கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (24-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 24, 2022




குடும்பத்தில் தேடி வரும் சுபச்செய்திகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சாந்தம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



அஸ்வினி : உதவி கிடைக்கும்.


பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.


கிருத்திகை : நன்மை கிடைக்கும்.

---------------------------------------






ரிஷபம்

ஜனவரி 24, 2022




ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். மாமன் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : இன்னல்கள் குறையும். 


ரோகிணி : ஒத்துழைப்பு மேம்படும். 


மிருகசீரிஷம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 24, 2022




கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். வேளாண்மை சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் ஏற்படும். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட  திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும். 


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும். 


புனர்பூசம் : லாபம் மேம்படும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 24, 2022




வியாபாரத்தில் நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஒத்துழைப்பு மேம்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள். 


பூசம் : ஆர்வம் அதிகரிக்கும். 


ஆயில்யம் : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 24, 2022




மாணவர்களுக்கு ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உண்டாக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தன்னம்பிக்கை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்


 

மகம் : சிந்தனைகள் மேம்படும். 


பூரம் : அனுகூலமான நாள். 


உத்திரம் : நம்பிக்கை பிறக்கும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 24, 2022




வாழ்க்கைத்துணைவர் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். செய்கின்ற முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திரம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


அஸ்தம் : இன்னல்கள் குறையும். 


சித்திரை : அனுகூலமான நாள்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 24, 2022




சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவுபெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவை பெறுவீர்கள். முதலீட்டுக்கான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இன்னல்கள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



சித்திரை : சாதகமான நாள். 


சுவாதி : ஆதரவு கிடைக்கும். 


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 24, 2022




அருள்தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ரகசிய செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல்கள் ஏற்படும். எண்ணிய சில காரியங்களில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். லாபம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு



விசாகம் : மேன்மை உண்டாகும். 


அனுஷம் : புரிதல் ஏற்படும். 


கேட்டை : மாற்றமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 24, 2022




நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மூலம் : வாய்ப்புகள் உண்டாகும். 


பூராடம் : தெளிவு பிறக்கும். 


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 24, 2022




உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். தனவரவின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். கால்நடை தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். மேன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



உத்திராடம் : திருப்தியான நாள். 


திருவோணம் : பயணங்கள் சாதகமாகும். 


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 24, 2022




உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். செய்யும் செயல்களில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்புகளில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும். 


சதயம் : மாற்றமான நாள். 


பூரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 24, 2022




மாறுபட்ட அணுகுமுறையால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். விவாதங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரம் ரீதியாக எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



பூரட்டாதி : இழுபறிகள் அகலும்.


உத்திரட்டாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


ரேவதி : அனுபவம் மேம்படும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

DSE Proceedings & User manual to download Manarkeni app by 24.01.2025

 மணற்கேணி செயலியை 24.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள் & பயனர் கையேடு DSE - Manarkeni App Downloading...