கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (14-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 14, 2022



சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுயதொழிலில் பயணங்கள் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


பரணி : எண்ணங்கள் கைகூடும்.


கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------





ரிஷபம்

ஆகஸ்ட் 14, 2022



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சமூக பணிகளில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை மேம்படும். புதுவிதமான கண்ணோட்டத்தின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.


ரோகிணி : சுதந்திரம் மேம்படும்.


மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஆகஸ்ட் 14, 2022



பலதரப்பட்ட அறிமுகத்தின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். தனித்தன்மையின் மூலம் முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகளை உருவாக்கி கொள்வீர்கள். வெளியூர் சார்ந்த தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆன்மிகம் சார்ந்த பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மிருகசீரிஷம் : அறிமுகம் கிடைக்கும்.


திருவாதிரை : சாதகமான நாள்.


புனர்பூசம் : முயற்சிகள் ஈடேறும்.

---------------------------------------





கடகம்

ஆகஸ்ட் 14, 2022



வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூசம் : சோர்வு உண்டாகும். 


ஆயில்யம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





சிம்மம்

ஆகஸ்ட் 14, 2022



வயிறு தொடர்பான பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் வாடிக்கையாளர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மகம் : பிரச்சனைகள் குறையும்.


பூரம் : மதிப்பு அதிகரிக்கும். 


உத்திரம் : ஆதரவான நாள்.

---------------------------------------





கன்னி

ஆகஸ்ட் 14, 2022



மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். காப்பீடு தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் மேம்படும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் பிறக்கும். நலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




உத்திரம் : தெளிவு பிறக்கும். 


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.


சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





துலாம்

ஆகஸ்ட் 14, 2022



சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் முடிவு எடுக்கவும். வெளியூர் தொடர்பான பயணங்களால் ஆதாயம் உண்டாகும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : பொறுமை வேண்டும்.


சுவாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.


விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------





விருச்சிகம்

ஆகஸ்ட் 14, 2022



நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் கருத்துக்களை கூறும் பொழுது கவனம் வேண்டும். எதிர்பாராத சில உதவியின் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான உபகரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். யோகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : நம்பிக்கை ஏற்படும்.


அனுஷம் : ஆர்வம் அதிகரிக்கும். 


கேட்டை : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------






தனுசு

ஆகஸ்ட் 14, 2022



மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : காரியசித்தி உண்டாகும்.


பூராடம் : புரிதல் ஏற்படும்.


உத்திராடம் : தேடல் அதிகரிக்கும்.

---------------------------------------






மகரம்

ஆகஸ்ட் 14, 2022



உறவினர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய முயற்சிகளை செயல்படுத்தும் பொழுது சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகளால் குழப்பம் நீங்கும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொந்த ஊருக்கு செல்வது தொடர்பான பயணங்கள் காலதாமதமாக நிறைவேறும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை




உத்திராடம் : அனுசரித்து செல்லவும். 


திருவோணம் : குழப்பம் நீங்கும். 


அவிட்டம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------






கும்பம்

ஆகஸ்ட் 14, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்கள் செல்வது தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வுடன் செயல்படவும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அவிட்டம் : சிந்தனைகள் உண்டாகும்.


சதயம் : தடைகள் விலகும். 


பூரட்டாதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.

---------------------------------------





மீனம்

ஆகஸ்ட் 14, 2022



எதிர்பார்த்த சில தனவரவில் காலதாமதம் உண்டாகும். பலதரப்பட்ட குழப்பத்தால் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்து கொள்ளவும். வெளிநாடு தொடர்பான பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். எந்தவொரு செயலிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : காலதாமதம் உண்டாகும். 


உத்திரட்டாதி : சிந்தித்து முடிவெடுக்கவும்.


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Student Threatens to Kill Headmaster - Full Details

  தலைமை ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவன் - முழு விவரம் Student Threatens to Kill Headmasters - Full Details கேரளாவில் பாலக்காடு அனக...