கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குரு பெயர்ச்சிப் பலன்கள் - மீனம்...



பிரச்னைகளுக்கு அஞ்சாமல் தன் குறிக்கோளை மட்டுமே பார்த்து திறம்படச் செயல்படும் மீன ராசி அன்பர்களே!


உங்கள் ராசி நாதனான குருபகவான் இதுவரை 11 ம் வீட்டிலிருந்து சகல வசதி வாய்ப்புகளையும் வழங்கிவந்தார். வரும் 13.11.2021 முதல் விரைய ஸ்தானமான கும்பத்துக்குள் அடியெடுத்துவைக்கிறார். 13.4.2022 வரை அங்கேயே இருந்து பலன்தரப் போகிறார். இந்த மாற்றம் உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகிறது என்று பார்ப்போம்.


விரைய ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.எவ்வளவு முயன்றாலும் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கௌரவத்துக்காகச் செலவு செய்வதை நிறுத்துங்கள். தேவையற்ற விஷயங்களுக்காக வீட்டுக்குள் சண்டைபோடுவதைக் குறைப்பது நல்லது. குடும்பத்தினரை அனுசரித்துப் போங்கள்.


உங்கள் வேலைகளை வேறு யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம். நேரடியாக நீங்களே கவனித்துச் செயல்படுவது நல்லது. புண்ணியத்தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள்.


குருபகவான் உங்களின் நான்காம் வீடான மிதுனத்தைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியத்தில் இதுவரை இருந்துவந்த குறைபாடுகள் நீங்கும். தொல்லை கொடுத்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். பெரிய வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டியும் வரலாம்.


6 - ம் வீட்டை குருபகவான் பார்ப்பதால் கடனில் ஒருபாதியைச் செலுத்தி நிம்மதி அடைவீர்கள். நோய் இருப்பதாக இருந்த அச்சம் விலகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் சாதகமாகும். எதிர்ப்புகள் விலகும்.


குரு பகவான் 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் உங்கள் பக்கம் அனுகூலமாக முடியும். பங்குச் சந்தை மூலம் எதிர்பார்த்த பணம் வரும்.



குருபகவானின் சஞ்சார பலன்கள்:


13.11.2021 முதல் 30.12.2021 வரை



அவிட்டம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் இந்தக் காலகட்டத்தில் பணவரவுக்குக் குறைவு இருக்காது. முக்கியஸ்தர்களின் உதவியால் தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வீட்டுமனை வாங்க முயல்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. தந்தையின் உடல் நலத்தில் இருந்த பின்னடைவுகள் நீங்கும். அவருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். வீட்டிலும் வெளியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


31.12.2021 முதல் 02.03.2022 வரை

இந்தக் காலகட்டத்தில் சதயம் நட்சத்திரத்தில் குருபகவான் பயணிப்பதால் குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது அவசியம். தேவையற்ற விவாதங்கள் சச்சரவுகள் ஏற்படலாம். செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு மூச்சுமுட்டும். யாரையும் முழுமையாக நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். உறவினர் விஷயத்தில் அத்துமீறித் தலையிட வேண்டாம்.

02.03.2022 முதல் 13.04.2022 வரை

குருபகவான் தன் சொந்த நட்சத்திரமான பூரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் கொடுத்து வராமல் இருந்த கடன்தொகை கிடைக்கும். சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். சில முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலை, திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். வங்கிக் கடன் கிடைக்கும். பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படும்.


வியாபாரிகளுக்கு:


வரவு செலவில் கவனம் வையுங்கள். புதியவர்களுக்குக் கடன் கொடுக்க வேண்டாம். அதேபோன்று பொருள்கள் கொள்முதலிலும் அக்கறை தேவை. சந்தையில் தேவை உள்ள பொருள்களை அறிந்து கொள்முதல் செய்யுங்கள். தள்ளுபடி சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்பீர்கள். பணியாளர்களால் சில பிரச்னைகள் வந்துபோகும். கடையைப் பெரிதுபடுத்த முயல்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேச வேண்டியது அவசியம். பங்குதாரர்கள் சிலர் தன் பங்கைக் கேட்டு தொந்தரவு தருவார்கள். உணவு, டிராவல்ஸ், பப்ளிகேஷன், அழகு சாதனப் பொருட்களால் லாபமடைவீர்கள்.



