கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

50 ஜிபி டேட்டா இலவசமா? - பொய்யான லிங்கால் கதி கலங்கும் வாட்ஸ் அப் பயனர்கள் (Is 50GB data free? - WhatsApp users worried by fake link)...



 50 ஜிபி டேட்டா இலவசமா? - பொய்யான லிங்கால் கதி கலங்கும் வாட்ஸ் அப் பயனர்கள் (Is 50GB data free? - WhatsApp users worried by fake link)...


கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் FIFA உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு 2022 கார்டெல் உலகக் கோப்பையைப் பார்க்க 50 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. நான் என்னுடையதைப் பெற்றேன். இதைத் திறக்கவும் 50 GB இலவசம் என்று ஒரு பதிவை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்.


இந்த லின்ங்கில் நீங்கள் போனால் என்ன நடக்கும்?

உடனடியாக இந்த தகவலை நீங்க 21 வாட்ஸ் குரூப்புக்கு ஷேர் பண்ணுங்க என வரும். நீங்களும் நம்பி அனுப்புவீர்கள். திரும்ப போனாலும் ஒன்றும் இருக்காது. நீங்கள் ஷேர் செய்து விட்டு போயிடுவீங்க. நீங்கள் ஷேர் பண்ண அந்த வதந்தியை அவர்கள் அடுத்தவர்களுக்கு ஷேர் செய்வார்கள். இப்படியேதான் வதந்திகள் பரவிக் கொண்டே வருகிறது.

 

இது போன்ற பொய்யான செய்திகளால்  உங்கள் தகவல் திருடப்படலாம் என்பது  ஆதாரபூர்வமான உண்மை.


மேலும் இந்த மெசேஜில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தால் மோசடி செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய அரசின் இணைய பாதுகாப்பு குழு ஆலோசனை வழங்கியுள்ளது.


மெசேஜை கிளிக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவலை தந்தால், உங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாக வாய்ப்பு இருப்பதால், இந்த மோசடியில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்றும் காவல்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...