அதிகாரம்: அறிவுடைமை
குறள் : 422
கடந்து போனது கரணம் போட்டாலும் வராது
இரண்டொழுக்க பண்புகள் :
2. எண்ணம் உறுதியாக உன்னதமாக இருந்தால், எண்ணியபடி உயரலாம்.
பொன்மொழி :
*இழப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. ஆனால் எந்த இழப்பும் வெற்றியாளருடைய பயணத்தையும் தடை செய்வதில்லை*
பொது அறிவு :
1.இந்திய நாட்டின் தேசியக்கொடியை வடிவமைத்தவர் யார்?
பிங்கலி வெங்கையா.
2. இந்தியாவில் அதிக நூலகங்களைக் கொண்ட மாநிலம் எது?
கேரளா.
English words & meanings :
Doesn't lift a finger (Idioms)- didn't do anything.
சளித்தொல்லையில் இருந்து விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகள் !!
*சளியை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு இஞ்சி டீ, மஞ்சள் பால் அல்லது சுடுநீர் போன்றவற்றைக் குடியுங்கள். மேலும் உப்பு கலந்த வெதுவெதுப்பான நீரால் தினமும் இரண்டு வேளை கொப்பளியுங்கள்.
*கண்களுக்கு கீழே கன்னப் பகுதியில் சுடுநீரில் நனைத்த துணியால் தினமும் பலமுறை ஒத்தடம் கொடுக்கலாம்.
*சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
*கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும். தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.
* சளி பிடித்தவர்களுக்கு முள்ளங்கி மிகவும் நல்லது. இதில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும், வைட்டமின்களும், ஆன்டி-செப்டிக் பண்புகளும் ஏராளமாக உள்ளது.
கணினி யுகம் :
Ctrl + " - Copy value from cell above
இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு தன்னாட்சி பெற்ற இந்திய அரசாங்கத்தின் ஆணையமாகும். அக்டோபர் 12, 1993 இல் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 1993 (டி பி எச் ஆர் ஏ) இன் கீழ் இவ்வாணையம் நிலைநாட்டப்பெற்றது. பாரிசில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் அவை சார்பில் மனித உரிமை பாதுகாப்பு ஆணைய கூட்டத்தில் எடுக்கப்பெற்ற தீமானத்தின் அடிப்படையில் இவ்வாணையம் இந்தியாவில் உருவாக்கப்பட்டது,
நீதிக்கதை
மாம்பழத்தைச் சுவைத்த ஒரு சிறுவன் கொட்டையை மலையின் மீது வீசி எறிந்தான்.
மலையின் மீது விழுந்த மாங்கொட்டைக்குச் சரியான அடி.
"ஊ.. ஊ..!"- வலியால் துடித்து அழலாயிற்று.
உறங்கிக் கொண்டிருந்த மலை இந்த சத்தத்தால் தூக்கம் கலைந்து எழுந்தது.
மாங்கொட்டையை கண்டது.
அடிப்பட்ட மாங்கொட்டை மெல்ல எழுந்து நடந்தது. புகலிடம் தேடி மலை மீது அலைந்தது.
இதைப் பார்த்துவிட்ட சூரியனுக்கு ஏக கோபம்.
தகதகக்கும் அனலுடன் உக்கிரமான கதிர்களைப் பாய்ச்சியது.
அங்கு வந்த சேர்ந்த காற்று விஷயத்தை அறிந்து, மழையுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டது. காற்று சுழன்று.. சுழன்று அடித்தது. பயங்கரமாகத் தாக்குதல் தொடுத்தது.
மாங்கொட்டை இப்போது உண்மையிலேயே பெரும் சிக்கலுக்கு ஆளானது. தத்தளித்தது. தவித்தது. ஆனாலும், கலங்கவில்லை. சோர்ந்துவிடவில்லை. தெப்பமாக நனைந்துவிட்ட அது பாறைகளுக்கிடையே பதுங்கிக் கொண்டது.
காற்றும் மழையும் தாக்குதலை நிறுத்திக் கொண்டன.
பதுங்கியிருந்த மாங்கொட்டை, மெல்ல கண்விழித்தது. தோலைப் பிளந்து கால்களை மலைமீது பதித்துத் துழாவியது. ஆணிவேரை பாறைகளுக்கிடையே இறக்கியது. சல்லி.. வேர்களை மலைமீது படரவிட்டது.
தன் மீது ஏதோ ஊர்வதைப் போல உணர்ந்து மலை மறுபடியும் விழித்துக் கொண்டது. மாங்கொட்டையைக் கண்டு துணுக்குற்றது.
"ஏ! பொடியனே! இன்னுமா நீ உயிருடன் இருக்கிறாய்? மரியாதையாய் இங்கிருந்து ஓடிவிடு!" - என்று அலட்சியமாக கூறியது. வழக்கம் போலவே உறங்கிவிட்டது.
மாங்கொட்டை எதையும் சட்டை செய்யவில்லை. இன்னும் உறுதியாக முயற்சியை மேற்கொண்டது. மெல்லத் துளிர்விட்டு வளர்ந்தது. செடியானது.
மற்றொரு நாள்.
செம்மறி ஆடொன்று கடித்த கடியும், பிடித்து இழுத்த இழுப்பும் மாஞ்செடி, இதுவரையும் அனுபவிக்காத வேதனையாக இருந்தது. மரண வேதனை.
ஆவேசம் கொண்ட மாஞ்செடி, இந்தமுறை ஆடு கடித்த இடத்தில் ஒன்றிற்கு இரண்டாய்ப் பக்க கிளைகளைவிட்டு இன்னும் வேகமாய் முளைக்க ஆரம்பித்தது. கிடு.. கிடு வென்று வளர்ந்தது.
மலைப்பாறை, சூரியன், மழை, காற்று அனைத்தின் எதிர்ப்புகளையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு மாஞ்செடி தழைத்து வளர்ந்து மரமாகிவிட்டது.
★பாம்பன் கடல் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறியது. இதனால் சிறிய ரக மீன்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
★சென்னை மாநகரப் பகுதியில் மழைநீர் மற்றும் கழிவுநீர் தேங்குவதை தடுக்கும் திட்டத்தை செயல்படுத்த உரிய அனுமதி, நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
★தமிழகத்தில் 4,900 செவிலியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
★எல்லையில் படைகளை வாபஸ் பெற மறுத்ததால் இந்தியா- சீனா இடையேயான 13-வது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
★சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
★டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த இரு வீராங்கனைகளுக்குத் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் விளையாட்டு அலுவலர் பணியிடத்துக்கான பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் வழங்கினார்.
★பஹ்ரைனில் நடந்த கால்பந்து போட்டியில் இந்திய மகளிர் அணி அதிரடியாக விளையாடி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
Today's Headlines
☘️In the Pomban sea due to the rapid growth of Algal Bloom the water color changed into green. This may lead to the destruction of small fishes.
☘️National Green Tribunal ordered that in Chennai the proper draining system for the stagnation of rainwater and drainage water should be processed with proper permission, finance, and technology. \
☘️Health and Hygiene minister informed the media that there will be an appointment for 4,900 nurses soon.
☘️As the government refused to withdraw defense forces from the border the 13th peace talk between India and China failed
☘️In China's Shanxi District heavy rain is pouring without any interval for few days. Due to this 80 cities are affected by heavy flooding.
☘️To The two female players who participated in Tokyo Olympics and made Tamil Nadu proud, the appointment is given in the departments of Power Generation and distribution as the sports officers are given today by TN CM.
Covai women ICT_போதிமரம்