கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-04-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஏப்ரல் 01, 2022




உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். மனதை உறுத்திய சில கவலைகளுக்கு தெளிவான முடிவை எடுப்பீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன நிம்மதி ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை :  தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 



அஸ்வினி : தாமதங்கள் குறையும்.


பரணி : தெளிவு பிறக்கும். 


கிருத்திகை : நிம்மதியான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஏப்ரல் 01, 2022




சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வியாபாரப் பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டகரமான நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்


 

கிருத்திகை : எண்ணங்கள் ஈடேறும்.


ரோகிணி : நம்பிக்கை அதிகரிக்கும்.


மிருகசீரிஷம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.

---------------------------------------





மிதுனம்

ஏப்ரல் 01, 2022




அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலைகள் மறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. அறிமுகம் கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



மிருகசீரிஷம் : இழுபறிகள் மறையும். 


திருவாதிரை : மகிழ்ச்சியான நாள். 


புனர்பூசம் : செலவுகளை குறைக்கவும்.

---------------------------------------





கடகம்

ஏப்ரல் 01, 2022




சகோதரர்களின் வகையில் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியங்களில் பொறுப்புகள் மேம்படும். உத்தியோக பணிகளில் சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஆதரவு நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்



புனர்பூசம் : அனுகூலமான நாள். 


பூசம் : லாபம் உண்டாகும். 


ஆயில்யம் : தன்னம்பிக்கை மேம்படும்.

---------------------------------------





சிம்மம்

ஏப்ரல் 01, 2022




எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது சற்று கவனம் வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை


 

மகம் : சேமிப்பு குறையும்.


பூரம் : அனுசரித்து செல்லவும். 


உத்திரம் : கவனம் வேண்டும்.

---------------------------------------





கன்னி

ஏப்ரல் 01, 2022




பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தகம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சமூகப் பணிகளில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். குழப்பம் நீங்கும் நாள்.


  

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



உத்திரம் : அறிமுகம் கிடைக்கும். 


அஸ்தம் : முன்னேற்றம் ஏற்படும். 


சித்திரை : ஆதரவான நாள். 

---------------------------------------





துலாம்

ஏப்ரல் 01, 2022




குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவி சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் அலைச்சலும், புரிதலும் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்


 

சித்திரை : இழுபறிகள் அகலும். 


சுவாதி : புரிதல் உண்டாகும். 


விசாகம் : விருப்பங்கள் நிறைவேறும். 

---------------------------------------





விருச்சிகம்

ஏப்ரல் 01, 2022




செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



விசாகம் : சிந்தித்து செயல்படவும்.


அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.


கேட்டை : ஆசைகள் நிறைவேறும். 

---------------------------------------





தனுசு

ஏப்ரல் 01, 2022




உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.


 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு


 

மூலம் : பிரச்சனைகள் குறையும்.


பூராடம் : எண்ணங்கள் கைகூடும். 


உத்திராடம் : திருப்திகரமான நாள். 

---------------------------------------





மகரம்

ஏப்ரல் 01, 2022




மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு சார்ந்த துறைகளில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறைவதற்கான உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு


 

உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். 


திருவோணம் : மாற்றமான நாள். 


அவிட்டம் : உதவி கிடைக்கும்.

---------------------------------------





கும்பம்

ஏப்ரல் 01, 2022




சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.


 

அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்



அவிட்டம் : தனவரவு மேம்படும்.


சதயம் : புரிதல் உண்டாகும்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





மீனம்

ஏப்ரல் 01, 2022




எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களின்  வழியில் புரிதல் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மதிப்பு அதிகரிக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



பூரட்டாதி : அனுபவம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும். 


ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு...

மாறுதல் கலந்தாய்வு - முன்னுரிமைப் பட்டியலுக்கான வரிசை (Priority Ranking List) வெளியீடு... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...