உத்தியோகஸ்தர்களுக்கு:


விமர்சனங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள். உழைப்புக்கேற்ப அங்கீகாரம் இருக்காது. மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள் என்றாலும் பணிச்சுமை அதிகமாகவேயிருக்கும். சக ஊழியர்களின் தவறுகளைப் பெரிதுபடுத்த வேண்டாம். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதிவு உயர்வு தாமதமாகவே கிடைக்கும்.


கலைஞர்களே! வீண் வதந்திகள், கிசுகிசுக்கள் ஓயும். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம்.


மொத்தத்தில் இந்த குருப் பெயர்ச்சி ஓய்வில்லாமல் உங்களைக் கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற உயர்வில்லையே என சில நேரங்களில் ஏங்க வைக்கும்.


பரிகாரம்: தஞ்சை மாவட்டம் வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரை வணங்குங்கள். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்கு உதவுங்கள். வெற்றி கிட்டும்.


இதுவரை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், இப்போது 12-ம் இடமான விரய ஸ்தானத்திற்கு வருகிறார். அப்படியானால் விரயங்கள் அதிகமாக இருக்குமா? என்ற அச்சம் தோன்றுவது இயல்புதான்..! ஆனால் உங்கள் ராசிக்கு அதிபதியான குரு பகவான் விரய ஸ்தானத்திற்கு செல்லும் பொழுது வீண் விரயங்களை நிச்சயம் தர மாட்டார் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அப்படியானால் எப்படிப்பட்ட விரயங்களை தருவார்..? சுப விரயங்களை மட்டுமே தருவார்.


சுப விரயங்கள் என்றால் என்னென்ன? வீடு கட்டுவது, வீட்டு பராமரிப்புப் பணிகள் செய்வது, மாடி மேல் மாடி கட்டுதல், திருமணம் செய்தல், திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்தல், பிள்ளைகளுக்கு காதுகுத்து போன்ற விசேஷங்கள் செய்வது, புதிதாக தொழில் தொடங்குவதற்கு முதலீடுகள் செய்தல் இதுபோன்ற சுப விரயங்களை செய்வார். குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாக இருப்பது, குடும்பத்தினருடன் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்வது, வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வது, ஆன்மிகப் பயணங்கள் செய்வது போன்ற சுப விரயங்களும் ஏற்படும்.


குடும்பத்தினர் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கான வழிவகைகளை இந்த குருப்பெயர்ச்சி காட்டும். பூர்வீகச் சொத்து தொடர்பான விஷயங்களில் பாகப் பிரிவினை ஏற்பட்டு அதன் மூலம் ஆதாயம் கிடைப்பது போன்றவை இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் நடக்கும். மேலும் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 4, 6 மற்றும் 8 ஆகிய இடங்களை தொடர்பு கொள்வதால் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகும். பாதியில் நின்ற கட்டிடப் பணிகள் தொடரும். தாமதப்பட்டுக் கொண்டிருந்த வீட்டுக் கடன் கிடைக்கும். சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 6-ஆம் இடத்தில் குரு பார்வை படுவதால் இதுவரை இருந்த ஆரோக்கிய பாதிப்புகள் தீரும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிதாக கடன் பெற்று தொழில் அல்லது வியாபாரத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்ப்புகள் காணாமல் போகும். எதிரிகளின் தொல்லைகள் முடிவுக்கு வரும். எட்டாம் இடத்தில் குரு பார்வை படுவதால் வழக்குகள் சாதகமாகும். நீண்டகால ஆரோக்கிய பாதிப்புகள் தீரும். எனவே இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பல வகையிலும் நன்மை தரக் கூடியதாகவே இருக்கும்.


அலுவலகப் பணிகள் சிறப்பாக இருக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறுவது நடக்கும். அல்லது வெளிநாடுகளில் சென்று பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகப் பணிகளில் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குழுவாக பணியாற்றுவது நடக்கும். அந்தக் குழுவுக்குத் தலைமை ஏற்கும் பொறுப்புகளும் கிடைக்கும்.


சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் நற்பலன்கள் நடக்கும். தொழிலுக்குத் தேவையான முதலீடுகள் கிடைக்கும். தொழிலுக்காக வாங்கிய கடன்கள் முழுமையாக அடைபடும். உங்களுடைய தொழில் தொடர்பான உற்பத்தியாகும் பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாகும். போட்டி நிறுவனங்கள் போட்டியில் இருந்து விலகுவார்கள். தொழிலுக்கு மேலும் அதிக முதலீடுகளைச் செய்து தொழிலை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது போன்றவை நடக்கும். கூட்டாக தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இப்போது தனியாக தொழில் செய்யும் வாய்ப்பு உண்டாகும். அயல்நாடுகளில் இருந்து தொழிலுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் எது சிறப்பாக இருக்கும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். மிகப் பெரிய நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்யும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும்.


வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். வியாபார இடங்களை விஸ்தரிப்பது, புதிய கிளைகள் தொடங்குவது போன்றவை நடக்கும். இன்னொரு வியாபாரத்தை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதற்கான முதலீடுகள் செய்யும் நிலை ஏற்படும். அதற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். பலவகையிலும் உங்களுடைய வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அத்தியாவசிய பொருட்கள் மட்டுமல்லாமல் ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குக் இந்த குருப்பெயர்ச்சி காலகட்டம் அதிகப்படியான ஆதாயத்தை தரக் கூடிய அளவில் இருக்கும். அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயமும் உண்டு. பல வகையிலும் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்பு இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் இருக்கும்.


பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலகட்டம். அதிகப்படியான அலைச்சல் ஏற்படும். ஆனாலும் அதற்கு உண்டான பலன் கிடைக்கும். மிகப்பெரிய அளவிலான செய்திகளை கொண்டு சென்று மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைக்கும். உங்களுக்கான மதிப்பு மரியாதை கிடைக்கும். கூடுதல் பொறுப்புடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் மிகப்பெரிய சாதனைகளைச் செய்ய முடியும்.


கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி காலம் மிக அதிகப்படியாக நன்மைகளை ஏற்படுத்தித் தரும். ஓய்வில்லாத உழைப்பை தர வேண்டியது வரும். புகழ் வெளிச்சம் கிடைக்கும். மதிப்பு மரியாதை உயரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அரசின் கவனம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காண்பீர்கள். அசையும் அசையா சொத்துகள் சேரும் யோகம் உண்டு. மிகச் சரியாக திட்டமிட்டு உங்களுடைய கலைச்சேவையை செயல்படுத்தினால் வெற்றிகரமான காலகட்டமாக இருக்கும்.


பெண்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி அதிக நன்மைகளை ஏற்படுத்தி தரக்கூடியதாக இருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை பலப்படும். கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் சமாதானம் ஆகும். கணவர் வீட்டு உறவுகள் முதல் பெற்றோர்கள் வீட்டு உறவுகள் வரை அனைவரும் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சொத்துகள் சேரும் யோகம் உண்டு. குறிப்பாக கணவர் வீட்டு வகையில் சொத்துகள் கிடைக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. சுப நிகழ்வுகள் நடக்கும். சகோதர சகோதரிகளுக்கு திருமணம் நடக்கும், அது உங்கள் முயற்சியால் நடக்கும். இது போன்ற பலவிதமான நன்மைகள் நடைபெறக்கூடிய காலகட்டம் இது.


மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சி முன்னேற்றமும் இருக்கும். உயர்கல்வி முதல் பட்டப்படிப்பு, பட்டயக்கல்வி போன்ற அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறப்பான காலகட்டம். கடின உழைப்புடன் கல்வியை மிகத் திறமையாக முடித்துக் காட்டுவீர்கள். பட்டம் பதவிகள் தேடிவரும். கல்வி முடிந்தவுடன் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். அதே போல அயல் நாடுகளில் வேலை வாய்ப்பு மிக எளிதாக கிடைக்கும். இந்த குருப் பெயர்ச்சி பல வகையிலும் உங்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும்.


மீன ராசிக்காரர்களுக்கு மிக உகந்த பரிகார ஸ்தலம் திருமலை திருப்பதி. அதேபோல் மதுரையில் இருக்கும் "இம்மையில் நன்மை தருவார்" என்ற சிவஸ்தலம் மிகச்சிறப்பான பரிகார ஸ்தலம் ஆகும். இந்த குருப் பெயர்ச்சி காலத்தில் இந்த ஆலயங்களுக்குச் சென்று வருவதன் மூலம் அதிகப்படியான நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...