கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உயர் கல்வி ஊக்க ஊதிய உயர்வு பெற கடைசி வாய்ப்பு 31.03.2021 - அரசாணை எண்: 116 & 37 தெளிவுரைகள்...

 


அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்...


📌📌📌📌📌📌📌📌


அரசாணை எண்: 37, நாள்: 10-3-2020-க்கு தெளிவுரையாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண்: 116, நாள்: 15-10-2020ல் அளிக்கப்பட்டுள்ள முக்கியமான விளக்கங்கள்:


💥 அரசாணை 37-ஆனது வெளியிடப்பட்ட நாளான 10-03-2020 முதல் நடைமுறைக்கு வருகிறது.


💥 10-03-2020 க்கு பின்னர் பணியில் சேரும் அரசு ஊழியருக்கு ஊக்க ஊதிய உயர்வு அல்லது முன் ஊதிய உயர்வு கிடையாது.


💥 10-03-2020க்கு முன் உயர்கல்வி அல்லது துறைத் தேர்வுகள் தேர்ச்சி பெற்று, நிர்வாக காரணங்களுக்காக அல்லது தனிநபரின் தாமதமான கோரிக்கை காரணமாக ஆணை வழங்கப்படாத நிலையில், அவர்களுக்கு அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி 31.03.2021க்கு முன் ஆணை வழங்கப்பட வேண்டும்.


💥 அரசாணை 37 ஆனது ஆசிரியர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு துறையில் பணிபுரியும் அரசு பணியாளர்களுக்கும் பொருந்தும்.


💥 முன் ஊதிய உயர்வும், ஊக்க ஊதிய உயர்வும் ஒன்றுதான்.


💥 ஊக்க ஊதிய உயர்வு/ முன் ஊதிய உயர்வு தொடர்பாக 10-03-2020க்கு முன் பிற துறைகளில் வெளியிடப்பட்ட அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது ஊதியப் பட்டியல் ஒப்பளிக்கும் அலுவலர் உயர்கல்வி தகுதியும், அதற்கான ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கும் ஆணையும் குறிப்பிட்ட தேதிக்கு (10-03-2020) முன்னர் பெறப்பட்டுள்ளதா  என்பதையும், அரசாணை 37ல் பத்தி 6 உட்பிரிவு vi இல் கூறப்பட்டுள்ள நடைமுறையின்படி சரியானதுதானா என்பதையும் உறுதி செய்து  கொண்டு ஊதியப்பட்டியல் அனுமதிக்கலாம்...


💥இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்பதை மட்டும் மேலோட்டமாக பார்த்து விட்டு கடந்து செல்லாமல், 10.03.2020க்கு முன்னர் உயர்கல்வி பெற்றவர்கள், தற்போதைய அரசாணையில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி, ஊக்க ஊதியம் பெற முயற்சிக்க வேண்டும். அதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள தேதி 31.03.2021.


>>> அரசாணை எண்: 116 - நாள் : 15.10.2020-உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ரத்து -அரசாணை 37, நாள்: 10-03-2020 ஆனது ஆசிரியர்கள் , மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும் - பணியாளர்கள் மற்றும் சீர்திருத்தத்துறை விளக்கம்...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal

 பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...