கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (29-08-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

ஆகஸ்ட் 29, 2022



புதிய இலக்கினை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். புத்திக்கூர்மையான செயல்பாடுகளின் மூலம் பாராட்டுகள் கிடைக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய சில விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்  




அஸ்வினி : இலக்குகள் பிறக்கும்.


பரணி : ஆதரவான நாள்.


கிருத்திகை : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




ரிஷபம்

ஆகஸ்ட் 29, 2022



பணிபுரியும் இடத்தில் சிறு சிறு அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் தாயை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.


ரோகிணி : மாற்றமான நாள்.


மிருகசீரிஷம் : தாமதங்கள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

ஆகஸ்ட் 29, 2022



பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினையில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படுதல் அவசியமாகும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


திருவாதிரை : பயணங்கள் சாதகமாகும்.


புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




கடகம்

ஆகஸ்ட் 29, 2022



திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றி சாதகமாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 




புனர்பூசம் : வெற்றி சாதகமாகும்.


பூசம் : ஒற்றுமை ஏற்படும்.


ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------




சிம்மம்

ஆகஸ்ட் 29, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பரந்த மனப்பான்மையின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மகம் : அலைச்சல்கள் உண்டாகும். 


பூரம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திரம் : பாராட்டுகளை பெறுவீர்கள்.

---------------------------------------




கன்னி

ஆகஸ்ட் 29, 2022



வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆசை அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திரம் : அனுகூலமான நாள். 


அஸ்தம் : ஆசை அதிகரிக்கும்.


சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------




துலாம்

ஆகஸ்ட் 29, 2022



எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வதற்கான தருணங்கள் அமையும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். சிலருக்கு திடீர் பொருள் வரவு உண்டாகும். மனதில் ஏற்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : பயணங்கள் கைகூடும்.


சுவாதி : வரவு உண்டாகும்.


விசாகம் : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------




விருச்சிகம்

ஆகஸ்ட் 29, 2022



உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.


அனுஷம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.


கேட்டை : லாபம் மேம்படும். 

---------------------------------------




தனுசு

ஆகஸ்ட் 29, 2022



வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் அமையும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். திருப்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மூலம் : சிந்தித்து செயல்படவும்.


பூராடம் : ஆதரவு கிடைக்கும். 


உத்திராடம் : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

ஆகஸ்ட் 29, 2022



வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கப் பெறுவீர்கள். சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். காது தொடர்பான உபாதைகள் அகலும். பக்தி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




உத்திராடம் : முதலீடுகள் அதிகரிக்கும். 


திருவோணம் : நன்மையான நாள்.


அவிட்டம் : உபாதைகள் அகலும்.

---------------------------------------




கும்பம்

ஆகஸ்ட் 29, 2022



உணர்ச்சிவேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையான சூழ்நிலையும் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.


சதயம் : விவாதங்களை தவிர்க்கவும். 


பூரட்டாதி : அமைதியின்மையான நாள்.

---------------------------------------




மீனம்

ஆகஸ்ட் 29, 2022



உத்தியோகம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதம் குறையும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும். நீண்ட காலமாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். விவாதங்களின் மூலம் எண்ணிய முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : காலதாமதம் குறையும். 


உத்திரட்டாதி : சாதகமான நாள்.


ரேவதி : முடிவு கிடைக்கும்.

---------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shriram Finance Student Scholarship Program 2026–2027

  Dear All, We are pleased to announce the Shriram Finance Student Scholarship Program 2026–2027. Kindly share this scholarship information ...