கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (01-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள் (Today's (01-08-2022) Zodiac Predictions, Nakshatra Predictions)...

 



மேஷம்

ஆகஸ்ட் 01, 2022



சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். புதிய முயற்சிகளில் பெரியவர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வேலையாட்கள் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் பதவி கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த உதவி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அஸ்வினி : கீர்த்தி உண்டாகும்.


பரணி : பிரச்சனைகள் குறையும்.


கிருத்திகை : உதவி கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 01, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் ஊதிய உயர்வுக்கான சூழ்நிலைகள் ஏற்படும். வர்த்தகம் சார்ந்த முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். கால்நடைகளால் மேன்மையான சூழல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு




கிருத்திகை : உயர்வான நாள்.


ரோகிணி : கவனம் வேண்டும்.


மிருகசீரிஷம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 01, 2022



சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். கலை சார்ந்த அறிவு மேம்படும். உத்தியோக மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். சுபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவாதிரை : எண்ணங்கள் உண்டாகும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 01, 2022



தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வெளியூர் பயணங்கள் மேற்கொள்வது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். பெரியோர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : ஆதரவான நாள்.


பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.


ஆயில்யம் : இழுபறிகள் குறையும்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 01, 2022



உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். கோபமான பேச்சுக்களை குறைத்து கொள்வது உங்களின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். சிந்தனையின் போக்கில் முன்னேற்றத்திற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். சங்கீதம் தொடர்பான பணிகளில் நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். தாமதம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : நம்பிக்கை மேம்படும்.


உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 01, 2022



பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். தவறிப்போன சில பொருட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களுக்கு தேவையான உதவியை செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் திறமை வெளிப்படும். விருப்பம் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




உத்திரம் : சிக்கல்கள் குறையும்.


அஸ்தம் : சிந்தனைகள் மேம்படும்.


சித்திரை : திறமை வெளிப்படும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 01, 2022



உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்




சித்திரை : மாற்றம் ஏற்படும்.


சுவாதி : மேன்மையான நாள்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 01, 2022



ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் தடைகள் ஏற்பட்டாலும், அதற்கான காரணங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். தேர்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : தடைகளை அறிவீர்கள்.


அனுஷம் : அனுசரித்து செல்லவும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 01, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பங்கு வர்த்தகம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். மனதில் புதுவிதமான இலக்கு தோன்றும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மூலம் : முன்னேற்றம் ஏற்படும்.


பூராடம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.


உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 01, 2022



எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இயந்திரம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




உத்திராடம் : நெருக்கடியான நாள்.


திருவோணம் : பொறுமையுடன் செயல்படவும்.


அவிட்டம் : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 01, 2022



குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்கல்வி தொடர்பான பணிகளில் எண்ணிய உதவி சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.


சதயம் : உதவி சாதகமாகும்.


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 01, 2022



உறவினர்களை பற்றிய புரிதல் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். தொழில் சார்ந்த முதலீடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறைந்து புத்துணர்ச்சியை பெறுவீர்கள். பழைய நினைவுகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : புரிதல் ஏற்படும்.


உத்திரட்டாதி : முயற்சிகள் மேம்படும்.


ரேவதி : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

25-06-2026 TN SCERT Special TET 1 & TET 2 Maths SESSION 3 , TET 2 Social Science Session 5 - Youtube Links

  Good afternoon, all. Kindly note today's session and its timings 👉Click here for SPECIAL TET PAPER 1 MATHS SESSION 3 https://www.yout...