித்த எண்ணம் கொண்டவர்கள் இணைந்தால் சிறப்பாக இருக்கும் - கமலை சந்தித்த பின் சரத்குமார் பேட்டி

சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது 

- கமல்ஹாசன்

🍒🍒சென்னை வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு மறைந்த திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் பெயரன் வெற்றியழகன் விருப்ப மனு தாக்கல்.

🍒🍒வெரி குட் மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும் பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு

🍒🍒சபாநாயகர் தனபால் பேச்சு:

2016 முதல் இன்று வரை சட்டப்பேரவை 167 நாட்கள் கூடியுள்ளது. 

மொத்தம் 858 மணி நேரம் 12 நிமிடங்கள் நடைப்பெற்றுள்ளது.

அவையில் உரையாற்ற ஆளும் கட்சியைவிட எதிர்க்கட்சிக்கு 16 மணி நேரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

🍒🍒இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பீரித் பும்ரா  சொந்த காரணங்களுக்காக இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். - பிசிசிஐ

🍒🍒தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

🍒🍒தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021: அர்ஜுனமூர்த்தி புதிய கட்சி தொடக்கம்; ரஜினிகாந்த் வாழ்த்து - தமிழக அரசியல்

🍒🍒சட்டமன்ற தேர்தலில் அதிமுக பாமக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. 

23 சட்டமன்ற தொகுதிகள் பா.ம.கவிற்கு ஒதுக்கப்படுகிறது.

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றியதால் தொகுதிகளை குறைத்து பெற்றுள்ளோம்.

🍒🍒தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனுமதி.

🍒🍒உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை அதிரடி சட்டத்துக்கு  மத்திய பிரதேச அரசு ஒப்புதல்

🍒🍒அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு

🍒🍒தமிழ்நாட்டில் உள்ள 50 லட்சம் இஸ்லாமிய மக்களின் விருப்பம்  மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் ஆக்குவதே

-காதர் மொய்தீன்

🍒🍒இந்தியா எப்படி இருக்க வேண்டும் என்பதை எதிர்காலத்தில் தமிழ்நாடுதான் நிர்ணயிக்கப் போகிறது

இது என்னுடைய உணர்வு

ராகுல் காந்தி  நாங்குநேரியில் பேச்சு

🍒🍒தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு விலை நிர்ணயம் 

ஒரு டோஸ் விலை ரூ. 250 ஆக நிர்ணயம் செய்து மத்திய அரசு உத்தரவு

🍒🍒தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது- மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை

🍒🍒இன்று நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சிக்கு திமுக அழைப்பு.

👉திமுகவுடன் கடந்த 25ஆம் தேதி காங்கிரஸ் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ள நிலையில் தொடரும் பேச்சுவார்த்தை.

🍒🍒பாஜக மற்றும் தேமுதிக உடன் தொகுதிப்பங்கீடு பற்றி அதிமுக இன்று ஆலோசனை நடத்த உள்ளது -இன்றே தொகுதிகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட வாய்ப்பு

🍒🍒குளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்.

🍒🍒கொளத்தூரில் போட்டியிடுகிறார் திமுக தலைவர் ஸ்டாலின்

இன்று காலை 10 மணியளவில் விருப்ப மனு தாக்கல்.

🍒🍒பழைய திட்டங்களுக்கு பச்சை பெயிண்ட் அடிக்கப்படுகிறது; தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் குறித்து மு.க. ஸ்டாலின் விமர்சனம்.

🍒🍒வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றவே மாநில அரசு கடன் வாங்குகிறது; திமுகவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம.                                            

 🍒🍒கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று பிரிட்டன் அரசி எலிசபெத் தெரிவித்துள்ளாா்.

🍒🍒அமெரிக்காவில் இதுவரை இல்லாத வகையில் 5 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

🍒🍒 2022 ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை 4 அல்லது 5 மைதானங்களில் நடத்த பிசிசிஐ பரிசீலனை செய்து வருகிறது.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                               

 என்றும் அன்புடன்

சு.வேலுமணி M.A.,B.Ed.,

தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,

கரூர் மாவட்டம்.

அலைபேசி:9003599926

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...