கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (30-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 30, 2022



ரகசியங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அஸ்வினி : அனுபவம் ஏற்படும். 


பரணி : அனுகூலமான நாள். 


கிருத்திகை : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 30, 2022



ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். முதலீடுகள் சார்ந்த செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




கிருத்திகை : மேன்மை உண்டாகும். 


ரோகிணி : தெளிவு பிறக்கும். 


மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------





மிதுனம்

ஜூன் 30, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். நண்பர்களின் வழியில் அனுகூலம் உண்டாகும். தந்தை வழியில் பணவரவு கிடைக்கும். சோர்வு குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : மாற்றமான நாள்.


புனர்பூசம் : வரவு உண்டாகும்.

---------------------------------------





கடகம்

ஜூன் 30, 2022



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கும். தொழில் ரீதியான வங்கி கடன் கிடைக்கும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். நெருக்கமானவர்களின் உதவியால் பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்படலாம். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




புனர்பூசம் : மனக்கசப்புகள் நீங்கும். 


பூசம் : மாற்றம் உண்டாகும்.


ஆயில்யம் : பொறாமைகள் குறையும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 30, 2022



பிள்ளைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.  பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சொத்துக்கள் சம்பந்தமான வழக்குகளில் அனுகூலமான முடிவு கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


பூரம் : இழுபறிகள் அகலும்.


உத்திரம் : அனுகூலமான நாள்.

---------------------------------------





கன்னி

ஜூன் 30, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உயர் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : ஆதரவு ஏற்படும்.


அஸ்தம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.


சித்திரை : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------





துலாம்

ஜூன் 30, 2022



சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். எதிர்பாலின மக்கள் தொடர்பான செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. காது தொடர்பான இன்னல்கள் குறையும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




சித்திரை : காரியசித்தி உண்டாகும்.


சுவாதி : பொறுப்புகள் கிடைக்கும்.


விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 30, 2022



தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்வது நல்லது. கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




விசாகம் : கருத்துக்களை தவிர்க்கவும். 


அனுஷம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : ஏற்ற, இறக்கமான நாள்.

---------------------------------------





தனுசு

ஜூன் 30, 2022



நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மூலம் : மாற்றமான நாள்.


பூராடம் : லாபம் மேம்படும்.


உத்திராடம் : ஆதரவு ஏற்படும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 30, 2022



இழுபறியாக இருந்துவந்த பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விற்பனை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் எதிர்பாராத லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உதவி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : தீர்வு கிடைக்கும்.


திருவோணம் : அனுபவம் உண்டாகும். 


அவிட்டம் : லாபகரமான நாள்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 30, 2022



பிள்ளைகளால் நன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் அமையும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




அவிட்டம் : செல்வாக்கு மேம்படும்.


சதயம் : மேன்மையான நாள்.


பூரட்டாதி : நம்பிக்கை மேம்படும். 

---------------------------------------





மீனம்

ஜூன் 30, 2022



உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புதுவிதமான மாற்றம் ஏற்படும். பயணங்கள் சார்ந்த புதுமையான அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். அரசு தொடர்பான அனுகூலம் ஏற்படும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




பூரட்டாதி : புதுமையான நாள்.


உத்திரட்டாதி : அனுபவம் கிடைக்கும்.


ரேவதி : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

₹ 1.1 lakh compensation for insect bite while traveling in bus - Court orders

 பேருந்தில் பயணித்தபோது பூச்சி கடித்ததால் ₹ 1.1 லட்சம் இழப்பீடு - நீதிமன்றம் உத்தரவு ₹ 1.1 lakh compensation for insect bite while traveling...