கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (06-10-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

அக்டோபர் 06, 2022



வியாபார பணிகளில் சில யுக்திகளை செயல்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். விவாதங்களின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




அஸ்வினி : பொறுப்புகள் குறையும்.


பரணி : மேன்மை ஏற்படும்.


கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




ரிஷபம்

அக்டோபர் 06, 2022



அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான செய்திகள் கிடைக்கும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உத்தியோக பணியில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். மனை சார்ந்த லாபம் உண்டாகும். இழந்த பொருளை மீட்பதற்கான சூழல் அமையும். வெளிநாடு தொடர்பான வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 




கிருத்திகை : அனுகூலமான நாள்.


ரோகிணி : லாபம் உண்டாகும். 


மிருகசீரிஷம் : சாதகமான நாள்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 06, 2022



உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் ரீதியான தொடர்புகளின் மூலம் லாபமும், அனுபவமும் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த மனவருத்தம் நீங்கி ஒற்றுமை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும். 


திருவாதிரை : அனுபவம் அதிகரிக்கும்.


புனர்பூசம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------




கடகம்

அக்டோபர் 06, 2022



இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். இடமாற்றத்தால் புதிய அனுபவம் உண்டாகும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். விரயம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : காலதாமதம் ஏற்படும். 


பூசம் : அனுசரித்து செல்லவும். 


ஆயில்யம் : அலைச்சல்கள் ஏற்படும். 

---------------------------------------




சிம்மம்

அக்டோபர் 06, 2022



பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் சாதகமான சூழல் ஏற்படும். வியாபார பணிகளில் தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள். 




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம் 




மகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : சிந்தனைகள் உண்டாகும்.

---------------------------------------




கன்னி

அக்டோபர் 06, 2022



நிர்வாகத்தில் தனித்திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாலின மக்களின் மூலம் சாதகமான பலன்கள்  உண்டாகும். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




உத்திரம் : வாய்ப்புகள் ஏற்படும்.


அஸ்தம் : திருப்தியான நாள்.


சித்திரை : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------




துலாம்

அக்டோபர் 06, 2022



கலகலப்பான பேச்சுக்களின் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 




சித்திரை : அறிமுகம் கிடைக்கும். 


சுவாதி : நம்பிக்கை அதிகரிக்கும். 


விசாகம் : ஒற்றுமை மேம்படும்.

---------------------------------------




விருச்சிகம்

அக்டோபர் 06, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களும், சிறு சிறு ஏமாற்றங்களும் ஏற்படும். தேவையற்ற செலவுகளை குறைத்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் எண்ணிய காரியங்களை சில தடைகளுக்கு பின் செய்து முடிப்பீர்கள். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : சிந்தனைகள் உண்டாகும்.


கேட்டை : நெருக்கடிகள் குறையும். 

---------------------------------------




தனுசு

அக்டோபர் 06, 2022



சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வழக்குகளில் உள்ள நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். போட்டிகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




மூலம் : மாற்றம் ஏற்படும். 


பூராடம் : வாய்ப்புகள் உண்டாகும்.


உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.

---------------------------------------




மகரம்

அக்டோபர் 06, 2022



குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் உள்ள நுட்பங்களை அறிவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். செல்வச்சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




உத்திராடம் : ஒற்றுமை அதிகரிக்கும். 


திருவோணம் : அறிமுகம் கிடைக்கும். 


அவிட்டம் : தெளிவு பிறக்கும். 

---------------------------------------




கும்பம்

அக்டோபர் 06, 2022



மனதில் இனம்புரியாத சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களை பற்றி கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். கனிவான பேச்சுக்களின் மூலம் வேலையாட்களிடையே ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் பொறுப்புணர்ந்து செயல்படவும். அவ்வப்போது பழைய நினைவுகள் ஏற்பட்டு நீங்கும். வாகன மாற்றம் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 




அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும். 


சதயம் : ஒத்துழைப்பு மேம்படும். 


பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




மீனம்

அக்டோபர் 06, 2022



வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டி கொடுத்து வேலை வாங்கவும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் நீங்கும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும். 


உத்திரட்டாதி : நெருக்கடிகள் நீங்கும்.


ரேவதி : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

The Chief Minister listed the educational structures of Tamil Nadu

  தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...